வார ராசிபலன்: 30-10-2020 முதல் 05-11-2020 வரை! வேதா கோபாலன்

மேஷம்

எதிலும் சற்று விலகி நிற்பது நன்மை தரும். ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்துங்க. மன சஞ்சலங்க உண்டாகும். உங்க முயற்சிகள் பெரும்பாலானவை வெற்றி அடையும். சம்பந்தமில்லாத சிலரால் சங்கடங்க ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். மனதில் அமைதி குறைவு ஏற்பட்டு நிவர்த்தியாகும். கொடுக்கல் – வாங்கலில் நிதானம் அவசியம். இந்த வாரம் சற்று பரபரப்பாக காணப்படுவீங்க. நண்பர்கள் வலிய வந்து உதவி செய்வாங்க. பிரிந்த கணவன் – மனைவி மீண்டும் ஒன்றுசேர வாய்ப்புண்டு. உத்தியோகத்தில், உங்க செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகள் கூட, பெரியவர்களின் தலையீட்டால் அமைதி வழிக்குத் திரும்பும். ஷ்யூர்லி !!

இந்த வாரம் ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதி ராமபிரானையும், சனிக்கிழமை அனுமனையும் தரிசியுங்க.

ரிஷபம்

பழைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு காண்பீங்க. இதுவரை ஏற்பட்ட தடைகள் விலகும். வெளிநாட்டுப் பயணங்களுக்கு முயற்சி செய்பவர்களுக்கு, சாதகமான பதில் கிடைக்கும்.  எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இனிய சம்பவங்க இல்லத்தில் நடைபெறும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாங்க. பக்குவமாகப் பேசிக் காரியங்கள்ளை சாதித்துக் கொள்வீங்க. மூத்தோர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு கைகொடுக்கும். சிறு மத்யஸ்தப் பொறுப்பு ஒன்றை மேற்கொள்ள நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, நினைத்த காரியம் நிறைவேறுவதில் சிரமம் ஏற்படும். இருந்தாலும் உங்களின் கடின உழைப்பால் மேன்மை அடைவீங்க. தொழிலில் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களைக் கொண்டு வருமானம் ஈட்டுவீங்க. ஒரு சிலருக்கு, புகழும், விருதும் கிடைக்கும். கங்கிராஜுலேஷன்ஸ்.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபட்டுப் பிரச்னைகளிலிருந்து மீளுங்க.

மிதுனம்

 வெளியூர் அல்லது வெளிநாட்டில் உள்ள மிக நெருங்கிய உறவினரிடமிருந்து, மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வரும். உத்தியோகஸ்தர்கள், மனதில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளாதீங்க. தொழில் துறையினர் மனதில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காணலாம். வெளியூர் பயணங் களின்போது எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்க. குடும்பத்தில் சிக்கல்கள் வராமல், பெண்கள் சாமர்த்தியமாக நிர்வாகம் செய்வாங்க. எதிர்பார்த்த விஷயங்களில் சற்று தளர்ச்சி தோன்றும். நினைத்த காரியத்தை சாதிக்க, உறவினர்கள் கைகொடுத்து உதவுவாங்க. சுப காரியம் சம்பந்தமாக எடுத்த முயற்சி நல்ல திருப்பத்தைத் தரும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்க. எதிர்பாராத வகையில் மகான்களின் தரிசனம் கிடைக்கும். யூ வில் பி ரியலி ஹாப்பி.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்க.

கடகம்

வியாபாரத்தில் வேலையாட்களைத் தட்டிகொடுத்து வேலை வாங்குவீங்க. உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்து எறிவீங்க. மாறுபட்ட அணுகுமுறையால் சாதனை செய்வீங்க. இந்த வாரம் நீங்க முழுமையான அனுகூலத்தை எதிர்பார்க்க முடியும். எதிர்பார்த்திருந்த பண வரவு சற்று தாமதமானாலும் கிடைத்துவிடும். தொழிலில் சங்கடம் ஏற்பட்டாலும் பின்னர் நன்மை உண்டாகும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் ஒரு தடவைக்கு, இரு முறை யோசித்து முடிவு எடுங்க. இல்லற வாழ்வு இனிமையாக மாறும். பயணங்க மூலம் அலைச்சல்  உண்டாகும். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உணவு சரியாய்ச் சாப்பிடாததால் சிறு தொல்லை உண்டாகலாங்க. கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. ப்ளீஸ் பி கேர்ஃபுல்.

