வார ராசிபலன்:21.06.2019 முதல் 27.06.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்  

 கணவன் மனைவிக்கிடையே  அன்னியோன்னியம் சூப்பரா இருக்கும். இத்தனை காலமாய் இருந்து வந்த தொழில் உத்தியோகத்தில் தடைகள் போயே போயிடும். குழந்தைகள் பற்றிய டென்ஷனுக்கு டாட்டா சொல்லப்போற நாள் அதிக தூரத்தில்  இல்லீங்கோ. மனம் தெளிவாக இருக்கும். எது நடந்தாலும் தைரியாமாக இருப்பீர்கள்.அப்பாவின் ஆரோக்கியம் பாதிக்கப் படும் என்றாலும் நல்ல  வகையில் வைத்தியம் நடந்து சரியாகிவிடும். அதற்கான செலவு இருக்கும்தான். என்ன செய்ய. சற்று அட்ஜஸ்ட் செய்துக்குங்க. வீட்டில் யாருக்கோ தோரணம் கட்டி மேளம் கொட்டப்போகுது. சந்தோஷம். சில விஷயங்கள் ரொம்பவும் திடீர்னு முடிவாகும். ரெடியா இருந்துக்கோங்க.

ரிஷபம்

காதல் என்னும் குளத்தில் நீந்துவதற்காக குதிக்கப் போறீங்க. ஜாக்கிரதை. அடி கிடி படாமல் பார்த்துக்குங்க. வேலை கிடைச்சாலும் புலம்பினால் எப்படிங்க? ஆரம்பத்தில் கடின உழைப்பு இருந்துதான் தீரும். போகப்போகப் பழகுவது மட்டுமில்லை.. அதற்கான சம்பளமும் அபாரமா இருக்கும். ப்ளீஸ் வெயிட்டீஸ். குடும்பத்தில் யாருக்கோ கொஞ்சம் மருத்துவ செலவும் உண்டாகும். அதெல்லாம் அநாயாசமா ஜமாய்ச்சுடுவீங்க. பேச்சு விஷயத்தில் மட்டும் அதிஜாக்கிரதையா இருந்துக்கோங்க. உங்க கவர்ச்சி அம்சம் எப்போதையும்விட அதிகமாகும். அலுவலகத்திலும், குடும்பத்திலும், அக்கம்பக்கத்திலும் எதிர்பாலினத்தின் உதவியால் செழிப்பீங்க.

மிதுனம்

அரசு தொடர்பான செயல்பாடுகள் அனைத்தும் எளிதில் நிறைவடையும். அதாவது எதற் கெல்லாம் பயந்தீங்களோ அதெல்லாம் நல்லபடியா முடியும். முன்பிருந்த குழப்பங்களும், டென்ஷன்களும் சரியாகும். ஏனெனில் பண வரவு திருப்திகரமாக இருக்கும்,. அதனால் தன்னிச்சையாய்  மனசில் தெம்பு அதிகரிக்கும். இப்போதைக்கு ஷேர் மார்க்கெட்டில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாங்க. விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்குவீங்க. நிலம் வீடு வகைகளில் பிரச்சினைகள் உண்டாகி அதன் பிறகு நிலைமை சீராகும். கூர்மையான கத்தி போன்ற ஆயுதங்களை கையாளும்போது  அதிக ஜாக்கிரதையா இருங்க. தொழிலில் புதிய எதிரிகள் தோன்ற வாய்ப்பிருப்பதால் அந்த வகையில் அலர்ட்டாய் இருந்துக்குங்க.

சந்திராஷ்டமம்: ஜூன் 19 முதல் ஜூன் 22 வரை

கடகம்

பெருந்தன்மையான குணத்தினால் அனைவருக்கும் உதவுவீர்கள். வயிற்றுப் பகுதியில் வலி உண்டாகக் காரணமான விஷயங்களைத் தவிர்க்கப்பாருங்க. குறிப்பாய், சாப்பாட்டு விஷயத் தில் அதிக கவனமாய் இருங்க.  பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். ஆனால் தயவு செய்து யாரையும் ஏமாற்றும் எண்ணத்தோடு எதுவும் செய்யாதீங்க. கண்டுபிடிச்சுடுவாங்க. பிறகு கஷ்டப்படுவீங்க. கமிஷன் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பெண்களால் இத்தனை காலம் இருந்து வந்த பிரச்சினைகள் உங்களின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளால் மெல்ல மெல்லச் சரியாகும். எந்த வகையில் கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் மிகவும் தைரியமாக எதிர் கொள்வீர்கள். அதனால் பிழைச்சீங்க.

