வார ராசிபலன்: 10.01.2020 முதல் 16.01.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம்  

உங்களின் கருத்துகளுக்கு மற்றவர்கள் மதிப்பளிப்பார்கள். எளிதாய்ச் சொன்னால் செல்வாக்கு உயரும். அதே சமயம் நீங்களும் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.  மனசுக்குப் பிடித்தவர்கள் மற்றும் பிரியமானவர்களுடன் அதிகமான நேரத்தை செலவழிப்பீர்கள். நிதி முதலீடு போன்ற விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும். பிகாஸ், பணவரவு திருப்தியாக இருக்கும். சொல்லப்போனால் சம்பளம் உயர வாய்ப்பிருக்கிறது. நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கிடப்பில் போட்டிருந்த திட்டங்களை மடமடவென்று முடிப்பீர்கள். இதனாலும் மற்ற காரணங்களாலும் மன நிறைவு கூடும்.  கிரகங்களின் சாதகமான பார்வையினால் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சாதிக்கும் ஆவல் வரும். சாதிக்கவும் செய்வீங்க.

ரிஷபம்

அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். கனவு நனவு ஆவதற்கான வாய்ப்புகள் தோன்றும். ஆனால் சற்று சோம்பலின்றி அதிகமாக உழைக்க வேணுங்க. மேலும் ஆரோக்யத்தை அலட்சியமா எடுத்துக்கு வேண்டாம். உடல்நலத்தில் கவனம் வேண்டும். குறிப்பா உணவு விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையா இருங்க. உண்மையிலேயே நலம் விரும்பி என்கிற பட்சத்தில்.. நிஜமாகவே புத்தி சாதுர்யம் உண்ணவர்கள் என்றால் அப்படிப்பட்டவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளலாமே. தப்பில்லைங்க.  அவங்க ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும் அமைதி காப்பீங்க.. உங்களுக்குள் மறைந்துள்ள திறமைகளை இனங்கண்டறிந்து வெளிக்கொணர்வீர்கள். அதிக முயற்சிதான் என்றாலும் நல்ல பலன்  உண்டு.

 மிதுனம்

எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுவீங்க. மற்றவர்களின் உதாசீன கருத்துகளை புறந்தள்ளுங்க. அதுதான் மன அமைதிக்கு வழி. புதிய வாழ்க்கைக்காகவேண்டி, புதுப்பொறுப்புகளை ஏற்க துணிஞ்சுட்டீங்க. குட் குட். இனி, படிப்படியா முன்னேற்றம்தான். . மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைப்பீர்கள். எனினும் இப்போதைக்குத்தான் உடனடியாகப் பலன் கிடைக்காதே தவிர, பிற்காலத்தில் இதற்கு நல்ல வகையில் அவர்கள் உங்களுக்கு நன்மை செய்வாங்க.  தன் கையே தனக்குதவி என்பதை எக்காலத்திலும் மறக்காதவராச்சே நீங்க. அது பெஸ்ட்.  பணத்தை நல்ல வழியில் மேலும் மேலும் ஈட்டுவதற்கு என்ன ஐடியா என்று எப்போதும் சாதுர்யத்துடன் பார்ப்பதால் புது பிசினஸ் ஆரம்பிக்கத் தோன்றும். வெளிநாடு சம்பந்தப்பட்டவை என்றால் உடனடிப் பலன் இருக்கும். இல்லை என்றால் சற்றே வெயிட் பண்ணுவது நல்லதாயிற்றே.

கடகம்

மனதிற்கினிய சம்பவங்கள் நடக்குமுங்க.  பால்யகால நண்பர்களைச் சந்திப்பீர்கள். பல காலம் சந்திக்காத உறவினர்களையும் பார்க்க வாய்ப்பு வரும். பார்ட்டி மற்றும் விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீங்க. மகிழ்ச்சியான வாரம். மேலும் உங்களை உதாசீனப்படுத்திக் -கொண்டிருந்தவர்கள் (நண்பர்களானாலும் சரி உறவினர்களானாலும் சரி) இப்போது உங்களை மதித்து, தானாகத் தேடி வருவாங்க. மனக்குழப்பங்களிலிருந்து ஒரு வழியா விடுபடுவீங்க. நீங்களும் மகிழ்ந்து மற்றவர்களையும் சந்தோஷப்படுவீங்க.  இதெல்லாம் நமக்குக் கிடைக்கலையேன்னு டென்ஷன் ஆகாமல், எதெல்லாம் உங்களுக்குக் கிடைச்சிருக்கோ அதையெல்லாம் பற்றி திருப்தியும் நிறைவும் மகிழ்ச்சியும் அடைவீங்க.

