வார ராசிபலன்: 07.06.2019 முதல் 13.06.2019 வரை! வேதா கோபாலன்

 

மேஷம்  

பேசுவதனாலும்.. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளாலும்.. அதில் உள்ள விஷய செறிவா லும் உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்களுக்கும், அரசியல் பேச்சாளர்களுக்கும் ஜாக்பாட் வாரம் இது. நல்ல பெயரும் புகழும் கிடைப்பதுடன், மேலிடத் தின் பார்வை உங்களை உயர்த்தும். சகோதர சகோதரிகளுடன் அதிக டச் இல்லை என்றால் கவலைப்படாதீங்க. பேச்சு வார்த்தை இருந்தால்தானே அது தடித்து சண்டையாகும். அதிர்ஷ்டமும் பணவரவும் தேடி வரும். ஆனால் அவை ஒன்றும் குருட்டு அதிருஷ்டத்தினால் வராது. மிகுந்த முயற்சியால் வரும். எந்த முயற்சியும் வெற்றி கிடைக்கும். வாழ்வில் ஒரு பிடிப்பும் மனதில்  ஒரு உற்சாகமும் பிறக்கும்.

ரிஷபம்

குழந்தைகளின் வாழ்வில் சின்னச்சின்னத் தடைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில் வியாபாரங்களில் பண முதலீடு எதையும் பெரிய அளவில் செய்ய வேண்டாம். சீரான.. வழக்கமான அளவு செய்தால் போதும். வேலை செய்யும் இடத்தில் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியிருக்கும். அதனால் என்னங்க. செய்ங்களேன். வயிறு தொடர்பான நோய்கள் வராமல் இருக்க… சுத்தமான, சுகாதாரமான உணவை. நேரம் தப்பாமதல் சாப்பிடுங்க. பயணம் செய்யப்போறீங்களா? எனில் பணம் நகைகளயெல்லாம் பாதுகாப்பாய் வெச்சுக் குங்க. புத்தியில் குழப்பம் ஏற்படாமல் தெளிவா இருங்க. எதையும் மனசில் அதிகமாய்ப் போட்டு யோசிச்சுக்கிட்டே இருக்க வேண்டாம். அதனால் எதுவும் மாறப்போவது இல்லைங்க.  அவஸ்தைப்பட வேண்டாம். 

மிதுனம்

நீங்க மாணவரா? எனில் உயர்கல்விக்கான படிப்பை தேர்வு செய்யும்போது முன்பு குழப்பம் இல்லாமல் முடிவு செய்யுங்கள். அல்லது விஷயம் தெரிந்தவர்கள்.. மற்றும் ஆசிரியர்களின் யோசனையை கேட்பது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். ஏற்கனவே வேலை யில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். நாம பேசினாத்தானே பிரச்சினை வருது என்று தெரிந்தால் பேசாமலேயே இருப்பது நல்லதுங்க. கல்விக்காக நிறைய செலவு செய்வீங்க.  அது உங்களுடைய கல்வியாகவும் இருக்கலாம் மற்றவர்களின் கல்வியாகவும் இருக்கலாம். ஆனால் ஒன்று நிச்சயம். அந்தச் செலவு உங்களுக்கு சந்தோஷத்தையும் மன நிறைவையும் கொடுக்கும். இத்தனைக்கும் அது முன்பின் தெரியாதவங்களின் கல்வியாய் இருக்கக்கூட வாய்ப்புண்டு. வெளியூர் வெளிநாடு செல்ல நிறைய சான்ஸ் இருக்கு. ரெடியா இருங்க.

கடகம்

வரவு எட்டு ரூபாய், செலவு பத்து  ரூபாய்னு செலவு  செய்யாதீங்க. நல்ல நல்ல காரணங் களுக்காக ஏராளமான சுப செலவுகள் வரப்போகுது. இப்போதே காரணம் இல்லாமல் தாம் தூம்னு வேட்டு விடாதீங்க. அதுவா வரட்டும். ரெடியா வாசலைப் பார்த்துக்கிட்டிருங்க. ஃப்ரெண்ட்ஸ்தான் இப்ப உங்களுக்கு  சகலமும். கிண்டல் தொனியில்லைங்க. அவங்க மேல சத்தியமா உண்மையைத்தான் சொல்றேன். டாடியின் ஆரோக்யத்தை மட்டும் கவனிச்சுக் குங்க,  அது போதும். வெளியூர் வெளி மாநிலம் வெளிநாடு  என்று பயணம் செய்ய வேண்டி வரும். காலில் சக்கரம்தான். புது வாகனம்.. புது வீடு .. என்று எதாவது வாங்க சான்ஸ் இருக்குங்க. அம்மாவுக்கு அவங்க பெற்றோர் வீட்டிலிருந்து சொத்து.. அல்லது  சொத்தில் பங்கு  அல்லது நகைகள் கிடைக்கும்… சினிமா, பீச், சர்க்கஸ், டிராமா, ஓட்டல் என்று ஜாலியாகப் போவீர்கள். 

