Random image

வார ராசிபலன்: 29.11.2019 முதல் 05.12.2019 வரை!   வேதா கோபாலன்

மேஷம்

வீட்டில் யாருக்காச்சும் திருமணம் நிச்சயமாகும்  அல்லது நிகழும். யார் கண்டதுங்க.. அது உங்களுக்கே கூட இருக்கலாம். அலுவலகத்தில் உங்களை மேலிடத்தில்  பாராட்டுவாங்க. அப்டியே சிறகு முளைச்சு வானத்தில் பறப்பது போல் உணர்வீங்க. அரசியல்வாதிகள் உங்க தொண்டர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீங்க. மேலிடத்தில் உள்ளவங்க அந்தப் பொறுப்பை உங்க கிட்ட குடுப்பாங்க. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வரும். ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்க ரொம்ப காலமாய்க் கனவு கண்டுக் கிட்டிருந்த விஷயங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேற ஆரம்பிக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவீங்க. பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த உறவினர்கள் மெல்ல வந்து சேருவாங்க்.  வார்த்தைகளில் நிதானம் வந்திருக்கிறது உங்களுக்கு. வெரி குட். இப்டியே இருந்துக்குங்க.

ரிஷபம்

அலைச்சலும் வேலைப்பளுவினால் ஏற்படும் தொந்தரவுகளும் சற்றே… லேசாக… வழக்கத்தைவிடவும் அதிகரிக்கும். அதனால் என்னங்க? இறுதியில் இத்தகை நிலைமைகள் எல்லாம் தன்னிச்சையாய் மாறும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களால் நன்மை உண்டாகும். வீண் வாக்குவாதங்கள் வேணாங்க.  அதுபோன்ற சூழல்கள் ஏற்பட்டால் அந்த இடத்தைவிட்டே விலகிடுங்க. அலுவலகவாசிகள் அங்குள்ள பிராப்ளம்ஸைச்  சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள்.  சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்க சான்ஸ் இருக்குங்க. ஆனால் வேலைப்பளு காரணமாய் , ஏண்டா இந்த மாற்றல் கேட்டு வாங்கினோம்னு யோசிக்க ஆரம்பிப்பீங்க. வெயிட் வெயிட். பொறுமையா இருந்தீங்கன்னா,  அப்பாடா சூப்பர் இடத்திற்கு வந்திருக்கோம் என்று ரியலைஸ் செய்வீங்கப்பா. ஷ்யூர். நீங்கவேணா பாருங்களேன்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 28 முதல் நவம்பர் 30 வரை

மிதுனம்

நீங்க பிசினஸ் செய்பவரா? எனில் வியாபாரத்தை தங்கள் நேரடிப் பார்வையில் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகுமுங்க. மற்றவர்களை நம்பி வியாபாரத்தை விட்டீங்கன்னா, அவங்க உண்மையில் நம்பகமானவர்தானான்னு உறுதி செய்துக்கிட்டு அப்புறம் விடுங்க.  விவசாயிகளுக்கு மகசூல் அருமையாய் இருக்கும். அலுவலகவாசிகள்உங்க புதிய முயற்சிகளிலும் துணிந்து ஈடுபடலாம். மேலிடத்திலிருந்து பாராட்டுக் கிடைக்கும். ஆனால் அதை உடனடியா எதிர்பார்க்காதீங்க.  சிறிது காலம் உங்களை உன்னிப்பாய் கவனித்துவிட்டுப்பிறகுதான் பாராட்டுவாங்க. வெறும் வாய் வார்த்தையாய் அமைந்த பாராட்டு மட்டும் இல்லீங்கோ. அவார்ட்.. ரிவார்ட்னு ஏதாச்சும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும்.  

சந்திராஷ்டமம்: நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை

கடகம்

நீங்க ஸ்டூடன்ட்டாய் இருந்தால் உங்க  கோரிக்கைகள்.. அல்லது எதிர்பார்ப்புகள் அல்லது விருப்பங்கள்  நிறைவேறும். ஆசிரியர்கள், பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க ஆரம்பிப்பீங்க. எனவே திடீர்னு நல்லபெயர் எடுக்க ஆரம்பிச்சு.. இதனால் உங்க டாடி மம்மிக்கும் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.  சிறிய நோய்கள் உள்ளவங்க உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. நீங்க உங்க ஆரோக்யத்தை கவனிக்க முடியாதபடி வேலை பளுவும் அலுவலகப் பொறுப்புகளும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதைவிட உடல்நிலை முக்கியம்னு  உறுதிய உங்ககிட்ட நீங்களே சொல்லிக்குங்க. குடும்பத்தில் வீண் விவாதங்கள் அவ்வப்போது ஏற்படும். அப்போ வாயை டைட்டா.. ஜிப் போட்டு மூடிக்குங்க. அலவலகவாசிகள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும். பட்.. சந்தோஷமா செய்வீங்க.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5 வரை

