வார ராசிபலன்: 6-7-18 முதல் 12-7-18 வரை – வேதா கோபாலன்

மேஷம்

உடல் நலத்தை மிகவும் கவனமாகப் பாதுகாத்துக்கொள்பவர்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது. மனசை அமைதியா வைச்சுக்குங்க. ஒன்று மட்டும் நினைவு வெச்சுக்குங்க. உண்மையும் நேர்மையும் உள்ள உங்களை ஒருத்தராலும் எதுவும் செய்ய முடியாதுங்க. தந்தையின் ஆரோக்யம் பயமுறுத்தினாலும் உடனே சரியாகி நிம்மதியளிக்கும். மாணவர்களுக்கு சந்தோஷமும் மன நிம்மதியும் அளிக்கும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். மேடையில் ஏறிப் பரிசும், பாராட்டும், கைதட்டலும் பெறுவீங்க. திருமணம் இதோ அதோ என்று போக்குக் காட்டிக்கொண்டிருந்ததல்லவா? இப்போ அது வந்தாச்சு வந்தாச்சு.

ரிஷபம்

தந்தைக்கு சில சிறு உபாதைகள் வந்து சரியாகிவிடும். சற்று கவனமாகப் பார்த்துக்குங்க. குடும்பத்தில் ஏற்படும் சில்லறைக் குழப்பங்களும் பிரச்சினைகளும் உங்க அமைதியான அணுகுமுறையால் சரியாகி விடும். நிறையச் செலவுகள் இருந்தாலும் எல்லாமே நல்ல நல்ல செலவுகளாகவும் சுப செலவுகளாகவுமே இருக்கும். உத்யோகத்தில் ஓர் இனிய திருப்பம் உண்டு. அது நீங்க கொஞ்சமும் எதிர்பாராததாக இருந்தா லும்  ஆச்சர்யமில்லைங்க. மாணவர்கள் மேடை ஏறிப்பரிசு வாங்குவீங்க

மிதுனம்

எல்லாம் சற்று நிதானமாய்த்தான் நடக்கும். அதனால் என்னங்க. நல்லபடியாவே நடக்கும். மனசைத் திடப்படுத்திக்குங்க. பேச்சில் புத்திசாலித்தனமும் கவரும் தன்மையும் இருக்கு முங்க. அதனால் எல்லோரும் பாராட்டும்படியா பேசுவீங்க.. நடந்துங்ககுவீங்க…. மற்றவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பீங்க.. உறவினர் மற்றும் நண்பர்களிடையே மத்தியஸ்தம் செய் வீங்க. ஆன மொத்தத்தில் நல்ல பெயர் எடுப்பீங்க. தாயாருக்காக அல்லது தாய் வழி உறவினருக்காக நல்ல வகையில் செலவு செய்து அவரின் நல்லாசியைப்பெறுவீங்க.

கடகம்

பரபரவென்று பிசியாக இருப்பீங்க, சரியான தீர்மானங்களை முறையாக எடுப்பீங்க. அதனால் பல வித சிக்கல்களை முன்கூட்டியே ஊகித்து அவற்றிலிருந்து முறையாக மீளுவீங்க. கல்விக்காக நிறையச் செலவுகள் செய்ய வேண்டி வரும். வாக்கினிலே இனிமை வேண்டும் என்று பாரதி சொன்னதை நிஜமாக்குவீங்க. சில சிகிச்சைகள் எடுக்க வேண்டி வரலாம்.  ஆனால் தகுந்த நேரத்தில் தாமதமின்றி ஆரோக்யத்தைப் பாதுகாத்துக்கொள்வீர் கள். தாயாருக்கு நன்மைகள் அதிகரிக்கும். அவரால் உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும்.

சிம்மம்

மாணவர்களுக்கு உங்களால் உதவி கிடைக்கும். எனவே அவர்களின் நல்வாழ்த்தும் கிடைக்கும். தயவு செய்து நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். நல்லவர் யார், கெட்டவர் யார் என்று ஆராய்ந்து பிறகு நெருங்கிய நட்பு கொள்ளுங்கள். அது வரை சற்றுத் தள்ளியே இருங்கள். மனசுவிட்டுப் பேசுகிறேன் என்று ரகசியங்களைப் பகிர வேண்டாங்க. ஜாக்கிரதை. தள்ளிப்போய்க்கொண்டிருந்த திருமணம் சட்டென்று வந்தேவிடும். சகோதர சகோதரிகளுக்கு நன்மை ஏற்படும். அது அனேகமாக உங்களால் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : 04.07.2018 முதல் 07.07.2018 வரை

கன்னி

குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கூடிவரும். ஆசிரியர்களுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு. அரசாங்க உத்யோகம் மற்றும் வங்கி வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு ஆஃபர் லெட்டர் வந்தாச்சு. நகைங்களுக்காகவும் ஆடை ஆபரணங்களுக்காகவும்  கொஞ்சம் அதிகமாய்ச் செலவு செய்யறீங்க. கொஞ்சம் பார்த்துக்குங்கப்பா. சீக்கிரத்தில் வீட்டில் ஒரு சுப செலவு இருக்கு. அதுக்குப் பணம் மிச்சம் வெச்சுக்குங்கப்பா. அம்மாவுக்கும் உங்களுக்கும் சண்டை வராம பார்த்துக்குங்க. அவங்க பக்கம்தான் நியாயம் இருக்கும். கூடிய சீக்கிரம் நீங்க அவங்ககிட்ட சரண்டர் ஆகவேண்டியிருக்கும்.

