Random image

வார ராசிபலன்: 28.12.2018 முதல்  03.01.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்

2019 சிறப்பாக அமைய வாழ்த்துகள்

கவர்ச்சி அம்சம் உள்ள உங்களின் குடும்ப வாழ்க்கை அமோகமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல காரணத்துக்காகப் பிரிவு ஏற்படலாம். இட்ஸ் ஓகே. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வீடியோ காலில் பிரிவுத் துயரம் பேசும் காதல் டூயட்களைப் பாடல்களைப் பாடி முடிக்கறதுக்குள்ளவே சேர்ந்துடுவீங்க. மிக திடீர் செலவுகள் வரும். கவனமா.. ரெடியா இருங்க. அம்மா வெளியூர்  அல்லது வெளிநாடு போவாங்க. திடீர்னு உங்களை எல்லாரும் மதிக்க ஆரம்பிப்பாங்க. குறிப்பா எதிர்பாலினத்தினர் உங்களிடம் அதிகம்க இழைவாங்க. சற்றே கவனமாயிருங்க. பணம் புரளும். சேமியுங்களேன்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 2 முதல் ஜனவரி 4 வரை

ரிஷபம்

2019 சிறப்பாக அமைய வாழ்த்துகள்

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது. என்றைக்கோ உழைத்த உழைப்பெல்லாம் இன்றைக்கு வங்கி இருப்பாக உருமாறி உட்காரும். நிறைய அலைச்சல் ஏகப்பட்ட பயணங் கள் இருக்கும். குடும்பத்தில் திருமணம் அல்லது டெலிவரி மூலம் ஒரு புதிய நபர் இணைந்து ரேஷன் கார்டில் இடம் கேட்பார்கள்.எதிர்பாலினத்தினரின் நட்பு திடீர்னு அதிகமாகும். உங்களுக்கு அவங்களால நன்மையோ இல்லையோ.. அவங்களுக்கு உங்களால்  நிச்சயமாய் நன்மை உண்டாகுங்க. சகோதர சகோதரிகளுடன் அப்படி ஒண்ணும் பிரமாதமான நட்புறவை எதிர்பார்க்க முடியாது என்றாலும் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா பெரியஅளவில் சண்டை சச்சரவெல்லாம் வராமல் இருக்கும் என்பதே பெரிய குட் நியூஸுங்க.

மிதுனம்

2019 சிறப்பாக அமைய வாழ்த்துகள்

குழந்தைங்க பிரபலமாவாங்க.  வளர்ந்த குழந்தைங்களா? அப்ப சரி. தன் காதல் விவகாரங் களை உங்க கிட்ட உடைச்சு சொல்லிடுவாங்க. பேச்சில் மிக (இதைப் பல முறை சொல்லிக்குங்க) கவனமாய் இருங்க. சட்டென்று ஒரு வார்த்தை விஷம் மாதிரி வெளிப்பட்டு, அடுத்த நிமிஷம் கையை உதறிக்கிட்டு, ’அடடா.. தப்பு பண்ணிட்டேனே’ன்னு நீங்க ரிக்ரெட் செய்து முடிப்பதற்குள் பகை மளமளன்னு குட்டிபோட்டுப்பெருகிடும். அலுவலகத்தில் கொஞ்சமும் எதிர்பார்க்காத உயர்வு ஒன்று இந்த வாரத்தில்… மாதத்தில் கிடைக்கும்.  அதிலெல்லாம் சந்தேகமே இல்லை. பணம் என்பது ஒரு பெரிய கவலைகொடுக்காது.

