வார ராசிபலன்: 14.12.2018 முதல்  20.12.2018 வரை – வேதா கோபாலன்

மேஷம்

உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்படியான காரியங்களில் ஈடுபடுவீர்கள். அவை உங்களின் திறமையையும் புகழையும் உலகிற்குப் புரிய வைக்கும். உழைப்பதற்கு ஒரு அளவில்லை? என்று கேட்டு யாரேனும் உங்களின் உற்சாகத்தைக் குறைக்க முயன்றால் அனுமதிக்கவே செய்யாதீங்க. மிக திடீர்ப் பணவரவு இருக்கும். உதாரணமாக எட்டுப் பத்து வருஷம் முன்னாடியே கை கழுவி…… வரவே வராதுன்னு நீங்க நினைச்ச தொகை டக் கென்று உங்க முன்னால் குதிக்கும். அல்லது நீங்கள் லாபமோ வருமானமோ எதிர்பார்க் காமல் சும்மாவானும் செய்த செயல் ஒன்று லாபகரமாக வருமானம் கொடுத்துச் சந்தோஷத் திணறல் வழங்கும்.

ரிஷபம்

ஆசிரியர்கள் உங்களின் குழந்தைகளைப் புகழ் பெற வைப்பார்கள். குறிப்பாகக் கற்பனை சார்ந்த  துறைகளான நடனம் நாட்டியம் ஓவியம் போன்ற துறைகளில் ஏதாவது ஒன்றில் மிகச் சிறந்து விளங்குவார். எதிரிகளுக்கு நீங்க சிம்ம சொப்பனமாகத்தான் ஆகிவிடுவீங்க. இத்தனைக்கும் நீங்க சினிமா வில்லன் மாதிரி ஆக்கிரோஷமாய்க் கம்பு சுத்தலைதான். எனினும் உங்க மேல பெருந்தன்மையான மரியாதை வரும்படியா நடந்துக்கிட்டீங்க. இனி  அவங்க தொல்லை இருக்காது. உங்க பக்கம் தலை என்ன வால்கூட நீட்டிப்படுக்க மாட்டாங்க. இத்தனை காலம் தொடர்ந்து இருந்து வந்த அலுவலக ரொட்டீன் மாறுபட்டு வேறு வகையான பாதையில் பயணிக்கும். இதுவும் நல்லாத்தான் இருக்கும். டென்ஷன் ஆவாதீங்க.

மிதுனம்

குழந்தைகள் புகழ் அடைவார்கள். மருத்துவர்களுக்கும் கட்டடத்துறையில் இருப்பவர் களுக்கும்   லாபம் பெருகும். சம்பளம் கூடுதலாகும் சரி. பெருமையான பொறுப்பு தருவாங்க சரி. உன்னைப் போல உண்டான்னு அலுவலகத்தில் ஆரத்தி எடுப்பாங்க…சரி சரி சரி. அது உங்கள் தலையில் ஏறி உட்கார அனுமதிக்காதீங்க. திமிர், கர்வம் போன்ற வார்த்தைகளை உங்க அகராதியிலிருந்து தூக்கிப்போட்டு நல்ல பெயர் எடுத்துக்கிட்டிருக்கீங்கல்ல. அதை இனியும் காப்பாத்திக்குங்க. ப்ளீஸ். செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் பயனுள்ள செலவுகளாகவே இருக்கும்.

கடகம்

ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். எதற்கெல்லாம் பயந்தீர்களோ அவை சரியாகும்.  வயிறு சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் வராமல் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஊருக்கு உழைப்பது பற்றி சூப்பர் பெருமைதான். இது புண்ணியச்செயல்தான். நிறுத்தாதீங்க. கன்டின் செய்ங்க. எனினும் கொஞ்சம் உங்கள் ஆரோக்யத்தையும் பார்த்துக்குங்க. சரியா?  ஓகே? மூத்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு சிறு பிரச்சினைகள் ஏற்படுவது போல் தோன்றினாலும் விரைவில் சரியாகும். உதவிகள் நிறையக் கிடைக்கும்.  உங்க முயற்சியும் உதவும் என்பதால் சகோதர சகோரிகளுக்கிடையே நல்லெண்ணங்கள் பரவும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 13 முதல் 15 வரை