 சிம்மம்

பணவரவு மிதமிஞ்சியும் இல்லாமல், கையையும் கடிக்காமல் சீராக இருக்கும். எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவீங்க. உங்களுடைய வழக்கமான பாணியிலிருந்து விலகிச்செல்வீர்கள். இதனால் உங்க அணுகுமுறையில் புதுமை இருக்கும.  எண்ணிய காரியம் முடிப்பீங்க. அதுக்குத் தேவையான அளவிற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். முன்பைவிடப் பக்குவமாய் விஷயத்தை அணுகுவதன் மூலம் வெற்றியும் காண்பீங்க.  குழந்தைகளின் கல்வி, திருமணம் ஆகியவை பற்றி இருந்து வந்த டென்ஷன் படிப்படியாகத் தீரும். மாயாஜாலங்களை எதிர்பார்க்க முடியாது என்றாலும் நிதானமான வெற்றி கட்டாயம் உண்டு.  அலுவலகம், குடும்பம், நண்பர்கள், அக்கம்பக்கம் என்று எந்த இடத்தில் யாருடன் பேசினாலும் ஒவ்வொரு வாக்கியத்தையும் மனசுக்குள் ஒத்திகை பார்த்துவிட்டுப் பேசுங்கள். அவசரமே வேண்டாம்.

கன்னி

அம்மாவின் வாழ்வில் நன்மைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மன மகிழ்ச்சி தரும்படியான விஷயங்கள் நடைபெறும். புது வண்டி வாங்குவீங்க.  சில பல தடை தாமதங்களை மீறி அது ஒரு வழியாக டெலிவரி ஆகும். எப்படியானாலும் அது உங்க மனசுக்குப் பிடிச்ச, நீங்க கனவு கண்ட வண்டியாகத்தான் அமையும். அலவலக  டென்ஷன்கள் ஒரு பங்கு என்றால் அதை நீங்க பத்து மடங்கா கற்பனை செய்து வைத்திருப்பீங்க. கடைசியில் ‘பூ இதுக்கா நான் இவ்ளோ கவலைப்பட்டேன்.” என்று நிம்மதிப் பெருமூச்சு வெளிப்படும். எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீங்க. நிதி விவகாரங்களில் திருப்தி ஏற்படும். வேகத்தை விட விவேகமே முக்கியம் என்பதை உணர்வீர்கள்.

 துலாம்

செய்யும் செயல்களில் உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற விகிதத்தில் வெற்றி கிடைக்கும். புதுப்புது முயற்சிகளில் களமிறங்குவீர்கள். தடைகளை தாண்டி வீறுநடை போடும் வாரம் இது. எனவே திட்டமிட்டு எதையும் செய்வீங்க. ஆகவே செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவாங்க. மகிழ்ச்சியான  காலத்திற்கு இது ஆரம்பமாக இருக்கும். கடிதம் மற்றும் மெயில் மூலம் வரும்  தகவல்கள் உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதுப்புது ஐடியாக்களைக் கையாளுவீர்கள். நல்ல வேளையாக அனைத்து இடங்களிலும் மற்றவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். எல்லாச் செயல்களிலும் நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

விருச்சிகம்

வார ஆரம்பத்தில் அதிகப் படபடப்பு இருந்தாலும், போகப்போக  சாந்தமாவீங்க. யாருடனும் எது பற்றியும் அமைதியான அணுகுமுறையுடன் செயல்படுவீங்க. விரயத்தை தவிர்க்க விழிப்புடன் இருப்பது அவசியம். நெருங்கிய உறவாக உள்ள யாரோ ஒருவருடன் இணைந்து அலுவலகம் அல்லது வியாபாரத்தில் பணியாற்றும் சான்ஸ் கிடைக்குமுங்க. வேலை இடமாற்றம் தொடர்பான கவலையை அதிகமாக மனசில் போட்டு உழப்பிக்காதீங்க. விரைவில் அது பற்றிய நல்ல தகவல் வரும். கிரகங்களின் சாதகமான பார்வை முக்கியமான இடங்களில் விழுவதால் நினைத்த காரியங்கள் சிறப்பாக முடியும். அப்பா பற்றிய கவலைகள் உங்களைவிட்டு விலகும். கலைத்துறை மற்றும் இசைக்கலைஞர்களுக்கு நல்ல சூழ்நிலை உருவாகும். ஒவ்வொரு நடவடிக்கையிலும் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: ஜனவரி 9 முதல் 11 வரை

