வார ராசிபலன்: 23.08.2019 முதல் 29.08.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்  

சின்ன சின்ன கனவுகளெல்லாம் நனவாகும். மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்க ளெல்லாம் விரைந்து முடிவடையும். அதிலும் நீங்கள் அதிகம் முயற்சி செய்யாமலேயே. பிரபலங்கள் நண்பர்களாவார்கள். ஆனால் அவர்களிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ளா தீர்கள். சிறிது காலம் அவர்கள் குணாதிசயத்தை எடை போட்டுவிட்டு.. பிறகு நெருங்கலாம். அதிலும் எதிர்பாலினம் என்றால் இரட்டிப்பு கவனமாய் இருங்க. வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பது, அறைக் கட்டுவது, வீட்டிற்கு வர்ணம் பூசுவது .. போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். .சுருங்கச் சொன்னால் விட்டைப் புதுப்பிப்பீங்க. தாயாரின் உடல் இவ்ளோ காலம்  டென்ஷன் கொடுத்து வந்ததில்லையா.. அந்த நிலை இப்போது சீராகும். 

ரிஷபம்

ஏற்கனவே கிராமம் போன்ற இடங்களில்  வாங்கியிருந்த நிலம் அல்லது வீட்டை விற்று சிலர் நகரத்தில் வீடு வாங்குவீங்க.  சில சின்னஞ்சிறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டாலும் கடைசில சூப்பரா முடியும்.  பயனில்லாமல் டிரபிள் கொடுத்துக்கிட்டிருந்த வாகனத்தை மாற்றிப் புதுசு வாங்குவீங்க. சில முக்கியமான நல்ல காரணங்களுக்காக லோன் போடு வீங்க. அதாவது அந்த லோன் காரணமா மகிழ்ச்சியும் பெருமிதமும் உண்டாகும்.  தாய்வழி உறவினர்களுடன் இருந்த சில்லறைப் பிரச்சினைங்களும் தகராறுகளும் ஓடி ஒளிஞ்சுக்கும்.  மம்மி வழியில்  சொத்துகள் வரவேண்டியிருந்தால் ஒரு வழியாய்க் கைக்கு வரும். எஸ்பெஷலி தங்கம்ஸ். வேலை பார்க்கும் இடத்தில் பிரச்னைங்க வெரி மச் குறையும்.

மிதுனம்

இத்தனை காலம் சிவப்புத் துணியைப் பார்த்து மிரண்ட மாடுங்க மாதிரி உங்களை எதிர்த்துக் கிட்டிருந்தவங்க நண்பர்களாவார்கள். இனி  வெள்ளைக் கொடிதான். புதுப்புது பதவிங்க ஒங்களைத் தேடிக்கிட்டு வரும். வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக் கும். அப்படின்னா என்ன என்று கேட்கறீங்களா? சிம்பிள். பணக்காரங்க நட்பு.   குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். அதாவது ஏதாச்சும் காரணத்துக்காக உடன்பிறந்த வர்கள் ஒன்று சேருவீங்க. இம்புட்டுக்காலம் அம்மா அப்பாவாகாமல் ஏங்கிக்கிட்டு இருந்த வங்களுக்கு மழலை பாக்யம் கிடைக்கும். மனைவி/ கணவர் உங்களுடைய ஐடியாக்களை ஆதரிப்பர். பிள்ளைங்களோட வருங்காலம் குறித்துச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. அவை கரெக்டான முடிவுகள் என்று காலம் நிரூபிக்கும்.

கடகம்

ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதன் மூலமாகப் பணம் வரும். ரொம்ப காலமா நின்னுக் கிட்டிருந்த வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். இதனால் உங்களுக்கு வர வேண்டிய பிராபர்ட்டிகள் வந்து சேரும்.  தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் டக் டக்கென்று முடிஞ்சு உங்களை சர்ப்பிரைஸ் செய்யும். மகளுக்கு இத்தனை காலம் அவங்க மற்றும நீங்கள் விரும்பியது போன்றே நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டிலோ அல்லது வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்திலோ வேலைக் கிடைக்கும். இத்தனை காலமாய் முறைச்சுக்கிட்டும், பகைச்சுக்கிட்டும் உங்களைவிட்டுப் போன ஃப்ரெண்ட்ஸ் மற்றும் உறவுக்காரங்க இப்ப அசடு வழிஞ்சுக்கிட்டு வந்து  நட்பு பாராட்டுவாங்க. அவங்க ளுக்கு உங்களால நன்மைன்னு  நினைச்சுத் தட்டிக் கழிக்காதீங்க. உங்களுக்குத்தான அவங்களால நன்மை ஏற்படப்போகுது.

