வார ராசிபலன்: 28.02.2020  முதல் 5.03.2020வரை! வேதா கோபாலன்

மேஷம்

எதையும் எதிர்கொள்ளும் தைரியம் தைரியம் ஒன்று திடீர்னு வந்த பச்சக்குனு உங்க மேல ஒட்டிக்கும். இந்த வாரம் பல சந்தோஷங்களைச் சந்திக்கப்போறீங்க. உங்களுக்காகவோ உங்க குடும்பத்தில் உள்ளவங்க யாருக்காவதோ… பொன், பொருள், ஆடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி குடும்பத்தில் ஹாப்பியான சூழல் உருவாகும். தாயின் உடல் நலத்தில் கொஞ்சம் வழக்கத்தைவிட அதிக அக்கறை கொள்ளணுங்க. ப்ளீஸ்.  குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றிக் கொஞ்சம்கூடத் தேவையே இல்லாத அநாவசிய டென்ஷன் ஒண்ணு மனசில் ஓடிக்கிட்டிருக்கில்ல.. அதைத் தூக்கி அந்தண்டை போடுங்க. அவங்க நல்லபடியாத்தான் வந்துக்கிட்டிருக்காங்க. கற்பனை பயமுங்க அது.                                                 

ரிஷபம்

தேவையற்ற அலைச்சல்கள் நீங்கி நிம்மதி ஏற்படுமுங்க. மாணவர்கள் கொஞ்சம் அதிகக் கவனத்துடன் இருங்கப்பா. படிப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அன்றைக்கு உள்ள பாடங்களை அன்றே படித்து விட வேண்டும். அது போதும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கண்டிப்பாக நிச்சயிக்கப்படும். அதிலும் மனசுக்குப் பிடிச்ச இடமாக அமையும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்றாலும் விரைவில் சூப்பர் வேலையில் அமர்வீங்க. அதிகமான தொகையை தேவை இல்லாமல் இவ்வெஸ்ட் செய்ய வேண்டாமுங்க. அலுவலகத்தில் உங்க வேலை சுமை அதிகமாக இருக்குமுங்க. ஸோ வாட்? உங்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பாங்களே. அதனால் சமாளிச்சுடுவீங்க.

 மிதுனம்

சாமர்த்தியமும், திறமையும் மட்டுமில்லாமல் அபரிமிதமான புத்திசாலித்தனமும் இருப்பதால் வாழ்க்கையை அருமையாக எதிர்கொள்வீங்க.  உங்க  வீட்டில் சுப செலவுகள் ஏற்படப்போகுதுங்க. திருமணத்திற்காகக் காத்துக்கிட்டிருக்கீங்களா நீங்க? அப்டியானால் நிச்சயம் திருமணம் நடக்கும். ஹாப்பியான வாழ்க்கை உங்களுக்கு அமையும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு  இதே.. உடனே குழந்தை பாக்கியம் கிடைத்து விடும். உங்கள் தகுதிக்கும், நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்திலும், நீங்கள் எதிர்பார்த்த பதவியிலும், உங்கள் மனதிற்கு பிடித்த படி ஷ்யூரா வேலை கிடைக்கும். இந்த வார ஆரம்பமே உங்களுக்கு அமோகம் தான்.

கடகம்

பல நன்மைகள் கிடைக்கப் போகின்றனவே. சுப காரியங்களுக்கு இத்தனை நாட்களாக இருந்த தடையெல்லாம் விலகிடுங்க. முன்னேற்றம் அடைய கூடிய காலம் இனி படிப்படியா உங்களை உயர்த்தும்.  புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பும் உள்ளது. நீங்க பிசினஸ் செய்பவரா? எனில் உங்க தொழில் அமோக வளர்ச்சி பெறும். தேவையற்ற அலைச்சல்கள் இனி கிடையாதுங்க. நிம்மதி பெறுவீங்க. தேவைப்பட்டால் மட்டும் கடன் வாங்குவது பற்றி யோசிங்க. உங்கள் வார்த்தையில் மட்டும் சற்று நிதானம் தேவைங்க. அவசியமாக பேச வேண்டிய இடத்தில் மட்டும் பேசுங்க போதும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உண்டு.

