வார ராசிபலன்: 20.12.2019  முதல் 26.12.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்

நீங்க எடுக்கும் புதிய முயற்சிகள், உங்களை ‘வின்’ பண்ண வைக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. சவால்கள், விவாதங்கள்.. போட்டிகள்.. ஆகிய சமாசாரங் களில் வெற்றி பெறுவீர்கள். காசு.. பணம். துட்டு.. மனி அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொந்தங்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். சமுதாயத்தில் மதிப்பு இன்கிரீஸ் ஆகும். ஆஃபீஸ்ல மிதிச்சவங்க எல்லாரும் மதிக்க ஆரம்பிப்பாங்க. எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். முயற்சி செய்து வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கை உறுதியா மனசுக்குள் உட்காரும். முயற்சி செய்வதற்கான உத்வேகமும் ஆர்வமும் வருங்க.  உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்திலும் … ரிலேட்டிவ்ஸ் மத்தியிலும் செல்வாக்கு கூடும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 23 முதல் டிசம்பர் 25 வரை

ரிஷபம்

வேற்று இனத்தவர்கள் உதவிகரமா இருப்பாங்க. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமை இருந்தபடி இருக்கும். அக்கா தங்கை அண்ணன் தம்பி என்று குடும்பத்தில் உள்ளவங்க ஒரு நாளைக்கு ஒரு மாதிரி நடந்துப்பாங்க. டோன்ட் ஒர்ரி. கண்டுக்காம போயிக்கிட்டே இருங்க. மனதில் காரணம் இல்லாமல் (தேவையும் இல்லாமல்)  பயம் இருக்கும். அதைத் தூக்கி டஸ்ட் பின்னில் போடுங்க.  முடிவு எடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். தப்புன்னு தெரிஞ்சா அந்த விஷயத்தைச் செய்யாதீங்க. உங்க வயிற்றில் பிறந்த பிள்ளைகள்/ பெண்கள் பிடிவாதமா இருப்பாங்க. பூர்வீக சொத்தைப் பெறுவதில் இவ்ளோ காலமா இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் நீங்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட்டுடவே போட்டுடாதீங்க.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 25 முதல் டிசம்பர் 27 வரை

மிதுனம்

வேலைச்சுமை அதிகமாக இருக்கும். இருந்துட்டுப் போகட்டுங்க. அதனால நல்ல பலன் இருந்தால் போதுமே. ஒரு நாளைக்கு ஒரு மாதிரி மனநிலையில் இருப்பீங்க. இவரைப் பற்றி  ஊகிக்கவே முடியலையே என்று எல்லாரும் குழம்புவாங்க. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். நெருக்கமான வர்களிடம் கூட குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வருவதற்கு சான்ஸ் இருக்குங்க. உங்களோட அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி, கிரகபிரவேசம் செய்வீங்க. கணவன் – மனைவிக்கிடையே நெருக்கமும் புரிதலும் அதிகமாகுங்க.  

கடகம்

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்க சான்ஸ் இருக்கு. குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீங்க. இனி கொஞ்ச காலத்துககு நீங்க போகக்கூடிய டூர்.. பயணம் பெரும்பாலும் ஆன்மிக அடிப்படையில் இருக்குமுங்க. உங்க பயணத்தில் உறவினர்களும் நண்பர்களும் ஜாயின் செய்துப்பாங்க. சிறு சிறு அவமானங்களும், விமர்சனங்களும், வீண்பழியும் இருந்தால் அதையெல்லாம் பெரிசா நினைச்சு டென்ஷன் ஆகாதீங்க. . கணவரின்/ மனைவியின் குற்றம், குறைகளை அடிக்கடி சொல்லிக் காட்டவேண்டாங்க. மம்மியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  சகோதரர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். ஆனா அவை உடனுக்குடன் தீர்ந்து வெள்ளைக்கொடி பறக்கும். நல்ல செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் உண்டாகும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று மம்மி டாடியி மகிழ்விப்பீர்கள். புது அலுவலகம் மாறியவர்கள் மற்றும் காலேஜ் மாணவர்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் ரொம்பவும் ஜாக்கிரதையா இருங்க. நீங்க பிசினஸ் செய்பவரா.. எனில்  வியாபாரத்தில் நீங்க தொட்டது துலங்கும் காலம் இப்ப வந்திருக்குங்க. உங்க நிலை உயரும். இழந்த செல்வாக்கை மட்டுமில்லாமல் பணத்தையும் மீட்பீர்கள். கொடுத்த கடன் திரும்ப வரும். வீடு தேடி வருமுங்க. வியாபாரிகளுக்குத் தேங்கிக் கிடக்கும் சரக்குகள் வேகமாய் விற்றுவிடும். எனவே அது சம்பந்தமான பயங்கள் ஓடியே போயிடும்.  பழைய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்ற உறவினரும் ஃப்ரெண்ட்ஸும் மறுபடியும் உங்ககிட்ட வந்து சேர்ந்துப்பாங்க.  

கன்னி

நீங்க அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் என்றால் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து மேலிடத்தில் நல்ல பெயர் மற்றும் பாராட்டு.. விருது… அவார்ட்.. ரிவார்ட் என்று வாங்குவீங்க.  ஆனால் ஒண்ணுங்க.. எவ்ளோ சிறப்பு வந்தாலும் .. பாராட்டுக் கிடைச்சாலும்.. கர்வம் மட்டும் தலைக்கு ஏறிடாம கவனமா இருக்கணுங்க.  மம்மியோட சண்டையே போடவே கூடவே கூடாது. பின்விளைவுகள் பலமாக இருந்து வைக்கும். உத்தியோகத்தில் உங்கள் பதவி அல்லது சம்பளம் அல்லது இரண்டுமே  உயரும். புதிதாகப் பொறுப்பேற்கும் பாஸ் உங்களைப் புரிந்துகொள்வார். பழைய அதிகாரிங்க உங்களுக்குப் பெரிய தொல்லையா இருந்தாங்க. இப்ப ஆப்போசிட். முக்கியப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார். பெருமிதம் கொள்ளலாம்

துலாம்

கலைஞர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத வாய்ப்பும் கிடைக்க சான்ஸ் இருக்குங்க.  பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமா ஆயிடுவீங்க. கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீங்க. கவர்ன்மென்ட் சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வழக்கு உங்க பக்கம்தான் வெற்றியாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பலப்பல காலமாய்  எதிர்பார்த்துக்கிட்டிருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். அப்பா ஆரோக்யம் பற்றி இருந்து வந்த பயமெல்லாம் போய் மனசில் நிம்மதி நிலவும்.

விருச்சிகம்

அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் அட்ராக்ட் செய்வீங்க. குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாகக் கொடுத்த பணம் ஒரு வழியாய்க் கைக்கு வரும். அட. அதிசயமா இருக்கே… அநாவசிய செலவுகளைக் குறைக்க ஆரம்பிச்சுட் டீங்களே! பிள்ளைகளை நல்ல வழிக்குக் கொண்டு வருவீர்கள். உறவினர்களில் சிலர் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். அன்புத் தொல்லையும் அதிகரிக்கும். எனவே கொஞ்சம் புன்னகை வேஷம் போட்டு வெறுப்பை மறைச்சுக்குங்க.  பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்வீங்க. வெரிகுட். அவங்க நல்ல தீர்வு சொல்வாங்க. மகளின் திருமணத்திற்காக அல்லது குழந்தைகளின் படிப்புக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும்.

தனுசு

மகனின் உயர்கல்வி, உத்தியோகத்துக்காகச் சிலரின் சிபாரிசை நாடிப்போக வேண்டி வரும்.அதனால பரவாயில்லைங்க. இட்ஸ் ஓகே. தயங்க வேண்டாம். இதன் ரிசல்ட்டாக அவங்க பெரிய நிலைக்கு உயர்வாங்க. சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் வசூல் செய்ய வேண்டிய பொறுப்பில் நீங்க இருக்கீங்களா? எனில்.. வரவேண்டிய பணம் கைக்கு வரும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது மனதை வாட்டும். அதை மறந்துடுங்க. எல்லா விஷயத்துலயுமே சற்று அதிக கேர்ஃபுல்லா இருங்க.  திடீர் பணவரவு உண்டுங்க. பெரிய பதவிங்க உங்களைத் தேடி ஓடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழப்பமாகப் பல வகை நிகழ்ச்சிகள் நடந்தாலும் மீளுவீங்க.

மகரம்

தாழ்வுமனப்பான்மை நீங்கி நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக்கப் பாருங்க. சில பாக்கிகள் வசூலாகிவிடுவதால் பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிக்க வழி பிறக்கும். ஒரு வேளை நீங்க கடன் கொடுத்திருந்தால் அது திரும்பக் கிடைக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். பயம் வேண்டாம். கடைசியில் உங்க பக்கம் நியாயம் இருக்குன்னு நிரூபிச்சுடுவீங்க. ஒரு விஷயத்தில் நீங்க கவனமாய் இருக்கணுங்க. யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.  திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். நல்லவங்களோட ஆலோசனையால் நீங்கள் புதிய வழியில் செல்வீர்கள். வெற்றியும் அடைவீங்க.

கும்பம்

கணவன்-மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். செலவுகள் ஏற்பட்டபடி இருக்கும். ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்து மறுபடியும் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரிகளானாலும் சரி.. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களானாலும் சரி  புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள் அல்லது நிறுவனத்துக்கு ஈட்டித் தருவீங்க. உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். அதாவது வேலை செய்யாமல் சும்மா பொழுதைப் போக்காமல் முழு மனசோட நேர்மையா உழைக்கறவங்களுக்கு அருமையான பலன் உண்டு. கலைத்துறையைச் சேர்ந்தவங்களுக்குப் புதிய வாய்ப்புகள் ஏற்படும். நல்லாப் பயன்படுத்திக்குங்க.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 19 முதல் டிசம்பர் 21 வரை

மீனம்

வீடு கட்டவும் .. வாகனம் வாங்கவும்… மேல்படிப்புக்காகவும்.. குழந்தைகள் பற்றிய செலவுக்காகவும் நீங்க கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சமீபத்தில் அறிமுகமான வி.ஐ.பி.களே உதவுவாங்க. மகன் அல்லது மகளுக்குத் திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். இழுபறியாக இருந்துக்கிட்டிருந்த வேலைகள் நல்லபடியா முடிவடையும். உறவினர்களுடன் பனிப்போர் உண்டாக வாய்ப்பு இருப்பதால் நீங்க சற்று அனுசரித்துப் போகணுங்க. மேலும்  மற்றவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்காமல் நீங்களும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்து முடிவு எடுக்கணும். முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமாவீங்க. உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீங்க.  

சந்திராஷ்டமம்: டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வரை