வார ராசிபலன்: 12.07.2019 முதல் 18.07.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்  

வர வேண்டிய பணம் வராமல் போனதால் நீங்கள் வாங்கியிருந்த இடத்தில் திருப்பித் தர முடியாமல் திண்டாடினீர்களே!! சொந்த-பந்தங்களெல்லாம் டாட்டா காண்பித்துவிட்டு ஓடி னாங்களே. எல்லாம் தலைக்கீழாக மாறியதே! ஆனால்  இனி எதிலும் வெற்றதான் போங்க. . பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். இத்தனை நாள் தவிச்ச  இருட்டிலி ருந்து வெளிச்சத்திற்கு வருவீங்க. இனி தொட்ட தெல்லாம் துலங்கும். எல்லாமே விளங்கும்! பல வாரங்களாய் அரைக்குறையாக இருந்த காரியங்களையெல்லாம் உற்சாகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள். இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டு வாங்க. ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் முதலீடுகளில் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வோடு செயல்படுங்க.

சந்திராஷ்டமம்: ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை

ரிஷபம்

சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். மற்றவர்களின் தயவின்றி நீங்களே சுயமாகவும் புத்திசாலித்தனமாகவும் யோசித்து முடிவுகள் எடுப்பீர்கள். அவை சரியாகவும் இருக்கும். எனவே டோன்ட் ஒர்ரி. அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை  அதிகரிக்கும்.  பிள்ளைகளின் தீய நட்பு காரணமாக அவர்களுக்கு ஏற்பட்டிருந்த பழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். இதனால் உங்களுடைய டென்ஷனும் தீரும்.. அவர்களும்  உங்களின் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை இனி நம்ப வேண்டாம். பல வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். 

சந்திராஷ்டமம்: ஜூலை 14 முதல் ஜூலை 17 வரை

மிதுனம்

அலுவலகத்தில் புதுப் பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இதனால் சாப்பிடவும், தூங்கவும் நேரம் இல்லாமல்  தவித்தாலும்… பாராட்டு, அவார்ட், ரிவார்ட் எல்லாம் கிடைக்கும். மேலும் .ஓரிரண்டு மாசங்களில் வருமானம் அதிகரிப்பதற்கான அறிவிப்பும் வந்துவிடும். ஜமாயுங்க. ஜாலிதான். நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் திறன் அதிகரிக்கும் என்பதால் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து  அவர்களை  வெல்வீங்க. அலுவலகத்திலும் குடும்பத்திலும் நண்பர்கள் மத்தியிலும் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். திடீரென்று புதிதாக அறிமுகமாகும் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வசதி, செல்வாக்கை கண்டு மயங்கித் தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். 

சந்திராஷ்டமம்: ஜூலை 17 முதல் ஜூலை 19 வரை

கடகம்

மூத்த சகோதர வகையில் இருந்த சின்னச் சின்ன சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும் ஒரு வழியாக நீங்கும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வரும். அன்பும், அன்யோன்யமும் குறையாது. விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கவனக்குறைவால் இழக்க வேண்டி வரும். திருட்டு பயம் வந்து நீங்கும். கவலையையும் பதற்றத்தையும் அறவே கட்செய்து விலக்கித் துரத்துங்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

சிம்மம்

ஓரளவு பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்னையால் தவித்துக்கொண்டிருந்த உங்களுக்கு மெல்ல மெல்ல நிம்மதி கூடும். தந்தையாருடன் இருந்த கருத்து மோதல்கள் குறையும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். உறவினர், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். யார் மேல் தப்பு இருந்திருந்தாலும் அவர்கள் வெள்ளைக்கொடி  காட்டும்போது அதை ஏற்று.. அங்கீகரித்து..  வெற்றிக்கொடியாக்கிக்கொள்ளுங்களேன். என்ன குறைந்துவிடப்போகிறது? கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். மூத்த சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். பதவிகள் தேடி வரும்.

கன்னி

ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். இழுபறியாக இருந்த அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். இத்தனை காலம் அடக்கம் அல்லது சோம்பல் காரணமாக நீங்கள் ஒளித்து வைத்திருந்த  திறமைகள் வெளிப்படும். வேற்றுமொழிப் பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்பட்டுப் பாராட்டுப் பெறுவீங்க.  நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவதைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாமே. அடுத்தத்தடுத்து வேலைகள் வந்தாலும் அசராமல் முடிப்பீங்க. எனவே மேலிடத்தின் அருட்பார்வை உங்கள் மேல் படும். குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு நன்மைதான்.