சிம்மம்

ஒரு பக்கம் பொழுது போக்கும் ஜாலியான பயணங்களும் இருக்கும். இன்னொரு புறம் திடீரென்று ஆன்மிக ஈடுபாடு வரும். அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது. யார்கிட்டயும் சண்டை போடமாட்டேன்னு கண்ணாடியைப் பார்த்து 100 முறை சொல்லுங்க. முடிஞ்சால் சபதமே செய்துக்குங்க. தப்பில்லை. சகோதர சகோதரிகள் இப்போதைக்கு பயங்கர எனிமி களாய்த் தெரிவாங்க, கிளறி நிரந்தமாக்காதீங்க. அப்டியே விடுங்க, சரியாகும். அப்புறம் அவங்களைப் பார்த்து அசடு வழிந்து சமாதானக்கொடி பறக்க விடுவீங்களே. இத்தனை காலம் இருந்து வந்த டென்ஷனும் கவலையும் பயமும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று சற்றுத் தள்ளிப் போய்க்கொண்டிருந்தாலும் இப்போதே உறுதியாகும். சிலமாதங்களில் நடந்தேறும்.

கன்னி

வழக்கத்தைவிட அதிகமாகக் கையில் பணம் புரளும். குழந்தைகளால் சந்தோஷம் அதிக மாகும். அப்பா அம்மா முன் எப்போதும் இல்லாத அளவு அனுசரணையாய் இருப்பாங்க. உடன் பிறந்தவர்கள் அன்பாய் இருப்பாங்க. பழைய சண்டைகள் மறந்து சந்தோஷமாய் ஒருவரை ஒருவர் மன்னிப்பீங்க. அதுதானேங்க வாழ்க்கை. புதிய வேலை மாறணுமா? தசை புக்தி  அனுமதிச்சால் ஜமாயுங்க. கடன்கள் அடையும். திருமணம்.. குழந்தைப் பேறு  .. கிரகப் பிரவேசம்.. என்பது போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்…  ஒன்று கட்டாயம் நினைவில் வெச்சுக்குங்க, வெயில் காயும்போதே வைக்கோலைக் காய வையுங்கன்னு ஒரு ஆங்கிலப் பழமொழி நினைவிருக்கா? அதை இப்போ நினைவுல வெச்சுக்குங்க. சரியா?

துலாம்

மனதில் உறுதியும் பேச்சில் இனிமையும் முன்பைவிட  மேலும் அதிகமாகக் கூடும். எனவே  மற்றவர்களுக்கு நன்மை செய்வீங்க. அழகு சாதனங்களுக்கும் அலங்காரப் பொருட்களுக் கும் கொஞ்சம் அதிகமாகச் செலவு செய்வது போல் தெரிகிறதே. முடியுமானால் இழுத்துப்பிடி யுங்களேன். வெளியூர்ப்பயணம் காரணமாய் மனசில் சந்தோஷம் குவியும்.  குறிப்பாய் அலுவலகம் சம்பந்தப்பட்ட பயணங்கள் மகிழ்ச்சி தரும். சகோதர சகோதரிகளிடம் வாக்கு வாதம் இல்லாமல் பார்த்துக்குங்க. அனேகமாய் அவங்க பக்கம்தான் நியாயம் இருக்கும். அப்புறம் அது புரிந்து நீங்க வருத்தப்படக்கூடாதில்லையா? புதிய வேலை கிடைக்கும். அல்லது புது கார் / வீடு வாங்குவீங்க.  

விருச்சிகம்

சிலருக்கு வாழ்க்கையில் வசந்தம் கூடிக் கணவர் / மனைவி அமைந்து மகிழ்வீங்க. திருமணம் ஆனவங்களுக்குப் புது பாப்பா வரலாம். வியாபாரத்துல ஈடுபட்டிருக்கறவங்க ளுக்கு நன்மையும் லாபமும் அதிகமாகும். ஆனால் அதுக்காக நீங்கள் சற்று அதிகம் உழைப் பீங்க. சந்தோஷமாய் உழைப்பீங்க என்பது நல்ல விஷயம். அது இது எதுன்னு நாலாபக்கங் களிலும்  வழி கண்டுபிடிச்சுக்கிட்டு பணம் உங்க அக்கவுன்ட்டை நோக்கிப் பாய்ந்து வரும். விட்டுவிடாமல் கெட்டியாய்ப் பிடிச்சு சேவ் பண்ணிக்குங்க. பிற்காலத்துக்கு உதவும். எதிலும் சற்று நிதானப்போக்கு இருக்கும். டென்ஷன் ஆவாதீங்க.  பொறுமையா இருங்க. எல்லாம் நல்லபடியா முடியும்.

