வார ராசி பலன்: 09.08.2019 முதல் 15.08.2019 வரை – வேதா கோபாலன்

--

மேஷம்    

காரியசித்தி என்பது உறுதி. முயற்சிகளைத் துரிதப்படுத்துங்கள். தடைப்பட்ட.. நின்றுபோன… தாமதமாகிக்கொண்டிருந்த.. சுப நிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பிக்கும்.  பொருளாதார லாபம் கட்டாயம் உண்டு.  உழைப்பு அதிகமாகும். ஆசையுடனும், நம்பிக்கையுடனும் எடுத்த காரியம் கை கூடும். தர்மத்தால் அதர்மத்தை அழிப்பிர்கள். இதற்கு உங்களுக்கு உதவுவதற்கு பெரிய வர்களும் நல்லவர்களும் முன்வாங்க. வாக்கும் சொல்லும் சரியாக செயல்படும். அதை அப்டியே கப்புனு பிடிச்சுக்கிட்டுப் பழக்கமாகவே ஆக்கிக்குங்க. வீடு நிலபுலன்கள் விற்றாலும் வாங்கினாலும் ஆதாயம் உண்டுங்க. கவலை வேணாம்.  புது வாகனம் வாங்குவீங்க, அல்லது வாகன மாற்றம் உண்டு புதியதாக சொத்துகள் வாங்கும் வாய்ப்புகள் பெறக்கூடிய வாரம் இது.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 8 முதல் 11 வரை

ரிஷபம்

கொஞ்சம் வங்கியிருப்பை மிச்சம் வெய்ங்க. அது பாவம் பிழைச்சுப் போகட்டும். கார்டைத் தேய்ச்சுச் தேய்ச்சு அது சின்னதாகிவிடப்போகுது. பத்திரம்!! இப்ப கொஞ்சநாளா மம்மி சொல்பேச்சைக் கேட்டு உருப்படறீங்க. அவங்களுக்கும் சந்தோஷம். உங்களுக்கும் நன்மை. கை கட்டி உத்யோகமோ காலாட்டி பிசினசோ எதுவானாலும் செழிக்கும். இது வரை இருந்த போட்டி பொறாமைகள் புகை மாதிரிக் காணாமல் போகும். புதிய வேலை வாய்ப்பு வரும். நல்லாப் பயன்படுத்திக்குங்கப்பா. வெளிநாட்டு பயணம் அமையும். என்ஜாய். குடும்பத்தில் வீண் வாக்கு வாதத்தை குறைத்து கொள்ளுங்கள். அப்புறம் நீங்களே ஃபீல் பண்றீங்கதானே? பிள்ளைகள் படிப்பு செலவுக்கு பொருளாதர வசதிகள் கிடைக்கும். குல தெய்வ அனுகிரகம் கிடைக்குங்க. பொறுமையை கடைபிடித்து வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் வெற்றிதான் உங்களுக்கு.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 11 முதல் 13 வரை

மிதுனம்

பேச்சில் கடுமை காட்ட வேண்டாம். உங்கள் பக்கம்தான் நியாயம் இருக்கும். டவுட்டே இல்லை. அதுக்காகக் குரல் உயரணும்னு எந்த சாஸ்த்திரத்திலும் எழுதி வெச்சிருக்கலை. உங்களுக்குத் திருமணத்திற்கு வேளை வந்தாச்சு. ஏகமாய்ச் சிந்தனை செய்து குழம்பி மனசைப் பயத்தில் தள்ளும் வேலையெல்லாம் வேண்டாம். இயல்பா இருங்க. ஆபீஸ்ல உங்க முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்கும். பதவி வரும்போது பணிவு வர வேண் டும் என்ற எம் ஜி ஆர் பாடலை நினைவில்  வெச்சுக்குங்க.  கணவருக்கு உத்யோகமும் சம்பள மும் உயரும். கனவு கண்டுக்கிட்டிருந்த திட்டம் நிறைவேறும். செல்வம் வரும். மற்றவங்க நெல் போட்டால் நெல் விளையும். நீங்க புல் போட்டால்கூடப் பொன்னாய் விளையும் பாருங்களேன். நீங்க திருமணமாகாதவர்னா காதல் அனுபவங்கள் ஏற்படும். அது திருமணத்தில் முடியும்

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 13 முதல் 15 வரை

கடகம்

வாசலில் எட்டிப் பாருங்க. நல்லதொரு வாய்ப்பு உங்க வீட்டுக் கதவைத்தான் தட்டிக்கிட்டி ருக்கு. சீக்கிரம் கதவைத் திறந்து கையைப்பிடிச்சு உள்ளே கூட்டிக்கிட்டு வாங்க. வயிற்று உபாதைகளைப் பெரிய பிரச்சினைன்னு நினைச்சு ஏதோ அறைஞ்ச மாதிரி முகத்தை வைச்சுக்காதீங்க. உடனே சரியாகப் போகுது. திருமணம் நிச்சயமாகப் போகுதுங்க. அவசரம் வேண்டாம்.  எதையும் ஆழ்ந்து யோசித்துப் பொறுமையா செயல்படுத்துங்க். நண்பர்கள் செம புத்திசாலியா அமைவாங்க. அவங்க கொடுக்கும் ஐடியாக்கள் உங்கள் வாழ்வை மேம்படுத்த உதவுங்க.  திட்டமிட்ட மற்றும் திட்டமிடாத கோயில்களுக்கெல்லாம் விஸிட் அடிப்பீங்க. நீங்க ரெடியோ இல்லையோ. திருமணம் தன் பாட்டுக்கு நிச்சயமாயிடும்.  இந்த அளவாவது எல்லாம் நல்லபடியா நடக்குதேன்னு சந்தோஷப்படுங்க. அதைவிட்டுப்புட்டு நடக்காத விஷயங்களுக்கு வருத்தப்படுவது அபத்தம்.