சந்திராஷ்டமம்: ஜூன் 22 முதல் ஜூன் 24 வரை

சிம்மம்

நீங்கள் பல காலம் விரும்பி எதிர்பார்த்த.. அல்லது திட்டமிட்ட ஆன்மீகப் பயணம் உண்டா கும். மின்சாரம் தொடர்பான தொழில்களில் கவனம் தேவை. வசீகரம்னா வசீகரம்.. அவ்வ்வ்ளோ வசீகரம் இருக்கும் உங்கள் வார்த்தைகளில். சிங்கமாய்ச் சீறியவங்களா இவங்க.. என்று வியக்க வைப்பீங்க போங்க.  இதனால் இழந்த நண்பர்களை மீட்டுக்குவீங்க. முகத்தைத் திருப்பிக்கொண்டு போனவங்க தானாய் வந்து கை குலுக்கப்போறாங்க பாருங்களேன். குழந்தைகளின் நடவடிக்கையால் மனதில் கவலை தோன்றும். அவங்களை கவனமாய் டீல் செய்தீங்கன்னா எல்லாம் சரியாகும். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். போக்குவரத்தில் கவனம் தேவை. வாகனப் பராமரிப்பில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: ஜூன் 24 முதல் ஜூன் 27 வரை

கன்னி

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். குறிப்பாய் எதிர்பாலின அதிகாரிங்க நல்லபடியா உதவுவாங்க. தொழில் அல்லது / மற்றும் வியாபாரம் ரொம்பவும் சிறப்பாக இருக்குங்க. பண வரவும்  நீங்க எதிர்பார்த்தபடியே மனம் மகிழத்தக்க வகையில் இருக்கும். லோன் போட்டிருந்தீங்களா? உடனே உங்களைக்கூப்பிட்டுக் குடுப்பாங்க. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஏன் எனில் ஒற்றுமையும் புரிதலும் அதிகமாகும். பெற்றவர்களுடன் சிறு குழப்பம் உண்டாகும். அவங்க பெருந்தன்மையால் சரியாகும். அம்மாவுக்கு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுச்சிறு அளவில் மருத்துவ செலவுகள் உண்டாகும். சமாளிச்சுடுவீங்க. மனசை ரெடி பண்ணிக்குங்க.

துலாம்

அதென்ன ஆரோக்யத்தைப் பார்த்துக்காம இவ்ளோ அலட்சியமா இருக்கீங்க? ப்ளீஸ், கவனிச்சுக்குங்க. அலுவலகத்திலும் உறவினர்மத்தியிலம் பேச்சினால் பெரிய நன்மைகள் உண்டாகும். லாபமும் கிடைக்கும். பிரிந்திருந்த குடும்பங்களையும் நண்பர்களையும் சேர்த்து வைப்பீங்க. நல்ல மனிதராய்/ மனுஷியாய் இருங்க. எந்த அளவு முடியுமோ அந்த அளவு படிப்பில் கவனத்தைக் கொண்டு போய்க் கொட்டுங்க.  சாப்பாட்டு விஷயத்தில் கவனமாய் இருந்தே தீரணுமே… உங்கள் இயல்பான வசீகரம் காரணமாய் அலுவலகத்தில் சாதிப்பீங்க, சாதனையும் செய்வீங்க. நண்பர்களை விரோதித்துக்கொள்ள வேண்டாம்.
 அவங்களால பெரிய நன்மைகள் காத்திருக்கு. கவனமாயிருங்க.

விருச்சிகம்

சகோதரர்கள் உதவி இருக்கும். அவங்களுக்கும் உங்களுக்கும் இடையே இருந்து வந்த சின்னச்சின்ன உரசல்களைப் பொருட்படுத்தாமல் அவங்க வெள்ளைக்கொடி காட்டுவாங்க. நீங்க பந்தா பண்ணாமல் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப்போங்க. உங்களின் அனைத்து செயல் களுக்கும் மனைவியின்/ கணவரின் ஆதரவு இருக்கும். அவர்களின் குடும்பத்தில் சச்சரவுகள் தலை தூக்க வாய்ப்புள்ளது. நீங்கதான் சரி செய்வீங்க. பாராட்டுக்கிடைக்கும்.  முதலீடு.. சேமிப்பு.. நிலங்கள் விற்பனை.. வாங்குதல்  எல்லா விஷயங்களிலும் முடிவெடுப்பதில் கவனம் தேவை. சரியாக முடிவெடுத்தாச்சுன்னா சூப்பர் ரிசல்ட்தான் என்பது பற்றியெல்லாம் எந்தவிதச் சந்தேகமும் இல்லீங்க.