சிம்மம்

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரொம்பவும் நெருங்கிய உறவினர்களளோடு அனுசரித்து நடந்துக்கறீங்க. சூப்பர்.  அப்படி நடந்து கொள்வதின் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் செய்யறீங்க. குட். குட்.  உங்களின் பொருளாதார நிலையில் ஷ்யூராய் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளும் சரியான காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். சில சமயங்களில் காலில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டு சிறிய சிகிச்சைக்குப் பிறகு அது சரியாகிவிடும். தொலைதூர டிராவல்ஸ்ஸால் நல்ல ஆதாயங்கள் இருக்கும். பர்சனல் விஷயங்களைப் பொருத்த வரைக்கும் உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். குறிப்பாய்க் குழந்தைப் பேறு வேணும்னு ஏங்கிக்கிட்டிருந்தவங்களுக்கு சாக்லேட் செய்தி காத்திருக்கு. ஏற்கனவே டாடி மம்மி ஆகிவிட்டவர்களுக்குக் குழந்தைகள் வயிற்றில் ஐஸ் மில்க் வார்ப்பார்கள்.

கன்னி

உடல்நலம் மற்றிக் கொசுக்கடி சைஸுக்குச் சின்னச் சின்ன குறைபாடு இருந்தாலும் உங்கள் மனம் மட்டும் உற்சாகத்துடன் இருக்கும். எனவே  செயல்களில் வெற்றி இருக்கும்.  பிறருக்கு நீங்கள் கொடுத்த கடன்கள் சற்று தாமதமானாலும் வட்டியுடன் வந்து சேரும். உறவினர்களுடன் சற்று விட்டுக்கொடுத்து செல்வது அனைவருக்கும் நன்மையை தரும்.ஈடுபடும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில், வியாபாரங்களில் உங்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். பிறரிடம் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் முன்னெச்சரிக்கை அவசியம். பணியிடங்களில் சக பணியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள்.

துலாம்

பிசினஸில் ஈடுபடுபவர்கள் சற்று கூடுதலான உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். கொடுப்பீங்க. எனவே நல்ல கனிபறிப்பீங்க. செல்வாக்கும் அதிகாரமும் பொறுப்பான பதவியும் உங்களை ‘கெத்’தாக வைக்கும். அதுக்காக ஓவரா அலட்ட வேண்டாம்.  டாடிக்கும் உங்களுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தயவு செய்து பணிஞ்சு போங்களேன். அவருக்கு ஒரு கஷ்டம் என்றால் நீங்கதானே முதல்ல விரைந்து உதவப்போறீங்க? உள்ளே நிறையப் பாசம் கொட்டிக்கிடக்குதில்லையா? அதை அவருக்குப் புரிய வைங்க. சந்தோஷப்படுவாரு. திருமண வயது கொண்ட இள வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அருமையான முறையில் மேரேஜ் நடக்கும். கல்லூரி மற்றும் ஸ்கூல் ஸ்டூடன்ட்ஸ் ரொம்பவே நல்ல பெயர் எடுப்பீங்க .

விருச்சிகம்

வாகனங்கள், இயந்திரங்கள் இயக்கும் போது சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். சற்றே கவனக்குறைவாய் இருக்க வாய்ப்பிருக்குங்க. ஜாக்கிரதைங்க. வீணான செலவுகளை தவிர்த்து சேமிப்பை உயர்த்த முயற்சி செய்ங்க. என்னதான் உங்களுக்கு நல்லநேரம் கூடிய சீக்கிரம் ஏற்படப்போகுதுன்னாலும்,  இப்போதைக்க கவனமாய் இருக்க வேண்டிய காலகட்டமாச்சேங்க. சகோதர சகோதரிகளுக்குப் பெரிய பெரிய நன்மைகளும் லாபங்களும் ஏற்படுமுங்க. அவங்க உங்களை நன்றியோடு நினைப்பாங்க. அவங்களோட நீங்க ஜாலியா நாலு இடம் சுற்றுவீங்க. அதே சமயம் சண்டையே போடக்கூடாதுன்னு உறுதியா இருங்க.  ஒரு வேளை அவங்க நடந்துக்கும் முறையில் சண்டை போட கோதாவில் இறங்குவாங்கன்னு டவுட் ஏற்பட்டுச்சுன்னா.. இதமாய்ப் பேசித் தோளில் கைபோட்டு சமாதானம் பேசிடுங்க. அதுதாங்க பலவகையில் நல்லது.

