வார ராசிபலன் – 30.03.2018 முதல் 05.04.2018 – வேதா கோபாலன்

மேஷம்

கல்வியால்  லாபமும்/ வருமானமும் நன்மையும் அதிகரிக்கும். நீங்கள் கற்ற கல்வி பலனளிக்கும். ஒரு வேளை நீங்க கல்வி சார்ந்த துறையில் (தொழில் அல்லது வியாபாரம்) இருப்பவர்னா மேலும் மேலும் முன்னேற்றம் அல்லது பதவி உயர்வு அல்லது விரிவாக்கம் உத்தரவாதம். மாணவர்கள் சாதனை புரிவீங்கப்பா/ ம்மா. ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவிக்கும், அரசாங்க நன்மைகள் பெறுவதன் பொருட்டும் கொஞ்சம் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். மனசையும் பர்ஸையும் தயார் நிலையில் வெச்சிருங்க. மற்றபடி டோண்ட் ஒர்ரி

சந்திராஷ்டமம்:  03.04.2018 முதல் 06.04.2018  வரை

ரிஷபம்

கடந்த காலத்தில் நீங்க தொலைத்ததாக நினைத்த தொகையும்.. வரவே வராது என்று நீங்க நினைச்சிருந்த அமவுண்ட்ஸும் தானாய் வரும். கோயில்களுக்குப் போவீங்க. நல்ல காரியங்களுக்காகவும், சுப நிகழ்ச்சி களுக்காகவும் நிறையச்செலவு செய்வீங்க. வீட்டில் காத்திருந்த சுப நிகழ்ச்சி சட்டென்று நடக்கும். தயாரா யிருங்க. ஜாலியாயிருப்பீங்க. நண்பர்களுடனும் உறவினரோடும்  பல இடங்களுக்கு உல்லாசமாய்ப் போய் வருவீங்க. புதிய வருமானங்கள் வரும். அரசாங்கத்திலிருந்து உதவிகளும் நன்மைகளும் கிடைக்கும்.

மிதுனம்

கலைத் துறையில் உள்ளவங்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். கலை உலகில் உள்ளவங்களுக்கு வருமானம் கூடும். கோபத்தை உள்ளே வெச்சுப்பூட்ட வேண்டியது அவசியம். பொதுவா நீங்க மிகவும் யோசிச்சு ரொம்பவும் புத்திசாலித்தமாத்தான் செயல்படுவீங்க. ஆனா இப்ப கொஞ்ச காலமா கோபத்தினால் சற்றே நிதானம் இழக்கறீங்க. நல்ல வேளையா அறிவை இழக்கும் ரகம் இல்லை நீங்க. அதனால பிழைச்சீங்க. கடன்களை மட மடன்னு அடைச்சுப் பெருமிதம் அடைவீங்க. நண்பர்கள் உரிய நேரத்தில் உதவுவதால் மகிச்சியும் நிம்மதியும் மீளும்.

கடகம்

மனசில் குரூர எண்ணங்கள் எழாமல் பார்த்துக்குங்க. தமிழ் சீரியல் மாதிரி யாரையும் பழிவாங்க நினைக்கவே வேண்டாம். போனால் போகட்டும்னு விடுங்க. இதை அவங்க நன்மைக்காகச் சொல்லலைங்க. உங்க நன்மைக்குத்தான் சொல்றேன். ஏனெனில் உங்களைப் பொருத்தவரையில்  பலன்கள் அவ்வளவாய் ரசிக்கும்படி இருக்காது. கணவர் / மனைவி எப்பவும்போலத்தான் இருப்பார்/ இருப்பாங்க. நீங்கதான் மாறியிடுப்பீங்க. அலுவலகத்தில் பெரிய வெற்றிகள் காத்திருக்கின்றன. உங்க கம்பீரம் மற்றும் நேர்மை காரணமா அனைவரும் உங்களை ,அரியாதையுடன் பார்த்து பயந்து ஒதுங்குவாங்க.

