வார ராசிபலன்: 3/7/20 முதல் 9/7/20 வரை! வேதா கோபாலன்

மேஷம்

எந்த முடிவையும் கவனமாக திங்க் பண்ணிப் பிறகு எடுப்பது நல்லதுங்க. உங்களின் முடிவு பெரிய வெற்றிக்கு அழைத்துச் செல்லும். உங்களின் வரவு செலவு இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும், அனுபவஸ்தர்களின் ஆலோசனையும், உதவியால் உங்களின் பொருளாதார நிலை வலுவடையும். லவ் மற்றும் திருமண உறவு மேம்படும். மனம் மகிழ்ச்சி தரும். உங்களின் ஆரோக்கிய மேம்படும். குடும்பத்தில் பெண் பல விஷயங்களில் முன்னேற் றத்தை அடைவாங்க. ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். இந்த வாரம் தொற்றுநோய் காரணமாக பயணங்களைத் தவிர்ப்பது நல்லதுங்க. குடும்பத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுப்பதும், சூழ்நிலையைச் சரியாக கையாண்டால் நல்லது. வார இறுதியில், நேரம் உணர்ச்சி வசப்படக் கூடிய நிகழ்வுகளால் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.

ரிஷபம்

வேலையில் கவனச்சிதறல் அதிகரிக்கும் மற்றும் அமைதியின்மை காரணமாக, சில தவறான முடிவுகளையும் எடுக்க நேரிடுங்க. இந்த வாரம் ஹார்ட் ஒர்க்  மேற்கொள்ள வேண்டி வரும். அது எதிர்காலத்தில் அமைதியையும், பொருளாதார முன்னேற்றம் உண்டாக்கச் சாத்திய மாகும். லவ் விவகாரங்களில் கேர்ஃபுல்லா இருங்க. உங்களுக்கு யாரேனும் ஒரு பெண் முழு ஆதரவாகச் செயல்படுவார். குடும்ப நிலைமைகள் மேம்படும். குட் நியூஸ் வார இறுதியில் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் எந்த துறையில் வேலை பார்த்தாலும் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு நன்மை உங்களுக்குக் கிடைக்குமுங்க. நேரம் உங்களுக்கு சாதகமாகவும் மற்றும் திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கக் கூடிய அமைப்பு உள்ளது. வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் லவ் விவகாரத்தில் நேரம் செலவிடமுடியாமல் தவிப்பீங்க,

சந்திராஷ்டமம்  ஜூலை 3 முதல் ஜூலை 6 வரை

மிதுனம்

நீண்ட நாட்களாக வாய்ப்புக்கு காத்திருந்தவர்களுக்கு மனதிற்கு ஹாப்பியான செய்திகள் வந்து சேரும். அரசியல்துறையினர் வீட்டைவிட்டு வெளியில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும். பணிச்சுமை அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவாங்க. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா தள்ளிப்போகும். பொன் நகைகள் வாங்குவீங்க. தொழிலில் சற்று லாபம் வரும். கணவன் மனைவி இடையே இருந்த கசப்புகள் நீங்கி சந்தோஷம் அதிகம் நடக்கும். தைரியம் அதிகம் கிடைக்குமுங்க. குலதெய்வத்தின் அருள் கிடைக்குமுங்க. பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் வரும். வெளி நாட்டில் வேலை வாய்ப்புகள் உண்டு. கடன் வாங்க வேண்டாம். உங்க உடல்நலம் மேம்படும், உங்க மனம் மகிழ்ச்சியாக அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்  ஜூலை 6 முதல் ஜூலை 8 வரை

கடகம்

உங்க வசதிகளில் பெரும்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ளும் அளவில் சில வாய்ப்புகளை பெறக்கூடும். எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம். மாணவர் களுக்கு உயர்கல்வி பற்றிய கவலை நீங்கும். ஆனால் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்க கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லதுங்க. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுத லாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பாங்க. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்குமுங்க.

சந்திராஷ்டமம்  ஜூலை 8 முதல் ஜூலை 10 வரை

சிம்மம்

வியாபார செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.  குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த் தைக்கு மதிப்பு தருவாங்க. கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும்.  பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு  எதிர் பார்த்த குட்நியூஸ் கிடைக்குமுங்க. கலைத்துறையினர் முயற்சிகளை தொடர்வது அவசியம். அலுவலகவாசிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி வேலையில் கவனம் செலுத்த வேண்டும். ஜாக்கிரதை. சக ஊழியா்கள் உங்களுக்கு உதவ மாட்டாங்க. வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரிடலாம். புதிய கடன்கள் மூலம் வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். பொதுநலசேவை செய்வீங்க. பெரியவங்க ஆசி கிடைக்கும்.

கன்னி

அலுவலகவாசிகளுக்கு மேலதிகாரிகளால் சற்று மனக் குழப்பங்கள் ஏற்படலாம். ஓய் வில்லாமல் உழைக்க நேரிட்டாலும், அதற்கேற்ற சன்மானங்களைப் பெறுவீங்க. வியாபாரி களுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமூகமாக முடியும். கடன் தொல்லைகள் நீங்கும். விவசாயிகளுக்கு திட்டமிட்ட காரியங்களில் தடையுடன் வெற்றி கிடைக்குமுங்க.. அதற்கு நீங்கள் செலவுகள் செய்யவும் நேரிடுங்க.அரசியல்வாதிகளின் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய பொறுப்புகளும் வந்து சேரும். கலைத் துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சக கலைஞா்களுடன் விரோத மனப்பான்மையை விட்டொழித் தால் மேலும் சிறப்படையலாம். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள் மா. மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆா்வம் அதிகரிக்கும்.