கடகம்

2019 சிறப்பாக அமைய வாழ்த்துகள்

கொடுத்த பொறுப்பை நிறைவேற்றிட்டீங்க. இனி எல்லாம் சுபமே. குழந்தைகளுக்காக நிறையக் கவலைப் பட்டீங்க…வேதனைப் பட்டீங்க. எல்லாமும் சரியாகிவிடும். அலைச்சல் கள் கடந்த ஒன்றரை வருஷங்களாய் உங்களை ஆட்டிப்படைச்சது போக இப்போது திடீர்னு ஓரிடத்தில் அசையாம இருப்பது நிம்மதி பிளஸ் சந்தோஷம் அளிக்கும். இப்போது இருக்கும் வேலையையே சரியாகப் பிடித்துக் கொண்டால் உங்களுக்கு பெரிய நன்மைகள் காத்திருக்கின்றன. அலைபாயுதே கண்ணா என்று தடுமாற வேண்டாம்.  இருப்பதை விட்டு ஓடுவதைப்பிடிக்க நினைச்சா அது ஓடும்.. இது பறந்துவிடும். பொறுப்பை உணர்ந்து செயல்படுங்க. கடமையை சரிவர செய்தாகணும்…தட்டிக் கழிக்கப் பார்க்காதீங்க.

சிம்மம்

2019 சிறப்பாக அமைய வாழ்த்துகள்

குட்டீஸ்க்காக நிம்மதியடைவீங்க, மகிழ்ச்சியடைவீங்க, பெருமைப்படுவீங்க.ஆரோக்யமா ஃபைன், நிதி நிலையா திருப்திகரம், குடும்ப மகிழ்ச்சியா சூப்பர்னு உங்க லிஸ்ட்டில் உள்ள எல்லா அயிட்டமும் பச்சை ஸ்கெட்ச் பேனாவால டிக் வாங்கும். உடல் நலம் நன்றாகவே இருக்கும். கல்வியில் உங்களை மேலும் மேம்படுத்திக் கொள்ளப் போறீங்க. இத்தனை காலத்தில் இந்த அளவு செலவுகள் கட்டுப்பட்டு நீங்க பார்த்ததே இல்லை. முன்பு வரவு எட்டு டாலர். செலவு பத்து  டாலர்னு இருந்துச்சு. இப்ப அப்டியே ஆப்போசிட். சந்தோஷத்தில் குதிக்காம கன்ட்ரோல் பண்ணிக்குங்க.  சாப்பாட்டு விஷயம் = ஆரோக்ய விஷயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. கண்டதை/ கண்ட நேரத்தில்/ கண்ட இடத்தில்/ கண்டபடி சாப்பிடாதீங்க. அளவா.. நேரம் தவறாமல் சுகாதார இடத்தில் சாப்பிட்டால்தான் ஆரோக்யம் பிழைக்கும்.

கன்னி

2019 சிறப்பாக அமைய வாழ்த்துகள்

பெற்றோர்களுக்குப் பெரிய பொறுப்பு ஒண்ணு முடியும். ஹப்பாடா!வெளியூர் வெளிநாடு செல்ல நிறைய வாய்ப்பு இருக்கு. எதையும் கவனத்துடன் இரண்டு முறை சரிபார்த்து செய்யுங்க. குறிப்பா அலுவலக வாசிகளுக்கு இந்த வாக்கியம் மஞ்சள் நிற ஹைலைட். உங்கள் வாக்கு ஒவ்வொன்றும் கவர்ச்சிகரமாக வெளிப்படும். அலுவலகத்தில்/ பள்ளிக் கூடத்தில்/ அக்கம்பக்கத்தில்/ உறவினர் மத்தியில் பெரிய கதாநாயகனாக/ நாயகியாக வலம் வரும் அளவுக்கு புகழ் அதிகமாகும். மத்தியஸ்தம் என்றும் மேடைப்பேச்சு என்றும் கலக்குவீங்க. செல்வாக்கு என்பார்களே அது அதிகமாகிக்கிட்டே போகும்.  நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்பவராக அமைவர். அந்த நண்பர்கள் நீங்கள் கற்பதற்கும் உதவி செய்யும் குருவாக அமைவார்கள்.