தனுசு

கலைத்துறை மற்றும் எழுத்து போன்ற கற்பனை சார்ந்த துறையில் உள்ளவர்களுக்குப் புது வாய்ப்புகள் கிடைக்கும்.  மேலும் புதிய ஒப்பந்தங்களும், பெரிய மனிதர்களின் நட்பும் அடுத்தடுத்துக் கிடைக்கப்போவதால், மனசில் அலைபாய்ந்துகொண்டிருந்த கவலைகள் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும். . கடன் கொடுத்துவிட்டு அதைத் திரும்ப வசூல் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருந்தீங்களா? டோன்ட் ஒர்ரி… தற்போது ஒரு வழியாக அதைத் திரும்பப் பெறும் சூழல் உண்டாகும். கண்ணில் உறுத்தும் சின்ன மணல் துகள்கள் போன்ற கவலைகள் பளிச்சென்று விலகி மனசில் நிம்மதி பிறக்கும். பல விதமான பொறுப்புகளையும் வேலைகளையும் ஒரே சமயத்தில் ஏற்று நிறைவேற்ற வேண்டி வரும். எனவே ஒருவிதப் பரபரப்பு தொற்றும். பேச்சில் மிகவும் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: ஜனவரி 11 முதல் 13 வரை

மகரம்

புதிய திட்டங்களைத் தீட்டும் முன்பாக, உங்களுக்கு நலம் நினைக்கும் நெருங்கிய உறவுகள் மற்றும் நல்ல மனம் கொண்ட நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து அப்புறமாய் ஒரு முடிவு எடுப்பது நல்லது. குழந்தைகளின் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட காலமாக மனதில் நினைத்து வந்த காரியம் ஒன்று .. அப்பாடா.. ஒருவழியாக நினைத்தபடியே நல்ல முறையில் நிறைவேறும். அடுத்தவர் விஷயங்களில் அதிகம் தலையிடாமல் ஒதுங்கி நின்றால் வீண் பிரச்சினைகள் எதுவும் வராமல் உங்களைக் காத்துக்கொள்ளலாம்.  நிறையப் பணம் கையாள வேண்டிய   பொறுப்பில் உள்ளவங்க, சற்று கேர்ஃபுல்லா செயல்படணுங்க. குழந்தை பாக்கியம் இல்லாதவங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். செயல்பாடுகளில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: ஜனவரி 13 முதல் 15 வரை

கும்பம்

கடந்த காலத்தில் இழுபறியாக இருந்து, உங்கள் மனசை அலைக்கழித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம், இந்த வாரம்  ஒரு வழியாக நல்ல முடிவை எட்டும். மனசில் உறுத்திக் கொண்டிருந்த கவலை பறந்து போய்விடும். கடன் கொடுத்திருந்தால் பழைய பாக்கிங்க வசூலாகும். கடன் வாங்கியிருந்தால் சுலபமா அடைப்பீங்க. நீங்கள் ஆணானாலும் பெண்ணானாலும் எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். அதை ஒட்டி சம்பள உயர்வும் கட்டாயம் உண்டு. திருமணம், குழந்தைப் பேறு போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதால் மனசில் உற்சாகம் நிறைய உண்டு.  ஒரு சிலருக்குத் தந்தை வழி சொத்து கிடைக்கும். நகை சேர்க்கையும் உண்டு. இதனால் பெண்கள் மன மகிழ்வோடு வளைய வருவீங்க. ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் லாபம்/ வருமானம் வருவது உறுதி.

மீனம்

உறவுகள் இடையே ஏற்பட்டிருந்த மனகசப்பு பெரியோர் ஒருவருடைய அறிவுரையால் நல்லபடியாய் ஒரு முடிவுக்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை மிகவும் கவனமாக கையாளுங்க. முக்கியமான ஆவணங்களை மறதியாக வைத்து விட்டு, தேடும் நிலை வெச்சுக்காதீங்க. தாய்வழி சம்பந்தமான சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் தீர நிறைய வாய்ப்பு உள்ளது. இத்தனை காலமாய் ஈடுபடாதபுதிய துறை ஒன்றில் ஈடுபட்டு சந்தோஷப்படுவீங்க. இப்போதைக்கு அதிலிருந்து பெரிய லாபம் எதுவும் இருக்காது. ஆனால்  எதிர்காலத்தில் இந்தவிதை மரமாகும். எனவே எந்த வாய்ப்பு வந்தாலும் அதைத் தள்ளாதீங்க. வாகனம் வாங்கப்போறீங்க. கவனமாய், பொறுமையாக விஷயம் தெரிந்தவர்களை உதவிக்கு வைத்துக்கொண்டு கட்டாயம் வாங்குங்க.