வார ராசிபலன்:  15-03-2019 முதல் 21-03-2019 வரை – வேதா கோபாலன்

மேஷம்

உங்கள் தைரியமும் வீரமும் இப்போது தலையெடுக்கப் போகிறது. அது ஆபத்தான எல்லை யைத் தொடாமல் பார்த்துக்குங்க. தேவையில்லாத இடத்திலும் சந்தர்ப்பத்திலும் குரலை உசத்த வேண்டாங்க. திடீர்னு இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு பலப்படும். குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் கோயில்களுக்குப்போவீங்க. இத்தனை காலமாய் எவ்வளவோ முறைகள் திட்டமிட்டுத் திட்டமிட்டுப் போக முடியாத வழிபாட்டுத் தலங்களுக்கு இயல்பாய் எளிதாய்ப் போவதற்கு வாய்ப்பு வரும். நிறைவேறும். சகோதர சகோதரிகள் வெளியூர் வெளி நாடுன்னு போவாங்க. பொறாமை கிறாமைப்படாதீங்க. அவங்க ட்ரிப்பால உங்களுக்கும் ஏராளமான நன்மைகளும் லாபங்களும் உண்டுங்க. அது உடனடியாகவும் இருக்கலாம். பிற்காலத்திலும் இருக்கலாம்.   

ரிஷபம்

திடீல் செலவுகள் வரும். அவை மிக நல்ல செலவுகளாகவும், உங்களுக்கும் குடும்பத்திற்கும் சந்தோஷம் தரும் சுப செலவுகளாகவும் இருக்கும். வாயை டபிள் லாக் போட்டுப் பூட்டிக் குங்க. எந்த வார்த்தை என்ன விளைவு ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரியுங்க? குடும்பத் தில் சந்தோஷ நிகழ்வுகள் இருக்கும். இந்த மாதிரி ஒற்றுமையை உங்க ஃபேமிலியில் பார்த்து எவ்ளோ காலமாச்சு? வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் உள்பட சில ஆரோக்யப் பிரச்சினை கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வருவதற்கு முன்பே காத்துக்கொள்ளப் பாருங்க. குறிப்பா சாப்பிடும் விஷயத்தில் ஜாக்கிரதையா இருந்துட்டீங்கன்னா இரட்டிப்பு நல்லதுங்க. நேரம் கெடாமல் சுத்தமும் சுகாதாரமும் உள்ள இடங்களில் சாப்பிடுங்க. கையேந்தி பவனுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க 

மிதுனம்

திருமண வேளை வந்தாச்சுங்க. இனி வரும் நாட்கள் முழுக்க கல்யாண பர்ச்சேஸ்தான். எதிர்பார்க்காத திடீர் அதிருஷ்டம் உங்களை உரசிக்கொண்டு வந்து முன்னால் நிக்கும், திருமணமானவரா நீங்க? எனில் குழந்தை பாக்கியம் வெற்றிப்புன்னகை தரும். குழந்தைக் குப் பெற்றோரா? எனில் அவங்க  கல்வி  கேள்விகளில் சிறந்து விளங்கிப் பரிசுகள் வாங்கு வாங்க. மாணவரா/ மாணவியா நீங்க? சூப்பர். திடீர்னு படிப்பில் பிரகாசிக்க ஆரம்பிச்சு அம்மா அப்பாவையும் ஆசிரியப் பெருந்தகைகளையும்  மூக்கின்மேல் விரல் வைக்கச் செய்வீங்க. வேலைக்குக் காத்திருந்தீங்க. அதுவும் நடந்தாச்சு.  உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கடந்த ஓரிரண்டு வருஷங்களாய் உறவு நல்ல முறையில்  இல்லாதிருந்ததுதானே? கிட்டத்தட்டப் பகையாவே இருந்தீங்கதானே? அப்பாடா… இப்பவாவது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டீங்களே. குட் குட். குட் லக்.

