வார ராசிபலன்: 08.03.2019 முதல் 14.03.2019  வரை! வேதா கோபாலன்

மேஷம்       

 உங்க அலுவலகத்தில் உள்ள மேலதிகாரிங்க  உங்களைக் கூப்பிடுவாங்க. மெயிலை செக் செய்ய சொல்லுவாங்க. திறந்து பார்த்தால்… வாவ்.. துள்ளுவீங்க… கங்கிராட்ஸ். பதவி அல்லது சம்பளம் உயர நிறைய வாய்ப்பு இருக்கு.  ஆனால் இதில் ஒரு இக்கட்டு என்ன வென்றால்… பொறாமைக் கண்கள் உங்களைக் காய்ச்சும். கவலை வேண்டாம். வீட்டில் பாட்டி இருந்தால் சுத்திப் போடச் சொல்லுங்க.  இல்லாட்டி கடவுள் மேல் பாரத்தைப் போட்டுக் கடமையைத் தொடருங்க. கோபமும் வீரமும் முன்பைவிட அதிகமாக இருக்கும். முதலாவதைக் குறைச்சுக்கிட்டா உங்க உடம்பும் மனசும் பிழைக்கும். பக்கத்தில் உள்ள வங்களும்தான். இப்போது நடக்கும் அனேச நன்மைகள் மிக திடீர் நிகழ்வுகளாகவே இருக்கும். அதிலும் அனேகமாக நீங்கள் சற்றும் எதிர்பாராதவையாகவும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் ஸ்வீட் சர்ப்ரைஸ் என்பார்களே அந்த சந்தோஷத்தை அனுபவிப்பீங்க. என்ஜாய்.

 ரிஷபம்

உங்களுக்கென்னங்க.. இயல்பாகவே உள்ள கவர்ச்சி அம்சம் ஒரு புறமும் தற்போதைய பெயர்ச்சிகள் தரும் நன்மைகள் மறுபுறமும் உங்க மனசை நிம்மதியாகவும் சந்தோஷமாக வும் பெருமிதமாகவும் வெச்சிருக்கும். சுப நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழும். நான் குறிப்பிட்ட அந்தக் கவர்ச்சி அம்சம் உங்கள் முக்கியத்துவத்தை அதிகரிக்கும்.  செல்வாக்கு அதிகமாகும். கலைத்துறையில் உள்ளவங்க கொடிகட்டாமலேயே பறப்பீங்க. புத்திசாலித் தனம் மிகுந்த செயல்களை செய்வதால் அலுவலகத்தில் பாராட்டு மழைதான் போங்க. பெரியவங்க திருமணம் பேசி முடிப்பாங்க. இருமனம் கலப்பது உங்க கையில்தான் இருக்கு. நடுநடுவில் கோயில் குளம்னு போவதால் உங்களுக்கு வேண்டி வங்ககிட்ட மகிழ்ச்சியான ரியாக்ஷன் கிடைக்கும்.

மிதுனம்

கெட்ட பழக்கங்களைக் கெட்ட நபர்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைக்க வாய்ப்பு அதிகம் இருக்குங்க. இப்போதைக்கு எல்லாம் சுவாரஸ்யமாவும் சந்தோஷ போதையாக வும்தாங்க    இருக்கும். ஆனால் பிற்காலத்தில் இதையெல்லாம் நினைச்சு வருத்தப்பட்டு… ‘ஏன்தான் என் புத்தி அப்பிடிப்போச்சோ‘ என்று அங்கலாய்க்கக்கூடா தில்லையா. அதனால்தான் சொன்னேன். மேலும் யாருமே உங்களுக்கு  சோப் போட்டால் மயங்கி டாதீங்க. உங்களை மற்றவர்கள் செமத்தியாய் உபயோகப் படுத்திக்கறாங்கன்னு புரிஞ்சுக்குங்க. குடும்பத்தினருடன் சண்டையெல்லாம் வெள்ளைப் புறா பறக்க விட்டு சரியாகிவிடும். அனேகமாக உங்க கைதான் உயர்ந்திருக்கும். எதிரிகள் பயந்துடுவாங்க. உங்க கோபமும் முரட்டுத்தனமும் அந்த அளவுக்கு மத்தவங்களைப் பயமுறுத்தி வெச்சிருக்கு. வேண்டாமே. அன்பால் பணிய வையுங்கப்பா.