சிம்மம்

டாடியின் பிரச்சினைகளைப் பற்றி டென்ஷன் இருக்கத்தான் இருக்கும். கவலைப்படற நேரத்தில் சாமி கும்பிடுங்க. பிகாஸ்.. அவரின் டென்ஷன் சரியாகப்போகுது. சகோதரர்களுக் கெல்லாம் அரசாங்கத்தால் நன்மை கிடைக்குங்க. அதைப்பார்த்து தயவு செய்து சந்தோஷப் படணும், ஒகேயா? பிகாஸ் அவங்க உங்களுக்கு உதவி செய்வாங்க. பொறாமைப் பட்டுக் காரியத்தைக் கெடுத்துக்காதீங்க. உங்க மகன் அல்லது மகனுக்கு லவ் கல்யாணம் அது இதுன்னு நடக்கும், என்ன செய்ய, காலம் மாறிடுச்சில்ல. சந்தோஷமா அட்சதை போடுங்க. வீடு வாங்கவோ அல்லது வீட்டுல வாகனம் வாங்கவோ சாத்தியம் இருக்குங்க.  உங்கள் உழைப்பையும் புத்திசாலித்தனத்தையும் நம்புங்க. அதிருஷ்டத்தைச் சார்ந்து எதையும் செய்யாதீங்க. ப்ளீஸ்.

கன்னி

எந்த முயற்சியும், வேலையும், தொழிலும் இல்லாமல் உடல் நிலையிலும் பிரச்சனையை கொடுத்த விஷயங்கள் மாறி இனி நிம்மதியும் சந்தோஷமும்தான் என்ற நிலையை எட்டு வீங்க. இத்தனை நாள் இருந்த வேகம் உங்க முன்னேற்றங்களில் குறைஞ்சா டென்ஷன் ஆகாதீங்க. சீக்கிரம் சரியாகும். .குழந்தைங்க வாழ்க்கைல அபார முன்னேற்றமும் சந்தோஷ மும் வெற்றியும் உண்டாகும். வெளிநாட்டில் உள்ள கிளைக்குத் தாவுவீங்க, ஆல் த பெஸ்ட். வர வேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும் வம்பு வழக்குகள் மறையும்,குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் நடக்கும். பயணம் பயணம் என்ற ஊர் ஊராக நாடு நாடாகக் சுற்றிக் கொண்டிருக்கீங்க. நீங்களா விரும்பி அதற்கு ஒரு இடைக்கால விடுப்பு தருவீங்க. குடும்பத்தில் புதிய வரவுகள் வந்திருக்கலாம். திருமணம் மற்றும் பிரசவம் காரணமாக அவை ஏற்படலாம்.

துலாம்

கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதாவது தியானம் இருந்தா மொதல்ல அந்த வகுப்பில் சேருங்க. உங்க நன்மைக்குத்தான் சொன்னேன். அபரிமித புத்திசாலித்தனம் உள்ள உங்களுக்கு ஏராளமான புது விஷயங்கள் கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஏற்படும். ஜமாயுங்க. வெளிநாட்டு முயற்சிகள் வேலை வாய்ப்புகள் அமையும். கூட்டு தொழிலிலும் ,சுய தொழிலும் அதிக கவனம் தேவை. தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் நண்பர்களின் விஷயத்திலும் கவனம் தேவை.பேச்சிலும் செயலிலும்  வெளிப்படும் புத்திசாலித்தனம் காரணமாக உங்களைப் பலருக்கும் பிடிக்கும். குறிப்பாக எதிரிகள் நண்பர்களாவார்கள், நண்பர்கள் நல் ஆசானாகி உங்களை வழிநடத்துவார்கள்.தந்தைக்கு வெளிநாடு போக வாய்ப்பு வரும்

விருச்சிகம்

அம்மாவுக்கு ஏற்படும் சிறிய பிரச்சினையைக் கருணையுடன் அணுகுவதைவிட்டுவிட்டு சண்டை சச்சரவுன்னு இறங்காதீங்க. வாகனம் வாங்க இது உகந்த நேரம் இல்லை, நீண்ட தூரம் வாகனப் பயணம் செய்பவர்கள் கவனமாக செல்லவும். எல்லா விசயத்திலும் தன்னம்பிக்கையும், தைரியமும் உதவும் என்பதால் கவலைப்படாமல் அடுத்தடுத்த நிலைக்குப் போவீங்க. வெற்றி அடைவீங்க. திடீர்னு ஒரு கவர்ச்சி உங்ககிட்ட ஏற்படும். உங்க வசீகரம் காரணமா நாலு பேர் உங்ககிட்ட  வந்து ஆலோசனை கேட்பாங்க. பேச்சில் எந்த அளவு கவர்ச்சியும் அழுத்தமும் இருக்கோ அதே அளவு கோபமும் வெளிப்படும், அதுல  மட்டும் ரொம்பவும் கவனமா இருங்க. அப்பாவுக்கு நன்மைகள் ஏற்படுமுங்க.

தனுசு

குழந்தைங்களுககு இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ல டாட்டா சொல்லுவீங்க. நண்பர்கள் நல்ல யோசனை சொல்லுவாங்க. புறக்கணிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்க. ஆமாம். சொல்லிப் புட்டேன். பொருளாதார அபிவிருத்தி உண்டாகும், நீண்ட நாள் எண்ணம் திட்டம் செயல் வெற்றி பெறும். கடந்த காலத்தில் உங்களை தவறாகவும்,ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் உங்களை நாடி வருவாங்க. குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடக்கும், உங்க பேச்சிலும் செயலிலும் கருணை நிலவும். கணவருக்கு/ மனைவிக்கு நிறையப் பயணங்கள் நேரும். அரசாங்கத்தால் கிடைக்க வேண்டிய நன்மை இவ்ளோ காலமாய் உங்களை ஆட்டம் காட்டிக்கிட்டு இருந்ததில்லையா? அது ஒரு வழியா உங்களை வந்தடையும்.

மகரம்

மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனைவிக்கு சிறிய வைத்திய செலவும் செய்யும் நிலை வரும். உடனே பயந்து நடுங்காதீங்கப்பா. உடனே சரியாகப் போகுது. தொழில் செய்பவர்கள் அதிக விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். எனில் பயம் இல்லை. வீடு வகையறாக்களால் வருமானமும் லாபமும் வரும். மருத்துவத் துறையில் உள்ளவர்கள் நிறைய லாபமும் நல்ல பெயரும் சம்பாதிப்பீங்க. நல்ல செயல்கள் செய்வீங்க. படிப்புக்காக தான தர்மங்கள் செய்வீங்க. இப்போதைக்கு லோன் எதுவும் போட வேண்டாம். கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ் பெருமை,ஆற்றல் மிகுந்த ஆண்டு. நன்மைகள் அதிகமாக சேரும். காரியசித்தி உண்டு. பயமோ கவலையோ வேண்டாம். சுப நிகழ்ச்சி நடக்கும் பொருளாதார லாபம் ஏற்படும். எடுத்த காரியம் கை கூடும். 

கும்பம்

குழந்தைகளுக்கும் கணவருக்கும் நன்மைகள் நடந்துகிட்டே இருக்கும், எப்பவும் அந்தக் கவலைதானே உங்களுக்கு. எனவே இந்த வாரம் முதற்கொண்டு நல்லா நிம்மதியாய்த் தூங்குவீங்க. அப்பாடா!  வெளிநாடு சம்பந்தமான சில நல்ல செலவுகள் ஏற்படும்.பணத்துக்கு அலைந்தாலும் நல்ல முறையில் நிறைவேறும். கல்வித்துறையில் உள்ளவங்களுக்கு நிறைய லாபம் வரும். புது வேலை கிடைக்க சான்ஸ் இருக்கு. நல்ல தசை புக்திநடக்கறவங்க தைரியமா ஏத்துக்குங்க. மருத்துவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும். சினிமாத் துறையில் உள்ளவங்களுக்கு நிறைய வாய்ப்பு வரும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவீங்க. அது நீங்க பல காலம் எதிர்பார்த்த ஒரு பெரிய நன்மையா இருக்கும்.

மீனம்

குடும்பத்தில் வீண் வாக்கு வாதத்தை குறைத்து கொள்ளுங்க பிள்ளைகள் படிப்பு செலவுக்கு பொருளாதர வசதிகள் கிடைக்கும். வெளிநாட்டு வருமானம் கிடைக்கும். எதுக்கெல்லாம் பயந்து நடுங்கிக்கிட்டிருந்தீங்களோ அதெல்லாம் சுலபமா சால்வ் ஆகும். பேச்சில் கடுமை ஏற்படாமல் பார்த்துக்குங்க. குழந்தைங்க வெளிநாடு போக ஆசைப்பட்டால் தடை போடாதீங்க. அப்புறம் வாய்ப்பு வருமோ என்னவோ? தந்தைக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். அவர் பயணங்கள் செய்வதால் அவருக்கு மட்டுமின்றிக் குடும்பத்துக்கே நன்மையும் லாபமும் உண்டாகும். புது வேலை கிடைச்சா சீனியர்களைக் கலந்தாலோசிச்சு அவங்க அனுபவப்படி ஆலோசனையை ஏற்றுக்கொள்வது நல்லதுங்க. வேலை விஷயத்தில் மடமடவென்று பல மாறுதல்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும்.