வார ராசிபலன் 17.08.2018 முதல் 23.08.2018 – வேதா கோபாலன்

வார ராசிபலன் – வேதா கோபாலன்

மேஷம்

மாணவர்களுக்கு என்னதான் தடைகளும், தாமதங்களும், சின்னச்சின்ன இக்கட்டுக்களும் இருந்தாலும் படிப்பில் தலைநிமிர்ந்து ஜமாய்ச்சுடுவீங்க. வெளிநாட்டு யூனிவர்சிட்டிகளில் சேர விண்ணப்பித்திருந்தவர்களுக்கு லட்டு லட்டாய் கேட்டபடி சீட் கிடைத்து மகிழ்ச்சியிளிக்கும். அம்மாவின் புத்திசாலித்தனமான தீர்மானம் காரணமாக அவங்களுக்கு மட்டுமில்லீங்க.. உங்களுக்கும் நன்மை கிடைக்கும். வாகனங்கள் சற்றுத் தொல்லையும் செலவும் கொடுக்க வாய்ப்பிருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. கணவருக்கு/ மனைவிக்கு நன்மையும் லாபமும் உண்டுங்க.

சந்திராஷ்டமம் :18.08.2018 முதல் 20.08.2018 வரை

ரிஷபம்

சமீபத்தில் உங்களைப் பாடாய்ப்படுத்திய ஆரோக்கியப் பிரச்சினை..  குறிப்பாக சரும நோய் இப்போது முற்றிலும் குணமாகி உடம்பும் மனசும் நிம்மதியடைஞ்சிருக்கும். அலுவலகத்தில் எது பற்றியெல்லாம் டென்ஷன் ஆனீங்களோ அதெல்லாம் ஜுஜூபியாய்க் கரைந்து “அட இதுக்கா கவலைப்பட்டேன்.. சே” என்று நீங்களே உங்களைக் கண்ணாடியில் பார்த்து கேலி செய்யும் அளவுக்கு ‘நத்திங்’ என்றாகியிருக்கும். குழந்தைகளால் ஏற்படும் டென்ஷன்களை அளவுக்கதிகமா மண்டையில் ஏத்திக்காதீங்க. சரியாகும். பெற்றோரிடமிருந்து மகிழ்ச்சியளிக்கும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கும்.

சந்திராஷ்டமம் :20.08.2018 முதல் 23.08.2018 வரை

மிதுனம்

ஆரோக்யம் முன்னே பின்னே இருந்தாலும் பெரிய அளவில் மனசைப்போட்டு உழப்பிக்கொள்ளும்படி உங்க தினசரி வேலையை பாதிக்காதுங்க. சகோதர சகோதரிகளுக்கு கவர்மென்ட் உத்யோகம் கிடைக்கும். அல்லது குறைந்தபட்சம் அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் ஒரு வகையில் நிம்மதியாவது கிடைக்கும். தந்தைக்கு மிகுந்த நன்மைகள் ஏற்படப்போகுதுங்க. அவருக்கு மட்டுமின்றி உங்களுக்கும் வருமானம் உயரும். குழந்தைங்க வாழ்வில் மகிழ்ச்சியும் நன்மையும் சுப நிகழ்ச்சிகளும் உண்டு. மிகுந்த புத்திசாலித்தனமான பேச்சினால் ஒரு பக்கம் பெரிய நன்மைகள் உண்டு. அவசரப்பட்ட சாபம் இடுவதால் மறுபுறம் பிரச்சினைகளும் ஏற்படும். எனவே கவனமா இருங்க.

கடகம்

கணவருக்கும் உங்களுக்கு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாயே திறக்காதீங்க. பதிலும் பேசாதீங்க. அதற்கும் திட்டு விழுந்தால் அதையும் கண்டுக்காதீங்க. குடும்பத்தில் யாருக்கேனும் அரசாங்க சம்பந்தமான நன்மைகள் உண்டாகும். தந்தைவழி உறவினர்களைச் சந்தித்து ஜாலியாப் பேசுவீங்க. அதற்கேற்றாற்போல் திருமணம் போன்ற விழாக்கள் கூடி வரும். தெய்வ சம்பந்தமான விஷயங்களைக் குடும்பத்துடன் நிறைவேற்றுவீங்க.  எல்லோருமாய்ச் சேர்ந்து கோயில் குளம் என்று செல்வீங்க. குறிப்பாய்க் குலதெய்வத்தைக் கும்பிட்டு வர வாய்ப்பு உண்டு.