சிம்மம்

உங்கள் அலுவலகத்தில் ராஜமரியாதை கிடைக்கப் போகுது பாருங்களேன். அந்த அளவு உழைக்கப் போறீங்க. முன்பெல்லாம் உழைச்ச உழைப்புக்கேற்ற சம்பளமும் இல்லை.. பாராட்டும் இல்லைன்னு ஒரு நிலை இருந்துக்கிட்டிருந்த தில்லையா? இப்போ ஆப்போசிட்.  இதுவரை பட்ட கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும்.  அலுவலக நண்பர்களும் உடன் படிப்பவர்களும் வலிய வந்த உதவிகள் செய்வாங்க. வருமானத்தில் தடை, கெட்ட பெயர், வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகள், இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறப்போகுதுங்க. குடும்பத்தில் வாக்குவாதம் சற்று இருக்கும்தான். விட்டுக்கொடுத்து பேசுவது நல்லதுங்க.  வெற்றி உங்களுக்குத்தான். உங்க குழந்தைங்களால சந்தோஷமும், மனநிம்மதியும் கிடைக்கப்போகுதுங்க.

கன்னி

இனிவரும் நாட்களில் சந்தோஷம் அதிகரிக்கும்படியான சம்பவம்ஸ்தான் அடுத்தடுத்து நிகழும். தந்தை வழி உறவுகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பாங்க. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட விரிசல்கள் இனி மறைந்து ஒற்றுமை நிலவும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. குடும்பத்துடன் கோவில்களுக்கு சுற்றுலா பயணம் செல்வீங்க.  மருத்துவ செலவு கொஞ்சம் ஏற்படும். ஆனால் பயப்படும் அளவு இல்லீங்க. நீங்க மாணவரா? எனில் படிப்பில் ஆர்வம் அதிகரித்து முன்னேற்றம் அடைவீங்க. சோம்பலைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டுப் பெற்றோரின் அறிவுரைப்படி நடந்துக்கிட்டு முன்னேற்றம் காண்பீங்க. படிப்பை பாதியில் விட்ட ஸ்டூடன்ஸ்  உங்க படிப்பைத்  தொடரப்போறீங்களே. 

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை

துலாம்

அலுவலகத்தில் பாஸிடம் பேசும்போது… வார்த்தையில் மரியாதை இருக்கும்படி பார்த்துக்குங்கப்பா .. ப்ளீஸ். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நிதானமாக முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது.. அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேணாங்க. மேரேஜ் ஆனவங்களுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கப்போவது உறுதியாவதற்கு வாய்ப்பு உள்ளது. குழந்தை உள்ளவங்களுக்கு அவங்களால பெருமிதமும் சந்தோஷமும் கிடைக்கும். நீங்க எதிர்பார்த்த வேலை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வேலைக்கு செல்வது நல்லதுங்க. சம்பளம் மெல்ல மெல்லத்தான் உயரும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை

விருச்சிகம்

பலனை எதிர்பார்க்காமல் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுக்கிட்டே இருங்க. வருங்காலத்தில் வெற்றி ஷ்யூராக் கிடைக்கும். பிசினஸ் செய்வர்கள் முதலீட்டை படிப்படியாக உயர்த்திக் கொள்வது நல்லதுங்க. பேராசையில் பெரிய தொகையை முடக்காதீங்க. சுப செலவுகள் ஏற்படும். நன்மைகளும் தீமைகளும் சமமாக நடக்கக்கூடிய வாரமாக இது உங்களுக்கு அமையும். அவற்றில் நன்மைகள் அதிகமாக இருக்கும்.  உங்களின் விடாமுயற்சியாலும் , கடுமையான உழைப்பினாலும் இயல்பாவே முன்னேறிடுவீங்க. பொறாமை .. கோபம் இவை இருந்தால் கொஞ்சம் தூக்கிப்போட்டு மனத் தெளிவோடு இருங்க. ஆரோக்கியத்தில் கவனம் தேவைங்க.

