வார ராசிபலன்: 19.07.2019 முதல் 25.07.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்  

வாயைத் திறக்க நேர்ந்தால் நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்க.   அதர்வைஸ் வாயை லாக் பண்ணிக்ககறது பெட்டர். கலைத் துறையில் உள்ளவர்கள் மேலும் அதிக வெற்றிகளை சுவைக்கப் போறீங்க.  நம்பிக்கையைக் கைவிடாதீங்க. ஒவ்வொரு அடியையும் கவனமாய் எடுத்து வைக்க வேண்டிய சமயம் இது.வீடு வாங்கறது, கம்பெனி மாறுதல், மோதிரம் மாற்றுதல் அல்லது தாலி கட்டுதல் ….அதது தானாக நடக்கட்டும். அதாவது ஃபேமிலியில் சுப நிகழ்ச்சி. அதிருஷ்டத் திருமகள் ஃப்ளைட் பிடிச்சு வரப்போறா. ஆனா எல்லாமே கொஞ்சம் நிதானப்போக்கில்தான் இருக்கும். உங்கள் மனசு பறக்கும் வேகத்துக்கு அதெல்லாம் ஈடு கொடுக்கணும்னு எதிர்பார்க்காதீங்க

 ரிஷபம்

கஷ்டங்களுக்குப் பெரிய டாட்டா காட்டியிருப்பீங்க. உத்யோகத்தில் சவால் மயமான போக்கு இருக்கத்தான் தெரியும். நீங்கதான் எத்தனை பெரிய சமுத்திரத்திலும் டைவ் அடிச்சு ஸ்விம் செய்யறவங்களாச்சே. பாஸ் மூக்கின் மேல் ஃபிங்கர் வைச்சு வியப்பாரு. ஆனால் அதை யெல்லாம் நேரடியா உங்ககிட்ட சொல்ல மாட்டாரு. எனினும் நம்பிக்கையோடு இருங்கப்பா. குழந்தைகளுக்காக நிறையக் கவலைப் பட்டீங்க…வேதனைப் பட்டீங்க. எல்லாமும் சரியாகிவிடும். அலுவலகத்தில் அமோக விளைச்சல் உண்டு. ஷார்ட்டாய்ச் செல்வதானால் எதிர்பாரத நன்மைகளை எதிர்பார்க்கலாம் நீங்க. வேறு வேலைமாறத் திட்டமிட்டிருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தைக் கொஞ்ச காலத்துக்கு ஒத்திப்போடுங்க.

மிதுனம்

உழைப்புக்கு வெற்றி உண்டு. ஆனால் உழைத்தால் மட்டுமே வெற்றிங்க. லக் அது இதுன்னு எதாவது வந்து முன்னாடி நிற்கும்னு கனவில்கூடப் பார்க்க வேண்டாம். கற்பனையில்கூட நினைக்க வேண்டாம். ஓகே? முன்பு வேலை விஷயமாக நிறைய அலைய வேண்டியிருந்தது.  அலுவலக டூர்கள் நிறைய இருந்தனதானே? இனி நிரந்தரமாக ஓரிடத்தில் இருந்து வேலை செய்வீங்க. இப்படிச் சிலகாலம் ஓடும். ஆபீஸ், வீடு, பள்ளிக்கூடம், கல்லூரி என்று உங்கள் சம்பந்தப்பட்ட இடம் எதுவானாலும் அதில் நீங்கள் பொறுப்பை வெற்றிகரமாக நிறை வேற்றிப் பாராட்டுப் பெறுவீங்க. குறிப்பாய்த் தலைமைப்பொறுப்பில் உள்ளவங்க சற்று அதிகம் உழைச்சாலும் அதன் ரிசல்ட் சூப்பரா இருக்குமுங்க.

கடகம்

குழந்தைகளால் சின்னச் சின்ன டென்ஷன்கள் இருக்கத்தான் செய்யும். உடனே ‘கடவுளே. கண் இருக்கா? ஸ்பெக்ஸ் போட்டுக்கோ.’ அது இதுன்னு ஆரம்பிச்சுடாதீங்க.  வரக்கூடிய பிரச்சினை எதுவானாலும் உடனுக்குடன் சரியாயிடும். தம் கட்டி இழுத்துப் பிடிச்சு நிலைக்கு வந்துட்டீங்க. பாவம் இதற்கு எவ்ளோ பாடுபட்டீங்க. அப்பாவுக்குக் கொஞ்சம் உடல் நிலை சரியில்லாம ஆகும். ஆனால் தகுந்த கவனிப்பின்பேரில் சரியாகும். பெரிய முயற்சிகளில்  சறுக்கலைச் சந்திச்சுக்கிட்டே இருந்தீங்களே…  இனி வெற்றிக்கொடிதான் போங்க.. உங்க பொறுமைக்கு சாமி எவ்வளவு நல்ல பரிசு குடுத்தாரு பார்த்துக்குங்க. பக்தி அதிகரிக்கும். மகிழ்ச்சியான நிகழ்வுகள் புன்னகையை அகலமாக்கும்.

