வார ராசிபலன்: 12-10-18 முதல் 18-10-18 வரை! வேதா கோபாலன்

மேஷம்

குழந்தைகள் பற்றிய டென்ஷன்களையும் கவலைகளையும் விடுங்க. பயமே வேண்டாம். அவங்க வாழ்க்கை சிறக்கும். நாடுவிட்டு நாடு.. ஊர் விட்டு ஊர்.. பேட்டைவிட்டு பேட்டை.. மாநிலம் விட்டு மாநிலம் (இன்னும் சொன்னா  போர் அடிக்கும் என்பதால் நிப்பாட்டிக்குவோம்) பயணம் போவீங்க. உடன் உங்க மனசுக்கு உகந்தவங்களும் வருவாங்க. எனவே பயணம் முதல் தங்கல் வரை எல்லாமே சந்தோஷமும் உற்சாகமும் நிறைந்ததா அமையும். சில  நல்ல குடும்ப விழாக்களை மிஸ் செய்ய வேண்டி வந்தாலும் அந்த வருத்தத்தை ஈடுகட்டும் சந்தோஷங்கள்  உண்டு. நண்பர்களும் உறவினர்களும் உங்களைப் புரிஞ்சுக்குவாங்க.

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 12 முதல் 14 வரை

ரிஷபம்

அலுவலகம் முன்புபோல் இல்லை என்று சின்ன டென்ஷன் உள்ளதா உங்களுக்கு? டோன்ட் ஒர்ரி. அது பாட்டுக்கு இருக்கறபடி இருக்கட்டும். உங்களுக்கு சீக்கிரத்தில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். அப்போ புரிஞ்சுக்குவீங்க அலுவலகம் .. குறிப்பா மேலிடம் உங்களை நல்ல முறைல கவனிச்சுக்கிட்டிருக்குன்னு. குழந்தைகளால் நன்மைகள் நடக்கும். பலகாலமா காத்துக்கிட்டிருந்த சுபகாரியங்கள் நடக்கும். கோயில் குளம்னு சந்தோஷமாப் போவீங்க. குடும்பத்தோட வெளியில் போய் நிம்மதியும் சந்தோஷமும் அனுபவிப்பீங்க. சின்னச்சின்ன லாபங்கள் உத்தரவாதமா வரும். பழைய பாக்கிகள்/ அரியர்ஸ் தேடி வரும்.

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 14 முதல் 17 வரை

மிதுனம்

எதிர்பாராத வகையில் நீங்க மனு செய்திருந்த லோன்களுக்கு உடனுக்குடன் அனுமதி கிடைக்கும். இத்தனை காலம் பிரச்சினையை மட்டுமின்றி பயத்தையும் மனம் நிறையக் கொடுத்துக்கொண்டிருந்த உடல் உபாதைகள் ‘போயே போச்சே’ என்று காணாமல் போகும். இன்னும் கொஞ்சமே கொஞ்சகாலம் பொறுத்தால் போதுங்க. எல்லா வகையிலும்  அனைத்துப்பிரச்சினைகளிலிருந்தும் வெளியே வந்துடுவீங்க. உத்தரவாதம். உங்களுக்கும் சரி உங்கள் கணவர் அல்லது மனைவிக்கும் சரி எங்கும் எதிலும் தாமதப்போக்கு இருந்தால் கவலை வேண்டாம். சனிக்கிழமை கோயில் சுற்றுங்க. எல்லாம் சரியாகும்.  பகைவர்கள் நண்பர்களாவார்கள். நண்பர்கள் மேலும் நல்லவர்களாகவும் உதவிகரமாகவும் மாறுவார்கள்.

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 17 முதல் 19 வரை

கடகம்

அலுவலக விஷயங்களுக்காகவும் தனிப்பட்ட முறையிலும் நிறைய அலைய வேண்டியிருக்கும். களைப்படையவோ சலிப்படையவோ வேண்டாம். ஏன் தெரியுமா? அத்தனை பயணமும் உடனடியாவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ நிச்சயமாய்ப் பலன் தரும். லாபமும் தரும்.
குறிப்பா அலுவலகப் பயணம் காரணமா உங்க சம்பளமும் பதவியும் உயரும். உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் மேலிடத்துக்கு வரும். எப்போதோ கொடுத்து மறந்து போயோ கைவிட்டோ இருந்த கடன்கள் உங்களைத் தேடி வந்து அடையும். அல்லது என்றைக்கோ செய்த முதலீடுகள் லாபம் தரும்.