தனுசு

உங்களுக்குப் பண வரவு அதிகரிக்கப்போகுது என்பதால் தனி நபர் மற்றும் குடும்ப பொருளாதார நிலை உயரும். நீங்க குடும்பத்தின் தலைவரா? எனில் குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வீர்கள். உங்க குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இத்தனை காலம் அவங்களைப் பற்றிக் கவலைப் பட்டுக்கிட்டிருந்தீங்களே? எல்லாம் சரியாயிடுச்சில்ல? உறவினர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்கும் நிலை உண்டாகும்.  நீங்களும் பெரிய மனசுடன் அவர்களை ஏற்பீங்க. இதனால் பலகாலத்துப் பகை  எரேசர் வெச்சு அழிச்ச மாதிரிக் காணாமல் போகும். டோன்ட் ஒர்ரி. உங்க மனசு விசாலமாயிருப்பது நல்லதுக்குத்தாங்க. நீங்க நிதி சம்பந்தப்பட்ட பிசினஸ் அல்லது ஜாப் செய்பவர் என்றால் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பாவ சிந்தனைகள் காணாமல் போயிடுங்க.

மகரம்

பணியிடங்களில்  உடனடி பாஸ்களை அனுசரித்து செல்வதால் நன்மைகள் உண்டாகும். ஈகோவைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடுங்க. ஆஃபீசில் கூடுதலான உழைப்பை தர வேண்டியிருப்பதால் உடல் மற்றும் மனதில் அசதி உண்டாகும். அதுக்கெல்லாம் இடம் கொடுக்கவே செய்யாதீங்க. வெளியூர் வெளிநாடுகளில் உற்ற உறவினர் அல்லது ஃப்ரெண்ட்ஸ்ங்ககிட்டேயிருந்து  இருந்து நல்ல செய்திகள் வரப்போகுதுங்க. காதைத்தீட்டிக்கிட்டு அல்லது மெயிலைத் திறந்து வெச்சுக்கிட்டுக் காத்திருங்க.  திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நல்ல இடத்திலிருந்து சம்பந்தம் அமையுங்க. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நீங்க விரும்பிய வேலை கிடைக்கலைன்னு  முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. வெயிட் பண்ணுங்க.  

கும்பம்

கலைத்துறையில் உள்ளவங்க எல்லாருக்கும் பொருள், புகழ் போன்றவற்றை சம்பாதிக்க கூடிய சூழல் உருவாகும்.  உங்களைத் தேடி வந்து சான்ஸ் கொடுப்பாங்க. பிசினஸ் செய்பவர்களுக்கும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவங்களுக்கும் வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் கிடைப்பதில் லேசான தாமதம் ஏற்பட்டால் உடனே டென்ஷனாகித் தூக்கத்தைக் கெடுத்துக்காதீங்க. மெல்ல மெல்ல எல்லாம் வெற்றிகரமாய் அமையும்,. கொஞ்சம் பொறுமையாத்தான் இருங்களேன். என்ன இப்ப? எது எப்படியோ.. குடும்பத்தினரின் புத்திசாலித் தனத்தால் உறவினர் மத்தியில் ஒற்றுமையும் நன்மையும் ஏற்படுவது போலவே ..அலுவலகத்தில் நீங்க புத்திசாலித்தனமாய் நடந்து கொண்டு கம்பெனிக்கு லாபம் ஏற்படச்செய்வீங்க.

மீனம்

பேச்சிலும், செயலிலும் கொஞ்சம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லதுங்க. விரும்பிய பயன்களை பெறணும் என்றால் எல்லாவற்றிலும் கடினமாக செயல்பட்டே அதைச் செய்ய முடியும். தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் சற்றே தாமதமாகக் கிடைக்கும். நீங்க ரொம்பவும் முயன்று உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை உடனடியாகப் பெற முடியாதுங்க. அவசரப்படாதீங்க. புதிய வீடு, நிலம் வாங்குவதில் இவ்ளோ காலமாய் இருந்து வந்த பிரச்சனைங்க ஒரு வழியாத் தீரும். உங்க கூட வேலை பார்க்கறவங்ககிட்ட சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லதுங்க. மனசுவிட்டுப் பேசறதாய் நினைச்சுக்கிட்டு ரகசியங்களைக் கொட்டாதீங்க. உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கொஞ்சம் தாமதமாகக்கூடும். ஆனால் கிடைச்சுடும். 

You may have missed