வார ராசிபலன்: 22.11.2019 முதல் 28.11.2019  வரை! வேதா கோபாலன்

மேஷம்

அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குறிப்பாக மகனுக்கோ அல்லது மகளுக்கோ நல்ல வாழ்க்கை அமையப்போகிறது. சுருங்கச்  சொன்னால் மகனுக்கு வேலைக் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும் குறிப்பாகச் சொன்னால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பெற்றோரின் உடல் நிலை இத்தனை காலம் கவலை கெடுத்துக்கொண்டிருந்தது அல்லது. அது இனி மெல்ல மெல்லச் சீராகும். ஒரு வேளை நீங்கள் குழந்தை பாக்கியத்துக்காக ஏங்கி காத்திருக்கும் தம்பதி எனில் குழந்தை பாக்யம் மிக விரைவில் கிட்டும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சொத்துக்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தாயார் உங்களுக்கு நகைகள் தருவார். நீங்கள் திருமணம் ஆனவர் என்றால் மனைவிவழியில் (அல்லது கணவர் வழியில்) உதவிகள் கிடைக்கும். அவருக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை

ரிஷபம்

மனைவி / கணவர் வேலைக்கு முயன்று கொண்டிருப்பவர் என்றால் அது மிகவும் தடை மற்றும் தாமதத்துக்குப் பிறகு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்த வாகனத்தை ஒரு வழியாகச்  சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். அப்படி வாங்கும்போது கருப்பு நிற வாகனம் வாங்குவதைத் தவிர்க்கப் பாருங்கள்.. அது உங்களுக்கு எவ்வளவுதான் பிடித்தி ருந்தாலும். கவனமாக இன்வெஸ்ட் செய்தீங்கன்னா ஷேர் மூலமாக பணம் வரும்.   ஆனாலும் இப்போ எந்த முதலீடும் மிகுந்த யோசனைக்குப் பிறகு செய்யணுங்க. விஷயம் தெரிஞ்சவங்களைக் கன்ஸல்ட் செய்ங்க. அல்லது உங்க ஃபேமிலி ஜோசியர்கிட்ட போய் அலசி ஆராய்ந்து பிறகு முடிவெடுங்க. அலுவலகத்தில் வேலை பெண்டு நிமிரும். எனி வே.. சமாளிச்சுடுவீங்க.

மிதுனம்

எங்கும் மகிழ்ச்சி எதிலும் மகிழ்ச்சி என்று போய்க்கொண்டிருக்கா? குட் குட், எனினும் பானகம் குடிக்கும் போது சின்னச் சின்ன துரும்புகள் வாயில் அகப்படுவது போல எல்லா மகிழ்ச்சியும் சில சின்னச் சின்ன தடைகள் மற்றம் தாமதங்களுக்குப் பிறகுதான் சாத்தியமாகும். வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எனவே அவங்க / அவர் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க.  பிறகு அதன்பி நடங்க. எதிர்பாராமல் குடும்ப செலவுகள் ஏற்படும். பட்.. டோன்ட் ஒர்ரி.. அவற்றைச்  சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் அதிகரிக்கும்பொருட்டு கொஞ்சம் செலவு செய்வீங்க. வீடு கட்டவும் பெற்றோர் சிகிசிச்கைக்காகவும்… நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.

கடகம்

பெண்களுக்கு இழுபறியாக இருந்து கொண்டிருந்த காரியங்கள் திடீர்னு சாதகமாக முடியும். உங்க மேல மற்றவங்க வைச்சிருக்கற மதிப்பும் மரியாதையும் உயரும். குறிப்பாய் அலுவலகத்தில் உங்க மேல சக பணியாளர்களும் உயர் அதிகாரிங்களும் வைச்சிருக்கும் நன்மதிப்பு உண்டாகும். இருந்தாலும் அடுத்த வர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவைங்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்க ப்ளீஸ். நீங்க ஸ்டூடன்ட்டா? எனில் கல்வியில் வெற்றி பெறணும்னு நீங்க நினைச்கீங்கன்னா ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லதுங்க. அலுவலகவாசிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். லேடீஸ் மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். பொதுவாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சிம்மம்

நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அந்த அளவுக்கு நல்ல காரியம் செய்திருப்பீங்க. அவங்க குடும்பத்தில் நடக்கும் சுப  நிகழ்ச்சிங்களுக்கு ஹெல்ப் செய்திருப்பீங்க. பிசினஸ் செய்பவர்களுக்குத்  தொழிலில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். முதலீட்டை தைரியமாய் அதிகரிச்சீங்க. அதற்கு நல்ல விதமான பலன் உண்டு.  மகனுக்கோ அல்லது மகளுக்கோ கல்யாணம் நிச்சயம் செய்வீங்க. அறிவு திறன் மற்றும் உங்க சுய ஆற்றல் ஜாஸ்தியாகுமுங்க. முயன்று நீங்க வரவழைத்துக்கொண்ட இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். எஸ்பெஷலி அலுவலகத்தில் பாராட்டுக் கிடைக்கும். நீங்க முயற்சி செய்து உழைப்பதால் செல்வம் சேரும்.

கன்னி

அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். ஆனாலும் அதற்காக நீங்க முறையாவும் நேர்மையாவும் முயற்சி செய்து உழைக்கணும். அதை மட்டும் நல்லா நினைவு வெச்சுக்குங்க. இல்லாட்டி பிற்காலத்தில் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும். தொழில் ரீதியா உங்களுக்கு இருந்துக்கிட்டிருந்த எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கும் பணிகளுக்கும் இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த தடை நீங்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். பழைய சண்டையை எல்லாரும் மறந்துவிட்டுக் கலகலப்பாக டைனிங்க டேபிளில் சிரிச்சுப் பேசிக்கிட்டே பொழுது போக்குவீங்க. வாழ்க்கை துணையின் (அதாவது கணவர் அல்லது மனைவியின்) உடல் நலத்தில் கவனம் தேவை.  உடனே பெரிய அளவில் பிரச்சினை உண்டோன்னு கற்பனை செய்துகிட்டு டென்ஷன் ஆவாதீங்கப்பா.

துலாம்

அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். உடனே வாளும் வேலும் வில்லும் எடுத்துப் போராடக் கிளம்பாதீங்க. அப்பாவின் உடல் நிலை பற்றி இருந்து வந்த டென்ஷன்ஸ் முற்றுப்புள்ளி வெச்சுக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். இது உங்களுக்கு நல்ல வகையில் சந்தோஷம் குடுக்கும். மனசில் நிம்மதியும் கூடும். அலுவலகத்திலும்.. பள்ளியிலும்.. கல்லூரியிலும் (அதாவது படிப்பிலும், தொழிலிலும்) இத்தனை காலம் இருந்ததைக் காட்டிலும் பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். கடன் கொடுத்திருந்தாலும் வாங்கியிருந்தாலும் அவை தீரும். பல காலமாய் முயன்று பார்த்து “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று கைவிட்டிருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். அவை உங்களைத் தேடி வரும்.

விருச்சிகம்

பிசினஸ்க்குத்  தேவையான பண உதவி கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். இதனால் முதலாளியிடம் .. மற்றும் மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுப்பீங்க. உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவர்களைச் சற்று முதுகில் (லேசாகத்தாங்க) தட்டிக்கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்க. வீணா சத்தம் போட்டு அவங்க வெறுப்பைச் சம்பாதிக்க வேணாம். தவிரவும் அவங்களுக்குத் தற்போது உள்ள குழப் மனநிலையில் உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்துவிட வாய்ப்புள்ளது. எனவே விட்டுப்பிடியுங்க. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சும்மா இல்லை. ஏராளமான முயற்சியும் உழைப்பும் அதன் பின்னணியில்  இருக்கும்.