சிம்மம்

சகோதர சகோதரிகளின் வாழ்வில் முன்னேற்றம் வரும். நண்பர்களால் மிக திடீர் நன்மைகள் வரும். சிநேகிதங்களில் விஷயத்தில் முன்பு நீங்கள் செய்த தவறை இனி செய்ய மாட்டீங்க என்பதால் பிழைச்சீங்க. திடீர் லாபங்கள் வருமானங்கள் மட்டுமின்றி திடீர் செலவுகளும் வரும். பேச்சில் நிதானமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பதால் பிரச்சினைகள் குறையும். பேச்சினால் நன்மை அதிகரிக்கும். எனினும் பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்க முயலாதீர்கள்.  யார் வம்பிலும் தலையிட்டு பஞ்சாயத்து செய்யாதீங்க. இப்போதைக்கு வேண்டாங்க. தட்ஸ் ஆல். குறிப்பாக, சகோதர சகோதரிகளின் விவகாரம்ஸ்.. மூச்!

கன்னி

ஆரோக்யத்தைப் பொருத்தவரைல் உஷ்ணம் சம்பந்தமான சிறு பிரச்சினைகள் வரலாம். தட்ஸ் ஆல். தலைவலி பற்றிப் பெரிதாக பயம் வேண்டாம் (நான் சொன்னது நிஜத் தலைவலி). அனேகமாக ஸ்பெக்ஸ் போட வேண்டி வரலாம். பேச்சில் தெறிக்கும் புத்திசாலித்தனத்தால் மற்றவர்கள் பயன் பெறுவார்கள். சகோதர சகோதரிகளுக்கு நீங்க நன்மை செய்வது போல் அவங்களும் உங்களுக்கு நன்மை செய்வாங்க. உதவிகரமா இருப்பாங்க. திருமணத்திற்காகக் காத்திருப்பவங்களுக்கு உடனடி நல்ல செய்தி உண்டு. தந்தைக்கு நன்மைகள் உண்டு. மிக திடீர் அதிருஷ்டம் அடிக்கும். அலுவலகத்தில் சற்றும் எதிர்பார்க்காத நன்மை ஏற்படும். சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போவீங்க.

துலாம்

அலுவலகத்தில் சின்ன டென்ஷன். மனசில் பெரிய டென்ஷன். பயம் வேண்டாம். எல்லாம் நல்லபடியாவே முடியும். குறிப்பா புது உத்யோகம் தேடிக்கிட்டிருக்கறவங்களுக்கு மிக நல்ல இடத்தில் வேலை  கிடைக்கும். அது நல்லதோர் எதிர்காலத்திற்கு வித்திடும். உங்களிடம் உள்ள பெரிய மற்றும் பாராட்டப்பட வேண்டிய குணம் எல்லோரையும் சமமாக பாவித்தல். அம்மாவானாலும் மாமியாரானாலும் பாஸ் என்றாலும் நியாயம் என்றால் நியாயம் என்பீர்கள். குட். குட்லக். எதிர்பாலினத்தினரால் பெரிய அளவில் நன்மைகள் ஏற்படும் என்று சொல்வதற்கில்லைன்னாலும் குறைந்தபட்ச நல்லதாவது நடக்குமுங்க.

விருச்சிகம்

பேச்சில் பெரிய அளவில் நிதானம் தேவைங்க. யாரையுமே நம்பி ஏமாற வேண்டாம். காரணம் உங்களுக்கே தெரியும். நண்பர்கள், உறவினர்கள், அலுவலகத்தில் உள்ளவங்க என்று யாரிடமும் நம்பிக்கை வைத்துப்  பெரிய தொகையெல்லாம் கொடுக்க வேணாங்க. குழந்தைங்களால நல்லது நடக்கும். அவங்க வாழ்க்கையில் இத்தனை காலம் தென்படாத வெளிச்சம் தெரிய ஆரம்பிக்கும். தந்தை வழி சொத்துக்கள் உங்களை வந்தடைய வாய்ப்புகள் உள்ளன. தந்தைக்கு உங்களாலும் உங்களுக்குத் தந்தையாலும் நன்மைகள் கட்டாயம் நடக்குங்க. அதிருஷ்டத்தை நம்பாதீங்க. கட்டாயம் உங்களுக்கு அதிருஷ்டமான காலம்தான் என்றாலும் நீங்க 100 எதிர்பார்த்தா 50தான் கிடைக்கும். அதுவும் ஆமையின் மேல் உட்கார்ந்து பயணம் செய்து வரும்? ஓகேதானா?