சிம்மம்

உங்கள் செல்வாக்கு குறைந்த மாதிரி ஒரு பிரமை ஏற்பட்டிருந்தால் அது வெறும் கற்பனைதான்.. டோண்ட் வொர்ரி. குழந்தைகளுக்கு திடீர் அதிருஷ்டம் ஏற்படும். எனினும் அவர்களைப்பற்றி ஏதாவது கவலை இருந்துகொண்டே இருக்கும். பயம் வேண்டாம். அது தாற்காலிகமானதே. புதிய செலவுகள் வந்தாலும் அவை மகிழ்ச்சியே அளிக்கும். நண்பர்கள் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையா இருங்க. பகைவர்கள் எப்படியோ போகட்டும்னு விடுங்க. ரிஸ்க்கே எடுக்காதீங்க. வெளி நாட்டில் உள்ள நண்பர்கள் நன்மை செய்வாங்க. உதவுவாங்க.

கன்னி

அதிருஷ்டம் வரும். ஆனால் திருப்தியடையப் பாருங்க. அப்பாவுக்கு நிறைய நன்மைகள் நடக்கும்.  அம்மாவின் ஆரோக்யத்தைக்கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கிட்டா ஒரு பிரச்சினையும் வராது. ஆனால் அலட்சியம் செய்தால் கஷ்டம்தான். குழந்தைகள் வாழ்வில் பெரிய முன்னேற்றம் காணச்சற்றே பொறுங்கள். அவங்களையும் பொறுத்திருக்கச் சொல்லுங்கள். காத்திருந்த பண வரவெல்லாம் தானா வரும். கவலைப்படவேண்டாம். கணவன் மனைவிக்குள்ள அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போங்க. சின்ன விஷ்யத்துக்கெல்லாம் போர்க்கொடி உயர்த்தினால் அப்புறம் அசடு வழிய ”ஸாரி” ந்னு  சொல்ல வேண்டி வரும்.

துலாம்

மனசில் இருந்து வந்த டென்ஷன்களும் கவலைகளும் தீர்ந்து, சந்தோஷமாய்.. நிம்மதியா இருப்பீங்க. மிக நெருங்கிய உறவினர்களையும் பல கால நண்பர்களையும் சந்திப்பீங்க. சின்ன கெட் டு கெதர் ஏற்பாடு செய்வீங்க. சாப்பாட்டு விஷயத்திலும் ஆடை அலங்காரத்திலும் மிக நிறைவான வாரம், மகிழ்ச்சி நிறைந்த வாரம். ஆனா அலுவலகத்தில் கொஞ்சம் வேலை அதிகம் இருக்கும். களைப்பைப் பொருட்படுத்தாத அளவுக்கு மகிழ்ச்சி நிலவும். ஆரோக்யம் தேறி வரும். ஆனால் அலட்சியப்படுத்தாதீங்க. வரவு அதிகரிப்பதால் செலவு பற்றிக்கவலை இல்லை.

விருச்சிகம்

சுப நிகழ்ச்சிகள் மடமடன்னு நடந்தேறும். அம்மாவுக்காக செலவு செய்து புண்ணியம் சேர்த்துப்பீங்க. பேச்சில் மிக கவனமாயிருங்க. அல்லது பேசாமலேயே இருந்துடுங்க. அது பெட்டர். குடும்பத்துல கொஞ்சம் சலசலப்பு இருக்கும். குறிப்பா சகோதர சகோதரிகளிடையே கச முச இருக்கும். பெருந்தன்மையாப் போயிடுங்க. அப்பாவின் ஆரோக்யம் நல்லா ஆயிருக்குமே. குழந்தைகள் பாராட்டும் கைதட்டலும் வாங்கிப் பெருமிதப் படுத்துவாங்க. மகிழ்ச்சிதான். அரசாங்க நன்மைகள் உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் கிடைக்கும்.