சிம்மம்

உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். இத்தனை காலமாய் மனசையும் மூளையையும் எண்ணங்களையும் அரிச்சுக்கிட்டிருந்த பிரச்சினை ஒன்று தீரப்போகுது என்ற தகவல் வெரும்.  வெளியூர்ப் பயணங்களால் புத்துணர்ச்சி வந்து உங்களை சந்தோஷத்தில் முழுகடிக்கும். ஃபாரின்ல இருக்கும் நண்பர்களால் அல்லது உறவினர்களால் லாபமும், நன்மையும் / சந்தோஷமும் கிடைக்கும். வேற்றுமொழி, மதம், அண்டைமாநிலத்தவர்களால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் உண்டாகும். நல்ல திருப்பம் தான். டென்ஷன் ஆகாதீங்க!  வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். அப்படிக் கத்துக்க அனுபவங்கள் உதவும். சுருங்கச் சொன்னால் உங்களைச் சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தை தெரிஞ்சுக்குவீங்க.  ஆன்மிக லெக்சர்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். எதுக்கும் தயார் நிலையில் இருங்களேன். சுபநிகழ்ச்சி வந்துகொண்டே இருக்கு ..

கன்னி

ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். அதே மாதிரி ஒரு விசிட்ல முடிய வேண்டிய விஷயங்கள் எல்லாம் நிறைய முறை விசிட் செய்து முடிக்க வேண்டியிரக்கலாம். செலவுங்களைக் குறைச்சுக் கையை இழுத்துப்பிடிச்சுச்  சிக்கனமாக இருக்கலாம்னு நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். விடுங்க விடுங்க. தவிர்க்க இயலாத செலவுக்கு மண்டையைப் பிய்ச்சுக்காதீங்க. கோவில் கும்பாபிஷேகம் மாதிரியான சுப காரியங்களை..  குறிப்பா ஊர்ப் பொதுக்காரியங் களை  முன்னால நின்று நடத்துவீங்க. முதல் மரியாதையும் கிடைக்கும். பால்ய நண்பர் களைச் சந்தித்து மனம் விட்டு பேசி சந்தோஷப்படுவீங்க. காணாமல் போன முக்கியமான விஷயம் ஒன்று கிடைக்கும். அனேகமா அது அலுவலகம் சம்பந்தமான ஆவணமாய் இருக்கக்கூடும்.

துலாம்

திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். தோரணமும் பூக்களும் வீட்டின் மங்கலத் தோற்றத்தை அழகாக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அவங்க எதிர்பாலினத்தினரா இருக்கவும் சான்ஸ் இருக்கு. மனைவி வழி உறவினர்கள் உங்களுடைய அருமையை இப்பதான் புரிந்துக் கொள்வார்கள். சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும். எஸ்பெஷலி கூடப்பிறந்தவங்க இத்தனை காலம் கொடுத்துக்கிட்டிருந்த டார்ச்சர் தீரும். முன்பிருந்த சின்னச்சின்ன சண்டைகள் ஓய்ஞ்சு, அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தில் ரிப்பேர் வேலைகள் செய்வீங்க. அதை உங்க அப்பா வழி உறவினர்கள் செய்யவும் வாய்ப்பு இருக்கு.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 25 வரை

விருச்சிகம்

குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லதுங்க. நல்ல காரணங்களுக்காக வீண் அலைச்சல்கள் அதிகமாகும். பரவாயில்லை. ரிசல்ட் நன்றாயிருக்கும்.  சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். டோன்ட் ஒர்ரி. தண்ணியில் அழுத்திய பந்து மாதிரி உண்மை தன்னை வெளியே கொண்டு வந்தே தீரும். சாப்பாட்டு விஷயத்தில் கவனக்குறைவாய் இருக்காதீங்க.  எளிதில் டைஜஸ்ட் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லதுங்க. தேவையில்லாத வீண் சந்தேகத்தால் நல்லவங் களுடைய நட்பை இழக்க வாய்ப்பிருப்பதால் அப்படி நிகழாமப் பார்த்துக்குங்க.  எல்லோருக் கும் எல்லா வகையில் உதவிதானே செய்யறேன்? ஆனால் என்னை ஏன் எல்லாரும் குறை சொல்றாங்கன்னு அவ்வப்போது புலம்புவீர்கள். எல்லாம் உங்க கற்பனைப்பா.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 27 வரை