தனுசு

 செலவுகளும் வரவும் ஒன்றோடு ஒன்று போட்டிபோடும். டோன்ட் ஒர்ரி. வரும்படி வந்துதானே செலவுகளும் வருகின்றன? சந்தோஷப்பட வேண்டியதுதானே நியாயம். காரசாரமாய் மற்றவர்களைத் தூக்கி  எறிந்து  பேசுவதெல்லாம் உங்க வழக்கமான குணம் கிடையாது. கடந்த சிலமாசங்களாக அது உங்களை ஆட்டிப்படைக்கும். இப்போ அது பல மடங்கு அதிகமாக வாய்ப்பிருப்பதால் இடம் கொடுக்கவே செய்யாதீங்க. ப்ளீஸ். அப்பாவுக்கு சின்ன பிரச்சினைகள் ஏற்படக்கூடும். தலை சம்பந்தமான பிரச்சினைகள் வந்தாலும் அது தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போகிறது என்கிற கதையாக சின்ன அளவு பாதிப்புடன் .. அல்லது பாதிப்பு ஏதும் ஏற்படாமல் ஓடியே போய்விடும். நீங்களோ அப்பாவோ பயந்த அளவு எதுவும் ஏற்படாது. கவலை வேண்டாம்.

மகரம்

திடீர் நிகழ்வுகளும் எதிர்பாராத மகிழ்ச்சிகளும் அடிக்கடி உண்டு. சமீபத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி+ நெகிழ்ச்சி அல்லது பெருவெற்றி காரணமாக உங்கள் தலை அதிகம் கனமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதை உங்க கடமையாவே நினைங்கப்பா. அடுத்தடுத்துப் பொறுப்புகள் சூழும். அவற்றைச் சரியாச் செய்யணும் என்று கங்கணம் கட்டிக்குங்க. கணவன் மனைவிக்குள் சண்டை வரவே கூடாது என்பது பற்றி மிக உறுதியா இருக்க வேண்டியது உங்க பொறுப்புதான். பிகாஸ்… நீங்கதான் அந்தச் சண்டைக்கே காரணமா இருப்பீங்க. வேலை பார்க்கும் இடத்தில் புத்திசாலித்தனமாக நடந்துகிட்டு உங்க பெருமையையும் பெருமிதத்தையும் அதிகரிச்சுக்குவீங்க. அங்கு எதிர்பாலினத்தினர் உங்களுக்கு நன்மையும் உதவியும் செய்வாங்க.

கும்பம்

அருமையான திடீர் நன்மைகள் வரும். குறிப்பாய்க் குடும்பத்தில் உள்ள பெண்மணிகளுக்கு அவை கூடுதலாக வந்து குடும்பத்திற்கே நன்மை தரும். மனசில் தைரியமும்  தன்னம்பிக்கையும் சூழ்வதால் எடுத்த காரியத்தை நல்லபடி செய்து முடிப்பீங்க. ஏற்படுவதெல்லாம் சின்னஞ்சிறு தடைகள்தான். பிறகென்ன பயமும் டென்ஷனும்? வெளியூரிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் குறிப்பாக  நெருங்கி உறவினர் மற்றும்குடும்ப உறுப்பினரிமிருந்து நல்ல செய்தி வரும். அரசாங்கத்திடமிருந்து நன்மை தரும் தகவல் ஒன்று வரும். பாஸ்போர்ட் …விசா கிடைக்கும். மனசிலிருந்த சோர்வெல்லாம் வாஷ் செய்தாற்போல் காணாமல் போய் .. மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறையும்.

மீனம்

அருமையான காலம் ஆரம்பித்துவிட்டது. சற்றே பொறுமையுடன் எதையும் அணுகினால் பெருவெற்றி கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்படுங்க. கடமைகளை விளையாட்டுப்போல் நினைத்துக் காற்றில் பறக்கவிட்டு, ஜாலியாக வளையவர வேண்டாம். உறவினர்களும், குடும்ப உறுப்பினர்களும் எதிர்பார்த்த நன்மைகளைச்செய்வாங்க. மற்றவங்க விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாங்க. அவங்க குடும்ப உறுப்பினர்கள்னாலும் சரி.. நெருங்கிய ஃப்ரெண்ட்ஸ் என்றாலும் சரி.. கையைக் கட்டிக்கிட்டு சும்மா இருங்க போதும். கணவன் மனைவிக்குள் அழகிய உறவு  நிலவும். குழந்தைங்க வாழ்வில் முன்னேற்றம் உண்டு. அவங்களால் நன்மையும் உணடு.. பெருமிதமும் உண்டு.