வார ராசிபலன்: 16.11.2018 முதல் 22.11.2018 வரை! வேதா கோபாலன்

மேஷம்

சிஸ்டர்ஸ் மற்றும் சகோதரர்கள் அனுசரணையா இருப்பாங்க. கட்லெட் சமூசாவுக்கெல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து மம்மி அல்லது மனைவி கையால் சாப்பிடுங்க. ஆரோக்யம் பிழைக்கும். படிப்பில் முழுக் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு ஓர் அருமையான உத்யோகம் கிடைக்க  வாய்ப்புள்ளது! வெளிநாட்டு உத்யோகத்தில் உங்களை உட்கார வைக்கப்போகிறது. காரணம்..வேறென்ன? உங்களின் நல்ல வேளைதான். அட.. அப்படிக் கிடைக்கலைன்னா கூட, உள்ளூரில்  இருக்கும் வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குழந்தைகள் மனதைக் குளிர்விப்பாங்க.. நல்ல வேளையாய், அறுவை சிகிச்சை தவிர்க்கப்படும். அரசாங்க நன்மைகளுக்கு இன்னுன் கொஞ்சமே கொஞ்ச காலம் காத்திருக்கணும். ப்ளீஸ்.

ரிஷபம்

திடீர் அதிருஷ்ட வாய்ப்புக்கள் உங்களைத் தேடி ஓடி வரும். குழந்தைகள் திடீர்ப் புகழ் அடைவாங்க. முன்பிருந்த அளவு வேலை பளு தோளை அழுத்தாது… அதற்காக ஒரேய டியாய்ப் பின்னால் சாய்ஞ்சுக்க முடியும்னு கனவு காணாதீங்கப்பா. உங்கள் ஜாதகப்படி நல்ல வேளை நடந்து கொண்டிருந்தால் அலுவலகத்தில் திடீர்னு உங்களைக்கூப்பிட்டு உயரத்தில் உட்கார வைப்பதற்கும் வாய்ப்புள்ளது. தந்தையின் வாழ்வில் திடீர் நிகழ்ச்சி ஒன்று நிகழும். அது  நல்ல நிகழ்ச்சியாகவே இருக்கும். எனவே நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருங்க. குழந்தைகள் வெற்றி பெற்று உங்களைப் பெருமிதம் கொள்ளச் செய்வாங்க. சகோதர சகோதரிகளுக்கு சிரமங்கள் வரக்கூடும். நீங்க உதவி செய்வதால் மீளுவாங்க.

மிதுனம்

விருது பரிசெல்லாம் உங்களுக்கு ஜுஜூபி. பரம்பரை வீடு நகை எல்லாம் உங்க முகவரியைத் தேடி ஓடி வரும்.. அட… குழந்தைங்கன்னு இருந்தால் கொஞ்சம் முன்னேபின்னே இருக்கத் தான் செய்வாங்க. சரிக்கு சமமாய் நின்று மல்லுக்கட்டாதீங்களேன். உங்க வயசென்ன அவங்க வயசென்ன! நல்ல முறைல பேசி வழிக்குக்கொண்டு வாங்க. இப்போதைக்கு அவங்க ளுக்கும் பிற்காலத்தில் உங்களுக்கும் அதுதான் நல்லது. ஆமா…ஆச்சர்ய மிகுதியில்தான் கேட்கறேன்…அதெப்பிடிங்க நீங்க கடன்களை இத்தனை சீக்கிரம் அடைச்சு முடிச்சீங்க! கிரேட். அலுவலகம் பற்றி மனதில் அலையடித்துக் கொண்டிருந்த டென்ஷன்கள் டாட்டா பை பை சொல்லிட்டுக் கிளம்பிடும்.

கடகம்

குழந்தைகளின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டு அவர்களுக்கு நன்மையும் பாராட்டும் கிடைக்கும். இத்தனை காலம் கல்வியில்  நாட்டமின்றி இருந்த குழந்தைகள் திடீரென்று ஆர்வம் வரப்பெற்று நல்ல முறையில் படித்து உயர்ந்து உங்களுக்கு நிம்மதி அளிப்பார்கள். உத்யோகத்தில் நல்ல முறையில் முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பல காலம் முடங்கியிருந்த வியாபாரம் சோம்பல் முறிச்சு எழுந்து சந்தோஷ நடனத்துக்குத் தயாராய் இருக்கு. நீங்களும் அதற்கு சரியாய் ஈடு கொடுக்கணும். குடும்பத்தில் திடீர் சுப நிகழ்வுகள் நிகழும். சனி பார்வை ராசிக்கு இருப்பதால் எதிலும் சிறு தடங்கல்களும் தாமதங்களும் இருந்தாலும்  தடைகளைத் தாண்டி வெற்றி கிடைக்கும். மனசில் தூய்மையான சிந்தனைகள் உருவாகும். நல்ல செயல்களைச்  செய்வதோடு புண்ணியமும் தேடிப்பீங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 15 முதல் 18 வரை