இந்த வாரம் தக்ஷிணாமூர்த்தியை வியாழக்கிழமை வழிபடுங்க.

சிம்மம்

பலகாலமாக ஏங்கி எதிர்பார்த்த விஷயங்க நடப்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீங்க. தொழில் வளர்ச்சிக்குக் குறுக்கீடா இருந்தவங்க விலகுவாங்க. தெய்வ வழிபாட்டால் திருப்தி காண்பீங்க.  உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு ஏற்பட்ட வருத்தம் தீரும்படி அவர்கள் நடந்துகொண்டு நிம்மதியளிப்பாங்க.  குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமலிருப்பது நல்லது.  கற்பனையான பயங்களால் நிம்மதியிழக்க வேண்டாம். பூமி சம்பந்தமான கடன் தொல்லைகள், தீரும் உங்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் சிரமங்களிலிருந்து விடுபட வழி ஏற்படுத்தும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். தொழில் சார்ந்த விஷயத்தில், புதிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.தட்ஸ் பெட்டர்.  

இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனை வழிபட்டு வாருங்க.

கன்னி

இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீங்க. பிள்ளைகள் நம்பிக்கை தருவாங்க. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்க சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பாங்க. உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீங்க. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீங்க. புது ஏஜென்சி எடுப்பீங்க. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீங்க. உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீங்க. வழக்கத்தை விட நிதானமும், பொறுமையும் அவசியம். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் கூடுதல் முயற்சிகள் மூலம் மனதில் எண்ணிய விருப்பங்கள் நிறைவேறும். தொழில் துறையினர் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றமான போக்கு காணப்படும். பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் பொறுப்புகள் கூடுதலாக இருந்து வரும். ரியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி.

இந்த வாரம் திங்கட்கிழமை அன்று சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்யுங்க.

துலாம்

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீங்க. வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. கல்யாண முயற்சி கைகூடும். . குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கூடுதல் நன்மை நண்பர்களால் கிடைக்கும். உயர்ந்த மனிதர்கள் உங்க செயலுக்கு உறுதுணையாக இருப்பாங்க.. எதையும் நிதானித்து செய்வதால், நன்மை அடைய முடியும். நல்ல நோக்கத்துடன் நீங்க எடுக்கும் முடிவுகள் கூட மற்றவர்களால் விமர்சிக்கப்படலாம். குடும்பத்தில் இளைய சகோதர, சகோதரிகளால் கவலை உண்டாகும். ஆரோக்கிய தொல்லை ஏற்பட்டு மறையும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. பட் டோன்ட் ஒர்ரி.

இந்த வாரம் சனிக்கிழமை பிள்ளையாருக்கு தீபம் ஏற்றி வழிபடுங்க.

விருச்சிகம்

எதையும் திட்டமிட்டுச் செய்ய பாருங்க. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். உடல் நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீங்க. உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். நிதானம் தேவைப்படும்  புதிதாய்ச் சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீங்க. வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். நினைத்த காரியத்தை நடத்தி முடிக்க, உங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் கைகொடுப்பார். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்க. சிலருக்குத் திருமணம் கைகூடும். பொறுப்பான துறையில் பணிபுரிபவர்கள் அதிக வேலைப்பளு காரணமாக, சிரமத்திற்கு ஆளாவீங்க. வெரி ஸ்மால் பிராப்ளம்.

இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபாடு செய்யுங்க.