சந்திராஷ்டமம் : மார்ச் 3 முதல் மார்ச் 5 வரை

தனுசு

குடும்ப தலைவிகளுக்கு உங்கள் குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். மனப்பக்குவமும், வார்த்தைப் பக்குவமும் அவசியம் தேவைங்க. கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சமாளிப்பீங்க.  உடல் நலனில் மிக அதிக கவனம் தேவை. குறிப்பாக சாப்பாட்டு விஷயத்தில் கேர்ஃபுல்லா இருங்க. மாணவ மாணவீஸ்.. உங்க படிப்பிற்கான செலவு அதிகரிக்க தொடங்கும். மற்ற விஷயங்களைத் தவிர்த்து விட்டுப்  படிப்பில் அதிக கவனம் செலுத்தப்பாருங்க. ப்ளீஸ். வேலை கிடைப்பதில் இருந்து வந்த  சங்கடங்கள் நீங்கும். எனினும்..  கிடைக்கும் வேலை எதுவாக இருந்தாலும் அதைத் தக்க வைத்துக்குங்க.  போகப்போக நல்லபடியா முன்னேறப்போறீங்க. குறிப்பா வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

மகரம்

எதிர்பார்ப்பு இல்லாமல் தாங்க உழைக்கணும். சம்பள உயர்வு பதவி உயர்வு மெதுவாகத்தான் வரும். அவசரமே படாதீங்க.  ஆனா ஒன்று உறுதியாச் சொல்ல முடியும். தடைப்பட்ட சுப காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். கடன் பிரச்சினை படிப்படியாகத் தீரும்.  ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களாகப் போகணும்னு நினைச்சுக்கிட்டிருந்த  கோவிலுக்குப் போயிட்டு வர வாய்ப்பு கிடைக்கும். பல காலமாய்ச்  சந்திக்கணும்னு  நினைச்சுக்கிட்டிருந்த நண்பர்களை மீட் பண்ணுவீங்க.  பயணங்களின் போது கவனமாய் இருங்க. உங்க ஆரோக்கியத்தில் கவனம் தேவைங்க. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஆனால் சற்று தாமதமாகும். உறவினர்களிடம் கொஞ்சம்  கேர்ஃபுல்லா இருக்கணுங்க.

கும்பம்

எதையும் சமாளித்து தொழிலிலும் உத்யோகத்திலும் முன்னேற்றம் அடைய சாதகமான நேரம் இது. கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீங்க. அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது இடமாற்றம் பற்றி நீங்க கவலைப்பட்டுக்கிட்டிருந்த விஷயம் சந்தோஷமாக முடிவுக்கு வரும்.  சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீங்க. சொந்த வீடு, வாகனங்கள், விலை உயர்ந்த பொருட்கள் போன்றவற்றை வாங்கப் போறீங்க. நீங்க செய்யும் / செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி நெருக்கம் ஏற்படுமுங்க. திருமணம் ஆகாதவங்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும். குழந்தை இல்லாதவங்களுக்கு அந்த பாக்கியத்தை இறைவன் தரப்போறான் பார்த்துக்கிட்டே இருங்களேன். 

மீனம்

குடும்பத்தில் இத்தனை காலமாய்த் தீராமல் இருந்து வந்த பிரச்சினைங்க எல்லாம் படிப்படியாத் தீருமுங்க. சுபச் செலவு ஏற்படும். செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீங்க. ஆனாலும் நீங்க முன் யோசனையுடன் செய்து வைத்திருந்த சேமிப்பு உங்களுக்கு ரொம்பவே கை கொடுக்குமுங்க. வெளியூர் மற்றும் வெளிநாட்டில் உள்ள குழந்தைங்களைப் போய்ப் பார்க்க டிக்கெட் புக் செய்துடுவீங்க. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவீங்கப்பா. பயத்துடன் இருந்தவங்களுக்கு நல்லபடியாப் பட்டப்படிப்பு வெற்றிகரமா முடிஞ்சு..  வேலைவாய்ப்பும்  கிடைக்கும். கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல விதமான முன்னேற்றம் கிடைக்குமுங்க. குறிப்பா சினிமாத்துறையில் உள்ளவங்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

கார்ட்டூன் கேலரி