மேஷம்

மிக அழகிய வாகனம் அமையும். புதிய எழிலான வீடு வாங்குவீர்கள். உங்கள் திருமணத்திற்காகவே நிறைய சந்தோஷச் செலவுகள் செய்ய வேண்டி வரலாம். கலைத் துறையையுச்  சேர்ந்தவர்களுக்கும் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் லாபம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். திடீர் அதிருஷ்டங்களை எதிர்பார்க்க வேண்டாம் உழைப்பை மட்டுமே நம்புங்க. இந்த ஒரு குணம்தாம்மா எனக்கு உங்ககிட்ட வருத்தம் தருது. என்னன்னு கேட்கறீங்களா? அது  ஏங்க தன்னம்பிக்கையே இல்லாம இருக்கீங்க? உற்சாகமா இருங்க. வெற்றி காத்திருக்கே!

சந்திராஷ்டமம் : 28.05.2018 முதல் 31.05.2018 வரை

ரிஷபம்

குடும்ப அங்கத்தினர்கள் சம்பந்தப்பட்ட கவலைகள் தீரும் என நம்பலாம். தந்தையின் வாழ்வில் திடீரென்று முன்னறிவிப்பு ஏதுமின்றி நன்மைகள் அதிகரிகக்கும். கொடுங்கோல் பாஸ் வேறு வேலைக்குப் போய் அன்பான பாஸ் அருகில் வந்து தட்டிக் கொடுப்பார். திடீர் லாபங்கள் வரும்.  பளிச்சென்று உங்களிடம் ஒரு மாற்றம் உங்களுக்கே தெரியும். மேடை போட்டுப் பாராட்டுவாங்க. மனதில் நிம்மதியும் சந்தோஷமும் பெருகும்.சகோதரர்களுடன் குருக்ஷேத்திர யுத்தமெல்லாம் வேண்டாம்.உங்க மனசில் நீங்களே மனசில் நல்ல சிந்தனைகள் விதைப்பீங்க. வெரிகுட்.

மிதுனம்

மாணவர்கள் தங்களுக்கு இத்தனை திறமை இருக்கிறதா என்று தாங்களே வியக்குமளவு வெற்றி பெறுவார்கள். பேச்சே வேண்டாம். மாட்டிக்காதீங்க. வாயை மூடிக்கிட்டிருங்க. பிரச்சினையே வராது. மகனோடு/ மகளோடு உலக யுத்தம் வேண்டாம். வாக்கினில் கொஞ்சம் சர்க்கரை பூசிக் கொள்வது  நல்லது (உங்களுக்கும் மற்றவர்களுக்கும்). உங்க பிசினஸ் அருமையாய் பிக் அப் ஆகி மனசு முழுக்க சந்தோஷம் நிரப்புங்க. டோன்ட் ஒர்ரி.  கடமையைப் பாட்டுக்குச் செய்துக்கிட்டே போங்க. அகலக்கால் மட்டும் இப்போதைக்கு வைக்க வேண்டாம். புதிய வேலை மாற விரும்பினால் அதற்கு இதுவே உகந்த நேரம்.

கடகம்

தயவு செய்து புகழைத்தலைக்கேற்றிக்கொள்ளாதீஙகப்பா. ”நான் என்னங்க செய்துட்டேன். எல்லாம் ஆண்டவன் செயல்” என்ற வசனத்தை உருப்போட்டு நெட்டுரு செய்து தேவையானபோதெல்லாம் பயன்படுத்திக்குங்க. பேச்சில் கவர்ச்சி கூடும். அதனால் லாபமும் கூடும். வண்டியை கவனமாக ஓட்டுங்கள். குடும்ப நிகழ்வுகளில் சற்று மெதுவான போக்கு இருக்கலாம். அதைக் கண்டு பயம் எதுவும் வேண்டாம். அரசாங்க உத்யோகம்  அல்லது வங்கி உத்யோகம் கிடைக்கும். பாஸ்போர்ட் விஸா போன்றவற்றிற்காகக் காத்திருந்தவர்களுக்கு விரும்பியபடியே கிடைக்கும். எனினும்… நீங்கள் கடன் மனு செய்திருந்தால் அது கிடைப்பதற்குக் காத்திருக்க வேண்டி வரலாம்.