துலாம்

2019 சிறப்பாக அமைய வாழ்த்துகள்

வார்த்தைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டுக்கிட்டிருந்த நிலை மாற்றி வாக்கினால் நன்மை, லாபம், பெருமை, முன்னேற்றம், மகிழ்ச்சி என எல்லா நல்ல விஷயங்களும் ஏற்படும். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகக் கட்டுப்படாமல் இருந்த செலவுகள் எல்லாம் நல்ல முறையில் கட்டுக்கடங்கி இது போல் பேங்க் பேலன்ஸை நீங்க கண்ணால பார்த்து ரொம்ப காலம் ஆச்சுன்னு முகம் மலர்வீங்க. மனமும் மலரும். குடும்பத்தில் சந்தோஷ சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான சந்தோஷம் நிலவும். அலுவலகத்தில் கொஞ்சம் கெடுபிடியாகத்தான் இருக்கும். பலகாலம் கழித்து தாய் நாடு/ சொந்த கிராமம் செல்லுவீங்க. வாழ்க்கை வசதிகள் குறைந்ததாய் நீங்களாகக் கற்பனை செய்து புலம்ப வேண்டாம். முன்பைவிட இப்போ அதிருஷ்டம் அதிகமாகியிருக்கா இல்லையா? உண்மையைச்  சொல்லுங்க. உக்கும்! அது!

விருச்சிகம்

2019 சிறப்பாக அமைய வாழ்த்துகள்

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த வருடம் நிறையப்புதிய பொறுப்புக்கள் வந்து அதனால பர்ஸ், பீரோ, பாஸ்புக் எல்லாம் நிறையும். அலுவலகத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா அடி எடுத்து  வைக்கறது நல்லது. திருமணம் நிச்சயமாகும். சந்தோஷமான விஷயங்களுக்காகப் பொழுது போகும். திடீர்னு தியானம் யோகா என்று கவனம் நல்ல விஷயங்களில்.. பாசிட்டிவ் திசையில் பயணிக்கும். செலவுன்னா செலவு அத்தனையும் சந்தோஷமளிக்கும் செலவுங்கதான் போங்க. டிரஸ் வாங்கவும் தங்கம் வைரம்னு வாங்கவும் அடிச்சுவிடுவீங்க. என்ஜாய். ஜமாயுங்க. இந்த வாரம் நல்ல நியூஸ் இருக்கு. பார்ட்டி, ட்ரீட்டுன்னு ஜாலியாவும் இருப்பீங்க. அதே சமயம் வெளியூர் வெளிநாடுன்னு பயணங்களும் உண்டு. வேண்டாத எறும்பு சைஸ்.. அல்லது கடுகு சைஸ் மேட்டருக்கெல்லாம் டென்ஷனாகிப் பல்கடிக்காதீங்க. பல் பிழைச்சுப் போகட்டும்

தனுசு

2019 சிறப்பாக அமைய வாழ்த்துகள்

நீங்க ஒரு தந்தையா/ தாயா? எனில் உங்கள் குழந்தைகளுக்கு மேலும் மேலும் குட் நியூஸ் உண்டு. உங்க சந்தோஷத்துக்கு இதைவிட வேற என்ன காரணம் வேண்டும்! நீங்க ஒரு மாணவரா/ மாணவியா எனில்  உங்களுக்குப் படிப்பில் உற்சாகம் படிப்படியாக உயர்ந்து பாராட்டும் பரிசும் வாங்குவீங்க, மகளுக்கோ, மகனுக்கோ.. ஏன் உங்களுக்கேயோ திருமணம் நிச்சயமாகி அந்த செலவுகளுக்காகக் கார்ட் தேய்க்கும்போது அடடா செலவாகிக்கொண்டிருக்கே என்று மனசு வருந்தாமல் இதற்குத்தானே ஆசைப்பட்டோம் என்று மனம் குதிக்கும் என்றால் பார்த்துக்குங்க. வார்த்தைகளை விடும்போது நூறு மடங்கு கவனத்துடன் பேசுங்க. எந்த வார்த்தையால் எந்தப் பலம் ஏற்படும் என்று தெரியாத நிலையில் ஜாலியாப் பேசறதா நினைச்சு மத்தவங்களைக் கிண்டல் செய்யவோ, சாபத்தை அள்ளி வீசவோ வேண்டாங்க.