தனுசு

பங்குச் சந்தையில் இது மாதிரி ரிடர்ன் பார்த்ததில்லையே நீங்க? என்ஜாய். எனினும் இது ஒரு திடீர் அதிருஷ்டம் என்பதையும் இதே போல எப்போது பார்த்தாலும் எதிர்பார்க்க முடியாது என்பதையும் மறக்காதீங்க. வீடு மாற வாய்ப்பிருக்கு. முன்பைவிட இந்த வீடு உங்களுக்குப் பல காரணங்களால் அதிகமாகப் பிடிக்கும். மாற்றி மாற்றி.. எல்லா வாகனத்திலும் பிரயாணம் செய்வீங்க. ஆனா உங்களுக்கா அலுக்கும்? புது பிசினஸ் ஆரம்பிக்க நினைக்கற வங்களுக்கு இது சரியான நேரம், ரெடி ஸ்டெடி .. ஸ்டார்ட்.. ஆனாலும் உங்களின் ஜாதகம் ..குறிப்பாக தசை புக்தி அதற்கு இடம் கொடுக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டு செயலில் இறங்குங்க. கல்வி சம்பந்தமான சாதனைகள் செய்வீங்க. பரிசுகள் விருதுகள் வாங்குவீங்க.

சந்திராஷ்டமம்: ஜூன் 6 முதல் ஜூன் 8 வரை

மகரம்

எத்தனையோ நாட்களாய்.. மாதங்களாய்… வருடங்களாய் .. மனதை வாட்டிக்கொண்டிருந்த கவலைகளெல்லாம் பறந்தே போகும். குறிப்பாகக் குழந்தைகள் பற்றி எவ்ளோ கவலைப்பட்டீங்க. வெளியூர் வெளிநாட்டுப் பயணங்களுக்கு பேக் செய்ய ஆரம்பிச்சிருப்பீங்களே.சென்று வென்று வாருங்கள். பேச்சில் பணிவும் அடக்கமும் தேவைன்னு ஒரு முறை நினைவுபடுத்திக்கொண்டு வாயைத் திறங்க. எப்போதையும்விட அலுவலகப் பொறுப்புக்கள் தலைமேல் ஏறி உட்காரும். ஆபீஸ் வீடு இரண்டு இடங்களிலுமே வேலை பளு அதிகமாகத்தான் இருக்கும். மம்மிக்கு திடீர்ப் புகழ் பரிசு எல்லாம் கிடைக்கும். நீங்கள் முன்பு எப்போதோ உழைத்த உழைப்புக்கும், எப்போதோ செய்த முயற்சிகளுக்கும் என்றைக்கோ செய்த முதலீடுகளுக்கும் இன்றைக்கு மகிழ்ச்சியளிக்கும்படியான பலன் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 8 முதல் ஜூன் 10 வரை

கும்பம்

வியாபாரிகளுக்கு திடீரென்று லாபம் நிறைய வரும். ஆனாலும் அது நேர்மையான… நேரான..  நியாயமான வழியில் வர வேண்டும் என்பதை உறுதி செய்துக்குங்க.  அதற்கேற்றப டி பலன்கள் உங்களை வந்தடையும் என்பதை மறக்க வேண்டாம். பாஸ்போர்ட் விசாவெல் லாம் புதுப்பிக்க வேண்டிய தேதிகளை ஒரு முறைக்கு இருபது முறை சரிபார்த்துக்குங்க. அந்தப் பக்கத்து சொந்தம் இந்தப் பக்கத்து சொந்தம் என்று நிறையப்பேரை  அடிக்கடி கான்டாக்ட் செய்ய வேண்டியிருக்கும். முகத்தை சந்தோஷமா வெச்சுக்குங்க. சின்ன பிரச்சினைங்களை ஊதிப் பெரிசாக்காதீங்க.  உறவினர் வீடுகளில் தினமும் ஸ்வீட்தான்.. விருந்துதான் பால்பாயசம்தான். வாழ்வில் நடப்பதை உங்களாலேயே ஜீரணிக்க முடியாது. அவ்ளோ சர்ப்பிரைஸ் காத்துககிட்டிருக்கு உங்களுக்காக.

சந்திராஷ்டமம்: ஜூன் 10 முதல் ஜூன் 12 வரை

மீனம்

வீடு அல்லது ஃப்ளாட் வாங்கப்போறீங்க… கங்கிராட்ஸ்.. முன்பு முகம் திருப்பிப் போனவர்கள் எல்லாம் இப்போது ”உன்னைப் போல் உண்டா!” என்பார்கள். ஊரெல்லாம் பாராட்டினாலும் வீட்டில் புலி மாதிரி உறுமி பயமுறுத்திக்கிட்டிருக்கீங்களே. தேவையா அது? பொழுது போக்கு அம்சங்களுக்குக் குறைவில்லை. கவர்ச்சி அம்சம் என்பார்களே அது அதிகரிக்கும். அப்பாடா.. எதெதற்கெல்லாம் பயந்தீங்களோ அதையெல்லாம் பார்த்துச் சிரிப்பீங்க. நீங்கள் இருக்குமிடத்திற்கே விமானம் ஏறிக் கடல் தாண்டிச் வருமானம் வரும்! நிறையத் தண்ணீர் குடியுங்கள்.  ஆரோக்யத்தைப் பார்த்துக்குங்க. மகனையோ மகளையோ எதற்கும் வற்புறுத்தாதீங்க.

சந்திராஷ்டமம்: ஜூன் 12 முதல் ஜூன் 15 வரை

கார்ட்டூன் கேலரி