தனுசு

தேவியற்ற திடீர்க் கோபத்துக்கு ஆளாக நேரிடும். கட்டுப்படுத்திக்குங்க ப்ளீஸ். கொஞ்ச காலமாப் படுத்திக்கொண்டிருந்த ஆரோக்யம் இப்பதான் சரியாகி உங்களைக் கொஞ்ச காலமா நிம்மதியா விட்டிருக்கு. எப்பவும் குடும்பத்தைப்பற்றிக் கவலைப் பட்டுக்கிட்டே இருக்காதீங்க. பெண்களைப் பொருத்தவரை மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகமாகும். அதே சமயத்தில் பொறுப்பு  அதிகரிக்கும். அதனால் என்ன நீங்கதான் ஜமாய்ப்பீங்களே. அம்மாவுக்கு உதவி செய்வீங்க. எனவே தன்னிச்சையா அவங்க ஆசீர்வாதம் கிடைக்கும். கடன்களைத்தீர்த்தி நிம்மதியடைவீங்க.

மகரம்

எப்பப்பாரு பயணம்தான். காலில் சக்கரம்தான். எல்லாமே வெற்றிப் பயணங்கள்தான். திடீர்னு செலவுகள் வந்தாலும் எல்லாம் நல்ல செலவுகள்தான். கார்டை எடுத்துக்கிட்டுப்போய் ஜாலியா ஒரு ரவுண்டு பொருட்கள் வாங்குவீங்க. குழந்தைகளுக்குக் கொஞ்ச காலமாய் சுப நிகழ்ச்சிகள் தடைப்பட்டுக்கொண்டிருந்தது அல்லவா. இன்னும் கொஞ்சம் பொறுங்க. எல்லாமே மிக நல்லபடியா நிறைவேறும். அப்பாவுக்கு மிக்ப் பெரிய அளவில் நன்மை ஏற்படும். அனேகமாய் அது அரசாங்கம் மூலம் இருக்கும். தொழில் / உத்யோகத்தில் பயம்ளித்துக்கொண்டிருந்த விஷயங்கள் சரியாகி நிம்மதி அளிக்கும்.

கும்பம்

எல்லாம் நல்லபடியாப் போயிக்கிட்டிருந்தபோது நடுவில் ஒரு சில வாரங்களாகத் தேக்க நிலை வந்திருக்குமே. அது பற்றி பயம் வேண்டாம். மீண்டும் மிக விரைவாக கிரக நிலைகள் சீரடைந்து வருகின்றன. வருமானம் பல வகைகளில் மேம்படும். அதிலும் மிக திடீர் வருமானம் உண்டு. அம்மாவுக்குப் பெருமையும் செல்வாக்கும் அதிகரிக்கும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும், அதில் ஒன்று உங்கள் மூலம் நடக்கும். குடும்பத்தில் பேசினால் பெருமையும் நன்மையும் உண்டு. மேடைப்பேச்சாளர்கள் மிகப்பெருமையடையும்படி சம்பவங்கள் நடக்கும்… விருது கிடைக்கலாம்.

சந்திராஷ்டமம்: 30.3.2018 முதல் 01.04.2018 வரை

மீனம்

தந்தைக்கும் உங்களுக்கும் அதிருஷ்ட வாய்ப்புகள் உண்டு. பேச்சில் கவர்ச்சி அதிகரிக்கும். எனவே உங்களிடம் ஆலோசனையும், அறிவுரையும் கேட்கப் பலர் முன்வருவாங்க. குழந்தைகள் முன்பு எத்தனைக்கெத்தனை சிரமமும் டென்ஷனும் கவலையும் கஷ்டமும் கொடுத்துக்கிட்டிருந்தாங்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவங்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். கணவரின் புத்திசாலித்தனமான நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தையினால் பிரிந்திருந்த  குடும்பங்கள், அல்லது தம்பதிகள் அல்லது நண்பர்கள் சேருவாங்க.

சந்திராஷ்டமம்:  01.04.2018 முதல் 03.04.2018  வரை

Leave a Reply

Your email address will not be published.

You may have missed