வார ராசிபலன்: 10.05.2019 முதல் 16.05.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்  

 ஆரோக்யம் பயமுறுத்தினா நீங்க ஏன் டென்ஷன் ஆறீங்க? டாடியைப் பத்திரமா பார்த்துக்குங்க.  திடீர் அதிருஷ்டம் அது இதுன்னு எதிர்பார்க்கவே வேண்டாங்க. உழைப்பு மட்டுமே பலன் தரும். லாபங்கள் அதிகரிக்கும். பயணங்களும் அதிகரிக்கும். எதிலும் சற்று நிதானப்போக்கு இருக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். அலுவலகத்தில் முன்னேற்ற மான சூழ்நிலை நிலவிவரும். செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கனம் தேவை. வருமானமும் நன்றாகவே இருக்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் லாபமோ கிடைக்கும்.

ரிஷபம்

கவர்ச்சி அம்சம் மேலோங்கி செல்வாக்கு கும்முன்னு உயருங்க. அவசியமான பேச்சு மட்டுமே பேசுங்க. ஆடை ஆபரணம்ஸ் சேரும். கல்யாணமானவங்களுக்கு சந்தோஷமான தினங்கள் இந்த வாரம் முழுக்க உண்டு. பணிச்சுமை அதிகரிக்கலாம். ஆனால் சம்பளம் அதிகரிக்கும். வாரத்தின் துவக்கம் சாதாரணமாக இருந்தாலும் அதன்பிறகு நல்ல திருப்பம் ஏற்படும். மன மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு கூடும். குடும்பத்தில் சுப காரியங் கள் நிகழும். குழந்தைப்பேறு பாக்கியம் உண்டாகும். ஏற்கனவே குழந்தை இருப்பவரா? எனில் குழந்தைகளின் வாழ்வு சிறக்கும். பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் ஏற்றம் காண்பார்கள். பிரபலமானவர்களின் சந்திப்பும் அதனால் நன்மையும் ஏற்படும்.

மிதுனம்

ஜாலியா ஊரைச் ளசுத்துவீங்க. இட்ஸ் ஓகே. யாரு வேணான்னது? கூடவே கடமை கடமைன்னு ஒண்ணு இருக்கே அதையும் கவனிக்க வேண்டாமா? ஆரோக்யத்தைக் கெடுக்கும் விஷயத்துக்குப் பெரிய சைஸ் ‘நோ‘ சொல்லிடுங்க. பெண்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்யம் சிறக்கும். புத்தக வியாபாரம், எழுத்து, பத்திரிகை, தரகு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியா பாரிகள் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.  மாட்டிக்கொள்ளவே மாட்டோம் என்று நினைச்சுச் சட்ட விரோதமான மற்றும் நிழல் வியாபாரங்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் கிடைக்கும். சகோதர சகோதரிகள் நன்மை செய்வார்கள்.

கடகம்

அதிருஷ்டம் உங்களை எட்டிப் பார்க்கும். திரைத்துறை மற்றும் கலைத்துறைல உள்ளவங்களுக்குப் பொற்காலம்தான். ஆனாலும் வேளைப் பளு தோளை அழுத்தும். கார், பஸ், ரயில், விமானம்னு எல்லாத்திலும் பறப்பீங்க. பண விவகாரங்கள் மெதுவாக  இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் தேவை. தந்தைக்கு இருந்த பிரச்சினைகள் தீரும். குழப்பம் நீங்கி மனத்தெளிவும் பிறக்கும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை துறைகளைச் சேர்ந்தவர்கள் திறமைக்குரிய பலனை அடைவார்கள். திடீர் அதிருஷ்டம் உண்டு. அம்மா அப்பாவுக்கு உங்களின் ஆதரவு அதிகரிப்பதால் அவங்களோட ஆசியை ஈசியாப் பெறுவீங்க.

சிம்மம்

ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல நேரங்க. அப்பாவுக்கு உயர்வான வாரம். திடீர் அதிருஷ்டப் பரிசுங்க கிடைக்கும். அப்பா வழிச் சொத்துக்கள் கிடைக்கும். வழக்கில் வெற்றி உங்களுக்கே தான். டோன்ட் ஒர்ரி. எலெக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் துறையில் லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் அதையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். கடன் வாங்க வேண்டாம். அடைப்பது சிரமம். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. தந்தை நலம் முன்பைவிட மேம்படும். மன நிம்மதி பிறக்கும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். அலுவலகத்தில் பரபரப்பாக உழைக்க வேண்டி வரும். அதற்கான பாராட்டும் கிடைக்கும்.

கன்னி

திடீர்னு உங்களிடம் உள்ள கவரும் தன்மை பல மடங்காகும். காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வரும். ஃபாரின்ல வேலைக்கு முயற்சி செய்துக்கிட்டிருந்தவங்களுக்கு குட் நியூஸ் வரும். உடல்நலனில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். அரசுப்பணிகளில் ஆதாயம் கிடைக்கும்.  கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். மேலதிகாரி கள் உதவுவார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசுப் பணியாளர்கள், கலைஞர்கள் ஆகியோருக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

துலாம்

சகோதர சகோதரிங்களுக்கு நன்மை ஏற்படும். உங்களோட உதவி கிடைக்கும். டாடியின் ஆரோக்யம் பற்றிக் கவலை வேண்டாங்க. பயமுறுத்தினாலும் உடனே சரியாகும். எதிர்பாலின நட்புகளால் நன்மைகள் அதிகரிக்கும். அலைச்சல் சற்று கூடவே செய்யும். எனினும் பணவரவும் கூடும். செய்து வரும் தொழில் மேன்மை அடையும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புக் கூடிவரும்.  வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். எதிர்காலம் சம்பந்தமான முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் நலம் கூடும்.