கடகம்

கொஞ்சம் சோம்பலும் விஷயங்களைத் தள்ளிப்போடும் பழக்கமும்  இருக்கு. அதை மட்டும் மாத்திக்குங்களேன்… ப்ளீஸ். திருமணத்துக்குக் காத்திருந்தீங்களே ஹப்பாடா.. மாலையும் மேளமும் வந்துவிட்டன. முன்பிருந்த அளவு வேலை பளு தோளை அழுத்தாதுங்க. அதற்காக ஒரேயடியாய்ப் பின்னால் சாய்ஞ்சுக்க வேண்டாம். பொறுப்பும் அக்கறையும் கவனமும் தேவை. மகன் அல்லது மகள் வழியில் சுப நிகழ்ச்சி நடக்கப் போகுதுங்க.  குடும்பத்தில் ஒருவர் வெளிநாடு செல்வதற்கான பூர்வாங்க செலவுகள் உண்டு. சந்தோஷமாய்ச் செய்ங்க. இதெல்லாம் ஒரு முதலீடுதானேங்க! லோனுக்காகக் காத்திருந்தவங்களுக்கு குட் நியூஸ் உண்டுங்க. அந்த லோன் எதற்காகப் போட்டீங்கயோ அந்த விஷயம் சுலபமாகவும் சுபமாகவும் நல்லபடியாவும் முடியும்.          

சிம்மம்

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க யார் ஐடியா கொடுத்தாலும் தூக்கி சிக்ஸர் அடிச்சுடுங்க. பின்ன? அவங்களுக்காக தண்டனை கிடைக்கப்போகுது? நீங்கதானே மாட்டிக்கிட்டு முழிக்கணும்?  குழந்தைப் பேறுக்காகக் காத்திருந்தவங்களுக்கு நற்செய்தி உண்டுங்க. குல தெய்வம் மற்றும் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்குத் திட்டமிட்டோ அல்லது திட்டமிட வேயில்லை என்றாலுமோ சென்று வென்று வருவீங்க. நல்ல புத்திசாலியான நபருடன் திருமணம் நிச்சயமாகும். சாப்பாட்டு விஷயத்தால் ஆரோக்யம் கெடாமல் பார்த்துக்குங்க. மாணவியா? மாணவரா? பள்ளியா? கல்லூரியா? மம்மியை டீ போட்டுக் கொடுக்கச் சொல்லி கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவாகப் படிக்கறீங்க. பேஷ். பேஷ்.  பலன் மிக அதிகம் கிடைக்கும்.

கன்னி

பொறுப்பான பிள்ளையா/ மகளா இருக்கீங்க. எனவே பெரியவங்க கிட்டயும் பேரன்ட்ஸ் கிட்டயும் எப்பவும் நல்ல பெயர்தான். நீங்க பாட்டி தாத்தாவா ஆகியிருந்தால் பேரன்ஸ் கிட்டயும்தான். கோயில் குளம் போகத் தீர்மானிச்சு ரொம்ப காலமா தள்ளிப் போயிக்கிட்டே இருந்ததே அதெல்லாம் இதோ நிறைவேறியாச்சு. பெரிய பொறுப்புகளை அலுவலகத்தில் சந்தித்துத் தீர்வு காண வேண்டியிருக்கும். டோன்ட் ஒர்ரி. ஜமாய்ப்பீங்க. அம்மாவுக்கு நன்மைகள் நடக்கும். அலுவலகத்தில் அவங்க பெரிய அளவில் நன்மைகளைச் சந்திப்பாங்க.  பாராட்டுக்கிடைக்கும்.  விருது வாங்குவாங்க. நீங்களும் அவங்க அருமையை உணர வேண்டிய வேளை வந்தாச்சுங்க. வாகனம் வாங்குவீங்க. அது உங்களுக்கு மிகவும் பலனளிக்கும். மனசுக்குப் பிடிச்சதாகவும் அமையுங்க.