சிம்மம்

குட் நியூஸ்ங்க..  மாணவர்களுக்கு வெற்றி.ஆறாம் இப்போதுள்ள நிலைமையில் நண்பர்கள் அல்லாதவர்களை நண்பர்கள் என்று நம்பிவிட வேண்டாம். பொதுவாகவும்… உங்களாலும்…தாயாருக்கு நன்மை ஏற்படும். கல்வியில் மேன்மை ஏற்படும். கையெழுத்துப் போடுவதற்கு முன் பேனாவை சரிபார்ப்பதைவிட உங்க தீர்மானத்தை சரிபாருங்க. ஜாதகப்படி நல்ல வேளையா என்று பார்த்தால் மட்டும் போதாதுங்க.  நீங்கள் எந்த ஒப்பந்ததத்தில் கையெ ழுத்துப் போடறீங்களோ, அந்தத் துறையில் யார் தலை சிறந்தவங்க என்று கண்டுபிடித்து அவங்க அட்வைஸைக் கண்டிப்பா கேட்டுக்குங்க. வெளிநாட்டில் உள்ள நண்பர்கள், அல்லது உறவினர்களால் ஒரு புறம் நன்மை என்றாலும் மறுபுறம் சில சின்னஞ்சிறு செலவுகள் இருக்கலாம்.         

சந்திராஷ்டமம் : நவம்பர் 18 முதல் 20 வரை

கன்னி

குழந்தைகள் பற்றிய சிறு  டென்ஷன்கள் ஏற்பட்டாலும்  அவை எல்லாமே தற்காலிக மானவைதான்.  குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும்.  கணவருக்கு/ மனைவிக்கு நன்மை உண்டு.  கல்வியில் மிகவும் சிறந்த விளங்கப் போறீங்க. உங்க உடன் பிறந்தவங்களுக்கும் உங்களால் உதவிகள் உண்டுங்க. . கம் ஆன்… சுறுசுறுப்பாய்த் தயாராகுங்க.. சின்னப் பயணம் முதல் பெரிய பயணம் வரை மாற்றி மாற்றி இருக்கும். ஒவ்வென்றும் லாபம் அருளும். நிலம் வீடுன்னு வாங்குவீங்க. எதையும் பல முறை யோசிச்சு செய்யுங்க. வர வேண்டிய தொகைகள் அப்படி இப்படி ஆட்டம் காட்டும். பிறகு கிடைக்கும். வங்கிக் கணக்கில் இலக்கங்கள் சேரும். வெளிநாட்டுப் பயணம் கொஞ்சம் தட்டிப் போயிக்கிட்டிருந்தது. இனி உறுதியாயிடும்.  

சந்திராஷ்டமம் : நவம்பர் 20 முதல் 22 வரை

துலாம்

வாகனம் வாங்குவீர்கள். அது நன்மையையும் லாபத்தையும் அளிக்கும். மம்மிக்கு எல்லாமே சற்று தாமதமா நடக்கலாம். லேட்டா வந்தாலும்….னு ஒரு வசனம் இருக்கே,, ஆங்.. அதே தான். விடாதீங்க மம்மியை. நிறையப் பணம் வரப்போகுது. ஜாலிதான். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி உண்டு. ஆரோக்யம் பற்றி இருந்து வந்த பயமெல்லாம் போயே போச். பயணத்துக்கு ரெடியாயிருக்கீங்களா? இல்லாட்டியும் யார் விட்டாங்க! போய்த்தான் ஆகணும். டோன்ட் ஒர்ரி. அந்தப் பயணம் எவ்ளோ நன்மைகளை உங்களுக்குத் தரப்போகுது தெரியுமா? அதிகம் உழைக்க வேண்டி வரும். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற உணர்வு  ஏற்படும்.  உண்மையில் அப்படியெல்லாம் இல்லீங்க. சரியாத்தான் இருக்கு.

விருச்சிகம்

சகோதரிகளால் நன்மை உண்டு. உங்க கணவருக்கு எதிர்பாராத தொகை ஒன்று கிடைக்கும். அல்லது அவருக்கு அலுவலகத்தில் அரியர்ஸ் கிடைக்கக்கூடும். ஏன்… பதவி அல்லது சம்பளம் உயரவும் வாய்ப்பு உள்ளது. அதிருஷ்டமும் அரசாங்க நன்மையும் ஒருங்கே கிடைக்கும். தந்தைக்கு அனைத்து வகை நன்மைகளும் கிடைக்கும். அவரால் உங்களுக்கும் நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் ஹாப்பீ செய்திகளெல்லாம் நிறைய உண்டுங்க… உங்களுடைய நியாயத்தை மற்றவர்கள் புரிஞ்சுக்கலைன்னு புலம்பறீங் களே… புரிய வெச்சீங்களா? இல்லாக்காட்டி அவங்களோட நியாயத்தையாவது நீங்க புரிஞ்சுக்கிட்டீங்களா? அட அட்லீஸ்ட் அதுக்கு முயற்சி செய்தீங்களா?  டாடிக்கும் உங்களுக்கும் யுத்தம் வராமல் பார்த்துக்குங்க.

