வார ராசிபலன்: 15.5.2020 முதல் 21.5.2020 வரை… வேதா கோபாலன்

மேஷம்

உங்க நிதி நிலைமை இந்த வாரம் நல்லா இருக்கும். பணம், விலை உயர்ந்த பொருட்களை கவனமா வெச்சுக்குங்க. பங்குச்சந்தை, கமிஷன் மூலம் பணவரவு தாராளமாக இருக்கும். தனியார் துறை, ஐடி துறையில் வேலை செய்யறவங்களுக்கு சம்பள உயர்வு கொஞ்சம் தள்ளிப்போகலாம். டோன்ட் ஒர்ரி. பிற்பாடு வரும். பதவி உயர்வு இப்போதைக்குக் கிடைக்க வாய்ப்பு இல்லைங்க. வேலையில் கவனமாக இருங்க. பெண்கள் விசயத்தில் கவனமாக இருங்க. வியாபாரிகளுக்கு மறைமுக தொல்லை நீங்கிடும். எதிரிங்க போட்டி விலகும். வீட்டில் உறவினர்களிடம் கவனமாக பேசுங்க. கருத்து வேறுபாடுகள் மூலம் பிரச்சினைகள் வராதபடி கேர்ஃபுல்லா இருங்க. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.

ரிஷபம்

வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீங்க. உத்தியோகத்தில் உங்க புதிய முயற்சியை ஆதரிப்பாங்க. . சிந்தனைத் திறன் பெருகுமுங்க. இந்த வாரம் உங்க ராசிக்கு பணவரவு அதிகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உங்க பேச்சுல கவனமா இருங்க கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்க. மனதிலும் உடலிலும் உற்சாகம் அதிகமாகுமுங்க. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பொறுப்புத் தேடி வரும். புதிய பதவிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்குக் கடையை விரிவுபடுத்த பேங்க் லோன் கிடைக்கும். வெளியூர் பயணம் தவிர்க்கவும் உடல் ஆரோக்கியத்தில் கவனமா இருங்க. மாணவர்கள் படிப்பில் கவனமா இருங்க. பெரியவங்களோட அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது.

மிதுனம்

உங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்க ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களின் உற்சாகம் அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தடைபட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் முடியும். உங்க உடல் நலம் சீராக இருக்கும். வேலை செய்பவர்களுக்கும் கலைத்துறையில் உள்ளவங்களுக்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புரமோசன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் இருந்தே வேலை செய்ப வர்களுக்கு திடீர் இடமாற்றம் கிடைக்கும். வேலையில் அக்கறையோடு இருங்க. பேச்சில் காரத்தை குறைங்க கோபமாகப் பேச வேணாம். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீங்க.. பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவாங்க.

கடகம்

மனைவி வழியில் ஆதாயம் உண்டுங்க. வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் வேலை யாட்கள் மதிப்பாங்க. அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் திறமை இன்கிரீஸ் ஆகும். நண்பர்களானாலும் சரி, உறவினர்களானாலும் சரி.. நம்பறதுக்கும் ஒரு அளவு வேணும் இல்லையா? கிரெடிட் கார்ட் பின் நம்பரையும் ஈமெயிலின் பாஸ்வேர்டையுமா கொடுப்பாங்க? அலர்ட்டா இருங்கப்பா. உத்யோகத்தில் நல்ல முறையில் முன்னேற்றம் இருக்கும். பழைய  நினைவுகளில்  மூழ்கி வீட்டில் தடைப்பட்ட வேலையைமாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீங்க. புதுசா  வேலை தேடறவங்களுக்கு வேலை  கிடைக்கும். வயிறு சம்பந்தமான சின்னப் பிரச்சினைகள் .. சருமம் பற்றிய டென்ஷனுங்க.. உஷ்ணம் காரணமாய் ஏற்பட்ட உடல் நலக்குறைவு.. எல்லாமே இன்னும் ஓரிரு வாரத்திலி டோட்டலா முடிவுக்கு வருங்க. அதைப் பற்றித் தூங்காமல் கவலைப்பட்டுக்கிட்டிருக்காதீங்க.

