வார ராசிபலன்: 24.05.2019 முதல் 30.05.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்  

பேச்சிலும் செயலிலும் நடவடிக்கைகளிலும் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். எதிர்பாலினத்தி னரால் நன்மையும் உயர்வும் உண்டாகும். சினிமா.. நாடகம் போன்ற துறைகளில் உள்ள வர்களுக்கு நன்மைகளும் புகழும் அதிகரிக்கும். சான்ஸ் கூடும். பேச்சினால் வெல்வீர்கள். சகோதர சகோதரிகளுடன் டிஷ்யூம் டிஷ்யூம் வேண்டாம்.  ஆரோக்யத்தைப் பொறுத்த வரைக்கும் தம்மாத்தூண்டு பிரச்சினைன்னாலும் ஓடிடுங்க டாக்டர் கிட்ட. தேவையில்லாத பகை மறையும். சொத்து வீடு வாசல் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரியங்களுக்கு கடன் வாங்க நேரிடும். கணவன் மனைவிக்குள் வரும் சின்ன சண்டைகளைப் பெரியதாக்கி வார்த்தைகளை ஷவர் மாதிரித் தூவாதீங்க. அப்புறமாய் ஹி ஹி ன்னு வழிய வேண்டி வரும்.

ரிஷபம்

வீண் விரயம் ஏமாற்றம் சஞ்சலம், மருத்துவ செலவுகள் கர்ம காரியங்கள் ஆகிய டென்ஷன் கள் இத்தனை காலம் இருந்து வந்தது. அத்தனையும் போயே போச். டிரஸ், நகைகங்க வாங்க கார்ட் தேய்ப்பீங்க. கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். அப்பாவுக்கு அலுவலகத்தில் நன்மை கூடும். உங்களுக்கு அதிருஷ்டத்தின் அர்த்தம் புரியும். கட்டுங்க பெட்டியை. வாங்குங்க டிக்கெட்டை. வெளியூர் வெளிநாடு என்று கிளம்ப வேண்டியிருக்கும். எல்லாம் திடீர்தான். நீங்கள் தயங்கித் தயங்கிக் கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும்.திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.  அலுவலகத்திலும் சரி.. குடும்பத்திலும் சரி நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த விஷயங்கள் நடக்கும்.

மிதுனம்

ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். அவசர முடிவுகள் கூடவே கூடவே கூடவே கூடாது. வாக்குக்கொடுக்காதீங்க யாருக்கும். லோன் மனு போட்டால் வங்கியைவிட்டு வெளியே வருவதற்குள் கிடைச்சுடும்.கார் வாங்கும் யோசனை, வீடு வாங்கும்/ கட்டும் திட்டம் எல்லாம் நிறைவேறிவிடும். ஆனால் அதற்கான செலவுகள் பற்றி பயம் வரும். யாருக்கும் ஜாமின்,கடன் வாங்கி கொடுத்து மாட்டி கொள்ள கூடாது. பொன் பொருளை கவனமாக வைத்து கொள்ள வேண்டும். குடும்பத்தாரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சின்ன சின்ன குழப்பங்கள் தோன்றி மறையும்.

சந்திராஷ்டமம் : மே மாதம் 23 ம் தேதி முதல் மே மாதம் 25 ம் தேதி வரை

கடகம்

அரசாங்க நன்மைகள் இதோ ஓடி வந்து உங்களை அணைக்கும். என்ஜாய். அப்பா வழி சொத்துக்கள் நிறையும். தந்தையின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்கள் ஆட்டம் காட்டி டென்ஷன் கொடுத்திருந்தால் இனி ஒரு பிரச்சினையும் இருக்காது என்று நீங்க ஷ்யூரா நம்பலாம். வீண் வாக்குவாதம் உண்டாகும் அளவுக்குப் பேச்சை வளர்த்தாதீங்க. ப்ளீஸ்.  வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும். வீண் விரையங்களை தவிர்த்து சுப விரையமாக மாற்ற மனை,வீடு வாசல் வாங்கலாம். அதாவஓது இன்வெஸ்ட் (முதலீடு) செய்துடுங்க. நண்பர்கள் உற்றார் உறவினர் முலம் பிரச்சனைகள்  வராதபடி பார்த்துக்கங்க. அதாவது விதண்டாவாதம் செய்து பொல்லாப்பை தேடுவதை விட வாயையே மூடிக்கொள்வது நல்லதுங்க.

சந்திராஷ்டமம் : மே மாதம் 25 ம் தேதி முதல் மே மாதம் 28 ம் தேதி வரை

சிம்மம்

பேச்சினால் அலவலகத்தில் புதிய மரியாதை கிடைக்கும். பெரிய அளவில் பாராட்டலை யேன்னு புழுங்காதீங்க. மேலிடத்தில் உங்க பெயரைப் பொன் எழுத்தில் பதிச்சு வெச்சுட் டாங்க. நீங்க மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்தால், புது வேலை. நிறைய வருமானம். நிம்மதியா இருங்க. போட்டிகளுக்கு மனு போடுங்க. லட்சம் கோடின்னு கிடைக்கலைன் னாலும் அதில் பாதியோ பாதியில் பாதியோ வந்து வயிற்றில் பாதாம் கீர் வார்க்கும். மனைவி மக்களால் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். தாயின் உடல் நிலையில் அக்கறை காட்டு வது நல்லது. தொழிலில் கவனமாகவும்,வீண் வாக்கு வாதத்தை தவிர்த்து கொண்டு அனுசரிச்சுக்கிட்டுப் போங்க. வேலை மாற்றத்தையோ,வேலையை விடவோ வேண்டாம். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும்.வெற்றியை கொடுக்கும்.

சந்திராஷ்டமம் : மே மாதம் 28 ம் தேதி முதல் மே மாதம் 30 ம் தேதி வரை

கன்னி

பல காலமாக உங்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சனைகள் தீரும். மாணவர்களுக்கும், பிசினஸ் செய்பவர்களுக்கு மறைமுக எதிப்புகள் போட்டிகள் மறையும். வர வேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பூர்வீக சொத்து பற்றி இத்தனை காலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்… வம்பு வழக்குகள் மறையும். குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் நடக்கும். வருமானத்திற்கு மேல் வருமானம் வந்து கொட்டுகிற நேரம் இது. வாசல் கதவை மகாலட்சுமி வந்து தட்டுகிற நேரம் இது. திறவுங்கள். கொடுக்கப்படும். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் அலுவலகத்திலும் பெருமை பெறுவீங்க. மம்மிக்கும் உங்களுக்கும் இடையில் இருந்து வந்த சின்ன சின்ன உரசல்கள் தீர்ந்து முழுவதுமாய் சமாதானமாகும்.

துலாம்

நீண்ட தூரம் வாகனப் பயணம் செய்பவர்கள் கவனமாகப் போகணுங்க. எல்லா விஷயத்தி லும் தன்னம்பிக்கையும், தைரியமும் தேவை. ஏனெனில் பயம் காரணமாய்ச் சாதனைகளைக் கோட்டைவிடக்கூடாதில்லையா?  எடுத்த காரியத்தில் கவனத்தை முழுவதுமாய் வெச்சு,  நேரம் காலம் பார்த்து காரியத்தை முடிக்க வேண்டும்.. மனதை திடமாக வைத்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம். எதிர்பாலினத்தினரின் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டி யது மிகவும் முக்கியம். மம்மிகூட சதா சண்டை வேண்டாம். அருமையைப்   புரிஞ்சுக்குங்க. கணவன் மனைவி சண்டை என்பது கூடவே கூடாது என்று மனசுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கையெழுத்திடுங்க. பிப்ரவரிக்குப் பிறகு மற்றொரு தேனிலவு உண்டு. மம்மி டாடியை காக்காய் பிடிச்சு வெச்சுக்குங்க.

விருச்சிகம்

இத்தனை காலமாக உங்களை வாட்டி வதைத்துககொண்டிருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பொருளாதர அபிவிருத்தி உண்டாகும்… அட ஒரேயடியாய்க் கொட்டலை என்றாலும் இத்தனை காலம் இருந்து வந்த நிலைமைக்கு இப்போ எவ்வளவோ மேம்பட்டிருக்கும். நீண்ட நாள் எண்ணம் திட்டம் செயல் வெற்றி பெறும். ஏனெனில் இப்பதான் உங்களுக்கு அதைச் செயல்படுத்தும் தைரியமும் தன்னம்பிக்கையம் வரும். கடந்த காலத்தில் உங்களை தவறாகவும்,ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் உங்களை நாடி வரும் காலம் வந்தாச்சுங்க. பாவம். அவங்களை கேலியோ கிண்டலோ செய்யாதீங்க (நீங்க அப்படிச் செய்பவர் இல்லைதான்) அவங்களுக்கு நன்னயம் செய்து வெட்கப்பட வையுங்க.