சிம்மம்

கணவரின் தந்தை வழி உறவினரைச் சந்தித்து மகிழ்வீங்க. அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு அல்லது நிலம் வாங்குவதற்குச் செலவு செய்வீங்க. அந்த செலவுகள் நிம்மதியும் சந்தோஷமும் அளிக்கும். சகோதர சகோதரிகளுக்கு அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு, சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நல்ல விதமான செலவுகள் உண்டு. கல்விக்கு.. வெளிநாட்டுப் பயணத்துக்கு என்று செலவுகள் ஏற்படும். (வெளிநாட்டில் கல்வி கற்பதற்கும் செலவு செய்வீர்களாயிருக்கும்.) காதலில் ஈடுபட்டிருப்பவர்கள் கொஞ்சகாலம் பொறுத்துக்குங்க. முதலில் அது இரண்டு பக்கமும் உண்மையான காதல்தானா என்று உறுதி செய்துக்குங்கப்பா.

கன்னி

கணவன் மனைவிக்குள் அருமையான ஒற்றுமை  நிலவும். அட நாமா இத்தனை காலம் அப்படி  எதிர் அணிகளில் சண்டைபோட்டோம் என்று இருவருமே வெட்கப்படுவீங்க. விதம் விதமான லாபங்களும் வருமானமும் வரும். புத்தகம், பிரசுரம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் வரும். மருத்துவர்களுக்கும் கட்டுமானத் துறையில் உள்ளவங்களுக்கும் நன்மை உண்டு. வருமானம் உண்டு. லாபமும்தான். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் சுபிட்சமும் மட்டுமில்லீங்க… சுப நிகழ்ச்சிகளும் உண்டு.

துலாம்

குடும்பத்துல கொஞ்சம் கசமுச இருக்கும். அது சண்டையாகாமல் நீங்கதாங்க பார்த்துக்கணும். குறிப்பா சகோதர சகோதரிங்களோட ஈகோ பிரச்சனை வரலாம். ‘நீ உசத்தியா நான் உசத்தியா?’ என்ற அளவுக்கு வாக்குவாதம் போகாமல் பார்த்துக்குங்க. அரசாங்க வகைகளில் உங்களுங்கு எதிர்பாராத நன்மைகள் உண்டுங்க. தந்தை வழிப்பாட்டனார் சொத்துக்கிடைக்க வாய்ப்பிருக்கு.  வழக்குகள் ரொம்ப நாட்களாக இழுத்துப்பிடிச்சுக்கிட்டு இருந்ததா. டோன்ட் ஒர்ரி. அது ஒரு முடிவுக்கு வரும். அம்மாவின் ஆரோக்யத்தை கவனமாப் பார்த்துக்குங்க. என்னதான் தற்காலிகப் பிரச்சினை என்றாலும் அம்மா விஷயத்தில் நீங்க டென்ஷன் பார்ட்டியாச்சே!

விருச்சிகம்

எந்தப் பெரிய முடிவுகள் எடுப்பதானாலும், யாரிடம் என்ன பேசுவதானாலும் சற்று அதிகக் கவனத்துடன்தான் பேசவும் செயல்படவும் வேண்டும் என்பதை எப்போதும் மறக்காதீங்க. செலவுகள் பற்றி என்றைக்கும் கவலை வேண்டாம். திருமணம் நிச்சயமாவதற்கான வேளை வந்துவிட்டது. எனவே கவலைகளை மூட்டைகட்டி வையுங்க. பொதுவாகவே யாரைப்பற்றியும் யாரிடமும் எதுவும் பேச வேண்டாம். எது பேசினாலும் பிரச்சினையாகிறது என்று பிற்பாடு புலம்பவும் வேண்டாம். சினிமா அல்லது நாடகம் போன்ற கலைத்துறையில் உள்ளவங்களுக்கும் நடனம் நாட்டியம் ஓவியம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் லாபமும் நன்மையும் புதிய ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும்.