துலாம்

கடந்த சில நாட்களாய்ச் சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத  வகைகளில் பணம் வரும் என்பதால் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத செலவுகள் எல்லாவற்றையும் சமாளிப்பீங்க. இத்தனை காலம் புயல் வீசிய வீட்டில் அமைதி திரும்பும். குறிப்பாகக் கணவன் மனைவிக்கிடையே நல்ல ஒற்றுமை மீளும். சே.. இந்தச் சின்ன விஷயத்துக்க சண்டைபோட்டோம் என்று இருவருமே வெட்கப்பட்டு ‘ஸாரி’ கேட்பீங்க. சலி வாரங்களாய் முக வாட்டத்துடனும், ஒருவித பதட்டத்துடனும் வலம் வந்தீர்களே! இனி அந்த பயம் நீங்கும். முகம் மலரும். தோற்றப் பொலிவுக் கூடும். உடம்பில் ஏதோ கோளாறு உள்ளது என்ற கற்பனையிலிருந்து  விடுபடுவீர்கள்.

விருச்சிகம்

உடல் நலம் சீராகும். பிள்ளைகள் நடந்து கொள்ளும் முறை வயிற்றில் ஐஸ்க்ரீம் வார்க்கும். அவர்களின் பிடிவாதம் தளரும். அலுவலகத்தல் காணாமல் போன முக்கிய ஆவணங்கள் அல்லது வீட்டில் காணாமல் போயிருந்த நகை கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களுக்கு ஒரு வழியாக டாட்டா காண்பிப்பீங்க. வராது என்றிருந்த பணம் திடீரென்று கைக்கு வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். இருந்தாலும் சட்டென்று அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் இருப்பது நல்லதுங்க. திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பல காலம் விட்டுப்போயிருந்த பிரார்த்தனைகள் அல்லது குலதெய்வ வழிபாடு மறுபடியும்  வாய்க்கும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீங்க. கூடுதலாய்ப் புண்ணியம் சேரும்.

தனுசு

பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழடைவீர்கள். புது வேலைக் கிடைக்கும். சங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஆர்வமுடன் ஈடுபட்டுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படு வீர்கள். உங்கள் கௌரவமும் முக்கியத்துவமும் உயரும். ஆரோக்யம் பற்றிச் சின்னதாய் ஒரு பயம் இருக்கும். டோன்ட் ஒர்ரி. காய்ச்சிய தண்ணீரை அருந்துங்கள். காய், கனி, கீரை வகைகளை ஒதுக்காதீர்கள்.  இப்படிச் செய்வதன் மூலம் எந்தப் பிரச்சினையும் வராமல் தப்பிச்சுக்குவீங்க. அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். பொதுவாகவே பயணத்தின்போது கவனமாய் இருங்க. பொருட்களை ஜாக்கிரதையாப் பார்த்துக்குங்க. கணவர்/ மனைவி உரிமையுடன் எதையாவது பேசினால் அதை பூதக்கண்ணாடி வைத்து பார்த்து,  தப்புக் கண்டு பிடிக்காதீங்க. பெருந்தன்மையாப் போங்க.  

மகரம்

பணப்புழக்கம் கணிசமாக உயரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பிதுர்வழி சொத்து பிரச்னை நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உயர்ரக ஆபரணம் வாங்குவீங்க. பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவீர்கள்.  நல்ல வேளையாய் இதை அவர்கள் சரியான முறை யில் எடுத்துக்கொண்டு பயன்பெறுவதால் பாராட்டுக் கிடைக்கும். டுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியா வசியச் செலவுகள் அதிகரிக்கும். எனினும் பண விஷயத்தில் பெரிய டென்ஷன்கள் எதுவும் ஏற்படாது. பயம் வேண்டாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம்  விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய நண்பர்களால் உதவியுண்டு.    

கும்பம்

நீண்ட நாட்களாக போக நினைத்த புகழ் பெற்ற புண்ணிய‌‌த் தலங்களுக்குச் சென்று வருவீர் கள்.  குலதெய்வத்தையும் வழிபடுவீங்க.  இதனால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். எதுக்குங்க வம்பு. புரிஞ்சுக்குங்க அதன் விளைவை.  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீங்க தாயாரின் உடல் நிலை பற்றி பயந்துகொண்டிருந்தீங்களே. அது சீராகும். வீடு கட்ட/ வாங்க மற்றும் வாகனம் வாங்கு வதற்கு, வங்கிக் கடன் உதவிக்குக் காத்திருந்தவர்களுக்கு அது சுலபமாகக் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் வீட்டு உபயோகப் பொருட்களை ஆடம்பரமாக வாங்குவீர்கள். வீட்டுக்கும் உங்க பர்சனல் விவகாரங்களுக்கும் தேவையாக விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்

தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வெளிநாட்டிலிருக்கும் உங்களின் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களால்  ஆதாயமடைவீர்கள். ஒரு வேளை உங்களின் வெளிநாட்டு வேலைக்கு அவர்கள் உதவி கிடைத்தாலும் கிடைக்குங்க. அரசாங்கத்தால் நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு வெளிமாநிலத்தில் அல்லது அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். முன்பைவிட மனப்பக்குவம் அதிகரிக்கும். விவேகமாக யோசிப் பீங்க. உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீங்க. எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். திக்கு திசையறிந்து இருட்டிலிருந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். 

 

கார்ட்டூன் கேலரி