வார ராசிபலன்: 12.04.2019 முதல் 18.04.2019 வரை! வேதா கோபாலன்

பத்திரிகை.காமின் ஆஸ்தான ஜோதிடரான திருமதி வேதா கோபாலன் துல்லியமாக கணித்துள்ள  விகாரி தமிழ்ப்புத்தாண்டு  ராசி பலன் நாளையும், நாளை மறுதினமும் (13, 14ந்தேதிசனி, ஞாயிறு)  நமது பத்திரிகை.காம் இணையதளத்தில் வெளியாக உள்ளது. வாசகர்கள் தங்களது ராசிக்கான பலன்களை தெரிந்து பயன்பெறுங்கள்…

மேஷம்  

தந்தைக்காகவும் தந்தை வழி உறவினர்களுக்காகவும் செலவுகள் செய்ய வேண்டி வரலாம். அரசாங்கம் அல்லது அரசியல் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காகக்கூட செலவுகள் அதிகமாக இருக்க சான்ஸ் இருக்குங்க. குடும்பத்தில் மனக் கசப்புக்கள் அகலும்.நல்ல காரணங்களுக்காப் பணம் செலவழியும். வாழ்க்கைத் துணையில் உடல் நலனில் சிறு பிரச்சினை ஏற்பட்டு சரியான சிகிச்சைக்குப் பிறகு குணமாகும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், ஆனால் அவர்களிடம் கேர்ஃபுல்லாக  இருந்தால் நல்லது.

ரிஷபம்

திடீரென்று பணம் வரும். அது  சற்றும் எதிர்பாராத வகையில் இருக்கும். நீங்களே மறந்து போன தொகை யாகவும் இருக்கலாம். அரசாங்கம் மூலம் கிடைக்கும் நன்மையாகவும் இருக்கலாம். வயிற்றைக் கெடுக்காத உணவாக .. சரியான நேரத்துக்கு. சுத்தமாக.. சுகாதாரமாகச் சாப்பிடுங்க. சத்துள்ள உணவு சாப்பிடுங்கள். உங்கள் உடல் நலம் குறித்து சற்று அதிகப்படி அக்கறை காட்டியாக வேண்டும், புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.சற்று வேகமாக நிகழ்ச்சிகள் நடந்தேறும்.நண்பர்கள் மத்தியில் பெருமை அதிகரிக்கும். நல்ல நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்

அரசாங்க உத்யோகத்துக்காகக் காத்திருந்தீங்களா. இதோ கிடைச்சாச்சு, வங்கி உத்யோகம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. ஜாதகத்தில் பலம் இருந்தால். கோபத்தைக் குறைச்சுக்குங்க.. குறிப்பாய்க் கூடப்பிறந்த வங்க கிட்ட வேண்டவே வேண்டாம். எதை எடுத்தாலும் தடங்குதேன்னு தலையில் கையை வெச்சுக்கிட்டு உட்கார்ந்துடாதீங்க. சாத்தியமான விஷயங்களை முயற்சி செய்யுங்க. எல்லாம் நல்லபடியாவே நடக்கும். பாப வழியில் சம்பாதிக்கும் முயற்சி வேண்டாம். அதை யாராவது பரிந்துரைத்தால் அவர்களைப் பகையாக நினைப்பது நல்லதுங்க. குழந்தைங்க கல்யாணம் .. படிப்பு பற்றியெல்ம்  தேவையே இல்லாம ஏன் கவலைப்படறீங்க?  எல்லாம் நல்லபடியாவே நடக்கும்.

 கடகம்

மகள் மகன் வழியில் நன்மைகளும் மகிழ்ச்சியும் கட்டாயமாக உண்டுங்க .இத்தனை காலம் இருந்து வந்த வசதியான வீட்டையும் அலுவலகத்தையும் விட்டு, சற்று வசதிக்குறைவான இடத்தில் இருக்க நேரலாம்.  உறவினர்களுக்காக அலைந்து திரிந்து உதவ வேண்டியிருக்கும்.செலவினங்கள் வந்து கொண்டே இருக்கும்.  ஆனால் இத்தனை காலம் வாட்டி வதைத்து வந்த பெரிய பிரச்சினை ஒன்றிலிருந்து வெளியே வந்து சுதந்திரமா சந்தோஷமா இருக்கப்போறீங்க. எனவே மற்ற எதையுமே பொருட்படுத்த மாட்டீங்க. நண்பர்கள் பெரிய நன்மைகள் செய்வாங்க. கடன் வாங்கி நல்லதொரு விஷயம் செய்யப்போறீங்க.