துலாம்

சிறு விரயங்கள் இருப்பினும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். மனதிற்கு நிம்மதி தரும் செய்திகளைக் கேட்பீா்கள். ஆன்மிகச் சிந்தனைகளால் சிறப்பு அடைவீா்கள். அதேநேரம் பெற்றோர் வழியில் சோதனைகள் உண்டாகலாம்; எச்சரிக்கையாக இருக்கவும். மனக்கவலை அகலும். பணவரவு திருப்தி தரும். ஃப்ரெண்ட்ஸ் மூலம் உதவி கிடைக்குமுங்க. ஆடம்பர செலவுகள் ஏற்படும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங் கள் உருவாகும். தொழில் பிசினஸ் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். அரசியல்வாதிகள் எதிரிகளிடம் உஷாராக நடந்து கொள்ளவும். அதோடு, மேலிடத்திடம் கவனமாக இருக்கவும். கலைத் துறையினா் புதிய ஒப்பந்தங்களைச் செய்வாா்கள். பண வரவிற்கு குறைவு இராது. பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவாா்கள். உடல் நிலையில் சற்று கவனம் தேவை. உற்றாா் உறவினா்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். மாணவ மணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே பங்கு பெறவும். சண்டை சச்சரவுகளில் ஈடுபடவேண்டாம்.

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீங்க. எதிர்பாராத செலவுகள் வருங்க.. பெண்களுக்கு எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை  அது பாட்டுக்கு உண்டு.  கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம். நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும். உங்க மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத்தரும். ஸ்டூடன்ட்ஸ் திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும். உடல் ஆரோக்யத்திற்காக பயிற்சிகளை மேற்கொள்வீா்கள். மாணவ மணிகள் உழைப்புக்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெற தீவிர பயிற்சியில் ஈடுபடவும். ஆன்மிகத்திலும் நாட்டம் கொள்வீா்கள். வேலைகளை எப்பாடுபட்டேனும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீா்கள்.

தனுசு

நண்பர்களால்  நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் கட்சிக்காக தீட்டும் திட்டங்கள் மேலிடத்தின் அனுமதியையும் பாராட்டையும் பெறும். தொண்டா்களை அரவணைத்து அவா்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். கலைத் துறையினா் புதிய ஒப்பந்தங்கள் ஏதும் இல்லாததால் ஆக்கபூா்வமாக ஏதேனும் சிந்தித்து செயல்படுத்துவீா்கள். ரசிகா்களின் அன்பும் ஆதரவும் குறையாது. தங்களாலான உதவிகளை ரசிகா்களுக்கு தாராளமாகச் செய்யுங்கள். பல வித நன்மைகள் ஏற்படும்.  ஃப்ரெண்ட்ஸ், உறவினர்களிடம் இருந்து வந்த வீண் மனஸ்தாபங்கள் அகலும். நீண்ட நாட்களாக வாங்க எண்ணிய பொருட் களை வாங்குவீங்க. எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லதுங்க. தொழில் பிசினஸ் தொடர்பாக இருந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவாங்க.

மகரம்

வருமானம் சுமாராக இருந்தாலும் செலவினங்கள் அதிகரிக்கும். அவசியமானவற்றுக்கு செலவு செய்யுங்கள். சிக்கனமாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். மாணவ மணிகள் நன்றாகப் படித்து சிறப்படைவீா்கள். நண்பா்களுடன் காலநேரங்களை மகிழ்ச்சியாக செல விடுவீா்கள். அலைச்சல் அதிகரிக்கும். உங்க செயல்களில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி பெறுவீா்கள். மன அமைதி உண்டாகும். சகோதர, சகோதரிகள் உதவி செய்வாங்க.  பூா்வீகச் சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கம் நீங்கும். உடல் நலம் சீராக இருக்கும். அலுவலக வாசிகள் எல்லோரிடமும் சுமுகமாகப் பழகவும். புதிய பொறுப்புகளைத் தேடிச் செல்ல வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்குமுங்க.

கும்பம்

கடினமான உழைப்புகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீங்க.. எதிர்பார்க்காத செலவுகள் ஏற்படும் என்றாலும் அதனை ஈடுகட்டும் வகையில் வருமானம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீா்கள். குழந்தைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேருங்க. கொடுத்த வாக்குறுதியை  காப்பாத்துவீங்க. மத்தவங்களுக்கு உங்க மீது இருந்த கோபம் குறையும். தொழில் பிசினஸ் முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது  நல்லதுங்க. உத்யோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லதுங்க.  சக ஊழியா் களிடம் சுமுகமாகப் பழகவும். பண வரவு சுமாராக இருப்பதால் உழைப்பு வீண்போகாது. வியாபாரிகளுக்கு வருமானம் பெருகும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவது பற்றி யோசிப் பீா்கள். விவசாயிகளுக்கு குத்தகை பாக்கிகள் நல்லபடியாக வசூலாகும்.

மீனம்

.குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் அகலும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் இருந்த தடை தாமதம் நீங்கும். பெண்கள் கோபத்தை குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்வதன் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்குமுங்க. சகோதரர்கள் உதவி கிடைக்கு முங்க  தந்தை உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.  மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கவனமுடன் படிப்பது நல்லதுங்க. எதிலும் நிதானம் தேவை. அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை அமையாது. மேலிடத்தின் அதிருப்தியையும் சந்திக்க நேரிடுங்க. கலைத் துறையினருக்கு சக கலைஞா்களின் ஒத்துழைப்பு கிடைக்குமுங்க. பெண்மணிகள் ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப் போடவும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

கார்ட்டூன் கேலரி