தனுசு

குடும்பத்தினருடன் மனசுவிட்டு பேசுவீங்க. வீட்டிற்கு தேவையான சாதனங்களை வாங்குவீங்க. வேற்று மதத்தரின் உதவி கிடைக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் இப்பொழுது உங்களைச் சந்தித்து நன்றிகூறுவது மனதுக்கு இதம் அளிக்கும். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடி நடைபெறும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீங்க வியாபாரத்தை பெருக்குவீங்க. உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீங்க. கொடுக்கல் – வாங்கலில் அவசர முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது. புதிய தொழில் செய்யும் எண்ணம் சிலருக்கு உண்டாகலாம். வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெற்றி வாகை சூடும் தருணம் இது. குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டாலும், தைரியத்தை கைவிட்டுவிட வேண்டாம். ப்ளீஸ் பி போல்ட்.

இந்த வாரம் திங்கட்கிழமை சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுங்க.

மகரம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்க நலனில் அதிக அக்கறை காட்டுவாங்க. உங்களைத் தவறாக நினைத்து கொண்டிருந்தவர்களின் மனம் மாறுவதோடு அதை உங்களுக்குத் தெரியப்படுத்துவாங்க. விரயங்க குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர் தொல்லை உண்டு. தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீங்க.  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவாங்க. உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. உங்க செயல் மற்றவர்களால் பாராட்டப்படும். உறவினரிடையே இருந்த பகை, உங்க முயற்சியால் தீரும். கணவன் – மனைவி இடையே இருந்த பிணக்குகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக வந்தாலும், சேமிக்க இயலாது. உத்தியோகத்தில் உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களால், தொல்லை வரலாம். வெரி ஸ்மால் பிராப்ளம்.

இந்த வாரம் சனிக்கிழமை அனுமாரை வழிபாடு செய்து வாருங்க.

கும்பம்

உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக பேசுவீங்க. செயல்படுவீங்க. திடீர் முடிவுகள் எடுப்பீங்க. பிள்ளைகள் புதிய பாதையில் திரும்புவாங்க. பயங்கள் குறையும்.  விஐபிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாண்டு லாபம் பெறுவீங்க. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீங்க. இந்த வாரம் சாதகமான சூழ்நிலையே உண்டாகும். தேவையற்ற சஞ்சலங்களை புறந்தள்ளி விடுங்க. ஆபீசில் உங்கள் மனம் மகிழும்  தகவல் ஒன்று வரும். தொல்லைகளை விலக்கினால் விரயங்க சுபமாக மாறும். ஒரு சிலருக்கு தாங்கள் குடியிருக்கும் வீட்டை இடித்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். எந்த காரியத்தைச் செய்தாலும் அதில் கவனத்துடன் செயல்படுங்க. கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். தாயாரின் உடல்நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஹாப்பி?

இந்த வாரம் குலதெய்வ வழிபாடும், ஞாயிற்றுக் கிழமை சூரியன் வழிபாடும் நன்மை தரும

மீனம்

தொழில் ரீதியான ஒப்பந்தங்க வந்து சேரும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புக்கள் கிடைத்து வாழ்க்கை வசந்தமாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உணர்ச்சிவசப்படாமல் இருங்க. முதல் முயற்சியில் முடியாத இரண்டாவது சில காரியங்கள் முயற்சியில் முடியும். சிலவற்றிற்கு உங்க அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீங்க. வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். கடினமாக உழைக்க ஆரம்பிப்பீர்கள். எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும், அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். எனினும் அதற்கான நல்ல பலனும் இருக்கும். யாருக்காவது வாக்குறுதி கொடுப்பது அல்லது ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்த்து விடுங்கள். தொழில் செய்பவர்கள், பொருளாதார விஷயத்தில் ஓரளவு திருப்பத்தைக் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். தட்ஸ் எ குட் நியூஸ்.

இந்தவாரம் திங்கட்கிழமை விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் சாத்தி வழிபடுங்க.