விருச்சிகம்

குழந்தைங்க மேடை ஏறிக்கைதட்டல் வாங்குவாங்க. அவங்களால உங்களுக்குப் பெருமை. உங்க செயல் களால்  அவங்களுக்கு நன்மை. குடும்பத்தில் யாருக்கேனும் சுப நிகழ்ச்சிங்க நடைபெறும். பேச்சினால் ஏற்படும் பிரச்சினைங்க பேச்சினாலேயே தீரும். மனதிற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். உடன்பிறந்தவர்களால் நன்மையும் லாபமும் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் எதிரிகள் விலகுவார்கள். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உறவினர் வருகை அதிகரிக்கும். சொந்தக்கார்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள். வேலை புதிய வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிலும் தடைகளும் தாமதங்களும் இருப்பது பற்றிச் சலிப்படையாதீங்க. ரிசல்ட் நல்லபடியாவே இருக்குங்க.

தனுசு

குடும்பத்தில் ஹாப்பி நிகழ்ச்சி உண்டு. இத்தனை காலம் உங்கள்  சாதாரணப் பேச்சால் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டு, எல்லாரும் உங்க தலையைப் போட்டு உருட்டிக்கிட்டு இருந்தாங்க. அப்பாடா. இப்பதான் உங்க மேல குத்தம் இல்லைன்னு நிரூபணமாகும். புரிஞ்சுப்பாங்க. எதற்கும் வேளை வர வேண்டாமாங்க? செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். சந்ததி வளரும். மகன்/ மகள் வாழ்க்கை பற்றிய கவலைகள் தீரும். சிறு சிறு பயணங்கள் மகிழ்ச்சி தரும். அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு சின்னத் தொல்லைகள் ஏற்பட்டு விலகும்.  சீக்கிரத்தில் பெரிய குட் நியூஸ் உண்டு.

சந்திராஷ்டமம்: மே மாதம் 10ம் தேதி முதல் மே மாதம் 12 ம் தேதி வரை

மகரம்

செலவு.. செலவு. செலவோ செலவுன்னு அதிகரிச்சுக்கிட்டே போகும். ஆனாலும் அதில் முக்கால் வாசி உங்க வீட்டில் நடக்கவிருக்கும் சுப நிகழ்ச்சியை முன்னிட்டுத்தான் இருக்கும் என்பதால் உங்களுக்கு அது பற்றி எந்த வித வருத்தமோ, வேதனையோ இருக்காது. ஆரோக்யம் பற்றி சிறு டென்ஷன்கள் ஏற்பட்டு, சிறிய சிகிச்சைக் குப்பிறகு முழுவதுமாகச் சரியாகும். கலைத்துறை மற்றும் எழுத்துத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. இந்த ராசியைச் சேர்ந்த ஆன்மிக ஈடுபாடுகொண்டவர்களுக்கும் ஜோதிட வல்லுனர்களுக்கும் நல்ல காலம்.  அரசியல்வாதிகள் முன்பைவிட அதிக வெற்றி காண்பீர்கள்.

சந்திராஷ்டமம்: மே மாதம் 12ம் தேதி முதல் மே மாதம் 14 ம் தேதி வரை

கும்பம்

சர்க்கரைப் பேச்சால் நாலு பேரைக் கவருவீங்க. மேடைப் பேச்சாளர்களும், நாடக நடிகர்களும் உயர உயரப்போவீங்க. மேலும்  நாலு படங்கள் புக் ஆகும். சகோதர சகோதரிகளுக்கு நன்மை உண்டாகும். சொத்து விஷயத்தில் அவங்க லாபம் அடைஞ்சுட்டதா கோபம் வேண்டாம். உங்களுக்கு வர வேண்டியது சீக்கிரம் வரும். அதிகப் பொறுப்புன்னு புலம்பல் செய்யாதீங்க. சாப்பிட தூங்க நேரம் இல்லைன்னு அலம்பல் செய்யாதீங்க. குழந்தைகள் வாழ்க்கையில் ஓரிரு தடைகள் ஏற்பட்டாலும் கடைசியில் எல்லாமே வெற்றிகரமாக நடக்கும். குழந்தைக்காகக் காத்திருக்கறவங்களுக்கு நல்ல செய்தி உண்டு.  குடும்பத்தில் யாருக்கோ காதல் திருமணம் நிகழும்.

சந்திராஷ்டமம்: மே மாதம் 14ம் தேதி முதல் மே மாதம் 16 ம் தேதி வரை

மீனம்

பார்ட்டி, விருந்து, சினிமா, சிநேகிதிகள்/ சிநேகிதர்கள் வீடு என்று அட்டகாஷ்தான் போங்க. பண வரவு அது பாட்டுக்கு வந்து கொண்டே இருக்கும். ஏகப்பட்ட வேலைகள் உங்களைச் சாப்பிடவும் தூங்கவும் விடாமல் அழுத்தி வைத்திருந்தாலும் மற்றொரு பக்கம் உங்க ஜாலியான பொழுது போக்குக்குக் குறைவேதும் இருக்காது. கிரேட்தாங்க நீங்க. எப்பிடித்தான் மேனேஜ் செய்யறீங்களோ! உங்களுக்கு உள்ளுக்குள்ள உதைப்பு இருந்தாலும் உழைப்பும் இருக்கறதால அலுவலகத்தில் புகழ் மற்றும் பாராட்டுக் குவியும். இப்போது இருக்கும் வேலையையே சரியாகப் பிடித்துக் கொண்டால் உங்களுக்கு பெரிய நன்மைகள் காத்திருக்கின்றன. உங்க திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் குவியும். பரிசுகளும் உண்டு. வார்த்தைகள் வரிக்கு வரி பலிக்கும்.

கார்ட்டூன் கேலரி