சந்திராஷ்டமம் :  ஜூலை 19 முதல் ஜூலை 21  வரை

சிம்மம்

அதென்ன வரவர உங்களுக்குத் தன்னம்பிக்கை என்கிற சமாசாரம் காணாமல் போயிக்கிட்டி ருக்கு? முகம் பார்க்கும் கண்ணாடி முன்னால் நின்னுக்கிட்டு ‘உன்னைப் போல் திறமைசாலி உலகத்தில் உண்டா’ன்னு புகழ்ந்து தள்ளுங்க.    அந்தக் கண்ணாடியில் உள்ளவரின் அருமை அப்பவாச்சும் தெரியுதா பார்ப்போம்.  குழந்தைகளுக்குப் படிப்பில் அல்லது உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டு.  அவங்களுக்காக சதா கவலைப்பட்டுக்கிட்டே இருந்தீங்களே.. இனி அது கணிசமாகக் குறையும். வீட்டில் சுப காரியங்களுக்கான அறிகுறி தென்படும். குறிப்பாய் மகனுக்கோ மகளுக்கோ நல்லது நடக்கவில்லை என்ற கவலை உங்களைப் பிடிச்சு ஆழ்த்தி யிருந்தால் கூடிய விரைவில் அது காணாமல் போவதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டுடுவாரு கடவுள்.

சந்திராஷ்டமம் :  ஜூலை 21 முதல் ஜூலை 24  வரை

கன்னி

தன்னம்பிக்கையை வளர்த்துக்  கொள்ள ஏதாவது கோர்ஸ் இருந்தால் அதில் நீங்க முதலில் ஃபீஸ கட்டி சேரணும்.  உங்க அருமை ஏன் உங்களுக்கே தெரியவில்லை என்பது எனக்கே புரியவில்லை. இளம் பெண்கள் மற்றும் பையன்களுக்கு ஒரு வாரத்தை. தயவு செய்து மனசை அலைபாயுதே கண்ணா என்று தடுமாற அனுமதிக்க வேண்டாம். உடல் நலம் நன்றாகவே இருக்கும்.  கற்பனைகள் வேண்டாம். அம்மா பற்றிக் கவலைகள் இருக்கலாம். அதற்கு என்ன தீர்வுன்னு யோசிக்கலாமே தவிரக் கவலைப்பட வேண்டாம். மாணவர்களே.. கல்வியில் உங்களை மேலும் மேம்படுத்திக் கொள்ளப்போறீங்க சில காலமாய் எதனாலோ படிப்பில் கவனம் செல்லாமல் இருந்தது. விரைவில் திடீர் முன்னேற்றம் உண்டு. காதல் விவகாரங்களில் கவனமாய் இருங்க. அவ்ளோதான் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்.

சந்திராஷ்டமம் :  ஜூலை 24 முதல் ஜூலை 26  வரை

துலாம்

இனி குட்டீஸ் விஷயத்தில் உங்கள் பயம் அநியாயமானது என்று புரிவதால்  நிம்மதியடை வீங்க, மகிழ்ச்சியடைவீங்க, பெருமைப்படுவீங்க. புது வேலை மாறியிருப்பீங்க அல்லது மாறப்போறீங்க. இல்லாட்டி இருக்கும் உத்யோகத்திலேயே சிறந்த பொறுப்பு அதிகரிக்கும். பயப்படாதீங்க. நல்லாவே நிறைவேற்றுவீங்க. வருமானம் அதிகரிக்கும். வீடு மாற வாய்ப்பு இருக்கு. அதாவது சொந்தவீடு வாங்கவும் சான்ஸ் அதிகமா இருக்கு. கங்கிராட்ஸ். புலம்பலை நிறுத்துங்க. உங்களால் முடியாமலா போகும். அப்புறம் அசடு வழிய வேண்டாம். இப்பவே நிம்மதியை அதிகரிச்சுக்குங்க. உங்க டாடிக்கு செல்வாக்கு பிளஸ் பிளஸ் ஆகும். உங்களுக்கு திடீர் அதிருஷ்டம் வரும்போது உங்க கிட்ட முன்னறிவிப்பெல்லாம் செய்துகிட்டிருக்காது. தடால்னு வந்துடும்.

விருச்சிகம்

வெளிநாட்டில் உள்ள நெருங்கிய உறவினர் சந்தோஷ செய்தி மட்டுமல்லாமல் பணமும்கூட அனுப்புவாங்க. அது உங்களுக்குச் சமயத்தில் உதவிகரமாய் இருக்கும். சிநேகிதர்கள் மற்றும் சிநேகிதிங்களுக்கு ஹெல்ப் செய்வீங்க. ஆனால் அந்த உதவிங்க எதுவும் ஒரு வழிப்பாதை இல்லை என்பதை நினைவு வெச்சுக்குங்க. பிகாஸ் நண்பர்கள் உதவி உங்களுக்கும் கிடைக் கும். உங்கள் உதவி உறவினர்களுக்கும் உண்டு. ஆனால் அதற்காக அவங்க கண்ணில் நீர் கசிய நன்றி சொல்லுவாங்க என்றெல்லாம் எதிர்பார்க்காதீங்க. அவங்களை அவங்க போக்கில் விடுங்க. உணர்வாங்க. டவுட்டே வேணாம். பேச்சுக்கு மட்டும் ஃபுல்ஸ்டாப் போட்டுடுங்க.

