Random image

வார ராசிபலன்: 13.07.2018 முதல் 19.07.2018 வரை- வேதா கோபாலன்

மேஷம்

உங்களுக்குக் கலை சம்பந்தமான ‘இன்கம்‘ வரும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங் களில் சற்று ஆமை வேகம் இருந்தாலும் கண்டுக்காம விடுங்க. உங்க அம்மா அப்பா தாத்தா பாட்டி கொள் தாத்தா கொள் பாட்டி பக்கத்துவீட்டு ஆன்ட்டி என்று ஊர் முழுக்க எதிர்பார்த் திருந்த.. மற்றும் இறைவனை வேண்டியிருந்த அந்த நல்ல செய்தி வந்தாச்சுங்க. கவலையை விடுத்து நிம்மதியாச் சிரிங்க பார்ப்போம். பணிவுதான் நல்ல சினேகிதங்களையும் பாராட்டுகளையும் வாங்கித் தரும் என்பதை மறக்காதீங்க. குழந்தைங்க வாழ்க்கைல பெருமிதப்படும்படியான சம்பவங்கள் நடக்கும்.

ரிஷபம்

லக் அதிகரிக்கும். கூடப் பிறந்தவர்களின் தயவும் அன்பும் முன்பைவிட அதிகமாய் சப்ளை ஆகும். புகழும் வருமானமும் பாராட்டும் கைதட்டலும் நிறையக் கிடைக்கும். உங்கள் டென்ஷன் எதையும் துரிதப்படுத்தாது.  அலுவலகத்தில் ஏற்படும் சின்னச்சின்னத் தடைகள் தானாய்ச் சரியாகும். வாழ்க்கையில் ஸ்டெப் ஸ்டெப்பாக முன்னேற ஆரம்பிச்சிருக்கீங்க. ஏன் கவலைப்படறீங்க? நிச்சயமா… கட்டாயமா .. கண்டிப்பா.. ஷ்யூரா.. உறுதியா நல்லது நடக்கும் மா. ஒரு கொடுங்கோல் மன்னர் மாதிரி அல்லது ராணி மாதிரி நடந்துக்க முயற்சி செய்யவே செய்யாதீங்க.

மிதுனம்

மம்மி பற்றி இருந்த கவலையையெல்லாம் டெலிட் செய்யுங்க. உங்க அலுவலக வேலைக்கு பாஸ் ‘லைக்‘ போடுவார். கிளைமேக்ஸ்ல நீங்கதான் ஜெயிக்கப் போறீங்க. அது புரியுதா இல்லையா? போகப் போகப் பாருங்களேன். மகிழ்ச்சியின் லெவல்  மெல்ல மெல்ல நீர் மட்டம் மாதிரி உயர்ந்து திக்குமுக்காடச் செய்யும். மம்மியிடமிருந்து வழக்கமான அளவைத் தவிர அதிக அளவு நன்மைகள் உங்களைத் தேடி ஓடி வரும். புது வேலை தேடப்போறீங் களா?  சில மாசங்கள் கழித்துக் கிடைக்கும். நண்பர்களால்/ சினேகிதிகளால் அதிக நன்மை செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் உடனே அவங்க மேல பாயாதீங்க. அவங்க நிலமையைப் புரிஞ்சுக்குங்க.

கடகம்

முன்பு போல் மீண்டும் சேமிப்பை நோக்கி உங்க பைனாக்குலரை நகர்த்துங்க. டென்ஷன் வேண்டாம். பயம் வேண்டாம். ? கடவுள் தோளில் எல்லா வெயிட்டையும் இறக்கி வெச்சு மனசை லைட்டாக்கிக்குங்க. நீங்க மாணவியா அல்லது மாணவரா? அப்ப சரி. அதிருஷ்ட சக்கரம் உங்க பக்கமாய்த்தான் சுழலுது. பரிசுகள் காத்திருக்கு. போட்டிகளில் கலந்துக் குங்க. வாகனம் வாங்கணும் வாங்கணும்னு ரொம்ப நாளாய்த் தூக்கத்திலும் விழிப்பிலும் கனவு கண்டுக்கிட்டிருந்தீங்க. இப்ப நீங்க நினைச்சதைவிடவும் நல்ல வகையில் பலிக்கும். பகைவர்கள் நண்பர்களாவார்கள். நண்பர்கள் இன்னும் நெருங்குவார்கள்.