மகரம்

2019 சிறப்பாக அமைய வாழ்த்துகள்

வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.பொழுது போக்குக்கு நிறைய நேரம் செலவிடுவீங்க. கண்டிப்பா அதுவும்தான் தேவை. ஆனா முக்கியமான விஷயங்களைக் கோட்டை விட்டுப்புடாதீங்க. ஃப்ரெண்ட்ஸ்க்குக் கடன் குடுக்கறேன் பேர்வழின்னு வாரி இறைக்காதீங்க. நட்புக்கு நட்பும் போயிடும் பணத்துக்குப் பணமும் போயிடும். பி கேர்ஃபுல் பா. எதையும் போஸ்ட்போன் செய்யாதீங்க. அப்புறம் என்று தள்ளிப்போடாமல் கடிகாரத்தி லும் காலண்டரிலும் ஒரு கண் வெச்சுக்கறது நல்லது. சொல்றதை சொல்லிட்டேன். அதுக்கு மேல உங்க இஷ்டம். கலைத்துறை.. எழுத்துத்துறை ஆகியவற்றில் உள்ளவங்களுக்கு அதிருஷ்டம் அடிக்கும். சந்தோஷமாகப் புதுப்புது வேலைகள் கிடைக்கும். புகழ் அதிகரிக்கும்.

கும்பம்

2019 சிறப்பாக அமைய வாழ்த்துகள்

தேவையில்லாத பயங்கள் எதுவும் வெச்சுக்காதீங்க. தைரியமாய் இருங்க. உங்களுக்கு எது அவசியம் எது அநாவசியம்னு கரெக்ட்டாய்த் தெரியும். மண்புழுவைப் பார்த்து மலைப் பாம்புன்னு அஞ்சி நடுங்குவாங்களா? அலுவலகத்தில் கொஞ்சமும் எதிர்பார்க்காத உயர்வு ஒன்று உடனடியாய்க்  கிடைக்கும். ஆனாலும் நீங்க எதிர்பார்த்த அளவுக்கு அது உசத்தியா இல்லைன்னு நீங்களா கம்பேர் பண்ணிக்கிட்டுப் புலம்பினா என்ன அர்த்தம்?  இப்போ இருக்கிற பெயர்ச்சிகளின்படி உங்களக்கு இந்த அளவு கிடைச்சதே பெரிய விஷயங்க. மேலதிகாரிங்ககிட்ட கொஞ்சம் பணிவாய்த்தாங்க போகணும். அதைவிட்டுப்புட்டு ரொம்பத்தான் முறுக்கிக்கிட்டும் முறைச்சுக்கிட்டும் இருந்தால் என்னங்க அர்த்தம். புதுப்புது லாபங்கள் கட்டாயம் கண்ணுக்குத் தென்படும்.

சந்திராஷ்டமம் :டிசம்பர் 28 முதல் டிசம்பர் 30 வரை

மீனம்

2019 சிறப்பாக அமைய வாழ்த்துகள்

உங்களுக்கு வழிகாட்டி போல் இருக்கும் ஒருவரால் இந்த வாரம் நன்மைகள் அதிகரிக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு அவரின் வழி காட்டுதல் பெரிய தூண்டுதலாக இருக்கும். வெற்றிகரமான வாரம் இது. அரசாங்க உத்யோகம் கிடைக்கும். ஒரு வேளை நீங்க ஏற்கனவே அப்படிப்பட்ட வேலையில்தான் இருக்கீங்கன்னா அரசு அதிகாரிங்களின் / அரசியல்வாதிகளின் கருணைப்பார்வை உங்க மேல விழும். வெளிநாட்டிலிருந்து பணவரவு நீங்கள் எதிர்பார்த்த மாதிரியும் எதிர்பாராதவிதமாகவும் கிடைக்கும். குழந்தைங்க வெளிநாட்டில் இருக்காங்களா. குட். அவங்க உங்ககிட்ட ரொம்பவும் அன்பாவும் ஆதரவாகவும் நடந்துப்பாங்க. ஒரு வேளை உள்நாட்டில் இருக்கும் மகன் அல்லது மகள் என்றால் அவங்களுக்கு வெகுநாட்களாய்க் காத்திருந்த வெளிநாட்டு வாய்ப்புக்கிடைக்கும்.

சந்திராஷ்டமம் :டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை