வார ராசிபலன்: 21.02.2020 முதல் 27.02.2020 வரை! வேதாகோபாலன்

மேஷம்

லாபமெல்லாம் எதிர்பார்த்தபடி வந்துடுமுங்க.  சந்தோஷத்துல மிதக்கப் போறீங்க பாருங்களேன். செலவுங்க உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். ஆனாலும் செலவுக்கு மிஞ்சிய வருமானம் இருப்பதால், சேமிப்பும் அதிகரிக்கும்.    தொழிலில் முத்திரை பதிக்கப் போகிறீர்கள். பொதுவாழ்விலும் புகழ் உங்களுக்கு அதிகமாகப் போகுதுங்க. வழிபாட்டு ஸ்தலங்களில் அடியெடுத்து வைப்பீங்க. தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வீங்க. அதுமட்டுமில்லீங்க..  எதிர்பாலினத்தவங்களால உங்களுக்கு, இத்தனை காலமாய் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் காணாமல்  போயிடும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது பெட்டர். வீட்டை மாற்றிக் கட்டுவீங்க.

ரிஷபம்

இவ்ளோ காலமாய் மனசை வாட்டிக்கொண்டு.. மன உளைச்சல் தந்துக்கிட்டிருந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரெனப் புதிய பொறுப்புகளும், தலைமைப் பதவிகளும் கூட வரலாம்.தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.  வீட்ல நல்ல காரியங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆரோக்கி யத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளெல்லாம் ஒவ்வொன்றாய்த் தீர்ந்துடுங்க. அக்கம் பக்கத்தில் பகையாக இருந்தவங்க நட்பாக மாறுவாங்க. பொன், மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீங்க. நீண்ட நாட்களாக நடைபெறாத சில நல்ல காரியங்கள் இப்போ வேகமா நடைபெற்று சந்தோஷத்தை இன்கிரீஸ் செய்யும். தொழிலில் அல்லது உத்யோகத்தில் முன்னேற்றம் வரப்போகுதுங்க.  

மிதுனம்

அப்பா மற்றும் சித்தப்பா பெரியப்பா போன்ற அப்பா வழி உறவினர்களின்  ஆதரவு கிடைக்கும். மனம்  மகிழும் விதத்தில் சிறப்பான நன்மைகள் நிறைய வந்து சேரும். வீட்டில் யாரேனும் ஒருவருக்குத் திருமணம் ஃபிக்ஸ் ஆகுமுங்க.  தொழிலில் இருந்த மந்தநிலையெல்லாம் மாறிடுங்க. உறவுக்காரங்களும்.. ஃப்ரெண்ட்ஸ்ஸூம்.. அக்கம்பக்கத்தினரும் ஆச்சரியப்படும் விதத்தில் உங்களுக்கு முன்னேற்றம் வரப்போகின்றது. இத்தனை காலமா இழுத்துப் பறிச்சுக்கிட்டிருந்த பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பல நாட்களாக நிலுவையில் இருந்த கோர்ட் கேஸ்கள் இப்பொழுது உங்களுக்குச் சாதகமாக முடியப்போறதுக்கான அறிகுறிகள் தென்படும். பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : ஃபிப்ரவரி 20 முதல் 22 வரை

கடகம்

புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர்.  உங்களுக்கோ, உங்கள் வாரிசுகளுக்கோ வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு இப்பொழுது கைகூடும். வெளிநாடு செல்லும் முயற்சிக்காகவோ, கல்விக்காகவோ, வீடு கட்டுவதற்காகவோ…  பெரும்தொகை கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது சுலபமாகக் கைகூடும். குடும்பத்தில் நடைபெறும் திருமணத்துக்காக நீங்கள்  கேட்காமலேயே நண்பர்களும் உறவினர்களும், கடன் கொடுக்க முன்வருவாங்க. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிக்குப் பயந்து புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும். லாண்ட்.. பிளாட், விற்பனை செய்பவர்களுக்கும் கட்டடம் கட்டி விற்கும் பணியை மேற்கொள்பவர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.    

சந்திராஷ்டமம் : ஃபிப்ரவரி 22 முதல் 25 வரை

சிம்மம்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களைச் சரிக்கட்டுவதற்கான வாய்ப்புகள் தன்னிச்சையாக வந்து சேரும். பார்ட்னர்களால் ஒருசிலருக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்களை விலக்கிவிட்டு ஒன்று முழுமையான தொழிலை நீங்கள் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது. அல்லது புதிய பங்கு தாரர்களை  இணைத்துக் கொள்வது பற்றி உங்கள் ஜாதகத்தை உங்க குடும்ப ஜோதிடரிடம் காண்பித்து கன்சல்ட் செய்ங்க. ஒரு சிலருக்கு அலுவலக மாற்றங்கள் மற்றும் இட மாற்றங்கள் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட சான்ஸ் இருக்குங்க. அதை தைரியமா உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அருளாளர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியவர்களின் தரிசனம் கிடைக்கும். அதனால் மனசும் லேசாகும்.  குழந்தைங்க பிரச்சினை சால்வ் ஆகும்.  

சந்திராஷ்டமம் : ஃபிப்ரவரி 25 முதல் 27 வரை

கன்னி

உங்களுக்கேயோ அல்லது குடும்பத்தில் வேறு யாருக்கேனுமோ திருமணப் பேச்சுக்கள் திடீரென முடிவாகலாம். இத்தனை காலமாக மனதுக்குச் சங்கடம் கொடுத்துக்கொண்டிருந்த வழக்குகள் சாதகமாக முடியும். மகன் அல்லது மகனின் முன்னேற்றம் கண்டு சந்தோஷமும் பெருமிதமும் கொள்வீங்க. வீடு வாங்கும் யோகம் உண்டாக நிறைய சான்ஸ் இருக்குங்க. ஓய்வில்லாமல் உழைக்க வேண்டிய அளவு பொறுப்பும், அந்த உழைப்பிற்கேற்ற பலனும் இந்த வாரம் கிடைக்கும்.  கடன்சுமை  மெல்ல மெல்லத் தீரும். வரவேண்டிய கடன் பாக்கிகள் இப்பொழுது தானாக வந்து சேருமுங்க டோன்ட்டே ஒர்ரி. மலைபோல் வந்த கஷ்டங்கள் எல்லாம் பனி மாதிரிக் காணாமல் போகுமுங்க.

துலாம்

பிரிந்த உறவினர்கள் ஒன்று சேருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. சுபச்செலவுகள் அதிகரிக் கும். ஹாப்பியான… ஜாலியான சுற்றுப்பயணங்கள் உண்டு. தம்பி அல்லது தங்கையுடன் இருந்த வந்த பிராப்ளம்ஸ் எல்லாம் தீர்ந்து நல்ல வகையில் இணக்கம் ஏற்படும். தொழிலில் லாபம் இருமடங்காக வந்து சேரும். கணவன் அல்லது மனைவிக்கு விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீங்க. வங்கிகளில் லோன் பெற்று வாடகை இடத்தில் இயங்கும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றுவது பற்றியோ அல்லது வசிப்பிடம் கட்டுவதற்கோ முயற்சி செய்வீங்க.  

விருச்சிகம்

விழிப்புணர்ச்சி கொஞ்சம் ஜாஸ்தியா தேவைப் படுதுங்க. பி கேர்ஃபுல். எதைச் செய்தாலும் அனுபவம் உள்ளவங்களை கன்சல்ட் செய்து அல்லது தீர ஆலோசித்து செய்வது நல்லதுங்க. பிறருக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டு, வாங்கிக்கொடுத்த தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம். ஆனால் விரைவில் அந்தத் தொல்லையிலிருந்து விடுபட்ருவீங்க. டாடி மற்றும் மம்மியின் உடல்நலத்தில் சற்று அதிக கவனம் செலுத்தணுங்க. கணவன்-மனைவிக் குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைங்களால் பெருமை வந்து சேரும். கல்வியில் தேர்ச்சி பெற்று மற்றவர்களால் பாராட்டுக்களைப் பெறுவர். மகளின் திருமண வாய்ப்புக் கைகூடும். ஆன்மிக சுற்றுலாக்கள் அதிகரிக்கும். கற்பனைக் கவலைகளை அதிகம்  பொருட்படுத்தாதீங்க.

தனுசு

டாடி, மம்மியின் உடல்நலத்தில் கவனம் தேவைங்க. சண்டை போட்டு, ‘உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்’னு சொல்லிப் பிரிந்து சென்ற சகோதர சகோதரிகள் திரும்பி வந்து சேர்ந்துக்குவாங்க. தங்கம், வெள்ளி, பினாட்டினம் போன்ற காஸ்ட்லி பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க. பழைய நகைங்களைக் கொடுத்து, மாற்றிப் புதிய நகை களை வாங்கும் முயற்சி நல்லபடியாக் கைகூடும். அலுவலகத்தில் பிரமோஷனுக்கு உங்கள் பெயர் பரிசீலனை செய்யப்படும். உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்குமுங்க. வேலையில் திறமை பளிச்சிடும். கார் வாங்க எதிர்பார்த்தபடி லோன் தொகை அனுமதி கிடைக்கும். செல்வ நிலை உயரும்.

மகரம்

சினிமாத் துறையில் உள்ளவங்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் சந்தோஷம் மட்டுமில்லா மல் அதிக வருமானமும் கிடைக்கும். கலைஞர்களுக்கு நன்கு முன்னேறும் சூழ்நிலை உருவாகும். இதனால பலரால் பாராட்டப்படலாம். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவீங்க. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருந்த ஹாப்பி செய்து உங்களைத் தேடி வரும். பணப்புழக்கம் நல்லபடிய.. திருப்திகரமாக இருந்தாலும்கூட, தயவுசெய்து திட்டமிட்டுச் செயல்படுங்க. முன்பிருந்த கோபச் சூழ்நிலை மாறி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். இதற்கு ஒரு சுபநிகழ்ச்சி காரணமாக அமைய வும் வாய்ப்பிருக்குங்க. வீட்டைப் புதுப்பிக்க வேண்டி வரலாம். பழைய பாக்கிகள் வசூலாகும்.

கும்பம்

பெண்களுக்கு எதிர்பாராத தனவரவு அதாவது பணம் மற்றும் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்தபடி நகை வாங்கவோ, நிலம் வாங்கவோ வாய்ப்பு உண்டாகாமல் போக சான்ஸ் இருக்கு. இதற்கு முன் வசூலாகாமல் ஆட்டம் காட்டிக்கிருந்த கடன் தொகைகள் உங்களைத் தேடி வருமுங்க. குடும்பத்தில் உள்ள வயசான பெரியவங்களோட ஆசி உங்களைத் தேடி வரும். பொருளாதார நிலைமை நார்மலாகவும் நல்லபடியாகவும் இருக்கும். பெரிய அளவில் வந்து குவியாது என்றாலும் சேமிப்பு கொஞ்சமே கொஞ்சம் அதிகம் ஆகும். டாடி மற்றும் மம்மியின் அன்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும். ஆசிரியரின் ஆதரவும் அன்பும் உங்களுக்கு இந்த வாரம் முழுக்க  நிறைய இருக்குங்க.

மீனம்

செய்கின்ற வேலையில் மன நிறைவு மட்டுமில்லீங்க.. வெற்றியும்கூடக் கிடைக்கும். தயவு செய்து உடல் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம்  கொடுங்களேன். ப்ளீஸ்.  குழந்தைங்க மூலம் சந்தோஷமும், மனத்திருப்தியும் கிடைக்கும். காதல் விவகாரத்தில் நிலைமை சரி இல்லை என்றால், கவலையே பட வேண்டாங்க. சூழ்நிலை மெல்ல  மெல்லக் கட்டாயமா மாறும். மனதுக்குச் சந்தோஷம்தரும் சினிமா.. நாடகம் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து சந்தோஷப்படுவீங்க. அங்கு அறிமுகமாகும் புகழ்பெற்றவர்களால் உங்க பெருமிதம் அதிகமாவது மட்டுமில்லீங்க.  நீங்களே மேடையேறி நிகழ்ச்சிகள் கொடுக்கும் வாய்ப்பும் வரும். மகன் அல்லது மகளைப் பார்க்க வெளிநாடு போவீங்க.