வார ராசிபலன்: 14.8.2020 முதல் 20.8.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம்

பழைய முயற்சியால் முன்னேறும் வாரமுங்க.  சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறு வீங்க. பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவாங்க. வியா பாரத்தில் புது யுக்திகளை கையாளுவீங்க. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலை களை பகிர்ந்து கொள்வாங்க. எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை உணரும் வாரம். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்  அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பர் எனவே  கவனமாக இருப்பது நல்லதுங்க.  நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த படி கிடைக்குமுங்க. ஆ,ர் யூ ஹாப்பி?

ரிஷபம்

உற்சாகமான வாரமுங்க. இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீங்க. பிள்ளைகள் நம்பிக்கை தருவாங்க. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பாங்க. உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வருமுங்க. நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்க லாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். ழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்குமுங்க.  வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். குட் லக் .

மிதுனம்

திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய வாரமுங்க. சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைச் சாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீங்க. வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லதுங்க. காரிய தடை, எதிர்ப்புகள் அகலும்.  மற்றவர்களிடம் இருந்து தொழிலுக்கு தேவையான தகவல்களை  தெரிந்து கொள்வீர்கள். பயணங்களால் அலைச்சல், உடல்நல குறைவு ஏற்படலாம். எனவே  திட்டமிட்டு  எதையும்  செய்வது நல்லதுங்க.  மனதில் வீண்கவலைகள் உண்டாகும். அடுத்தவரை  நம்பி எதையும்  ஒப்படைப்பதை  தவிர்ப்பது நல்லதுங்க.  சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி  நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். டோன்ட் ஒர்ரி.

கடகம்

நிதானம் தேவைப்படும் வாரமுங்க. எதையும் திட்டமிட்டு செய்ய பாருங்கள். குடும்பத்தை பற்றிய கவலைகள் நீங்குவதற்கான அடையாளம தெரியுங்க. பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். உடல் நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீங்க. உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில்  தாமதம் ஏற்படும்.  கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். விருந்தினரை உபசரிப்பதில் மகிழ்ச்சியடையும் வாரம். வீண்செலவுகள் ஏற்படும். மற்றவர்களின் பிரச்னைகளுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லதுங்க. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன் னேற்றம் காண  கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.   பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லதுங்க. உத்யோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.குட்லக் அண்ட் ஹாப்பி.

சிம்மம்

இனிமையான வாரமுங்க.குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீங்க. வீட்டிற்கு தேவையான சாதனங்கள் வாங்குவீங்க. வேற்றுமதத்தரின் உதவி கெடைக்குங்க. உங்களால் வளர்ச்சி யடைந்த சிலர் இப்பொழுது உங்களை சந்திப்பாங்க. வியாபாரத்தை பெருக்குவீங்க. உத்தி யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீங்க. புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால் உடல் சோர்வடையும். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள். பிள்ளைகள்  கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். டோன்ட் டேக் இட் சீரியஸ்லி.

கன்னி

சிந்தனை திறன் பெருகும் வாரமுங்க. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவாங்க. உங்களை தவறாக நினைத்து கொண்டி ருந்தவர்களின் மனம் மாறும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவாங்க. உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. பெண்கள் வீண் மன சங்கடத்திற்கு  ஆளாகலாம். எதிலும் கவனம் தேவை.  மாணவர்களுக்கு  விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம்.தடைபட்ட காரியம் தடைநீங்கும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது வெற்றிக்கு உதவும். காரியங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுங்க.  வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக  தள்ளிப்போன பதவி உயர்வு, வர வேண்டிய பணம் வந்து சேரலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.  ஹோப் யூ ஆர் ஹாப்பி.

துலாம்

சாதிக்கும் வாரமுங்க. உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக பேசுவீங்க. செயல்படுவீங்க. திடீர் முடிவுகள் எடுப்பீங்க. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீங்க. விஐபிகளின் உதவி கெடைக்குங்க. வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாண்டு லாபம் பெறுவீங்க. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீங்க. புதியநபர்களின் அறிமுகம் கிடைக்குமுங்க. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லதுங்க. பணவரவு திருப்தி தரும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம்  அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது  வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பீ கேர்ஃபுல்.

விருச்சிகம்

கடினமாக உழைக்க வேண்டிய வாரமுங்க. உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீங்க. வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். உறவினர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லதுங்க.  பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லதுங்க. பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து  எடுக்கும் முடிவுகள்  நல்ல பலன் தரும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்குமுங்க. பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  மாணவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பர். மனமகிழ்ச்சி ஏற்படும். சூப்பர் அண்ட் ஹாப்பி.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 16 வரை

தனுசு

நிம்மதி உண்டாகும் வாரமுங்க.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். தாயாரின் உடல்நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயர்திகாரிகள் ஆதரிப்பாங்க. குடும்பத்தில் அமைதி ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும்.  முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லதுங்க. சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். ஆயுதங்களை கையாளும் போது கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலைய வேண்டி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். இட்ஸ் ஆல்ரைட்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 19 வரை

மகரம்

அமோகமான வாரமுங்க. எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடை வீங்க. புது வேலை அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீங்க. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவாங்க. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அனைவரி டமும் நேசமுடன் பழகுவீர்கள். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லதுங்க.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். தட்ஸ் இனஃப்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 21 வரை

கும்பம்

நினைத்ததை நிதானமாய் முடிக்கும் வாரமுங்க. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றி உள்ளவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீங்க. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீங்க. வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வருமுங்க. உத்தி யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீங்க. செயல் திறன் அதிகரிக்கும். குழந்தைங்களை அதட்டாம அனுசரித்து செல்வது நல்லதுங்க. கணவன், மனைவிக் கிடையே  இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லதுங்க. பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். தெய்வ பக்தி உங்களுக்கு எப்பவும் அதிகம்தான். மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். கங்கிராஜுலேஷன்ஸ்.

மீனம்

நினைவுகளில் மூழ்கும் வாரமுங்க. பிகாஸ் பால்ய நண்பர்கள் தேடி வருவாங்க. பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீங்க. பயணங்கள் திருப்திகரமாக அமையும். கலை பொருட்கள் வாங்குவீங்க. வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வருமுங்க. உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீங்க. உத்யோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனு சரித்து செல்வது  நல்லதுங்க. அவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில்  திடீர் இடை வெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். பெண்களுக்கு  எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டியது அவசியம். மன அமைதி கிடைக்குமுங்க. ரியலி வெரி  ஹாப்பி.