தனுசு

நல்லது நடக்கும். நல்லதே நடக்கும். ஆனால் எல்லாமே நிறைய முயற்சிக்குப் பின்னால் நடக்கும். ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபம் தரும். எனினும் அகலக்கால் மட்டும் வைக்கவே கூடாதுன்னு உறுதியா இருங்க. சிறிய அளவிலான முதலீடு செய்தால் போதும். மற்றபடி பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பல காலம் தள்ளித் தள்ளிப் போட்டுக்கிட்டிருந்த செயல்களை இப்போ முடிப்பீங்க. வாங்க நினைச்சுத் தள்ளிப் போட்டுக்கிட்டிருந்த விஷயங்களை ஒரு வழியா வாங்கிடுவீங்க.குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். டென்ஷன் ஆகாதீங்க.  நல்லா ஆயிடுவாங்க. உடன் வேலை பார்க்கும் பெண்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உறவினர் உதவி கிடைக்கும்.

மகரம்

இளைஞர்களே.. மாணவர்களே.. டாடி மம்மி வீட்டில் இல்லைன்னு எதையாவது ஏடாகூட மாய்ச் செய்து வைக்கவும் வேண்டாம். பிற்பாடு திருதிரு துறுதுறு ன்னு விழிச்சுக்கிட்டு ஷேம் ஆகவும் வேண்டாம். கடித போக்குவரத்து பத்திரம் பதிவு போன்றவை தடை இல்லாமல் நடைபெறும். உயர் அதிகாரிகள் எல்லாவற்றிலும் ஒங்களுக்கு உறுதுணையாகத்தாங்க  இருப்பார்கள். வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சும்மா இல்லை. உங்களுடைய கடுமையான உழைப்பும் முயற்சியும்தான் காரணம்.  கமிஷன் வியாபாரம் ரொம்பவும் சிறப்பாக இருக்கும். மாணவச் செல்வங்களே. உங்களுக்குப் படிப்பில் மேன்மை உண்டாகும். முன்பை விட அதிக ஆர்வமும் அக்கறையும் உண்டாவதால் மார்க் சூப்பரா வரும். தாய் மாமனின் உதவி கிடைக்கும்.

கும்பம்

குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் இருந்தால் அதில் மாமனின் உதவியால் ஜெயிப்பீர்கள். தாய் தந்தையின் ஆலோசனைப்படி செயல்படுவீங்க நல்ல பலனை தரும். அவங்க பாராட்டும் ஆசியும் மட்டுமின்றி எடுத்த காரியத்தில் வெற்றியும் கிடைக்கும்.  மின்சார உபகரணங்களை கையாளுவதில் கவனம் தேவை. வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. தொழில் சிறக்கும் அதிகாரிகளின் ஆலோசனை தொழில் மேன்மைக்கு கை கொடுக்கும். அலுவலகத்தில் எல்லோரும் மண்டையை அல்லது கொண்டையைப் பிச்சுக்கிட்டு யோசிச்சும் தீர்வு காண முடியாத பிரச்சினையை நீங்க சும்மா காஷுவலாய்.. அநாயாசமாய்.. அலட்டிக்காமல் தீர்த்து வைச்சு ஓவர் நைட் ஹீரோவாய் / கதாநாயகியாயிடுவீங்க.

மீனம்

குடும்பத்தில் அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்கும். நீங்க எப்பவுமே மனிதர்களின் அருமை தெரிந்து அட்ஜஸ்ட் செய்துக்கிட்டுப் போறவங்களாச்சே. மாணவர்களுக்கு மனசு தெளிவாக வேலை செய்யும். அலுவலகவாசிகளுக்குப் பொருளாதார நிலை ஜம்மென்று இருக்கும். தந்தையின் உடல்நலம்   முன்பைவிட பிரமாதமாய் சரியாகிவியடம். . கணவன் மனைவி யிடையே பூசல்கள் தோன்றி உடனே மறையும். வாகன யோகம் கிடைக்கும். உங்களை வருந்தி வருந்தித் தன் வாகனத்தில் அழைச்சுக்கிட்டுப் போக ரெடியா இருப்பாங்க. அனேக மாய்ப் புது வண்டி வாங்கிடுவீங்க. வியாபாரம் அருமையா இருக்கும். உடலில் அசதி தோன்றும். என்னவோ ஏதோன்னு பதைச்சுடாதீங்க. சிம்ப்பிளாய்ச் சரியாகும்.

 

Leave a Reply

Your email address will not be published.