தனுசு

விருதுகள் கிடைக்கும். கலைத்துறை சார்ந்த நிறுவனங்களில் வேலை கிடைக்கும். சின்னச்சின்ன ஆரோக்யக் குறைபாடுகள் இருந்தாலும் எல்லாம் சாதாரண மருந்துகளாலேயே குணமாகும். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதீங்க. முன்பு கொடுத்திருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். அவசரப்பட்டுப் பேசவோ சாபங்கள் கொடுக்கவோ வேண்டாம். பிறகு நீங்களே அதுகுறித்து வருத்தப்பட நேரிடக்கூடும். தாயாருக்குப் புகழும், பெருமையும் பாராட்டும் கிடைக்கும். மாணவர்களுக்குக் கைதட்டல் கிடைக்கும்.

மகரம்

இப்போதைக்கு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை. பழகும் மனிதர்களை நன்கு ஆராய்ந்து நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். சற்று அவசரமான போக்கின் காரணமாக ஏதாவது செயல்கள் செய்து மாட்டிக்கொண்டு விழிக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாத அளவுக்குப் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உடலில் ஏற்பட்டாலும் அவை நல்லபடியாக குணமாகும். பல காலம் சந்திக்காத குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாட வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்

நண்பர்கள் விஷயத்தில் சற்றே கவனமாக இருந்துவிட்டால் எது பற்றியும்  இப்போதைக்கு நீங்க கவலையே பட வேண்டாங்க. குழந்தைகளால் அல்லது குழந்தைகள் பற்றிய டென்ஷன்கள் உடனுக்குடன் தீரும். அவங்க படிப்பு பற்றி எந்த விதக் கவலையும் வேணாம். கோயில் பயணங்கள் சுவாரஸ்யமாகவும் பயன்மிக்கதாகவும் அமையும். மனைவிக்கு/ கணவருக்கு அவரது தாய் மற்றும் தந்தை வழியில் நன்மைகள் / சொத்துகள் வரும். உறவினர் விஷயத்தில் சற்று ஒதுங்கியிருக்க நினைப்பீர்கள். எனினும் ரொம்பவும் ஒதுங்க வேண்டாமே. நமக்கு மனிதர்களின் உறவும் நட்பும் என்றைக்கும் அவசியம் வேண்டுமல்லவா?

மீனம்

தேவையற்ற பயங்களைத் தூக்கி டஸ்ட் பின்னில் போடுங்க. உங்களை யாரும் எதுவும் செய்துவிட மாட்டாங்க/ முடியாது. குழந்தைகள் பற்றி ஏற்பட்டிருந்த டென்ஷன்கள் இதே உடனே  தீரும். கணவன் மனைவிக்குள் அருமையான ஒற்றுமை நிலவும். குடும்ப சூழலில் சந்தோஷமும் குதூகலமும் நிறைந்திருக்கும். உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். செல்வாக்குக்கூடுவதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதற்காகவும் மத்தியஸ்த்தம் செய்து வைக்குமாறும் பலர் உங்களை அணுகுவார்கள். சுபமான நன்மைகள் பலருக்கு ஏற்பட நீங்கள் காரணமாவீர்கள். நண்பர்கள் விஷயத்தில் பயம்  இருக்கும். ஆனால் யாராலும் ஆபத்து விளையாது. தைரியமாக இருங்க.

சந்திராஷ்டமம் :16.08.2018 முதல் 18.08.2018 வரை

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Patrikai weekly Rasi palan   17.08.2018  to 23.08.2018 – Vedha Gopalan, வார ராசிபலன் 17.08.2018 முதல் 23.08.2018 – வேதா கோபாலன்
-=-