சிம்மம்

குழந்தைகள் புகழ் அடைவார்கள். அதுவும் திடீர்ப் புகழ் அடைவார்கள். வெளிநாட்டில் கல்வி கற்க எண்ணம் கொண்டவர்களுக்கு அந்த எண்ணம் நிறைவேறும். லாபம், சம்பாத்தியம், நிதி நிலைமை போன் விஷயங்களில் பிரச்சினையே இருக்காது. கடன் பெற்றுப் புதிய வீடு வாங்குவீர்கள். ஆனால் கடன் கிடைப்பதற்கள் உன்பாடு என்பாடு என்றாகிவிடும். மனசைத் தயார் நிலைல   வெச்சுக்கங்க. குழந்தைங்க வாழ்க்கைல ஒரு சின்னஞ்சிறு தேக்கம் இருந்தால் கவலை டென்ஷன் அது இதுன்னு பட வேணாங்க. சீக்கிரம் சரியாகும். வெளி நாட்டு வாகனம் வாங்கப்போறீங்க. இனிமேல்தான் செலவுகள் பிரமாதமாகக் கட்டுப்பட்டு சேமிப்பு அதிகரிக்கப்போகுது.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 15 முதல் 17வரை

கன்னி

மருத்துவக் கல்வி பயிலுபவர்கள் சிறந்த முறையில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் புத்தி சாலித்தனம் வெளிப்படும். இதன் காரணமாக அலுவலகத்திலும் சொந்த வாழ்க்கை யிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். ஸ்வீட்டி எடுங்க கொண்டாடுங்க.  எத்தனை உரிமையாய்ப் பழகினாலும் எதிர்பாலினத்தினரிடம்.. குறிப்பா அலுவலகத்தில் உங்களின் உடனடி மேலதி காரியிடம் அடக்கி வாசிங்க.  வீடு அல்லது வாகனம் வாங்க முனையும் போதோ பூர்வீக வீடு சம்பந்தமான முயற்சிகள் செய்யும்போதோ தேக்க நிலை ஏற்படக்கூடும். முயற்சியில் மனம் தளராக விக்ரமாதித்யன் போல முயற்சி செய்ங்க. எல்லாம் காலப்போக்கில் வெற்றி வெற்றி வெற்றிதான் தரும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 17 முதல் 20 வரை

துலாம்

உங்க வீட்டில் யாருக்கோ திருமணம். சீமந்தம் இன்ன பிற விசேஷங்கள் வருதே ஆஹா ..ஜாலி,,. செம ஷாப்பிங் உண்டு. புது உடைகளையெல்லாம் எடுத்து ரெடியாய் அயர்ன் செய்து வையுங்க. பொதுவிழா அல்லது அலுவலக விசேஷத்தில மைக்ல அழகாய்ப் பேசிப் பாராட்டு வாங்கப் போறீங்களே. மைக்கில் மட்டுமல்லாமல் எங்கேயும் எப்போதும் யாரிடமும் எந்த சூழலிலும் கவனமாய்ப் பேசறீங்க. உங்களின் கவர்ச்சிகரமான புன்னகையும்   அழகாய் நடந்து கொள்ளும் முறையும் ஏற்கனவே உங்களைப் பலரின் அபிமான நட்சத்திரம்போல் ஜொலிக்க வைத்திருக்கிறது. சூப்பர். கீப் இட் அப்.

விருச்சிகம்

நீங்கள் புது மனை புகுவிழா செய்யப்போகிறீர்கள். தந்தைக்கு இவ்வளவு காலம் காத்திருந்த தடை ஒன்று விலகுவதன்மூலம் நிம்மதியும் மகிழ்ச்சியும் நன்மையும் லாபமும் ஏற்படும். மிகப்பெரிய அளவில் ஆரோக்யக்குறைபாடு இருந்ததா? அதிலிருந்து நூறு பர்சன்ட் மீண்டி ருப்பீங்களே. இல்லைன்னாலும் இன்னும் மிகச் சில நாட்களுக்குள் முழுமையான நிம்மதி உறுதி. பேச்சைக் குறையுங்கள். அல்லது அறவே நிறுத்துங்கள். உங்கள் பேச்சு உங்களுக்குப் பகையாகாமல் பார்த்துக்குங்க. குடும்ப நிகழ்வுகளில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துத்தான் போக வேண்டியிருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்குங்களேன். ப்ளீஸ்.

