வார ராசிபலன்: 29.5.2020 முதல் 4.6.2020 வரை… வேதா கோபாலன்

மேஷம்

நீங்க மனதளவில் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. உங்களின் சுறுசுறுப்பு அதிகமாகும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். குழந்தைக்காக தவமிருக்கும் பலருக்கு புத்திர பாக்கியம் கைகூடி வருமுங்க. சிலர் புதிய வண்டி வாகனம் வாங்குவீங்க. பயணங்களை இந்த வாரம் தவிர்த்து விடுங்கள். வண்டி வாகனத்தில் வெளியே போக வேண்டாம். உங்க உடல் ஆரோக்கி யம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். நீண்ட நாட்கள் கழித்து அலுவலகத்திற்கு செல்வீங்க உற்சாகமாக பணி செய்வீங்க. மேலதிகாரி களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் பணம் கடனுதவி கிடைக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வங்கிக்கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு கணவர், குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளுக்காக தயாராவீங்க. நெருப்பு, மின் சாதனங் களில் கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக இருப்பது நல்லது.

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீங்க வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தாய்மாமன் மூலம் நல்ல செய்திகள் தேடி வருமுங்க. வேலை காரணமாக சிலருக்கு அலைச்சல் அதிகரிக்கும். சுப செலவுகள் தேடி வருமுங்க. வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யும் முன்பாக யோசனை செய்து கொள்ளுங்க. பெண்களுக்கு வீட்டிலும் வெளியிலும் மதிப்பு மரியாதை கூடும். அலுவலகத்திற்கு செல்லும் பெண்களுக்கு இந்த வாரம் புதிய பொறுப்புகள் தேடி வருமுங்க.

மிதுனம்

எதிர் பார்த்த தொகை அசல், வட்டியுடன் வந்து சேரும். அக்கா, மாமாவிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். பெண்கள் விரும்பிய தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். சொந்த பந்தங்களிடையே சில கருத்து வேறுபாடுகள் வரலாம். எதிர் பார்த்த தகவல் திங்கட் கிழமை வருமுங்க. பெண்களுக்கு வயிறு, கருப்பை சம்மந்தமான உபாதைகள் வரவாய்ப்பு உள்ளது உடனடியாக மருத்துவரை பார்ததால் எந்தப் பிரச்னையும் தீரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீங்க. இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீங்க. நிம்மமதி படிப்படியா அதிகரிக்குமே.

கடகம்

கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் அதிகமாகும். உற்சாக மாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீங்க. பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு கணிந்து உள்ளது. பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீங்க. ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செலவு செய்யுங்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் கவனமாக இருங்க. வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் வரலாம். லாபத்தை நினைத்து கவலைப்படாதீங்க போட்ட முதலுக்கு மோசமிருக்காது. பேச்சில் கவனமாக பேசுங்க கோபமாக பேச வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க. மனதளவிலும் உடல் அளவிலும் உற்சாகமாக இருப்பீங்க.

சிம்மம்

பயணங்கள் நன்மையை தரும். கணவன் மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். உங்க குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சிலருக்கு சுப செலவுகள் வருமுங்க. நண்பர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுடன் வேலைகளை செய்வீங்க. வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் வருமுங்க என்றாலும் எளிதில் சமாளிப்பீங்க. அரசு மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வங்கிக்கடனுக்கு முயற்சி செய்யுங்கள். உடன் வேலை செய்பவர்களால் வீண் செலவுகள் வரலாம். பெண்களுக்கு மகிழ்ச்சி கூடும். வெளியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சில சங்கடங்கள் வந்தாலும் சாதுர்யமாக சமாளிப்பீங்க. அம்மா வழி உறவுகள் மூலம் நன்மைகள் நடைபெறும் சில நேரங்களில் சங்கடங்கள் வரலாம் கவனம் தேவை.

கன்னி

இந்த வாரம் உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். அதே நேரத்தில் சுப செலவுகளும் வருமுங்க. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். வீட்டில் உற்சாகம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு கைகூடி வருகிறது. தம்பதியர் இடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அப்பா வழி உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினை நீங்கும். அக்கம் பக்கத்தினாரால் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். பேச்சில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரித்து லாபம் வருமுங்க. அரசு வழி சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ராகு காலத்தில் துர்க்கையை நினைத்து விளக்கேற்றி வழிபடவும்.

