Random image

வார ராசிபலன்: 8-12-17 முதல் 14-12-17 வரை – வேதா கோபாலன்

மேஷம்

இருங்க இருங்க.. அரசாங்க நன்மைக்கு அவசரம் காட்டினால் என்னங்க அர்த்தம்? அது பாட்டுக்கு வரும். டோன்ட் ஒர்ரின்னா டோன்ட் ஒர்ரிதான். எதிர்பாலினத்தினர் சற்றே ஏமாற்றம் அளிக்கக்கூடும். அதனால் பரவாயில்லை. சீக்கிரத்தில் அவங்க தப்பை உணரு வாங்க. உங்களுடையது அதிக எதிர்பார்ப்புன்னும் நீங்க புரிஞ்சுக்குவீங்க. கணவன் மனைவிக்குள்ள எந்த அளவு ‘ஃபைட்சீன்ஸ்’ இருக்கோ அந்த அளவு சந்தோஷ சீன்களும் இருக்கும். உடனே சமாதானக்கொடி பட்டொளிவீசிப் பறக்கும். மாணவர்களா நீங்க? படிப்பில் சின்னச் சின்ன சுணக்கங்கள் இருந்தாலும் அதை நீங்களே சரி செய்வீங்க.

ரிஷபம்

மனைவி/ கணவர் ஒரு நாள் இருந்த மாதிரி ஒரு நாள் இல்லைன்னு டென்ஷனாகாதீங்க. போனாப்போகுதுன்னு கொஞ்சமே கொஞ்சம் அனுசரிச்சுப் போங்களேன். ப்ளீஸ். உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன். நண்பர்களுடன் செம டிஷ்யூம் காட்சி இருக்கு.  அடுத்த நாள் ரெண்டு பேரும் அசடு வழிஞ்சுக்கிட்டு ஸாரி சொல்வீங்க. இதை நினைவில்  வெச்சுக்கிட்டு கொஞ்சம் அடக்கி வாசிங்க. டாடி வெளிநாடு போவாரு. ஒரு வேளை நீங்க வெளிநாட்டு வாசின்னா அவர் வந்து உங்களோட தங்க நிறைய வாய்ப்பிருக்கு. என்ஜாய். மலரும் நினைவுகள் பேசி மகிழுங்க.

மிதுனம்

ஏராளமான வருமானமும் லாபங்களும் வரும். அதிலும் சற்றும் எதிர்பார்க்காத தொகை மின்னல் வேகத்தில் கைக்கு வரும். என்றைக்கோ கடன் கொடுத்தோ முதலீடு செய்தோ ஏமாற்றமடைஞ்சு.. ‘வராது ..வரவே வராது’ என்று தருமி மாதிரிப் புலம்பினீங்களே நினை விருக்கில்ல (மறக்குமா?) அது உங்க வீட்டு வாசக்கதவை ராசலட்சுமியாய்த் தட்டித் தங்கத்தாம்பாளத்தில் பல மடங்காகத் திருப்பி கொடுத்துவிடும். அப்பாவுக்குச் சின்ன அளவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறிது காலத்திலேயே சரியாகும். உத்யோகத்தில் ராஜ யோகம். அப்பா வழியில் நிறைய நன்மைகள் உண்டு.

கடகம்

புதிய வேலை கிடைக்கும். அதுவும் நீங்க காத்துக்கிட்டு மெயில் பாக்ஸைத் திறந்து திறந்து பார்த்த போதெல்லாம் கிடைக்காத ஜாப்.. இப்ப நீங்க ஏமாற்றத்துடன் சோர்ந்து போய்த் திரும்பிக்கொண்டு உங்க வேலையைக் கவனிக்க ஆரம்பித்தவுடனே கிடைக்கும். எனவே கடமையைச் செய்துட்டு  நீங்க பாட்டுக்கு அடுத்த வேலையைக் கவனிக்க ஆரம்பிங்க. ஒரே ஒரு லாபம்…  ஒரே ஒரு வருமானம் என்றில்லாமல் ஏகமாய் வருங்க. கலைத்துறைல உள்ளவங்களுக்கு ஜாக்பாட்தான் போங்க. அரசாங்கம் மூலம் நீங்கள் நீண்ட காலம் எதிர்பார்த்த அமவுன்ட் செட்டில் ஆகும்.