சந்திராஷ்டமம் : 14.5.2020 முதல் 17.5.2020 வரை  

சிம்மம்

சகோதர சகோதரிகளுடன் ஃபைட்டிங் எல்லாம்  வேணாங்க . அவங்ககிட்டதான் ஹெல்ப் வாங்கப்போறீங்க மாணவர்களுக்கு வெற்றி ஷ்யூரா உண்டு. உங்க உழைப்பால் வர்ற வெற்றி ஒரு பங்குன்னா உங்க டீச்சர்ஸ் உங்க மேல வெச்ச நம்பிக்கை காரணமா மறுபாதி. லவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணருவீங்க.  வியாபாரத்துல  வெளிப்படையாய்ப் பேசுவது கூட தவறுன்னு உணர்வீங்க. உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீங்க. .குழந்தைகளுக்கும் கணவருக்கும் நன்மைகள் நடக்கும். குழந்தைகளின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டு அவர்களுக்கு நன்மையும் பாராட்டும் கிடைக்கும். மனசுக்கு சந்தோஷம் தரும் விஷயங்கள் நடக்கும்.

சந்திராஷ்டமம் : 17.5.2020 முதல் 19.5.2020 வரை  

கன்னி

வெளியூரில் அல்லது வெளிநாட்டில் அல்லது அல்லது உள்ளூரில்  உள்ள ஃபாரின் நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி வியப்பார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். எதிலும் மகிழ்ச்சி பெறும்சாப்பிட நேரமில்லை. தூங்க நேரம் இல்லைன்னு அலவலகத்தில் வேலை அழுத்தும். டென்ஷன் ஆகாதீங்க. இதற்கு இபபோதைக்குப் பலன் இல்லைன்னு மனசைப் போட்டு உழப்பிக்காதீங்க. பொறுமைதான் இப்போதைக்கு உங்க தாரக மந்திரம்னு நினைச்சுக்குங்க. கண்டிப்பா.. இதற்குப் பலன் சீக்கிரத்தில் கிடைக்கும். அதுவும் நீங்க விரும்பின நல்ல பலனாவே இருக்குங்க. எதில்பாலினத்து நண்பர்களால் நன்மைகள் நிறைய நடக்கும். 

சந்திராஷ்டமம் : 19.5.2020 முதல் 22.5.2020 வரை  

துலாம்

இத்தனை காலம் கல்வியில்  நாட்டமின்றி இருந்த மகன்/ மகள் திடீர்னு ஆர்வம் வரப்பெற்று நல்ல முறையில் படித்து உங்களுக்கு நிம்மதி அளிப்பாங்க. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி உண்டு. மன சாட்சியை மட்டும் அப்பப்ப கன்சல்ட் செய்துக்குங்க.  நீங்க எது செய்தாலும் உங்களுக்கும் சரி மத்தவங்களுக்கும் சரி நன்மையில்தான் முடியணும் என்கிற உறுதியுடன் செயல்படுங்க. அது போதும். அலுவலக /சொந்த விஷயமாவும் வெளியூர் வெளிநாடுன்னு போக வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டுப் பயணம் கன்ஃபர்ம் ஆகுமுங்க. கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீங்க. பிள்ளை களின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீங்க. நெடுநாட்களாக நீங்க பார்க்க நினைச்ச ஒருவர் உங்களை தேடி வருவார். எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்

விருச்சிகம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாதுன்னு முடிவெடுப்பீங்க. மகளுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமைபடைக்கும் ஆசை கலைஞர்களுக்கு வருமுங்க. குடும்ப நிகழ்வுகளில் சற்று மெதுவான போக்கு இருக்கலாம். அதைக்  கண்டு பயம் எதுவும் வேண்டாம். எது எப்போ நடக்கணுமோ அது அப்போ நடந்தால்தான் நமக்கும் த்ரில் இருக்கும். திருமணமாகிக் காத்துக்கிட்டிருந்தவங்களுக்குப் பாப்பா பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு , தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீங்க. வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீங்க. விருந்தினர்களின் வருகையால் வீடு, களைக்கட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீங்க. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