சிம்மம்

கௌரவமும் செல்வாக்கும் அதிகரிக்குங்க. உங்கள் பேச்சை மதிச்சு ஏற்க நிறையப் பேர் தயாராக இருப்பாங்க. ஆரோக்யம்னு ஒன்று இருக்கறதை மறந்துடாதீங்க. முதலில் ஒழுங்காய் வேளாவேளைக்கு சாப்பிடுங்க. பிற பிறகு. பொது விஷயங்களில் ஈடுபட வேண்டி வரும். மாணவர்கள் கவனம் சிதறாமல் சற்று அதிக கவனத்துடன் படித்தால் நல்ல மார்க் வாங்கலாம். கணவன் மனைவிக்குள் மிகவும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுவதால் மனம் லேசாகும். அக்கம் பக்கத்தவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுதல் அவசியம்.  சகோதரன் அல்லது சகோதரி காதலுக்காக நீங்க கொஞ்சம் மெனக்கெடுவீங்க. ஜாக்கிரதைங்க. மம்மிக்கோ அல்லது டாடிக்கோ திடீர்னு பொன் மழை பெய்ய ஆரம்பிக்கும்.

கன்னி

நல்ல காரணத்துக்காகக் குடும்பத்தைப் பிரிய வேண்டி வரும். சந்தோஷமாய் டாட்டா சொல்வீங்க. அலுவலகத்தில் உங்களுக்குக் கீழே வேலைபார்ப்பவர்களை  மதித்துப் போற்றுங்கள்.  அவர்களால்  நன்மையும்  உண்டு. மேலதிகாரி கூப்பிடுவார். ‘இந்தா பிடி’ன்னு உத்யோக உயர்வைத் தருவார். அள்ளிக்கிட்டு வாங்க. அம்மாவுக்கு நன்மைகள் நடக்கும்.  கணவரை/ மனைவியை அனுசரித்துப்போகப் பழகுங்க. தப்பை உங்க பேர்ல வெச்சுக்கிட்டு அவரை/அவங்களைக் குற்றம் சொல்லக்கூடாதில்லையா? வாழ்க்கை வசதிகள் பெருகும். எழுது பொருள் வியாபாரம் செய்வோர் ,புத்தக வியாபாரிகள்  ஆகியோருக்கு நல்ல லாபங்கள் வரும்.சிரமங்களிலிருந்து நல்ல முறையில் விடுபட்டுவிட்டீர்கள்.  

துலாம்

மேலும் மேலும் வாழ்க்கையில் உயர்வுகளைப் பார்ப்பீர்கள். திடீரென்று ஆரோக்யப்பிரச்சினைகள் ஏற்பட்டாலும்கூட பயப்படும் அளவுக்கு அவை பெரிதாகாது. சீக்கிரத்தில் சரியாகி உங்கள் மாமூல் வாழ்க்கையைத் தொடர்வீங்க. அரசாங்கம் மூலம் கடன்கள்  அல்லது வரிவிலக்கு போன்றவை எதிர் பார்த்திருந்தவங்களுக்கு நல்ல செய்தி உண்டுங்க. குடும்பத்தில் ஆரோக்யமும் மகிழ்ச்சியும் இணக்கமான சூழலும் நிலவும். குழந்தைகள் வாழ்வில் மகிழ்ச்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்படும். இதயத்தை யாருக்கோ இரவல் கொடுக்கப் போறீங்க. போச்சு உங்க தூக்கம். பை தி வே…உங்க கிட்ட உள்ள நியாயத்தையும் நேர்மையையும் மற்றவர்கள் கிட்ட எதிர்பார்க்கவே பார்க்காதீங்க.

விருச்சிகம்

அலுவலகத்திலும், வீட்டிலும், அக்கம்பக்கத்திலும் எல்லோரும் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்கக் காத்திருப்பார்கள். நண்பர்கள்வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.   எங்கே போனாலும் உங்களைச் சுற்றி நின்று பாராட்டுவதற்கு நாலு  பேர் இருப்பார்கள். நினைச்சதெல்லாம் நடக்குமுங்க. நகை நட்டுன்னு சேரும். நிறைய ஊர் சுத்தி சந்தோஷத்தையும் அனுபவத்தையும் சேர்த்துப்பீங்க. சோம்பல் காரணமாகவோ உடல் நிலை காரணமாகவே சில வேலைகளை  வேறு வழியின்றித் தள்ளிப் போடுவீர்கள். கவலைப்படாதீங்க. சமாளிச்சுடுவீங்க. அரசியல் ஈடுபாடு உள்ளவர்னா எங்கும் எதிலும் கவனமாய் இருக்கணுங்க. பிரசாரத்திற்குப் பொது மக்கள் கைதட்டுவது போல் மேலிடமும் கைதட்டணும்னு எதிர்பார்த்தால் எப்பிடி!