தனுசு

உல்லாசப் பயணத்துக்கு வரும்படி யாராவது உங்களை டெம்ப்ட் செய்தால் நோ என்பதை அழுத்தமாக ஆனால் அடக்கமாக சொல்லிடுங்க..   உடனே பெரிய ஆபத்தில் சிக்கிப்போமோ என்ற பயமெல்லாம் வேண்டாம். அது உங்களுக்கு நண்பர்களாய் இருந்தவர்களுடன சிறு உரசல்களை ஏற்படுத்தக்கூடும். சாப்பாடு ஒத்துக்கொள்ளாமல் அவதிப்பட நேரலாம். எல்லாவற்றையும்விட நீங்கள் செய்யாத தவறுக்காக உங்களைப் போட்டுக் காய்ச்சுவாங்க. அப்புறம் உண்மையை உணர்ந்து “ஐயோ சாரி” ன்னுவாங்க.  இதெல்லாம் உங்களுக்கு இப்போதைக்குத் தேவையில்லை. எப்படியும் அலுவலகம் சம்பந்தமான சீரியஸ் பயணங்கள் போய்த்தான் ஆகணும். அதில் நல்ல பெயரை எடுக்கற வழியைப் பாருங்க.

மகரம்

நீங்களே எதிர்பாராத அளவுக்குச் செலவுகள் கட்டுப்படும். உண்மைங்க. நீங்க கார்ட் தேய்க் கத் தயாராய் இருந்தால்கூட உங்க நண்பரோ, மாமனாரோ, மாப்பிள்ளையோ அதைச் செய்துடுவாங்க. சகோதர சகோதரிகள் உங்களுடன் இணக்கமாக இருப்பாங்க. பழைய பகை களையெல்லாம் மறப்பாங்க. அட நீங்களும் கசப்பான நினைவுகளையெல்லாம் தூக்கிப் போட்டுட்டுப்போங்களேன்பா. சும்மா சும்மா பழைய பகைகளை வளர்ப்பதில் எவருக்கென்ன லாபம்? இத்தனை நாட்களும் வெளிநாட்டில் இருந்த நெருங்கிய சொந்தக்காரர் ஒருவரால் டென்ஷன்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. அவர் இனி பிர்ச்சினை செய்யவே மாட்டாருங்க.

கும்பம்

ஜாக்பாட்தான் போங்க. ஒன்றா இரண்டா? ஏராளமான லாபங்களும் வருமானம்ஸ்ஸும் வந்துக்கிட்டே இருக்கும். என்ன முக்கியமான காரணம் இருந்தாலும் இப்போதைக்கு லோன் போட்டே ஆகணுமா? யோசிங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன், ப்ளீஸ்…. .குடும்பத்தில் சுப நிகழ்ச்சி உள்ளது. உத்யோகம் பார்க்கம் இடத்தில் சில விஷயங்களில் அனுசரிச்சுப் போக வேண்டியிருக்கும்ப்பா. பல்லைக் கடிச்சுக்கிட்டப் பொறுத்துப்போங்க. பட் ஒன் திங்.. உங்க புத்திசாலித்தனம் வியப்புக்குரிய நன்மைகளை உங்களுக்குத் தேடித்தரப்போகுதே. முன்பை விட இப்போதெல்லாம் பயங்கர செலவுகள் இருக்காது. சூப்பர்ங்க.

மீனம்

உங்க ரேஷன் கார்டில் இன்னொரு பெயர் சேரப்போகுது. கன் ஆன்! செம ஜாலிதான். சிம்ப் பிளாய்ச் சொன்னால் உங்கள் மகனுக்குத் திருமணம் முடிந்து மருமகள் வரக்கூடும். அல்லது ஏற்கனவே திருமணமான மகன் இருந்தால் அவருக்குக்குழந்தை பிறந்து வாரிசு வளரும். அட ஒரு வேளை நீங்கள் திருமணமாகாதவர் என்றால்.. கல்யாணத்துக்குக் காத்திருக்கிறவர் என்றால் கட்டாயம் திருமணம் நிச்சயமாகும். தள்ளிப் போய்க்கொண்டிருந்த ஆன்மிகப் பயணங்கள் கைகூடிவரும்.  அப்பாவுக்கு (அ) மாமனாருக்க இனிய சந்தோஷமான விழா ஒன்று நடக்கும். அதில் உங்க பங்கு அபரிமிதமா இருக்கும். அவருடைய ஆசீர்வாதத்தை வாங்க இதைவிட ஷார்ட் கட் என்னங்க இருக்கு?

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Patrikai weekly Rasi palan  14.12.2018 to 20.12.2018 - Vedha Gopalan, வார ராசிபலன்: 14.12.2018 முதல்  20.12.2018 வரை - வேதா கோபாலன்
-=-