தனுசு

சிலர் உங்கள் வாயை கிளறி வம்புக்கிழுப்பாங்க. நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது. நீங்களும் பதிலுக்கு எகிறிட்டீங்கன்னா அநாவசியத்தக்கு டென்ஷன்தானேங்க மண்டைக்கு ஏறும்? அதெல்லாம் தேவையா? அவசியமா? எனவே … பொறுமையா இருங்க. போகப்போக மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களையெல்லாம் நீங்க முடிச்சுக் காட்டுவீங்க பாருங்களேன்! உங்க வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சிலர் வாஸ்து படியோ, நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் அறிவுரைப்படியோ வீட்டை மாற்றி, விரிவுப்படுத்துவீங்க. உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாகவும் செயல்படத் தொடங்கிடுவீங்க. மனதில் தொக்கி நின்ற தாழ்வு மனப்பான்மை எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். பழைய பிரச்னை கள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பதிப்பகம், போடிங், லாஜிங், ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளில் உள்ளவங்க லாபமடைவீர்கள். விலகிச் சென்ற மறுபடியும் வந்து  சேருவாங்க.  

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 29 வரை

மகரம்

மை டியர் மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். அறிவாற்றல், நினைவாற்றல் கூடும். ஆசிரியர்களின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி தேர்வில் மதிப்பெண் வர வாய்ப்பிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். உங்களுடய தனித்திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீங்க. அதில் பெரு வெற்றி இல்லாட்டியும் நிச்சயம் தோல்வி இல்லை.  விரும்பிய கல்விப் பிரிவில் சேருவீங்க. உங்க கடின உழைப்புக்கும் பொறுமையான சுபாவத்துக்கும் அது கிடைக்கும். கவலை வேணாம். கலைத்துறையினர் புகழடைவீங்க. அரசு விருது/ பாராட்டு / அவார்ட் உண்டு. இத்தனை காலம் பெட்டிக்குள் முடங்கிக்கிடந்த  படம் ஒரு வழியா ரிலீசாகும். அதனால் உங்களுக்கும் லாபம் உண்டு. வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைக்கும். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும். பாராட்டுக்களும், கைதட்டல்களும் இனி அதிகமாகும்.

கும்பம்

வரன் தேடி தேடி அலுத்துப் போய் உட்கார்ந்தீங்களே. இப்ப பாருங்க உங்களின் மகளுக்குக் கல்யாணம் உடனே குதிரும். அதுவும்  சீரும் சிறப்புமாக முடியும். வயிறில் சில்லுன்னு பால் வார்க்கும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சந்தோஷமான கிளைமேக்ஸூடன் முடியும். முன்பு உதறிவிட்டுப்போன தூரத்து சொந்தக்காரங்களெல்லாம் தேடி ஓடி வருவீங்க. பூர்வீக சொத்தை வேறு வடிவத்துக்கு மாற்றும் எண்ணம் இருந்தா அது அப்போ நிறைவேறும். பழைய உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். விரைவில் நடக்கவிருக்கும் அல்லது சமீபத்தில் நடந்து முடிந்த திருமணம் காரணமா குடும்பத்தில் இருந்த வந்த சண்டைகளும் விரிசல்களும் தீரும்.

மீனம்

மனோபலம் கூடும். விவாதங்களில் வின் பண்ணுவீங்க. உங்க வாதங்களையும் அட்வைஸ் களையும் மனப்பூர்வமா மற்றவங்க ஏற்பாங்க. தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்கள்.. மந்திரிகள்.. அரசாங்க பதிவியில் உள்ளவங்க உங்களுக்கு உதவுவார்கள். அரசாங்கத்தால் நன்மைகள் உண்டாகும். வீடு கட்டத் தொடங்குவீங்க.  நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கைக்கு வந்து சந்தோஷம் வழங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த தப்பான புரிதல் நீங்கும். மனைவி வழியில் ஆதரவு அதிகரிக்கும். இம்புட்டுக் காலம் இழுபறியாக இருந்து வந்த வேலைகள்  எல்லாம் மேஜிக் மாதிரி முடிவடையும். உங்களின் கடின உழைப்பிற்கேற்ற நல்ல பலன் கிடைக்கும். குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் நியாயமான புது முயற்சிகள் மேற்கொள்ளுவீங்க. உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் எல்லாம் உங்க முயற்சி காரணமாய் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிஞ்சுக்குவாங்க. ஏங்க அதுக்குப் போய்க் கவலைப்படாதீங்க.

கார்ட்டூன் கேலரி