தனுசு

அப்பா அண்ட் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைங்க. கவனமாய் இருப்பதுன்னா என்ன என்று கேட்கறீங்களா? சிம்ப்பிள். சின்ன அளவு பிரச்சினை வரும்போதே முக்கியத்துவம் கொடுத்து டாக்டர்கிட்ட ஓடிப்போய் சிகிச்சை எடுத்துவிட்டால் போதும். ஒரு வேளை அலுவலகத்தில் நீங்கள்  கேட்டபடி கிடைக்காமல் … தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். சட்டென்று கோபப்படாமல் மென்மையாக  முயற்சி எடுத்து மேலதிகாரியிடம் பேசினால் நிச்சயம் பிரச்சினை எளிதில் சரியாகும. அலவலகத்திலோ… நண்பர் உறவினர் மத்தியிலோ.. அரசியல்வாதிகளிடமோ மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லதுங்க. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மொபைல் போன் பேசிக்கிட்டே ஓட்ட வேண்டாம்.

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவுங்க  சற்று அதிகம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இத்தனை காலம் இருந்துக்கிட்டிருந்த சண்டை சச்சரவுகள் நீராவி மாதிரிக் காணாமல் போய், சந்தோஷ மான இணக்கமும் நெருக்கமும் ஏற்படும். கலைத்துறையினருக்கு பல காலமாக எதிர்பார்த்தக் காத்துக்கிட்டிருந்த விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துப்போறீங்க. குட். குட்.  அவங்களுக்கும் சந்தோஷம். உங்களுக்கும் நிம்மதி. ஸ்டூடன்ட்ஸ்க்கு அறிவு திறமை அதிகரிக்கும். இதனால் ஆசிரியர்களிடம் நல்லபெயர் எடுப்பீங்க. பாராட்டுகள் கிடைக்கும். உங்களின் இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். செலவுக்கு மேல் செலவு உண்டாகும். அதனால் என்னங்க, அதற்கெல்லாம் தேவையான பண உதவியும் நண்பர்களிடமிருந்தும் உறவினரிடமிருந்தும் எதிர் பார்க்கலாம்.

கும்பம்

அலுவலகத்தில் திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். எனவே சம்பளம் உயரக்கூடும். அல்லது உங்களுக்கு அதைச் செய்வதாக நிர்வாகம் முடிவெடுத்திருக்கும். அது உங்க ளுக்குமேகூடத் தெரியாமல் இருந்திருக்கலாம். கூடிய சீக்கிரம் தெரிவிப்பாங்கப்பா. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, குறிப்பாக வெளிநாட்டில் படிக்கறவங்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். முன்பிருந்ததைவிட நல்ல ரிசல்ட் வரும்.  நிறைய பாராட்டுக்களும் கிடைக்கும். நீங்க அரசியல் துறையிலோ அல்லது  அரசாங்க  உத்யோகத்திலே இருக்கீங்கன்னு வெச்சுக்குங்க… எனில்  எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து அப்புறமா நல்ல முடிவு எடுத்தீங்கன்னா காரிய அனுகூலம் உண்டாகும். ஷ்யூரா!

சந்திராஷ்டமம்: நவம்பர் 21 முதல் நவம்பர் 23 வரை

மீனம்

எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். அதற்கெல்லாம் முனைந்து முயற்சி எடுத்துக்கிட்டுதான் இருக்கீங்க. அந்த முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைச்ச வெற்றிதாங்க இது.  எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஆனால் எதிர்பாராத அதிருஷ்டம் எதையும் யோசிக்கக்கூட வேண்டாம். நீங்கள் படிக்கும் மாணவராக இருந்தால் பள்ளி/ கல்லூரியிலும், அலுவலகவாசி என்றால் கல்லூரியிலும் திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை இருந்து வந்தது அல்லவா. அந்த நிலைமை மெல்ல மெல்ல மாறி,. சாதகமான நிலைமை தென்பட ஆரம்பிக்கும். நீங்க விரும்பிக் காத்திருந்த  இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் உங்களுக்கு இருந்து வந்த  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை

கார்ட்டூன் கேலரி