வார ராசிபலன்: 17.01.2020 முதல்  23.01.2020வரை! வேதா கோபாலன்

மேஷம்   

பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகத்தில் உங்க திறமைகளை வெளிப்படுத்துவீங்க. புதுப்புது வாய்ப்புகள் தேடி வரும். வாழ்வில் முன்னேறப் பலர் உதவுவாங்க. மதிப்பிற்குரிய பெரிய மனிதர்களின் நட்பும் உறவும் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற் கேற்ற ஊதியம் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீங்க. பிசினஸ் முன்னேற்ற முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பல காலமாய் நீங்கள் வராத என்று கைவிட்ட பணம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதே போல நீங்கள் கொடுக்க வேண்டிய கடன் பாக்கிகளைக் கொடுத்து முடிப்பீங்க. வார மத்தியில் அனைத்துச் செயல்பாடு களிலும் கவனமாய் இருங்க.

சந்திராஷ்டமம் : ஜனவரி 19 முதல் ஜனவரி 21 வரை

ரிஷபம்

எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.உற்சாகமும், எடுத்த காரியத்தில் ஈடுபாடும் அதிகரிக்கும்.  குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். குறிப்பாக மகனுக்கோ, மகளுக்கோ திருமணம், சீமந்தம் போன்றவை நிகழும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். சில காலத்துக்கு முன்னாடி அவங்க மேல சந்தேகம் வந்தது அல்லவா? அது தீரும்.  அலுவலகவாசிகளுக்குத் தத்தம்  திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல வேளையாய் அந்த வாய்ப்பையும் பொறுப்பையும் சூப்பராய் நிறைவேற்றி, மேலிடத்தில் நல்ல பெயர் எடுப்பீங்க. ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். ஜாலியா இருக்கும். வார இறுதியில் எந்தப் பிரச்சினையும் வராதபடி கவனமாய் இருங்க.

சந்திராஷ்டமம் : ஜனவரி 21 முதல் ஜனவரி 24 வரை

மிதுனம்

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். ஆனாலும் அது வந்த வேகத்தில் சரியாகி நிம்மதியளிக்கும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். கவனமாய் இருப்பவர்களுக்கு அதுவும் வராது. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பின் சரியாகும். சிகிச்சைக்கு சற்று அதிக செலவானாலும் இவ்வாரம் நிறைய வரும்படி வரும் என்பதால் கவலை வேணாங்க. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்ற வாய்ப்பிருப்பதால் அதை அவாய்ட் செய்யப்பாருங்க. சிந்தித்து செயல்படுவதன் மூலமும், முறையாகத் திட்டமிடுவதன்மூலமும் பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கலாம். வீட்டிலும், வேலை பார்க்கும் இடத்திலும், குடியிருப்புகளிலும், உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்

அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆனால் மனசில் கவலை இருக்காது. பிள்ளைகள் பற்றிய மருத்துவ செலவுகள் வரலாம். வருமானம் நல்லபடியாக இருப்பதால் செலவுகளை சமாளிச்சுடுவீங்க. சிலருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரலாம்.  சமாளிச்சுடுவீங்க. சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகலாம். ஆனால் கட்டாயம் கிடைச்சுடும். வேலை பார்த்து வரும் இடங்களில் சக பணியாளர்களால் தொந்தரவு இருந்து கொண்டு தான் இருக்கும். வீண் விவாதங்கள் வேண்டாம். யார் என்ன சொன்னாலும் கண்டுக்காதீங்க. குடும்ப வருமானம் திருப்திகரமாக இருக்கும். எனவே செலவுகள் அனைத்தும் கட்டுக்கடங்கியிருக்கும். அது பற்றிய பயம் எதுவும் வேணாங்க. சிலருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்.

சிம்மம்

மூத்த சகோதரர்களுடன் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை வளர்த்தாமல் பணிஞ்சு போங்க. அந்தப் பிரச்சினை இந்த வாரத்தோடு சரியாயிடுங்க. பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனங்களை வாங்க நீங்கள் போட்டிருக்கும் திட்டம் நல்லபடியா நிறைவேறும். பெண்களுக்கு மனசில் உற்சாகம் கரைபுரண்டோடும். நீங்க நினைச்ச விஷயங்கள் எல்லாமே நிறைவேறும். எத்தனைக்கெத்தனை பயந்தீங்களோ  அத்தனைக்கத்தனை சந்தோஷமாய் நடந்து முடியும். மாணவர்கள் அண்ட் மாணவிங்க மேல்படிப்பைப் படிச்சு முடிப்பீங்க.  வேலை  தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் எதிர்பார்த்த சம்பளத்துடன் கிடைக்கும். டோன்ட் ஒர்ரி. முக்கிய முடிவுகளை தாராளமா எடுக்கலாமுங்க.  திருமணப் பேச்சு வார்த்தை  நல்லபடியா முடியும். ஹாப்பி?  