கடகம்

கவர்ச்சி அம்சம்  அதிகரிக்கும். சாதாரணமாக அல்ல. அபரிமிதமாக. குறிப்பாக எதிர் பாலினத்தினர் உங்கள் சாதனைகளால் கவரப்பட்டு உங்களைச் சூழுவாங்க. தப்பிக்கப் பாருங்க.  பிற்பாடு தொல்லையாக மாறக்கூடும். திருமணம் முடிவாகும்.  ஜாலிதான்! அனேகமாகக் காதல் திருமணம். அதே சமயம் இரு வீட்டினரின் முழுச் சம்மதம். ஆஹா.. ஆஹா.. பக்தி மார்க்கங்களில் நாட்டம் அதிகரிக்கும். பல காலம் பெண்டிங்கில் வைத்திருந்து கிடப்பில் போட்டிருந்த விஷயங்களையெல்லாம் தூசி தட்டி முடித்து மனசில் திருப்தியும் மற்றவர்களிடையே பெருமிதமும் அடைவீங்க. இத்தனை காலமா எந்த லாக்கர்ல போட்டு ஒளிச்சு வெச்சிருந்தீங்க இந்தத் திறமையெல்லாம்? பாருங்க. பாஸ் வந்து தோளில் தட்டிக் கொடுத்துப் பாராட்டறாரு.  அட..இதை எப்பவும்  மெயின்டெயின் செய்ங்கப்பா.

 சிம்மம்

நிறைய சுப செலவுகள் இருக்கும். அனேகமாக மகள் அல்லது மகளின் திருமணம் கூடி வரும். வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வர மகிழ்ச்சியுடன் செலவுகள் செய்வீங்க. தலைக்குள் மூளை இருக்கற அளவுக்கு முயற்சி செய்யற ஆசையும் இருக்கணும். எனிவேஸ் சம்பளம் உயரும். அடிச்சு விடுங்க. கையில் காசிருந்தால் அதை எந்த அளவு சேமிக்கணுமோ அந்த அளவு செலவும் செய்யணும். இப்பதான் நியாயமான நல்ல செலவுங்க செய்ய  ஆரம்பிச்சிருக்கீங்க. குட் லக். அதிருஷ்டம் வாசல் படியில் வந்து உட்கார்ந்து ”டேக் மி” என்று கெஞ்சும். விட்டுவிடாதீர்கள். கப்பென்று இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளே வந்துடுங்க. யார் வீட்டுக் குழந்தையோ என்று அலட்சியம் செய்துடாதீங்க. முதலில் அது பிற்காலத்தில் உங்களை உயர்த்தப்போகுது.

சந்திராஷ்டமம்: மார்ச் 7 முதல் மார்ச் 9 வரை            

கன்னி

திருமணம் சம்பந்தமான டென்ஷன் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். எதிர்பார்ப்பும் வேண்டாம். நீங்க பாட்டுக்கு உங்க கடமைங்களைச் செய்துக்கிட்டே போங்க. எப்ப எதுக்கு வேளை வருதோ அப்ப அது நடக்கும். எதற்கும் அவசரம் வேண்டவே வேண்டாங்க.  அதன் காரணமாக நீங்க தப்பான முயற்சிகள் செய்யவும்.. அது உங்களை இக்கட்டில் கொண்டு விடவும் சான்ஸ் இருக்கு.  அதைவிடுங்க.. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்துக் கிட்டிருந்தீங்கதானே.. வாழ்த்துகள் பாஸ்போர்ட்டும் விசாவும் மிக விரைவில்  ரெடியாகும். திடீரென்று நிகர்ச்சிகள் மடமடவென்று நடந்தேறும். அலுவலக வேலை விஷயமாய் நீங்க ஆசைப்பட்டுக்கொண்டிருந்த டூர்கள் மற்றும் ஆன்சைட்கள் கைகூடி வரும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 9 முதல் மார்ச் 12 வரை