சந்திராஷ்டமம் : 07.07.2018 முதல் 09.07.2018 வரை

துலாம்

குழந்தைங்களை அதிகம் கண்டிக்கிறேன் பேர்வழின்னு டார்ச்சர் பண்ணாதீங்க. சீக்கிரம் அவங்களைப் பற்றிய  பிரச்சினை சரியாகப் போகுது. கலைத்துறையில் உள்ளவங்களுக்கு மெகா ஜாக்பாட் அடிச்ச மாதிரி நன்மைகள் வந்து குவியுங்க. வார மத்தியில் எந்த வம்புக் கும் போகாமல், யாரைப் பற்றியும் யாரிடமும் விமர்சனம் செய்யாமல் கம்முனு இருங்க. அப்பாவுக்கு உஷ்ணம் சம்பந்தமான  பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. கவனமாய் இருக்கச்சொல்லுங்க. குழந்தைகளுக்கோ, கணவருக்கோ/ மனைவிக்கோ, தந்தைக்கோ இத்தனை காலம் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாகி  நிம்மதி பிறக்கும்.

சந்திராஷ்டமம் : 09.07.2018 முதல் 11.07.2018 வரை

விருச்சிகம்

எந்தத் தீர்மானம் எடுத்தாலும் சற்றே கவனமாகக் காலை எடுத்து வையுங்கள். எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம். சகோதர சகோதரிகளுடன்  சிறு பிரச்சினைகள் ஏற்பட்டால் தூங்காமல் கவலைப்பட்டு மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டாம். நல்ல செலவுகள் மற்றும் செலவை மிஞ்சும் வரவு உண்டு. ஆரோக்யத்தை சற்றுப்புறக்கணித்து சாப்பாட்டு விஷயத்தில் ரிஸ்க் எடுக்கிறீர்கள். கவனமாய் இருங்க. தந்தையின் புத்திசாலித்தனமான நடவடிக்கையால் குடும்பம் சிரமத்திலிருந்து அல்லது ஆபத்திலிருந்து தப்பும்.

சந்திராஷ்டமம் : 11.07.2018 முதல் 13.07.2018 வரை

தனுசு

பேச்சைக் குறையுங்கள்.  வம்பு பேச்சு வேண்டாம். மேலதிகாரிகளைத் தூக்கி எறியும் விதமாகவோ அலட்சியமாகவோ பேச வேண்டாங்க. கணவன் மனைவிக்குள் இப்போது ஏற்படும் சின்னப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் கவனமாக இருங்க. ஏனெனில் அது கிளறாமல் இருந்தால் சிம்பிளாய் முடியப்போகுது. தந்தைக்குப் பெரிய அளவில் புகழ் வரப்போகுது. அவர் அவார்ட்/ ரிவார்ட்/ கைதட்டல்/ பரிசு/ பாராட்டு பெறப்போகிறார். எளிய சில சிகிச்சைகள் பெற்று நல்லபடியா ஆவீங்க. வாகனங்கள் ஓட்டும்போது மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் ஓட்டுங்க.

மகரம்

சாப்பிடவும் தூங்கவும் நேரம் இல்லாமல் ஓடு ஓடுன்னு ஓடுவீங்க. உழைப்பீங்க. போதாக் குறைக்குப் பயணங்கள் வேறு மேற்கொள்ள வேண்டி வரும். பெண்களுக்கு கர்பப் பை சம்பந்தமான சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே மருத்துவ உதவியை நாடுங்க. பெரிய பிரச்சினையாகாமல் தவிர்க்கலாம்.. மகன்/ மகள் வாழ்வில் வளம் பெருகி ஒளி திகழும். கோபத்தைக் குறைச்சுக்குங்க. அவசர பதில்களையும் வாக்குவாதங்களையும் குறைச்சுக்கிட்டு நிதானமாகவும் மென்மையாகவும் பதில் சொல்லுங்க

கும்பம்

நண்பர்கள் பெரிய அளவில் உதவி செய்வாங்க. குறிப்பா  வெளிநாட்டில் உள்ளவங்களால நன்மை ஏற்படப்போகுது. மகன்/ மகளுக்கு அரசாங்க நன்மைகள் உண்டாகும். உதவித் தொகை போன்றவை கிடைக்கும். அவங்களுக்கு அரசாங்க மற்றும் வங்கி வேலைகள் கிடைக்கும். செலவுகள் கட்டுப்படும். வருமானம் அதிகரிக்கும். உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும், காதல் திருமணம் கைகூடும். திருமணம் ஆனவர் என்றால் கணவன் மனைவிக்குள் இனிய ஒற்றுமை நிலவும். அதிருஷ்ட தேவதை உங்களைப் பார்த்து மகிழ்ச்சி யுடன் புன்னகைப்பாள்.

மீனம்

எதிர்பாலின நண்பர்கள் நன்மை செய்வாங்க. சிறிய வகையில் ஆரோக்யம் பாதிக்கப் படும். தாயாருக்கு நன்மை ஏற்படும். வெளிநாட்டுப் பயணம் உங்களுக்கோ உங்கள் மகன்/ மகளுக்கோ கூடிய சீக்கிரத்தில் உண்டு.  திடீர் லாபங்களும் தொடர் வருமானமும் உண்டு. உத்யோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம்/ பதவி உயர்வு/ சம்பள உயர்வு சற்றுத் தடை தாமதங்களுக்குப் பிறகே கைகூடும். சற்றுப்பொறுமையாக இருங்க. சாப்பாட்டு விஷயத்தில் அதிக கவனமாக இருங்க. குழந்தைகளுக்கு திடீர் நன்மைகள் உண்டு. தாயாருக்கு நிதானமான நன்மைகள் ஏற்படும்.