சிம்மம்

கடைக்குப் போய் கார்ட் தேய்ச்சு … காஸ்ட்யூம்களும் அழகு சாதனங்களும் அலங்காரப் பொருட்களும் வாங்கிப் போட்டுப் போட்டு உங்க ஷாப்பிங் பையெல்லாம் வெயிட்டாயாச்சு. ஸ்பீட் பிரேக்கர் போடுங்க.  உங்க கிட்ட என்ன தெரியுமா பிரச்சினை? கவலைப்பட வேண் டாத விஷயங்களுக்கு ஏராளமாய்க் கவலைப் படுவீங்க. அதுதான் பிராப்ளம். அந்த நேரத்தில் ஆக்கப் பூர்வமாய் ஏதாவது செய்யலாம். அல்லது பிரார்த்தனையில் ஈடு படலாமே.   அதைவிட்டுப்புட்டு…. குடும்பம் இணைந்து உல்லாசமாகப் பயணமெல்லாம் போவீங்க. பல வருஷம் சந்திக்காத சொந்தக் காரங்களையெல்லாம் மீட் பண்ணுவீங்க.

கன்னி

வழக்குகள் நல்ல முறையில் போகும், அதற்கு நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணணும். திட்டம் இருந்தால் மம்மியா ஆகப் போறீங்க. புது இன்கம் வரப்போகுதே. வாவ். வெளிநாடு போகத் திட்டம் உருவாகியிருக்குமே? உங்கள் மகன் /மகளுக்கு வெளிநாட்டுப் படிப்பு / உத்யோகத் துக்காக ஊர்ப்பட்ட டென்ஷன் உங்களை ஆக்கிரமித்து, வாட்டி வதைத்திருந்த நிலை மாறி இப்ப எந்த யூனிவர்சிடியைத்  தேர்ந்தெடுக்கலாம் எந்தக் கம்பெனியில் சேரலாம் என்று குழம்பும் அளவுக்கு எல்லா வாய்ப்பும் ஒன்றாய் வந்து கியூவில் வந்து உங்க வீட்டுக் கதவைத் தட்டும்.

துலாம்

கலைத் துறைல உள்ளவங்களுக்கு வங்கியில் காசு பொங்கும். கோவம் மட்டும் தலை தூக்காமல் அப்போதைக்கப்போது தலையில் தட்டி வையுங்கம்மா. திருமணம் உறுதி யாயிடுச்சு. காதல் கன்ஃபர்ம் ஆயிடுச்சு. ஹப்பாடா. என்றைக்கோ செய்த முதலீடுகள் மூலமாகவும்.. அரசாங்கம் மூலமாகவும்…. நீங்கள் கற்ற கல்வி மூலமாகவும் வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. கணவன் மனைவி ஒருத்தருக்கொருத்தர் மிகவும் சப்போர்ட் டாவும் இருப்பீங்க. வழிகாட்டியாவும் இருப்பீங்க. சிலருக்கு திடீர்னு அரசாங்கம் மூலம் நன்மையும் லாபமும் கிடைக்கும்.

விருச்சிகம்

நல்லதை வரவேற்க ரெடியா? மகிழ்ச்சியா? ஸ்மைல் ப்ளீஸ். க்ளிக். வாகனம் வாங்கணும்னு பிளேன் மாதிரிப் பறக்காதீங்க. வெயிட் செய்ங்க. சில மாதங்களுக்குத்  தள்ளிப்போடுங்க. வெளிநாட்டுக்குப் பறக்க இறக்கைகளை ரெடி பண்ணிக்குங்க. உத்யோகம் திருமணம் அல்லது இரண்டுமே இதை உறுதி செய்யக்கூடும். கணவரின் புத்திசாலித்தனமான நட வடிக்கை அல்லது ஒரு நல்ல தீர்மானம் குடும்பத்தில் மகிழ்ச்சி விதையைத் தூவி சந்தோ ஷப் பயிரை விளைவிக்கும்மா. கணவர்/ மனைவி வெளி நாடு போவாங்க. அவரின் எந்தப் பயணமும் அவருக்கு மட்டுமில்லாமல் உங்களுக்கும் லாபமோ மகிழ்ச்சியோ அளிக்கும்.