துலாம்

உடன் பிறந்தவங்களுடன் சின்னச்சின்ன பிரச்சினைகள் இருந்தால் கட்டாயமாய்.. கண்டிப்பா.. ஷ்யூராய்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுத்தாங்க போகணும். உறவைக் கோடாலி எடுத்து வெட்டாதீங்க. பிற்காலத்தில் அவங்க உதவியும் உங்களுக்குத் தேவை உங்க உதவியும் அவங்களுக்குத் தேவை. செய்ங்க. செய்ய விடுங்க. இருவருக்கும் நன்மைதான். விமர்சனங்களையும் திட்டல்களையும் எடுத்து பின் சீட்ல போட்டுவிட்டு அலட்சியமா முன் நோக்கி ஓடறீங்க பாருங்க… இதுதான் உங்க சிறப்பம்சம்.  யூ ஆர் கரெக்ட். கவலைகளையும் கஷ்டங்களையும் மத்தவங்ககிட்ட காமிச்சுக்கிட்டு .. சோகமாய் முகத்தை வெச்சுக்கறதால யாருக்கு என்ன லாபம்? விருது பரிசெல்லாம் வரிசையாய்க் கிடைக்கும். குறிப்பாய் அலுவலகத்தில் ரொம்பவும் நல்ல பெயர் எடுப்பீங்க.

விருச்சிகம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சற்றே தடை தாமதங்களுடன் நிகழ்ந்தாலும் கட்டாய மாக நல்லபடியாக நடந்தேறும் என்பது பற்றிச் சந்தேகம் வேண்டாம். உங்க வாழ்க்கையில் நல்ல நிகழ்ச்சிங்க நண்பர்களாலதான் நடக்கப்போகுது. இந்தக் கோவம் கோவம்னு ஒண்ணு இருக்கே.. அதை டெலீட்  பண்ணிடுங்க. உங்களைப் பொருத்தவரையில் எத்தனையோ பேரை நிறையவே அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப்  போறீங்க. ஆனால் கண நேரத்தில் மின்னல் மாதிரி ஏற்பட்டுக் கொஞ்ச நேரம் மட்டுமே இருந்துவிட்டு உடனே ஓடிப்போகிற கோபம்தான் மத்தவ ங்க மனசுல உங்களைப் பற்றிய அபிப்ராயமாய்ப் பதியப்போகுது. கேர்ஃபுல். . அதெப் பிடிங்க கடன்களை இத்தனை சீக்கிரம் முடிச்சீங்க! கங்கிராஜுலேஷன்ஸ். நல்ல காரணங் களுக்காகப் புது லோன் போடுவீங்க. உடனே கிடைக்கும், நல்ல முறையில் அடைப்பீங்க.

சந்திராஷ்டமம்: மார்ச் 14 முதல் மார்ச் 16 வரை

தனுசு

எதற்கெடுத்தாலும் இத்தனை தடங்கல்களா என்று வெறுத்துப்போய் இரவில் தூக்கம் வராமல் தவிச்சுக்கிட்டிருக்கீங்க. டோன்ட் ஒர்ரி. மலை போல் வரும் எல்லாச் சோதனைங் களும் பனியாய் நீங்கிடும். வார்த்தைகளில் வன்மம் வேண்டாம்.. வேண்டாம்..  வேண்டவே வேண்டாம். காரணம் என்ன தெரியுமா? அதனால் உங்களுக்குத்தான் பெரிய பின்விளைவு ஏற்படும். எதுக்குங்க வம்பு?  பழைய வழக்குகள் தீரணும்னா அதுக்கு இன்னும் சிறிதே சிறிது காலம் காத்துக்கிட்டிருந்தா போதும். ஆக்கப் பொறுத்துட்டீங்க. ஆறப் பொறுங்க. ப்ளீஸ். திடீரென்று பணவரவு அதிகரிக்கும். பேச்சில் இனிமையும் அதிகரிக்கும், அதனால் நன்மையும்  அதிகரிக்கும்.அலுவலகம் சம்பந்தமான விஷயங்களில் உங்கள் பேச்சினால் நிர்வாகத்திற்கு லாபம் கூடும். உங்களுக்குப் பாராட்டும் கூடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