கன்னி

நீங்க எடுத்த முடிவுகள் சூப்பர் என்று அனைவராலும் புகழப் படுவீர்கள். சிலருக்கு வெளிநாடு போகும் கனவு நிறைவேறும். பிசினசில் உற்சாகமா ஈடுபடுவீங்க. எனவே அனைத்து விசயங்களும் நல்லபடியாவும், வெற்றிகரமாகவும் நடந்தேறும். சிலர் உங்களுக்கு பகைமை காட்டினாலும் நீங்கள் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள். சும்மா அலட்சியப்படுத்திவிட்டு, மேற்கொண்டு போய்க்கொண்டே இருப்பீங்க. அலுவலகவாசிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உடன் பணிபுரிபவரைக் கொஞ்சம் அனுசரிச்சு நடப்பது நல்லதுங்க.  நீங்க சில காலமாய் எதிர்பார்த்துக்கிட்டிருந்த வங்கிக் கடன் ஒரு வழியாய்க் கிடைச்சுடும். எனவே வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல் போன்றவற்றை வெற்றிகரமாய் செயல்படுத்தி ஹாப்பியாயிடுவீங்க.

துலாம்

பழைய பிரச்சினைங்க எல்லாம் ஒவ்வொண்ணாய்த் தீரும் என்பதால், இந்த வாரம் நிம்மதி பெருமூச்சுவிடும்படியாக இருக்கும். பொருளாதார நிலை நிம்மதி அளிக்கும் வகையில் இருக்கும். வீடு, நிலம் போன்றவை விற்காமல் பெரும் கஷ்டப் பட்டவர்கள் எல்லோருக்கும் பாடு தீர்ந்த ரிலீஃப் ஆவீங்க.  உடன் பிறந்தவர்கள் பற்றிய பிரச்சினைகள் அல்லது உடன் பிறந்தவர்களால் பிரச்சினை ஏற்பட்டிருந்தன அல்லவா? அவை எல்லாம் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடுவீங்க. தொழிலில் உள்ளவங்களும், வேலை பார்ப்பவங்களும் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் திறமை வெளிப்படுவதால், நல்ல பெயர் எடுப்பீங்க. உத்யோகத்தில் இருந்து வந்த டென்ஷன்ஸ்க்குத் தீர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு தள்ளிப் போவது போல் தோன்றினாலும் இந்த  வாரம் கிடைச்சுடும்.

விருச்சிகம்

குடும்பத்தில் பிள்ளைகள் விசயத்தில் ஓரிரு சிறுசிறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரலாமுங்க. அதனால் கணவன் – மனைவிக்கிடையேயும் சிறுசிறு  ஆர்க்யுமென்ட்கள் எழக்கூடும். பேசித் தீர்த்துக் கொள்வது நல்லதுங்க. உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்க வில்லையே என்ற ஆதங்கள் உங்கள் மனதில் ஏற்படாதபடி உங்களிடம் உள்ள குறைகள் என்ன என்று ஆராய்ந்து அறிந்து மாத்திக்கப் பாருங்க. கட்டாயம் சரியாகும்.  எந்தக் காரியத்தை ஆரம்பிக்கு முன்பு “இதனால் நமக்கு என்ன சாதக பாதகங்கள் நடக்கும்?” என்று நல்லா யோசிங்க. பிறகு செய்தால் பிரச்சினை ஆகாது. எதற்கும் அவசரப்படாமல்.. பரபரப்பாகாமல் செயல்படுங்க. பெண்கள் அலுவலகத்திற்கு சென்று வரும் போது கவனமாக இருக்கம்மா.

தனுசு

அலுவலக விஷயங்களிலும் சரி, குடும்ப சூழ்நிலையிலும் சரி..ரொம்பவும் கவனமா இருங்க. அதிக உழைப்பு அல்லது வேலை காரணமாக அசதி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் வார இறுதியில் உங்க முயற்சியால் சிரமங்களையெல்லாம் கடந்து நிம்மதி பெறுவீங்க. மாணவர்களுக்கு படிப்பில் மனம் லயிக்காமல் தவிக்க வாய்ப்பிருப்பதால் அதைக் கட்டாயம் அவாய்ட் செய்ய முயற்சிக்க வேண்டும். எளிமையான பாடங்களைக் கூட படிக்க மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும் எனவே நல்ல நண்பர்களைத் துணைக்குச் சேர்த்துக்குங்க.  இத்தனை கஷ்டங்களுக்கும் நடுவில் மாணவர்கள் ஜமாய்ச்சு நல்ல பெயர் எடுப்பீங்க. சோம்பலை மட்டும் தூக்கிப்போடுங்க. எதையும் கால தாமதம் செய்து தள்ளிப்போடாதீங்க.