சிம்மம்

மம்மி மிகவும் ஃபேமஸ் ஆவாங்க. அவங்க அலுவலகத்தில் பாராட்டும் அவார்டும் ரிவார்டும் கிடைக்கும்.  கல்வி கற்கும் மாணவர்களுக்குப் பொற்காலம். அவர்களுக்கு அரசாங்க உதவித்தொகையெல்லாம்கூடக் கிடைக்கும். அம்மாவுக்கு  எதிலும் சற்றுத் தாமதங்களும் தடைகளும் இருந்தாலும் அதிக டென்ஷன்ஸ் இல்லாமல் கேட்டதும் கிடைத்து நினைச்சதும் நடக்குங்க. வெளிநாட்டில் உள்ள ஃப்ரெண்ட்ஸ் நீங்க நினைத்தும் பார்க்காத நன்மைகள் செய்வாங்க. இப்போதைக்கு யாரிடமும் கடன் கிடன் வாங்காதீங்க. லோனுக்குக் கையெழுத்துப் போடாதீங்க

கன்னி

குழந்தைங்க வெளிநாடு போவாங்க. நிறைய லாபம் பார்ப்பாங்க. பேச்சில் மட்டும் சூப்பரா ஒரு ஃபில்டர் போட்டுக்கிட்டீங்கன்னா வாழ்வு இனிக்கும். குடும்பத்தில் இப்பதான் அருமை யான ஒற்றுமை ஏற்பட்டு ஒவ்வொருவராய் ஒன்று சேர்ந்துக்கிட்டே வர்றீங்க. இப்பன்னு பார்த்து உங்க ஒரு வார்த்தையில் ஊசி குத்திடாதீங்க. உங்க புத்திசாலித்தனத்தை மத்தவங்க புரிஞ்சுக்காதது துரதிருஷ்டம். ஆனாலும் காலம் இப்படியேவா போகும்? சீக்கிரம் புரிஞ்சுக்கிட்டு காலில் விழுவாங்க. மௌனம் பெஸ்ட்.

துலாம்

அவசரமாய் எதுவும் செய்ய வேண்டாம். தேவையில்லாத பரபரப்பினால் நேரம் மிச்சமாகாது. அப்படியே ஆப்போசிட்டாகும். எத்தனையோ காலம் கழித்து உங்களுக்கு ஏராளமான நன்மை கள் ஏற்பட ஆரம்பிச்சிருக்கு. சுருங்கச் சொன்னால் உங்களுக்கு நல்லகாலம் பிறந்திருக்கு. அதில் போய் உங்க அவசரத்தால் சின்ன டாட் வெச்சுடாதீங்கப்பா.  பலப்பல விஷயங்களில் தொடர்ந்து நன்மைகள் ஏற்பட்டுக்கொண்டே வரும். குழந்தைகள், கணவர் எல்லாருக்கும் நன்மைக்கு மேல் நன்மை வரும். அலுவலகத்தில் உங்களுக்கும் நல்ல பெயர் ஏற்படும். எனவே .. உங்க அதிருஷ்டத்தை வியந்து  அடக்கமாயிருங்க.  

விருச்சிகம்

நிதானப்போக்கையும் தாமதத்தையும் நாம் மாற்ற முடியாது. ஆனால் வரக்கூடிய தீமையை வராமல் தடுக்க முடியும். எப்படி? பரிகாரங்கள் ஒருபுறம். அதையும் செய்யுங்க. உங்க செயல் களை நீங்க கட்டுப்படுத்தி எது நல்லது எது தப்பு என்று ஆராய்ந்து ஜாக்கிரதையா அடி எடுத்து வையுங்க. பிறகென்ன. வெற்றிதான். செலவுகள் நிறைய இருந்தால்தான் என்ன? நல்ல நல்ல  செலவுகளாய்த்தான் இருக்கும் அவை. வீட்டில் திருமணம் போன்ற விசேஷங்கள் வந்தாச்சு. காதல் கைகூடும். அல்லது மொட்டுவிடும். சற்றும் எதிர்பாராத மிக திடீர் செலவுகளுக்கும் தயாராய் இருங்கப்பா. ஆமாம்.. சொல்லிப்புட்டேன்.