சிம்மம்

டாடியின் புத்திசாலித்தனம் அலுவலகத்தில் அவருக்குப் பெயர், புகழ் பாராட்டை மட்டும் அல்லாமல் அவார்ட்/ ரிவார்ட் /பணம் என்பனவற்றையும் இணைத்துக் கொடுக்கும். சகோதர சகோதரிகள் வாழ்வில் எதிர்பார்த்த நன்மைக்கு இன்னும் கொஞ்சம் வெயிட்டிங் லிஸ்ட்! ஆடை ஆபரணங்களுக்காகச் செலவு செய்வீர்கள். இருப்பதால் லாபம் அதிகரிக்கும். ஒண்ணா… ஒரேயடியாய் உங்களைப் பற்றி உசத்தியா நினைச்சுக்கறீங்க, இல்லாட்டி மொத்தத் தன்னம்பிக்கையும் வடிஞ்சு ஒரு ஓரமாய் உட்கார்ந்துடறீங்க. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைன்னு ஒண்ணும் இருக்கு. அதைக் கண்டுபிடிச்சு செட்டில் ஆயிடுங்க.

கன்னி

தந்தை வழி உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வாகனங்களால் சிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். முன் ஒரு காலத்தில் செய்தீங்களே முயற்சி…அது இப்போ பலன் கொடுக்கும். கவர்ன்மென்ட் வேலை கிடைக்கும். மறந்தே போன நன்மைகள் உங்களை வந்தடையும்.  எந்தப் புது முயற்சிக்கும் முன்பாக நல்லவங்களோடு கலந்து நாலையும் யோசிங்க. கலைத்துறை சார்ந்த தொழில் வளரும். மனதறிந்து எந்தத் தப்பும் செய்யாதீங்க. முடிந்தேவிட்டது என்று நீங்க கைவிட்ட விஷயங்கள் எல்லாம்  திடீர்னு துளிர்விட்டுக் காற்றில் ஆடி வயிற்றில் பல லிட்டர் குளிர் பால் வார்க்கும்.

துலாம்

மம்மிகூட சண்டை வேண்டவே வேண்டாம். எப்படியும் உடனே சமாதானமாகி ”சாரிம்மா” என்று அசடு வழிய வேண்டி வரும். தாயாரின் உடல் நிலையை நன்றாய்க் கவனித்துக் கொள்ளுங்கள். அதல்லவா அதிக முக்கியம்? கல்யாணம்,கச்சேரி, கொண்டாட்டாம், சந்தோஷம்…இதோ வந்தாச்சே! குடும்பத்தில் யாருக்கோ குவா குவா உண்டு. பணத்தை எண்ணக்கூட நேரம் கிடைக்காதுங்க. சூப்பர்.  ஜாலியான பொழுது போக்குக்காக வயலில் விதை நெல் தூவுவது போல் பணத்தை இறைக்க வேண்டாம். திருமணம் நிச்சயமாகவில்லை என்று காத்திருந்தவர்களுக்கு ‘ ஓ இத்தனை நல்ல காரணத்தால்தான் தடைப்பட்டதா என்று மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

குழந்தைகளின் நலனுக்காக நிறைய செலவு செய்வீங்க. அதனால் என்னங்க? நல்ல செலவு. நல்லபடியா பலனளிக்கும் செலவு. எனவே ஜமாயுங்க. மம்மி டாடிக்குத் தனிப்பட்ட முறையிலும் வெற்றிகள் உண்டு…. உங்க மூலமாகவும் பெருமைகள் உண்டு. சாப்பிடவும் தூங்கவும் திரைப்படம்பார்க்கவும் கச்சேரி கேட்கவும் நேரம் இல்லைன்னு அங்கலாய்க்காதீங்க. இப்போது செய்யும் பணிகளுக்கு ஏராளமான லாபம் உண்டு. எனினும் நேரமே இல்லை என்றாலும் சாப்பாட்டு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.  