மகரம்

வயதில் மூத்தவர்களைச் சந்திச்சு ஆசி பெறுவீங்க. என்டர்டெயின்மென்ட் ஒரு பக்கம், வேலைப் பளு ஒருபக்கம்னு சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் கலவையான மனநிலையில்தான் இந்த வாரம் இருப்பீங்க. நிறைய இடங்களுக்குப் பயணப்பட வேண்டியிருக்கும். சற்று களைப்பான வாரம்தான். என்ன செய்ய? வெற்றி தரப்போகும் பயணங்களாச்சே.  ஜமாயுங்க. மகன் / மகளுக்குத் திருமணம் ஆகும். அப்படிச் சமீபத்தில் கல்யாணமும் ஆகியிருந்தால்.. நீங்க தாத்தாவாக/ பாட்டியாகப் போற நேரம் வந்தாச்சு. சந்தோஷமாயிடுவீங்க.  வாகனம் வாங்க நினைச்சீங்க. பணம் தேத்தி வாங்கிடுவீங்க. மாணவர்கள் மன நிம்மதி அடையும் வகையில் வெற்றி காணுவீங்க. மம்மிக்கு இருந்து வந்த பிரச்சினைங்க எல்லாம் நல்லபடியா தீரும். அதுக்கு நீங்க பெரிய காரணமாயிருப்பீங்க. ஸோ.. அவங்க ஆசி கிடைக்கும்.

கும்பம்

உங்களுடைய சின்சியரான உழைபை மேலதிகாரிங்க கவனிப்பதால்,  பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். அல்லது கிடைக்கப்போவதற்கான தகவல் வரும். சிலர் வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்த வேறு ஒரு ஊரில் அல்லது நாட்டில் வசித்துக்கொண்டிருந்தால்.. அல்லது விசிட் செய்திருந்தால்..  இப்போ குடும்பத்தோடு சேர்ந்துடுவீங்க. குடும்பத்தைப் பொறுத்தவரை நல்ல ஹாப்பியான வாரம். அனைவரும் சேர்ந்து சுற்றுலா போவீங்க. குடும்பத்தில் அனைவருக்கும் தேவையானவற்றை நீங்க நிறைவேற்றுவீங்க என்தால்  அவங்க பாராட்டில்.. நெகிழ்ச்சியில் நீங்க மகிழ்ச்சி அடைவீங்க. விவசாயிகளுக்கு உற்பத்தி நல்லபடியா இருக்குமுங்க. வரும்படி திருப்தியாக இருக்கும்

மீனம்

லேடீஸ், குடும்பத்தில் ஒற்றுமை நிலவப் பாடுபடுவீங்க. அலுவலகத்தில் உங்களுடைய மேலதிகாரிங்க சிலரால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கப் போகுதுங்க. புதுசா நகை மற்றும் டிரஸ்  வாங்குவீங்க. குழந்தைகள் பற்றி இருந்து வந்த சிறுசிறு கவலைகள் காணாமல் போயே போச்சு. வாக்கில் இனிமை கூடும். தப்பாய்ப் பேசினால்கூட மன்னிப்புக் கேட்டு மக்களை வசப்படுத்திவிடுவீங்க. மேடையில் பேசிப் பாராட்டும், கை தட்டலும் வாங்குவீங்க. உத்யோகத்தில் நிறைய வாய்ப்புகளும் திருப்பங்களும் ஏற்படும். தந்தைக்கு திடீர் நன்மை ஏற்படும். பவழம் போன்றவை வாங்கவோ.. அவை உங்களுக்கு அன்பளிப்பாகக் கிடைக்கவோ நிறைய சான்ஸ் இருக்கு. கணவருடன்/ மனைவியுடன் சண்டை போடாதீங்க. அவங்க பக்கம்தான் நியாயம் இருக்கும். அப்புறம் நீங்க சாரி கேட்க/  அசடு வழிய வேண்டியிருக்கும். வார ஆரம்பத்தில் யாரோடும் வம்பு வேண்டாம்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 17 முதல் ஜனவரி 19 வரை

கார்ட்டூன் கேலரி