தனுசு

யம்மாடியோ. செலவுக்கு மேல் செலவு வருதா? ஆடை அணிமணிகளுக்கு ஒருபுறம்.. கல்விப்பொருட்களுக்கு இன்னொரு புறம்.. அரசாங்க நன்மைகளுக்காக மற்றொரு புறம் வாகனம் இரும்புப்பொருட்கள் வாங்க நாலாவது புறம்னு செலவுங்களா? ஸோவாட்? இப்ப அதனால என்னன்னு கேட்கறேன்? செலவுகள் மட்டுமில்லாமல் முதலீடுகளும் அல்லவா அவை? இரண்டாவதாக.. உங்க செலவையெல்லாம் சரிக்கட்டி  மேலும் சேமிக்கும் அளவுக்கு ஏகப்பட்ட வருமானமும் திடீர் லாபமும் திடீர் அதிருஷ்டமும் வருதில்ல? பிறகென்ன? என்ஜாய். எதிர்பாலின சிநேகிதங்களால் மிகுந்த சந்தோஷங்கள், லாபங்கள் மற்றும் நன்மைகள் ஏற்படும்.

மகரம்

எல்லாமே நாம இஷ்டப்பட்டபடியே நடக்கணும்னா நாம என்ன மந்திரவாதிங்களா? பொறுமையை எடுத்துப் பூட்டிக்குங்க கழுத்தில். மம்மிக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். அதில் பாதி திடீர் நன்மையாவும் இருக்கும். ஒன்றல்ல இரண்டல்ல .. ஏராளமான நன்மைகளும் லாபங்களும் வந்து அசத்தும். அதே சமயம் உத்யோகத்தில் நீங்க எதிர்பார்த்த நன்மைகள் வரக் கொஞ்ச காலம் பொறுத்திருங்க. ப்ளீஸ். எதிர்பாராத சிரமங்கள் வரக்கூடும் என்பதால் மனசைத் தயார் நிலையில் வெச்சுக்குங்க. உத்யோகத்தில் மிக திடீர் மாற்றம் ஏற்படக்கூடும். ரெடியா இருங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 8 முதல் டிசம்பர் 11 வரை

கும்பம்

சகோதர சகோதரிகளுடன் சிறு சிறு பிணக்குகள்  ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு புறம் அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவாங்க. கவர்ன்மென்ட் ஜாப் வேணும்னு ஆசைப்பட்டீங்களே.. கிடைச்சாச்சா? கங்கிராட்ஸ்.  உறவினருடனும் நண்பர்களுடனும் ஏராளமான டூர்களுக்குப் போறீங்களா? அதிலும் கோயில்ஸ் போறீங்களா? வாவ். என்ஜாய். மம்மிக்கு நிறைய நன்மைகள் உண்டு. அவங்களால் உங்களுக்கும் நிறைய நன்மைகள் உண்டுதான். ஆனாலும் அது என்ன எப்பப்பாரு அவங்ககிட்ட ‘டாம் அண்ட் ஜெர்ரி’ மாதிரி இருக்கீங்க? வணங்கலைன்னாகூடப் பரவாயில்லை, மதிச்சுப் பேசுங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 11 முதல் டிசம்பர் 13 வரை

மீனம்

சின்னச்சின்ன ஆரோக்யப் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஒடனே அவற்றை பூதக்கண்ணாடி வெச்சுப் பெரிசாக்கிப் பார்த்து பயந்து அழ ஆரம்பிக்கணுமா என்ன? வெளிநாட்டு உறவுக்காரங்ககிட்டேயிருந்து நன்மைகள் உண்டு. அதுக்காக அவங்களை முழுக்கச் சார்ந்திருக்க நினைக்காதீங்க. டாடிக்கு அவங்க அலுவலகத்தில் பெண் அதிகாரிங்க மூலம் நன்மைகள் உண்டு. குடும்பத்தில் இத்தனை காலமாய்க் காணாமல் போயிருந்த ஒற்றுமை என்ற விஷயம் மறுபடி மீண்டிருக்கும். எத்தனை காலமாச்சு இப்படி ஒரு சந்தோஷமும் நிம்மதியும் அடைஞ்சு? ஜாலிதான்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 13 முதல் டிசம்பர் 15 வரை