 துலாம்

ஒரே வார்த்தை…ஓஹோன்னு வரப்போறீங்க. அலுவலக பிரச்சினையெல்லாம் எறும்புக் கடி மாதிரி. அதை டினேசர் சைஸுக்குக் கற்பனை செய்துகிட்டு நடுங்காதீங்க. அலுவலகப் பயணம் செல்லும்போது மூக்கால் அழுது கொண்டே போனாலும்கூட  வெற்றி பெற்றுத் திரும்பும்போது சந்தோஷத்தில் குதிச்சுக்கிட்டுதான் வருவீங்க.  பேச்சினால் நன்மைகள் அலுவலகத்தில் மட்டுமில்லீங்க.. வீட்டிலும் , அக்கம்பக்கத்திலும்.. உறவினர் மத்தியிலும் கூடத்தான் ஏற்படும். ஒரு சிலர் உங்களை தெய்வம் மாதிரிப் பார்க்கும் அதே வேளையில் சிலர் உங்களை அந்த அளவு மரியாதையுடன் பார்க்க மாட்டாங்க. இட்ஸ் ஓகேங்க. விடுங்க. வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா.  அவசரமும் கோபமும் நிதானமிழக்கச் செய்யும் படியான காலகட்டங்க. கேர்ஃபுல்லா இருங்க.

சந்திராஷ்டமம்: மார்ச் 12 முதல் மார்ச் 14 வரை

விருச்சிகம்

கடந்த சில வருஷங்களாய் எத்தனை இன்னல்களை அனுபவிச்சுக்கிட்டு இருந்தீங்க. இன்னும் கொஞ்சம் சிறிய அளவில் எறும்புக் கடிகள் மாதிரி அவை தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கும். எனினும்…  நீங்க பாட்டுக்கு வெற்றி நடை போட்டு முன்னேறிக்கிட்டேதான் இருப்பீங்க.  தடைகள் .. தாமதங்கள் .. எல்லாமும் கட்டாயம் இருக்கத்தான் செய்யும். கடுப்பும் வெறுப்பும் மனசில் வரத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் மீறிய தைரியமும் தன்னம்பிக்கையும் மனசில் இருப்பதால் வெற்றியும் மகிழ்ச்சியும் கட்டாயமா இருக்கும். இறை விஷயங்களில் கவனம் குவியும். வீடு/ நிலம்/ ஃப்ளாட் அல்லது வாகனம் பதிவு செய்வீங்க. அலுவலகத்தில் அதிக பளுதான். என்ன செய்ய? சில மாதங்கள் பொறுத்தால் போதும்! என்ன கஷ்டம்? ஜமாய்த்துவிடுவோம்.  

தனுசு

கர்வம் உங்கள் தோள் மேல் ஏறி உட்கார்வதற்கு இடம் கொடுக்காமல் சாதுவாய்ப் போவது நல்லது. சொல்றதைச் சொல்லிட்டேங்க. அப்புறம் உங்க இஷ்டம். கணவர்/ மனைவிகிட்ட அணுசரிச்சுப் போக வேண்டும். மம்மிக்கு மகிழ்ச்சி கூடும். உஙக கடமையை முடித்த திருப்தி உண்டு. ஏகப்பட்ட செலவுகள் இருக்கும். மனசையும் கார்டையும் தயார் நிலையில் வெச்சுக்குங்க.  அலைச்சலும் உழைப்பும் அதிகம் இருக்கும். என்ன உழைத்தென்ன.. பலன் குறைவுதான என்ற புலம்பலையும் ஆதங்கத்தையும் தூக்கிப்போடுங்க. எதற்கும் வேளை வரணும்ல. வரும் கட்டாயம் வரும். வெயிட். வெயிட். பாவ எண்ணங்களும் தீய சிந்தனை களும் மனசில் ஏற அனுமதிக்காதீங்க. அது உங்களை அடிமைப்படுத்த விடாதீங்க. ஏனெனில் நீங்க அதற்கு ஆயுள் கைதியாகிவிடுவீங்கள். ஜாக்கிரதை.