தனுசு

ஏழரைச் சனி இருப்பதால் முன்னேற்றமும் சற்று நிதானமாகவே இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். உடல் நிலையை நன்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வாக்குப் பலிதம் அதிகமாகும். தவிர புத்திசாலித்தனமான வகையில் பேசி மற்றவர்களின் மதிப்பான பார்வைக்கு ஆளாவீங்க. கல்லூரியில்/ பள்ளியில் படிக்கறீங்களா? ஐ மீன்… மாணவி? மம்மியை டீ போட்டுக் கொடுக்கச் சொல்லி கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவாகப் படியுங்க. பலன் மிக அதிகம் கிடைக்கும். சகோதர சகோதரிகைளை அனுசரிச்சுப் போங்க. படிப்புக்காகவும், ஆடை அணிமணிகளுக்காகவும் செலவு செய்வீர்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டுக்குப் போய் சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு நூறு சதவீதம் ஆரோக்யம் மீளும்.

மகரம்

சின்னச் சின்னதாய் எறும்புக்கடி மாதிரி ஆரோக்யம் கடிக்கும். கண்டுக்காதீங்க. அது பாட்டுக்கு அதுன்னு எடுத்து பின் சீட்ல போட்டுவிட்டு அலட்சியமா முன் நோக்கி ஓட்டுங்க அண்ட் ஓடுங்க. திடீர் அதிருஷ்டமும் திடீர் லாபமும் இருக்கும். அழகிய வீடுவாங்க வாய்ப்புகள் அதிகம்.  அல்லது உங்கள் தாயார் வீடு வாங்கவும் வாய்ப்புள்ளது. கிரவுண்ட் / ஃப்ளாட்டுக்குப் பத்திரம் பதியப் போறீங்கம்மா. கனவுகளெல்லாம் நினைவாகும் என்ற வாக்கியத்தை சினிமாவிலும் சீரியலிலும்தானே கேட்ருக்கீங்க, இப்ப அனுபவத்தில் பாருங்க. விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று குடும்பம் குதூகலிப்பதுடன் புதுப்புது சாதனைகளும், ஒப்பந்தங்களும் உங்களை மிகவும் நிம்மதியுமி சந்தோஷமும் கொள்ள வைக்கும்.

கும்பம்

நீங்கள் கலை சம்பந்தமான புதிய வகுப்புகளில் சேர வாய்ப்புள்ளது. புது வாகனங்கள் அமையும். அவை காண்போரைக் கவரும் அழகிய வாகனமாக இருக்கும்.உத்யோகத்தில் பொறுப்பும் அக்கறையும் கவனமும் தேவை. இயந்திரங்களை இயக்கும் போது மனசை உலாப்போக விடாதீங்க. தாய் உங்களுக்கு நன்மைகளை அள்ளி வழங்குவார். தங்க நகை  கூடப் பரிசளிக்கலாம்! கல்வியில் அசத்துவீர்கள். புது வண்டி வாங்குவீர்கள். அல்லது தற்போதுள்ள வாகனத்துக்குப் புதுப் பொலிவு கிடைக்கும். சில காலம் முன்பிருந்த பண ஓட்டம் இப்போது இல்லை என்னும்படியாக ஒரு பிரமை ஏற்படும். பொறுங்க. நிறைவான வாழ்க்கை அதிக தொலைவில் இல்லைங்க. அப்போ கேட்டதெல்லாம் கிடைக்கும். நினைத்ததெல்லாம் நடக்கும்.

மீனம்

திடீர்னு முகவரி மாறவும் வாய்ப்புள்ளது. அது வீடாகவும் இருக்கலாம், ஆபீசாகவும் இருக்கலாம். எதுவும் நன்மைக்குத்தான். குடும்ப நிகழ்வுகளில் சற்று மெதுவான போக்கு இருக்கலாம். அதைக்  கண்டு பயம் எதுவும் வேண்டாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலக /சொந்த விஷயமாகவும் வெளியூர் வெளிநாடு என்று போக வாய்ப்பு உள்ளது. பெட்டி, படுக்கை, ஃப்ளாஸ்க் எல்லாவறையும் ரெடியா வெச்சுக்குங்க. கவர்ச்சிகரமாகப் பேசி நன்மை அடைவீர்கள். மறுபுறம் பேச்சினால் இதனால் தேவையற்ற பயமோ கவலையோ டென்ஷனோ ஏற்படலாம். அதற்கு அனுமதிக்க வேண்டாம். அநாவசிய கோபம்  ஏற்படாமலும் நீங்கள் மற்றவர்களைப் பார்த்து சத்தம்  போடாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Patrikai weekly Rasi palan   16.11.2018 to 22.11.2018, வார ராசிபலன்: 16.11.2018முதல் 22.11.2018 வரை! வேதா கோபாலன்
-=-