தனுசு

சின்னஞ்சிறு தடைகள் பற்ற பயப்படாதீங்கம்மா. அதெல்லாம் ப்யூர்லி தற்காலிகம்தான். செலவு கொஞ்சம் அதிகமாகும்தான். என்ன செய்ய. பயம் வேண்டாம். காரணம் நம்பர் ஒன்: அவையெல்லாம் நல்ல செலவாகவே இருக்கும். கா.ந. 2: அதற்கான பணம் ஏற்கனவே உங்க சேமிப்பில் இருக்கும். வியாபாரிகளுக்குப் பங்குதாரிகளின் மூலம் உதவியும் நன்மையும் கிடைக்கும். கணவர்க்கு/ மனைவிக்கு ஏற்பட்டுள்ள சின்ன ஆரோக்யக்குறைபாடு முழுவதும் சரியாகும். சகோதர சகோதரிகளுக்கு உங்களின் உதவி தேவை.

சந்திராஷ்டமம்: 13.7.2018 முதல் 15.07.2018 வரை

மகரம்

பொதுவிழா அல்லது அலுவலக விசேஷத்தில மைக் பிடிச்சு சூப்பராப் பேசிப் பாராட்டு வாங்கப் போறீங்க. கடன் வாங்க மாட்டீங்க. நண்பர்கள் உறவினர்களுடன் பேசும்போது வாயில் மட்டும் சின்னதா ஒரு நம்பர் லாக் போட்டுக்குங்க. ஆரோக்யத்தை கொஞ்சம் கரெக்டா பார்த்துக்கிட்டீங்கன்னா பிரச்சினை இல்லாத வாரம்தான். ஒன்றல்ல இரண்டல்ல.. பல வருமானங்கள் உங்களைத்தேடி வரும். ஒண்ணு மட்டும் ரொம்பவும் முக்கியங்க… மறந்தும் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டுப் பிறகு சிரமப்படாதீங்க… வாங்கிக் கட்டிக்காதீங்க. குறிப்பா நல்லவங்களை மனசார மதிச்சா நன்மை உங்களுக்குத்தான். நல்ல செலவுகள் வரும். தாய் தந்தைக்கு சுப நிகழ்ச்சி செய்து சந்தோஷப்பட்டு சந்தோஷப்படுத்துவீங்க.

சந்திராஷ்டமம்: 15.7.2018 முதல் 17.07.2018 வரை

கும்பம்

எங்கேயும் எப்போதும் யாரிடமும் எந்த சூழலிலும் பேச்சினால் வெற்றியும் செல்வாக்கும் கியூவில் நிக்கும்.கவர்ன்மென்ட் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்யப் போகுதும்மா. வங்கியில் வெச்சிருந்த இருப்பு திடீர்னு அதிகரிக்க ஆரம்பிக்கும். அதிருஷ்டம் என்பதைவிடவும் உங்க பல வருஷ உழைப்பின் பலன் என்பதுதான் கரெக்ட். உதவிகளை மனசாரச் செய்யுங்க.. பெற்றோர் மனசை மகிழ்விக்கறீங்க.. அவங்க ஆசீர்வாதம் கிடைக்கும். கல்வி சம்பந்தமான நன்மைகளும் லாபங்களும் வரும். மாணவர்களுக்கு திடீர் முன்னேற்றங்களும் பாராட்டும் கிடைக்கும். வாகனம் வாங்க எத்தனை காலமா திட்டமிட்ருந்தீங்க. இப்போ நிறைவேறும். புது வேலை கிடைக்கும்

சந்திராஷ்டமம்: 17.7.2018 முதல் 19.07.2018 வரை

மீனம்

எங்கும் ஸ்லோ எதிலும் ஸ்லோ முயன்றாலும் ஸ்லோ முயற்சியை நிறுத்தினாலும் ஸ்லோ அதிகரித்தாலும் ஸ்லோ என்று சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று ஒரு நம்ப முடியாத மாற்றம் ஏற்பட்டிருக்குமே. என்ஜாய். வயிறு .. ஜீரணம் சம்பந்தமான சின்ன சின்ன பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். பொருட்படுத்தக்கூடாதுன்னா கூடாது. ஆமாம் .. சொல்லிட்டேன். மனசுக்கு நெருக்கமானவர்களால் ஏற்படும் சின்ன வருத்தங்கள் உடனுக்குடன் சரியாகும். அதுக்காகவெல்லாம் மனசைப் போட்டு உழப்பிக்காதீங்க. குடும்ப உறவினரிடையே சின்னச்சின்னதாய்க் கசமுச இருக்கும். கண்டுக்காம விடுங்க.