துலாம்

இந்த வாரம் நீங்க நினைத்த காரியம் நிறைவேறும். கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுப செய்திகள் தேடி வருமுங்க. அம்மா வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான வாரம். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரம். குடும்பத்தினரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். ரொம்ப கவனமாக இருங்க சின்ன பிரச்சினைகள் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது கவனமாகவும் நிதானமாகவும் இருங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க. பிரச்சினையாகி விடும்.

விருச்சிகம்

இந்த வாரம் நீங்க ரொம்ப பொறுமையாக இருங்க. நிதானத்தை கடைபிடித்தால் பிரச்சினைகளில் இருந்து தப்பலாம். தன்னம்பிக்கை தைரியம் கூடும்.. உடலில் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் வரலாம் கவனமாக இருங்க. உங்க செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலைச்சுமை கூடும். இத்தனை நாள் ஓய்விற்கு பிறகு அலுவலகம் போனவர்களுக்கு கால நேரம் பார்க்காமல் வேலை இருக்கத்தான் செய்யும். அலுவலகத்தில் பொறுமையை கடைபிடிங்க. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வங்கிக்கடனுதவி கிடைக்கும். அரசு சலுகைகள் தேடி வருமுங்க. பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை.

தனுசு

இந்த வாரம் நீங்க நினைத்தது நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கும். வீட்டில் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மருத்துவ செலவுகள் வரலாம். இளைய சகோதரர்கள் மூலம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். எதிரிகள் மூலம் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அலுவலகம் செல்வதால் உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு சலுகைகளும் விரும்பிய இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும். பெண்கள் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. வேலையில் கூடுதல் கவனமாக இருங்க. குடும்பத்தில் பிள்ளைகளிடம் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு லாபம் கிடைக்கும். உங்களின் பயணங்கள் இனிமையானதாக மாறும்.

மகரம்

வீண் பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள். பணவரவு நன்றாக இருந்தாலும் திடீர் செலவுகள் வருமுங்க. கவனமாக பேசுங்கள் வீண் விவாதங்கள் வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம் கவனமாக பேசுங்கள். விட்டுக்கொடுத்து போங்க. சுப காரிய பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் சுபமாக முடியும். வீட்டிற்குத் தேவையான மின்னணு சாதனங்களை வாங்குவீங்க. பிள்ளைகள் மேற்படிப்புக்கான தேர்வுகளை எழுத தயாராவார்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீங்க. சிலருக்கு சலுகைகள் கிடைக்கும். வண்டி வாகனத்தில் பயணம் செய்பவர்கள் கவனமாக இருங்க. நிதானமாக போங்க வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் :  மே மாதம் 29 முதல் மே மாதம் 31 வரை

கும்பம்

இந்த வாரம் உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வீட்டிலும் வெளியிடத்தி லும் உங்களின் மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். வீண் பேச்சுக்களை பேசி பிரச்சினையை வளர்க்க வேண்டாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்க. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனமாகவும் நிதானமாகவும் பேசுங்க. நீண்ட நாள் கழித்து கடையை திறந்தாலும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பிள்ளைகளிடம் பேசி தேர்வு பயத்தை போக்குங்கள். படிப்பில் உற்சாகத்தை ஏற்படுத்துங்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடி வருமுங்க. வெளியூர் பயணம் இப்போதைக்கு வேண்டாம் பணம், நகைகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்க.

சந்திராஷ்டமம் :  மே மாதம் 31 முதல் ஜூன் 2 வரை

மீனம்

இந்த வாரம் உங்களுக்கு நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். திருமணம் சுப நிகழ்ச்சிகள் பற்றி பேசுவீங்க. கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலைகளை உற்சாகமாக செய்வீங்க. தந்தையின் மூலம் பணவரவு வருமுங்க. சிலருக்கு நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த சம்பளம் கைக்கு வருமுங்க. குடும்பத்தில் சில குழப்பங்கள் வருமுங்க. விட்டுக்கொடுத்து போங்க. வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. இந்த வாரம் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. பெண்களுக்கு வீட்டு செலவுக்குத் தேவையான பணம் வருமுங்க. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

சந்திராஷ்டமம் :  ஜூன் 2 முதல் ஜூன் 4 வரை

கார்ட்டூன் கேலரி