Random image

வார ராசிபலன்: 09.11.2018 முதல்15.11.2018 வரை!  வேதா கோபாலன்

மேஷம்

உடல் நிலையில் நீங்கள் பயந்த அளவு எதுவும் கோளாறு இருக்காது. தலைக்கு வந்தது தலைப்பாவையுடன் போகும். புத்திசாலித்தனமான முடிவுகள் எடுப்பீர்கள் .வியாபாரத்தில் ஈடுபடும் ஆசை இருந்தால் உங்கள் ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பித்து முடிவெடுக்க லாம். உங்கள் குணமும் பேச்சும் ஒரு நாளைக்கு இருந்தாற்போல் மற்றொரு நாள் இருக்காது. சற்று முரட்டு சுபாவம் உங்களையும் மீறி வெளிப்படும். புத்திசாலித்தனமான காரியங்கள் செய்தாலும் கூடா நட்பு காரணமாகவும் பகைகாரணமாகவும் பிரச்சினைகள் ஏற்படலாம். அப்படி நேராமல் நீங்க பார்த்துக்கிட்டீங்கன்னா பிறகு ஏன் பிரச்சினை வரப்போகுது? ரைட்டா?

சந்திராஷ்டமம் : நவம்பர் 9 முதல் 11 வரை

ரிஷபம்

வெளிநாட்டுப் பயணத்தால் லாபம் ஏற்படும். பேச்சில் அதீத கவனம் தேவை. குழந்தை களால் சிறு டென்ஷன்கள் ஏற்பட்டாலும் அவர்கள் நியாயமான வெற்றியடைவார்கள். பெருமை உண்டு. முதல்ல அவங்க மேல நம்பிக்கை வைங்கப்பா. உஷ்ணத்தால் உடல் பாதிப்பு ஏற்படலாம். நீங்கள் சந்திர உச்ச ராசிக்காரர் என்பதால் பிரச்சினை வராது. ரொம்ப நாள் கழிச்சு நெருங்கிய உறவுக்காரங்களை சந்திப்பீங்க. நிறைய வழிபாட்டு இடங்களுக்குப் போக ஆரம்பிப்பீங்க. வெரிகுட். இது நிறைய நன்மைகளைக் கொடுக்குங்க. முன்பு பேசினதுபோல் இப்போ கட்டவிழ்ந்து பேச வேண்டாம், எந்த விஷயத்திலும் பயமே வேண்டாம். நல்ல வேளை வந்தாச்சு. பிரச்சினைகள் அதிகம் இருக்காது. இருந்தாலும் சமாளிச்சுடுவீங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 11 முதல் 13 வரை

மிதுனம்

காட்சிகள் மாறும் நாடகம் போலே காலம் மாறுகிறது. அதன் போக்கில் உடன் செல்லுங்கள். உங்களுக்கு ஏதேனும் ஆரோக்யப்பிரச்சினை வந்தாலும் அதைப் பெரிய அளவில் பொருட் படுத்தாதீங்க. பெரிய ஆபத்து ஏதும் இன்றி சாதாரண மருத்துவத்திலேயே குணமாகும். கற்பனையிலேயே பயத்தை அதிகரிச்சுக்காதீங்க.  பல நாள் கனவுகள் பலித்திருக்கும். வாழ்த்துக்கள். பயமெல்லாம் காற்றில் திறந்து வைத்த கற்பூர பேக்கெட் மாதிரி காலியாகியிருக்கும். குழந்தைகளும் மகிழ்ச்சி  அளிப்பாங்க. செம பிரயாணங்கள் இருக்கும். அதிருஷ்டக்கூடையை உங்கள் தோளில்தான் இறக்கி வெக்கப்போகுது காலம்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 14 முதல் 16 வரை

கடகம்

வைத்திய செலவுகளால் நஷ்டம் இருக்காது. எனவே வார மத்தியில் அனைத்து விஷயங்களி லும் கவனமாக இருங்க. குறிப்பா பேச்சில் மிக மிக கவனம் தேவைங்க. ஆரோக்யம் பற்றிக் கொஞ்சம் கவலைப்படுங்க. (கொஞ்சம் கவலை போதுங்க. அதிகம் வேணாம்). சகோதர சகோதரிகளின் கோபம்  அதிகரிக்கக்கூடும். அனுசரித்துச் செல்ல வேண்டி வரலாம். பார்த்துக் கொள்ளுங்கள். அறிவாற்றல் மிக்க பேச்சு வெளிப்படும். நீங்கள் சிறப்பாகக் கல்வி கற்றவர் என்றால் உங்கள் பேச்சில் உங்கள் அது பற்றிய நிபுணத்துவம் வெளிப்பட்டு உங்கள் சிறப்பை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும். திடீர் அதிருஷ்டம் பாட்டுக்கு தானாக வந்து கதவைத்தட்டிப் பொன் மூட்டையை இறக்கி வெச்சுட்டுப் போயிடும்! குட் லக்.

சிம்மம்

சுக போகங்களுக்கான செலவு இருக்கும், கலைத்துறையில் இருப்பவர்கள் வெற்றிக்குக் காத்திருக்க வேண்டும். புகழும் மேனமையும் இந்த ராசிக்காரர்கள் அனைவருக்குமே கிடைக்கும். உங்க திறமை மற்றும் புத்திசாலித்தனம் உங்கள் பரந்த முதுகில் ஒருசின்ன ஷொட்டாவது வாங்கித் தரும். அரசில்வாதிகள் மேலிடத்திலிருந்து பாராட்டுப் பெறுவாங்க. உங்க உழைப்பும் நேர்மையும் எதிர்கால நன்மையைப்பெற்றுத்தரும். விரக்தியான மன நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவசரப் போக்கு வேண்டாமே! யோசியுங்க. அப்புறம் எதையும் செய்யலாம். நல்லவங்களோட ஆலோசனையை நாடினால் மட்டும் போதாதுங்க…வரிக்கு வரி பின்பற்றவும் வேண்டும்

கன்னி

உங்களுக்கு அரசாங்க உத்யோகம் .. குறிப்பாக வங்கி வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை குறைய அனுமதிக்காதீர்கள். மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் புரிஞ்சுக்குங்க. எல்லாரையும் எடுத்துக் கவிழ்த்துப் பேச வேண்டாம்.  தற்போதைய நிலைமைப்படி அடுத்தடுத்து வெற்றிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் நடக்கும். வெளியூர் வெளிநாடு என்று உத்யோகம் காரணமாக மனைவி/கணவர்.. குழந்தை குட்டிகளைப் பிரிந்து வாகனம் ஏற வேண்டி வரும். மனதைத் தயார் செய்து கொள்ளுங்கள்.இந்த வார கிரக நிலைப்படி சுள்ளென்று பேசிவிட்டுப் பிற்பாடு மனசுக்கள் வருத்தப்படுவீர்களே தவிர நேரடியாக மன்னிப்புக் கேட்க மனது வராது. அப்படி வரும்படி பார்த்துக்குங்களேன்.

துலாம்

உங்கள் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். மேடைகளில் பேசுவீர்கள். புகழ் கூடும். அலுவலகத் தில் பாராட்டும் விருதுகளும் கிடைக்கும். ஒரு நாள் நடந்துகிட்ட மாதிரி மறுநாள் நடந்துக்க மாட்டீங்கறீங்களே. இன்னிக்கு காஷ்மீர்ப் பனி மாதிரி குளுகுளுன்ன பேசிட்டு நாளைக்கு டெல்லி வெயில் மாதிரி அப்பளம் வறுத்தீங்கன்னா உங்களை நம்பி ஒருத்தராவது நட்பு பாராட்டுவாங்களா? வேலை பார்க்கும் இடத்தில் புகழும் பாராட்டும் விருதும் கிடைக்கும். யார் கண்டது விருது.. அவார்ட் .. ரிவார்ட் என்று கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. குரு உங்கள் வாக்கை நல்ல முறையில் நிறைவேறச் செய்வார். நல்ல விதமாகப் பேச வைப்பார்.

விருச்சிகம்

ஆடை அணிமணிகளுக்காக நிறைய செலவு செய்யறீங்களேப்பா..  அரசாங்கத்தின்மூலம் லாபம் கிடைக்கும். அல்லது அரசாங்கத்திடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த விஷயம் நடக்கும். இருப்பதால் தந்தை மூலமாக நன்மைகளும் லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள யாருக்கேனும் காதல் நிறைவேறித் தடைகளை வென்று திருமணம் நிறைவேறும். உங்கள் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். அவர்கள் தெய்வீக மற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவார்கள். உங்களுக்கு அவர்களின் உதவியும் ஆலோசனையும் கிட்டும். உங்களுக்கு எந்தக் காலத்திலும் உங்கள் மீது நம்பிக்கை இருந்ததே இல்லை. மற்ற எல்லாரையும் நம்புவீங்க. உங்களையும் கொஞ்சம் நம்புங்களேங்க.  

தனுசு

கொஞ்சம் மெதுவாக வாழ்க்கை சென்றாலும் உங்களுக்கு வேண்டியவர்கள் வேண்டாத வர்கள் பேதமின்றி உங்கள் பெருமையைப் பாராட்டுவார்கள். குடும்பத்தில் யாருக்காவது காதல் திருமணம் நடக்க வாய்ப்பு இருப்பதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். அதற்கான சுப செலவு செய்ய வேண்டி வரும். அது மகிழ்ச்சியைக் கொடுக்கும். வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகம் வரவும் வாய்ப்புள்ளது.  அது நீங்களாகவும் இருக்கலாம். உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாராகவும் இருக்கலாம். வியாபாரத்தில் லாபம் அபாரம். வியாபாரத்திலும் உத்யோகத்திலும் உங்கள் முயற்சியையும் முனைப்பையும் சற்று அதிகமாகச் செலுத்த வேண்டிய சமயம் இது. குட் லக்

மகரம்

அலுவலகத்தில் சம்பளம் உயரும். பிசினஸ் செய்பவர் என்றால் லாபம் அதிகரிக்கும். அனைவரையும் கவர்வீர்கள். இதனால் அலுவலகத்தில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு வேலை கிடைக்கும். சாதாரண  வேலை இல்லீங்கோ. நீங்கள் பெருமிதப்படும்படியான உத்யோகமாக அது இருக்கவும் வாய்ப்புள்ளது. நீங்கள் கனவு கண்ட விதமாகவே அமையும். கணவன் மனைவிக்கிடையே உள்ள சிறிய மனத்தாபங்களை அவர் சற்று அதிகரித்துவிட வாய்ப்புள்ளது. இடம் கொடுக்காதீர்கள். விட்டுக்கொடுத்துப்போகும் சுபாவம் உங்கள் ராசிக்குச் சற்று சிரமமானதுதான். இருந்தாலும்  முயற்சி செய்வதில் தப்பில்லீங்க.

கும்பம்

கல்விக்காக நிறைய செலவு செய்வீர்கள்.வார ஆரம்பத்தில் பேச்சு விஷயத்தில் சற்று அதிகக் கவனமாக இருங்கள். நீங்கள் நல்ல எண்ணத்துடன் ஏதாவது சொல்ல முனைந் தாலும்கூட அது மற்றவர்களுக்குத் தவறாகப்படக்கூடும். கவனமாகப் பேசுங்கள். லாபம் சற்று நிதானமாகவே வரும். வருமானத்தில் தடைகள் இருக்கலாம். எனினும் திடீரென்று எதிர்பாராமல் தடை விலகும். பேரன்ட்ஸ் நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத நன்மைகளை அளிப்பாங்க. எல்லாவற்றையும்விட  உங்கள் காதல் வாழ்க்கை அமோகம்.  மனதில் மகிழ்ச்சி நயாகராதான்.  பல காலமாகக் காணாமல் போயிருந்த சந்தோஷம் ஓடி வந்து ஒட்டிக்கும்.

மீனம்

கெஞ்சம் தைரியமாய் முதலீடுகளை அதிகப்படுத்துங்க. வங்கிக் கணக்கில்  டிஜிட்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமும், மகிழ்ச்சியும், குதூகலமும் ‘ஹாப்பினஸ்ஸும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து வெற்றிப் பாதையில் செல்வீர்கள். கலைத்துறை களில் ஆர்வம் வரும். கலைத்துறைகளில் ஏற்கனவே உள்ளவர்களுக்குப் புகழும் பெருமை யும் தேடி வரும். அழகுணர்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை வசதிகளும் சயன சுகமும் கூடுத லாகும். ஆடை அணிமணிகளிலும் அலங்காரப் பொருட்கள் மீதும் ஆசையும் ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாலினத்தினரால் நன்மையும் சந்தோஷமும் உண்டாகும்.