தனுசு

‘நண்பேண்டா‘ என்று  அகமகிழ்ந்து போய்க் கையில் உள்ளதையெல்லாம் தூக்கி நண்பர் களுக்குக் கொடுத்துவிட்டு அப்புறம் சாயம் வெளுத்தபிறகு முகம் வெளுக்க வேண்டாம். அங்கங்கு ஒரு கோடு போட்டு அவரவர்களை நிறுத்துங்க. மனைவி (அ) கணவர் வகையில் செல்வாக்கு  அதிகமாகும். அவங்க கிட்டேயிருந்து சொத்து சுக சேர்க்கை உண்டாகும். அதற்கும் மேலாக வேலை வாய்ப்பு அமையக்கூட சான்ஸ் உண்டுங்க. திருமணம் சுப காரியங்கள் நடக்கும்.  அல்லது நிச்சயதார்த்தமாவது முடிந்து திருமணத்தேதி உறுதியாகும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக கடன்பட நேரிடும். அதனால் என்னங்க. நல்லதுதானே. அவங்க வாழ்க்கையில் மிக நிச்சயமாக உயர்வடைவாங்க.

மகரம்

மனைவியின் / கணவரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனைவிக்கு சிறிய வைத்திய செலவும் செய்யும் நிலை வரும். உடனே டென்ஷன் ஆகாதீங்க. கடந்த காலத்தில் இருந்த அளவு பிரச்சைனை கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு இப்போதைக்கு இல்லவே இல்லை. எனவே சின்னதாக வரும் பிரச்சினை உடனடியாகத் தீரும். நீங்க பிசினஸ் செய்பவரா? எனில் தொழிலில் அதிக விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டியிருக்கும். எதிரியின் சூழ்ச்சிக்கு பலிகடா ஆகாமல் இருப்பது எப்படின்னு விழிப்புணர்வுடன் இருங்க. வாசலில் வாழை மரம் கட்டுவீங்க. பேச்சனால் ஏற்பட்ட பிரச்சினைகள் பேச்சினாலேயே தீரும். அலுவலகத்தைப் பொறுத்தவரை புது விசிட்டிங் கார்ட் அடிப்பீங்க. என் உச்சி மண்டையில் சுர்ரென்று கோபம் ஏறுது என்று குதிக்க  வேண்டாம். ஓம்சாந்தி என்று அமைதிப்படுத்திக் கொள்வது நல்லது.

கும்பம்

மம்மியுடன் மல்யுத்தம் டாடியுடன் கொஞ்சல் என்று பொழுது போகும். அழகான புதிய வாகனம் வாங்குவீங்க. மனசுக்குப் பிடிச்ச வகையில் திருமணம் நடக்கும். எதுவுமே ஒரு நாள் இருந்த மாதிரி மறுநாள் இருக்காது. பொறுமையா இருங்க. நல்லதே நடக்கும். கௌரவம் செயல் தன்மை கீர்த்தி செல்வாக்கு புகழ் பெருமை ஆகிய எல்லாமும் உங்க அட்ரஸைத் தேடிக்கிட்டு வரும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். சமயோசித புத்தியால் நினைக்கும் காரியம் வெற்றி பெறும், புது முயற்சிகள் வெற்றியையும் ஆதாயத்தையும் தரும். குடும்பத்தில் நிம்மதியான போக்கு நிலவும். முன்பிருந்த தாழ்வுகள் மாறித்  தலைநிமிர்ந்து வாழ வழிபிறக்கும்.

மீனம்

குடும்பத்தில் சுப மங்கள விஷயங்கள் நடைபெறும். இது நாள் வரை தடைப்பட்ட திருமணம், புத்திரபாக்கிய தடைகள் விலகி குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும் அல்லது அட்லீஸ்ட் அவை பற்றிய நல்ல செய்திகளாவது வரும். உத்தியோகத்தில் பணிமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். மேலும் விரும்பிய ஊர்களுக்கு மாற்றல் கிடைக்கவும் வாய்ப்பிருக்குங்க. வேலையில் மேலும்மேலும் மேன்மைதான். அரசாங்கம் பெரிய நன்மை அளிக்கப்போகுது. கணவருக்கு/ மனைவிக்கு நல்லது நடக்கப் போகுதுங்க. இப்போதே சோப் போட்டு வெச்சுக்குங்க. வங்கி இருப்பு குறையக் குறைய டென்ஷன் ஏற வேண்டாம். வந்தது போகும் என்பது போல் போனது வரும்! அந்த விஷயத்தில் கொஞ்சம் பொறுமையா இருங்க.

கார்ட்டூன் கேலரி