சந்திராஷ்டமம்: மார்ச் 16 முதல் மார்ச் 18 வரை

மகரம்

குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நடைபெறும் அல்லது குழந்தைப் பேறு கிட்டும். எந்த நல்ல விஷயங்களுக்காகப் பல காலம் காத்திருந்தீங்களோ அதெல்லாம் வெற்றிகரமாகத் தான் முடியும்.  டோன்ட் ஒர்ரி. பயணம்னா பயணம் அவ்ளோ பயணம்ஸ் போக வேண்டி யிருக்கும். பர்ஸ்.. கார்ட்கள்.. பாஸ்போர்ட் பெட்டி என அனைத்துப் பொருட்களையும் கவனமா வெச்சுக்குங்க. அலைச்சல் சோர்வு அனைத்தையும் மீறி பயணத்தின் வெற்றி உங்களைக் குதூகலிக்க வைக்கும்.குறிப்பாக அது அலுவலகப் பயணம் என்றால் அதன் ரிசல்ட் அமோக விளைச்சல்ங்க. மம்மி கூட சண்டை. டாடி கூட சண்டைன்னு எதுக்குங்க ஒவ்வொருத்தருடனும் சண்டை வலிக்கறீங்க? அமைதியாப் போங்கப்பா. இத்தனைக்கும் உங்க கவர்ச்சி அம்சம் காரணமா வெளியுலகத்தில் எவ்ளோ செல்வாக்குப் பார்க்கறீங்க? பிறகென்ன?
சந்திராஷ்டமம்: மார்ச் 18 முதல் மார்ச் 20 வரை

கும்பம்

வாகனங்கள் சற்று அதிகச் செலவு வைக்கும். அதெல்லாம் சமாளிக்கும்படியாகத்தான் இருக்கும். தாயாருடன் பிரச்சினை வராதபடி அனுசரித்துச் சென்றால் நன்மை வரும்.  ஏனெனில் கூடிய சீக்கிரத்தில் அவங்ககிட்ட பெரியதொரு உதவி கேட்டு நீங்க தலையைக் குனிஞ்சுக்கிட்டு அசடு வழிய வேண்டியிருக்கும். அவங்களும் நடந்தது எதையும் மனசுல வெச்சுக்காம புன்னகையோட நிறைவேற்றிக்கொடுப்பாங்க. அப்போ சங்கடமா இருக்கக் கூடாதில்லையா. அதுக்காகத்தான் சொன்னேன். அலுவலக சம்பந்தமா டூர்  அல்லது ஆன்சைட்டில் போகவேண்டியிருந்தால் ஒளிமயமான எதிர்காலம் இப்போதே தீர்மானிக்கப்பட்டுவிட்டது இந்தப் பயணத்தின் மூலம் என்பதை தைரியமா கன்ஃபர்ம் செய்துக்குங்க.

சந்திராஷ்டமம்: மார்ச் 20 முதல் மார்ச் 22 வரை

மீனம்

சொத்து விற்பது வாங்குவது சம்பந்தமான அவசர முடிவுகளை டக் டக் னு எடுக்காதீங்க. வெயிட் பண்ணி வெல் விஷர்களிடம் கேட்டு அதன் பிறகு உறுதியா ஒரு முடிவுக்கு வருவீங் களாம். ஓகே? அலுவலக வேலைகளை யாரையும் நம்பி ஒப்படைக்காதீங்க. கவனமா முழு முனைப்போட, உன்னிப்பாய்ச் செய்ய வேண்டிய வேலை அது. கோபதாபங்கள் மறந்து குடும்பத்தினர் கிட்ட கடுமை காட்டாமல் இருந்தால் மேலும் நிம்மதியா இருக்கலாம்.  குறிப்பாய் உங்ககிட்ட பணிந்து போகிறவர்களை அநியாயத்துக்கு சிரமப்படுத்தறீங்க. பாவம். விட்ருங்க. அம்மாவுக்குப் பெரிய நன்மை உண்டு. மேல்படிப்பு விஷயத்தில் உங்கள் ஆசை துல்லியமாய் நிறைவேறி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புது வாகனம் வாங்க  நீங்க செய்த பலகால முயற்சிகள் சூப்பர் வெற்றியடையும். குட்லக்.

Leave a Reply

Your email address will not be published.