தனுசு

எடுத்த எடுப்பில் எல்லாமே வெற்றிகரமாய் முடியுதேன்னு சந்தோஷப்பட வேண்டிய வேளை இது. எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று கஷ்டங்கள் வந்தபோது புலம்பினீங்க. கூடிய சீக்கிரம் ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி’ என்று நல்ல விஷயங்களுக்கும் பிரமிக்கத்தான் செய்வீங்க.  திருமணம் அல்லது பிரசவம் காரணமாகக் குடும்பத்தில் ஒரு நபர் அதிகமாவார்.  ஆனால் அது பல டென்ஷன்களுக்குப் பிறகே நிம்மதி அளிக்கும். பரவாயில்லை. முடிவு சுபம்தான் சுபமேதான். உங்களுக்கு வழிகாட்டி போல் இருக்கும் ஒருவரால் நன்மைகள் அதிகரிக்கும். மம்மிக்கு உடம்பு  சரியில்லாமல் போனால் கலவரத்திலும் பதற்றத்திலும் தலையில் கைவெச்சு உட்கார வேண்டாம். இது தற்காலிக பிரச்சினைதான். அவங்களோட சண்டை வேண்டவே வேண்டாம்.

மகரம்

வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அதை வாங்கித்தந்த பெருமை உங்களின் உழைப்பையே சேரும்.  கொடுத்த பொறுப்பை ரொம்பவும் கவனமாய் நிறைவேற்றிட்டீங்க. இனி எல்லாம் சுபமே. கடந்த ஒன்றரை வருடங்களாக ஏதாவது ஒரு வகையில் சிறிய அல்லது பெரிய பிரச்சனையை அனுபவிச்சுக்கிட்டு இருந்த உங்களுக்கு நிம்மதி என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கே மறந்து போயிருந்தது. ஆனால் இனியோ.. குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவுவதால் நிம்மதியாக தூக்கம் வரும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் மறந்துடாதீங்க.  அவசியமில்லாமல் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசக்கூடாதுன்னா பேசவே கூடவே கூடாதுன்னு நினைவு வெச்சுக்குங்க. .

கும்பம்

டாடிக்குப் பதவி உயர்வு உங்களுக்குப் பாக்கெட் மனி உயர்வு எல்லாம் கிடைக்கும். வேறு வேலைமாறத் திட்டமிட்டிருந்தால்   சீக்கிரமாகக் கிளம்ப முடியுமான்னு பாருங்க. மேலும் அலுவகத்துக்காக உழையுங்க. நான் வேண்டாம்னா சொன்னேன்?  அதுக்காக உடல் நலத்தைப் பார்த்துக்க வேணாம்னு யாருங்க உங்களுக்குச்  சொன்னது? தயவு செய்து வேளா  வேளைக்குச் சாப்பிடுங்க. நண்பர்களைப் பகைச்சுக்க வேணாம். உதவுவாங்க. ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை!  பெற்றோருடன் மல்யுத்தம் குத்துச்சண்டைன்னு பயிற்சி செய்ய வேண்டாம். அவங்களை வணங்குங்க. அவங்க உங்களுக்காக என்னவெல்லாம் தியாகம் செய்யறாங்க என்பதை தயவு செய்து எண்ணிப்பாருங்க.

மீனம்

சில நண்பர்கள் உங்களை முக்கியமான நிகழ்ச்சிங்களுக்கு இன்வைட் செய்யலைன்னு மனசில் இருந்த வருத்தத்தையெல்லாம் தூக்கிச்சாப்பிடும் அளவுக்கு ஒரு எதிர்பாராத நபர் உங்களை மதிப்பாய் நடத்துவாரு. எனவே வருத்தங்கள் ‘போயே போச்’ என்று காணாமல் போயிடும். தொட்டிலுக்குத் தோரணம் கட்டி வையுங்க. குட்டி பாப்பா உங்க வீட்டுக்கு வரப்போகுது. சகோதர சகோதரிகளின் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும்.  அதில் மனப்பூர்வமாய்க் கலந்துக்குவீங்க. அவங்க கிட்ட உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். குழந்தைங்க வாழ்க்கையில் சந்தோஷத் திருப்பங்கள் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் உள்ளங்கால் தேயும் அளவுக்கு ஓடி ஓடி உழைப்பீங்க.  செல்வாக்கு கும்மென்று உயரும்.  எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்களுக்குப் புகழ் அதிகரிக்கும்.