தனுசு

இதோ மேரேஜ் நிச்சயமாயிடுங்க. குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சிலர் தந்தைக்கு அறுபதாம் கல்யாணம் போன்ற நல்ல விஷயங்களுக்காகப் பணம் செலவு செய்து ஆசி வாங்குவீங்க. அப்பா மூலமா உங்களுக்கு நன்மைகள் நடக்க வாய்ப்பிருக்கு. செய்யற கடமையை முழு வீச்சில் மன சாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்துகிட்டு இருக்கீங்க. எல்லாம் சரியான திசையில் டாப் கியரில் போயிக்கிட்டிருக்கு. கவலையே வேண்டாம். .  நீங்கள் மனதில் திட்டம் போட்டிருந்த நிகழ்ச்சி நிரல் மாறி நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்த காரியங்களை முடிக்க முடியாமலும் போகலாம். எதிர்பாராத செயல்களில் ஈடுபட வேண்டியும் இருக்கலாம்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 14 வரை

மகரம்

சுப காரியங்களுக்கான செலவினங்கள் வரக்கூடும். நல்லதுதானே. ஜமாயுங்க. சகோதர சகோதரிகள் கலைத்துறையில் உள்ளவங்களா? எனில் அவங்க குன்றின்மேல் வைத்த குத்து விளக்கு மாதிரிப்புகழ் சம்பாதிப்பாங்க. உடலும் வயதும் இடம் கொடுத்தால் ரத்த தானம் செய்யலாமே.ஆசிரியர்களுக்கும் உங்களின் வழி காட்டிகளுக்கும் மரியாதை செய்யுங்க. உங்கள் திறமைகளுக்கு நிறைய மரியாதை கிடைக்கும். உங்கள் அருமை எல்லோருக்கும் தெரியவரும். மஞ்சள் நிற இனிப்பை மற்றவர்களுக்குக் கொடுங்க. இப்போதைக்கு லோன் போடாமல் இருக்க முயற்சி செய்ங்க. குடும்பத்தினருக்கு நீங்கள் உழைப்பதுபோல் அவர்களும்தான் உங்களுக்கு உதவுகிறார்கள் என்பதை நினைவில் கொள்வது நல்லது.  

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 17 வரை

கும்பம்

கல்வி சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.உடல் நிலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் மெல்ல மெல்ல சரியாக ஆரம்பிக்கும்.முடிந்தால் மனசிருந்தால் ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவி செய்யுங்க . காதல் விவகாரங்களில் உங்கள் விருப்பத்திற்கேற்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.  பெரியோரின் உதவி கிடைக்கும். மம்மி பற்றிய சிறு டென்ஷன்கள் ஏற்பட்டால் பயம் வேண்டாம். உடனுக்குடன் சரியாகும். அதற்குள் அவசரப்பட்டு பிளட்பிரஷரை ஏத்திக்கிட்டா எப்டிங்க. குடும்பத்தில் யாருக்கேனும் அரசாங்க சம்பந்தப்பட்ட நன்மைகள் விளையும். அரசியல் வெற்றிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19 வரை

மீனம்

காதலர்களுக்கு இனிமையான வாரம். வருமானம் அதிகரிக்கும். பிரச்சினைகளை சமாளித்து நண்பர் களுக்கும் உறவினருக்கும் உதவுவதன் மூலம் உங்கள் வட்டாரத்தில் நல்ல பெயர் எடுப்பீங்க. கவர்ச்சி அம்சம் அதிகரிக்குங்க. எனவே  பாராட்டு உங்களைத் தேடி வரும். பயணத்தால் நன்மை உண்டு. பொழுது போக்கு அம்சங்கள் மனதைத் திசை திருப்புவதால் கடமைகளில் தேக்கம் ஏற்படாம பார்த்துக்கறது உங்க பொறுப்பு. ஆமாம். சொல்லிட்டேன்.  ஓய்வு குறைய நேரிடும். உடல் நலத்தையும் கவனிச்சுக்குங்கப்பா. டேக் ரெஸ்ட்..  அம்மாவின் உடல் நிலையை அலட்சியம் செய்யாதீங்க. மாணவர்களுக்கு பயம் வேண்டாம். வின் பண்ணிடுவீங்க.