மகரம்

உஷ்ணம் சம்பந்தமான சின்னச்சின்ன உபாதைகளை நீங்க சுலபமாய் எதிர்கொள்வீர்கள். வீரமும் தைரியமும் ஏற்கனவே சற்று அதிகம்தான் உங்களுக்கு. அது இப்போ ஏகமாய் அதிகரிக்குங்க. லாபங்களும் வருமானமும் அதிகமாய் இருந்தாலும் அது மிக மெதுவாய்த் தான் உங்களை வந்தடையும். அதனால் என்னங்க. நீங்க பொறுமைசாலி.  சோம்பலும் சோர்வும் கிட்டே நெருங்காமல் காத்துக்குங்க. போதும். கவரும் தன்மை அதிகமாகுங்க. அதனால் நீங்க நினைச்சதைச் சாதிப்பீங்க. வெளிநாட்டில் உள்ள நண்பர்களால் நன்மைகள் அதிகரிக்கும். நீங்கள் திட்டமிட்டிருந்த வெளிநாட்டு ட்ரிப்கள் சற்றே தள்ளிப்போனால் டோன்ட் ஒர்ரி.  அப்படி ஆனால்தான் உங்களுக்கு நன்மை என்பதைப் புரிஞ்சுக்குங்க.

 கும்பம்

பேச்சில் இனிமைகூடி மற்றவங்களை வசீகரிக்கப்போறீங்க. சந்தோஷம்தான். அதோடுகூட அந்தப் பேச்சினால் அலுவலகம் சம்பந்தமான நன்மைகளும் அதிகரிக்கும். ஆஃபீசுக்கே பெருமையும்,, நன்மையும் லாபமும் கிடைக்கப்போகுதுங்க. சீக்கிரத்தில் நீங்க ஹீரோவா/ ஹீரோயினா ஆகப்போறீங்க. உங்களைப் பலர் பாராட்டவும் வியக்கவும் செய்வாங்கதான். நான் இல்லைன்னு சொல்லலை. அதே சமயம் பொறாமை காரணமான நடவடிக்கை களுக்கும் ரெடியா இருங்க. அதெல்லாம் உங்களை எதுவும் செய்துவிட முடியாது என்பதும் எதையும் அநாயாசமாய்க் கடந்துடுவீங்க என்பதும் உண்மைதாங்க. அதே சமயம் நீங்க மனசளவில் இதற்கெல்லாம் ரெடியா இருக்கணும்ல. அதுக்காகத்தான் இந்தக் காஷன் கொடுத்தேன்.

மீனம்

படபடன்னு அவசரப்பட்டுப் பேசும் குணம் இப்போ தலைதூக்க வாய்பிருப்பதால்…  மௌம் தங்கத்துக்குச் சமானம் என்பதை  அவ்வப்போது நினைவுபடுத்திக்குங்க. உத்யோகரீதியான விஷயங்களில் சற்று மெத்தனமாக போக்கு தென்படும்தான். ஆனால் லாபமும், வருமானமும் அதையெல்லாம் மறக்கச்செய்துவிடும். எல்லோரையும் எப்பவும் அனுசரிச்சுக்கிட்டுப் போற உங்க பெருந்தன்மைக்கு ஒரு பெரிய சபாஷ்ங்க. அதிருஷ்டம் என்பது உங்களைத் தேடித்தேடிப் பிடிச்சு நன்மை செய்யும். திடீர்னு புகழ் அதிகரிக்கும். வேலை மாறத் திட்டமிட்டிருந்தீங்களே. தட்டிவிடுங்க மனுவை. எல்லாம் கடகடன்னு முடிஞ்சுடும்.  வெளிநாடு உங்க இலக்கு என்றால் சான்ஸ் இன்னும் பத்து பர்சன்ட் அதிகமாவே இருக்குங்க. 

 

கார்ட்டூன் கேலரி