தனுசு

லாபம் கூடும். திடீர் அதிருஷ்டம் டெரஸைப் பிய்த்துக் கொண்டு கொட்டும். பொறுமையை மட்டும் கைவிடவே கூடாது. நினைவில் வையுங்கள். மகன் அல்லது மகளின் முயற்சிகள் வெற்றபெறும். பச்சை மிளகாயைப் படக்கென்று கடித்த மாதிரி வார்த்தைகளை விநியோகம் செய்ய வேண்டாம். சுருக்கமாய்ச் சொன்னால் கனி இருக்கக் காய் பறிப்பானேன்? இனிமையாய் இருங்க. தன்னிச்சையாய் நல்லதே நடக்கும். கணவருக்கு/ மனைவிக்கு உயர்வுகள் தன்னிச்சையாய்க் கிடைக்கும். செலவுகள் எவ்வளவு இருந்தாலும் அவையெல்லாம் சுப செலவுகள்தான். அவற்றால் நன்மையும் மகிழ்ச்சியும் சந்தோஷமும்தான் கிடைக்கும்

மகரம்

புதிதாய் அறிமுகமான ஒரு பெண்மணி மூலம் நன்மைகளும், லாபமும், பெருமையும் வலது காலை எடுத்து வைத்து வரும். கணவர்/ மனைவிக்கு விமானம் ஏறிக் கடல் தாண்டிச் செல்லக்கூடிய பயணம் அமையும். புதிய வாகனம் அல்லது வீடு அல்லது இரண்டும் வாங்குவீர்கள். தாயாருக்கு நன்மையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஸ்பீட் பிரேக்கர் போட்டாற்போல் வேகம் குறையும். அதுவும் நன்மைக்குத்தான் என்று எடுத்துக்கொண்டு அடுத்த வேலையைக் கவனிச்சுக்கிட்டே போங்க. குழந்தைகளால் ஏற்பட்டிருந்த கோபங்களும் ஆத்திரங்களும் மகிழ்ச்சி சுனாமியால் இருந்த இடம் தெரியாமல்  போயிருக்கும்

கும்பம்

குழந்தைகள் தங்களின் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவார்கள் / மேடையில் பரிசு வாங்குவாங்க. திருமணமாகிக் குழந்தைகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. சம்பளம் கூடும். பொறுப்பும் அதிகரிக்கும். பாராட்டு எல்லாவற்றையும்விட அதிகமாகும். அரசாங்கத்திடமிருந்து பணம்/ லாபம்/ நல்ல செய்தி வரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கூடிவரும். அரசாங்க நன்மையும் கௌரவமும் ஒருங்கே கிடைக்கும். தாயாருக்கும் உங்களுக்கும் நடுவில் நல்லுறவும் நல்லிணக்கமும் இருக்கும். மெயில்பாக்சில் உங்களை மகிழ்ச்சியில் துள்ளச் செய்யும் செய்தி வரும்

சந்திராஷ்டமம் : 24.05.2018 முதல் 26.05.2018 வரை

மீனம்

உங்கள் வயிற்றில் பிறந்த மகன் அல்லது மகள் புகழ் அதிகரித்துப் பாராட்டுப் பெறுவார்கள். தலை கழுத்துக்கு மேல் கரெக்டாய்ப் பொருந்தியிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். கட்டுமானத் துறைகளில் பணி புரிபவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் லாபமும் புகழும் கூடும். இந்தப் பக்கத்திலிலுந்து ஒரு லாபம் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு லாபம் என்று வரும் . சகோதர சகோதரிங்க நன்மைக்கு மேல் நன்மை செய்வாங்க. பொதுவாகவே குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். திடீர் நன்மைகளைக் கட்டாயம் எதிர்பார்க்கலாம். ஆரோக்யத்தில் முழு கவனம் செலுத்துங்க.

சந்திராஷ்டமம் : 26.05.2018 முதல் 28.05.2018 வரை