தனுசு

ஊருக்குப்  போகத் திட்டமிட்டிருந்தீங்க. நடக்கும். விசாவுக்குக் காத்திருந்தால் அதுவும் கைகூடும். இத்தனை நிதானப்போக்குக்கு இடையேயும் மின்னல் போல் திடீர் அதிருஷ்டமும் திடீர் லாபமும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலைபார்க்கும் இடத்தில் நல்லபெயர் எடுப்பீங்க. விரைவில் சம்பள உயர்வு கிடைக்கும். உடல் நிலையை நன்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதுக்காக உடனே பயந்துடாதீங்க. நத்திங் சீரியஸ். உங்களுக்கு வாக்குப் பலிதம் அதிகமாகும். எனவே எதிரிக்கும் தீங்கு வராதமாதிரிப் பேசுங்க. அந்த வார்த்தைகளின் பலன் உங்களுக்கும் இருக்கும்ல. எதிலும் சிறு தடங்கல்களும் தாமதங்களும் இருந்தாலும்  தடைகளைத் தாண்டி வெற்றி கிடைக்கும்.. தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பழகுங்க. பணம் புழங்கும் இடத்தில் வேலை பார்க்கறவங்க கண்ணை விரிச்சுக்கிட்டுப் பணம் எண்ண வேண்டும்

மகரம்

கணவருக்கும் (அ) மனைவிக்கும்  உங்களுக்கும் கொஞ்ச நாளாய் ஃபைட்டிங் ஃபைட்டிங் இருந்துக்கிட்டிருக்குமே. விட்டுக் கொடுத்துடுங்களேன்.  மற்றவர்களிடம் கல்கண்டு மாதிரிப் பேசி நல்ல பெயர் எடுக்கறீங்கல்ல? வீட்டில் மட்டும் ஏன் வேற மாதிரி டென்ஷன் முகத்தைக் காட்டிக்கிட்டிருக்கீங்க? குடும்பத்தில் உள்ள சமவெளிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீங்க. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீங்க. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்து மற்றவர்களின் பிரமிப்புக்கு ஆளாவீங்க.

கும்பம்

இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீங்க. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அழகும் இளமையும் கூடும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பாங்க. திடீர் திருப்பம் ஏற்படும். தினமும் வேலைபார்க்கும் இடத்தைப் பற்றி வீட்டில் வந்து புலம்பறீங்க. ஆனால் இது போல் ஒரு அலுவலகம் கிடைக்குமா? சில சமயங்கள் ஒரு வார்த்தை சொல்லதான் சொல்லுவாங்க. பாவம் உங்க தப்பு இல்லைதான், கார் வாங்கப் போறீங்க. அதுவும் அழகாய் உங்க விருப்பப்படியே அம்சமாய் அமையும். வீடு வாங்கவும் உகந்த சமயம் இதுதான்.  செலவு டென்ஷன் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் சந்தோஷம் மன நிறைவு எல்லாமும் கிடைக்கும்.

மீனம்

ஆரோக்யத்தைக் கெடுக்கும் பழக்க வழக்கங்கள் கூடாது. நிதி மற்றும் உத்யோகம் சம்பந்தமான பிரச்சினைகள் மெல்லத் தீர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாய் நிலைமை சரியாகிக் கொண்டே வரும். இதையெல்லாம் ஒரு பொருடடாய் நினைச்சுக் கவலைப்படாதீங்க. இதனால் தேவையற்ற பயமோ கவலையோ டென்ஷனோ ஏற்படலாம். அதற்கு அனுமதிக்காதீங்க. ப்ளீஸ். உணர்ச்சிவசப்படாம இருங்க. பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வாகன பழுது உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்படணுங்க. அதிரடி வேகத்தில் வந்து அலைக்கழித்த பிரச்சினைப் புயல் எல்லாம் நின்னாச்சு! பழசை நினைச்சும் புது கற்பனை செய்தும் உண்டாகும் கவலைகளையெல்லாம் தூக்கி டஸ்ட் பின்னில் போடுங்க. .

கார்ட்டூன் கேலரி