வார ராசிபலன்: 31.01.2020 முதல் 6.02.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம்

என்னமோ பெரிசாய் பயந்தீங்களே? எடுத்ததெல்லாம் வெற்றிதான் போங்க. திட்டமிட்ட பயணங்கள் திட்டமிட்டபடியே நடந்து முடியும். மேலும் அவை திட்டமிட்ட வெற்றிகளையும் அளிக்கும். நல்ல சிந்தனைகளும் நல்ல யுக்திகளும் மனசில் உருவாகும் அதனால எல்லாரும் பாராட்டுவாங்க.   பழைய சிநேகிகிளை/ சிநேகிதர்களைச் சந்திப்பீங்க. கவர்ச்சி அம்சம் அதிகமாகும். பாராட்டும் கைதட்டல்களும் கிடைக்கும். மேடையில் பேசுவீங்க. கலைத்துறையில் ஈடுபாடு வரும். பாவ எண்ணங்கள் மனசில் தோன்றாமல் பார்த்துக்குங்க.  நல்லதே நடக்கும். கட்டாயம் நடக்கும். நடந்தே தீரும். எவ்வளவு சோர்வான நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் அந்நிலையிலிருந்து வெளியே வரும் மனவலிமைக் கிடைக்கும்.  பணவரவு அதிகமாகும். எனவே பொருளாதாரம் ஓங்கும்.

ரிஷபம்

திடீர் அதிருஷ்டத்தையெல்லாம் எதிர்பார்க்கவே வேணங்க. உழைப்பாலும் முயற்சியாலும்தான் கட்டாயமாக இலக்கை அடைய முடியும். நிறைய வகைகளில் வரும்படியும் லாபங்களும் வரும். சின்னச்சின்ன ஆரோக்யப் பிரச்சனைகள் வரும். ஆனால் ஓடிடும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர மனப்பான்மை உண்டாகும். சின்னச் சின்ன விஷயங்களில் கூட அருமையான மனநிறைவு ஏற்படுமுங்க. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் மேலிடம் உங்களிடம் பாராட்டுத் தெரிவிப்பார்கள்.  

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒரு விஷயம் நல்லா நினைவில் வெச்சுக்குங்க.  வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாலினத்தினரிடம் மிகவும் கவனமாய் இருங்க. சாதாரண விஷயங் களில்கூட அவங்களை மரியாதைக்குறைவாப் பேசவோ நடத்தவோ செய்ய வேண்டாங்க. வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் நல்லபடியா இருக்குமுங்க. பெண்களுக்கு இவ்ளோ நாளா இருந்த வந்த பிரச்சனைகள் போயேபோச். கலைத்துறையினருக்கு தேவையான பொருள்களை வாங்கு வீங்க. அரசியல் துறையில் உள்ளவங்களுக்கு சக நண்பவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். இட்ஸ் ஓகே. இருவரில் ஒருவர் மன்னிப்புக் கேட்பதால் சுலபமாக முடியும்.

கடகம்

சுப நிகழ்ச்சிகள் எல்லாம்  எப்படியாவது தட்டுத் தடுமாறியாவது நடந்து முடிஞ்சுடுங்க. பயம் வேண்டாம். அலுவலகத்தில் சற்று கவனமாய் இருக்க வேண்டி வரும். கலைத்துறையில் உள்ளவங்களுக்குத் தடை தாமதங்கள் வரும். வெற்றி சற்றே எட்டிப்போகும். கடைசியில் கைக்கு வரும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்பிருந்ததைவிடவும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பல நாள் திட்டமிட்டுப் பல காலம் தட்டிப்  போய்க்கொண்டிருந்ததுதானே? ஆனா அந்த  விஷயங்கள் எல்லாம்  தன்னிச்சையாய் மடமடன்னு முடியுங்க. குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றங்கள் இருக்கும். குறிப்பாக வெளிநாட்டில் வாழும் மகன் அல்லது மகள் பெரிய அளவில் நன்மைகளை அடைவாங்க.

சிம்மம்

வாயில் நல்ல  வார்த்தைகள்தான் வர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்க. முக்கியமாய் சோப வார்த்தைகளோ எதிர்மறைச் சொல்கறோ வராமல் பார்த்துக்குங்க. ஆரோக்யத்தைக் கண் மாதிரியும் பார்த்துக்கணும். கண்ணின் ஆரோக்யத்தையும் பார்த்துக்கணும். கொடுத்த வேலையை உரிய நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இந்த வாரம் திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்யுங்கப்பா. அதுதான் நல்லது. எந்த விஷயத்தை எடுத்துக்கிட்டாலும் அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்குமுங்க. அலுவலக விஷயமாய்ப்  பயணங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படக்கூடும்.

கன்னி

கோயில் விசிட்கள் நிறையச் செய்வீங்க. ஆரம்பிச்ச காரியங்களை முழுமையா முடிக்கணும்னு தீவிரமா இருங்க. உங்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவர்கள் செய்யும்  செயல்கள் உங்க கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். கட்டுப்படுத்திக்குங்க. உத்தியோகத்தில் இருக்கறவங்க கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும்.. அவருடன் இருந்த சண்டை மகிழ்ச்சிகரமாக முடிவுக்கு வரும். பெண்களுக்கு கடின முயற்சி செய்தால்தான் காரியங்கள் பெற்றி பெறும். அரசியல்வாதிகள் மிகப் பெரிய சேவைகளைச் செய்து பொது மக்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்: ஜனவரி 31 முதல் ஃபிப்ரவரி 3 வரை

துலாம்

அப்பாவுக்கு நன்மைகள் நடக்குமுங்க. அவரு அரசாங்கத்திடமிருந்து ஏதாச்சும் நன்மைகள் எதிர்பார்த்துக்கிட்டிருந்தாங்களா? அப்ப கட்டாயம் அது கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவங்க படிப்படியான வளர்ச்சியைக் காண்பீங்க. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண .. சற்றே அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். டோன்ட் ஒர்ரி. சமாளிச்சுடுவீங்க. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.  அலுவலகத்திலும் , வீட்டிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை அழகாகக் கையாளும் திறமை உங்களிடம் இயல்பா இருப்பதால்  குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். 

சந்திராஷ்டமம்: ஃபிப்ரவரி 3 முதல் ஃபிப்ரவரி 5  வரை

விருச்சிகம்

சற்று நிதானப்போக்கு இருக்கத்தாங்க செய்யும். தவிர்க்க முடியாது. ஆனால் எல்லாம் நல்லபடியா நடந்து சுபமாய் முடியும். அதானேங்க நமக்கு வேணும்? வெளிநாட்டு வாய்ப்புக்காகக் காத்துக்கிட்டிருந்தீங்களா? நிச்சயமா அது கைகூடும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒன் பை ஒன்..  வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கலைத்துறையில் உள்ளவங்களுக்குக் காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்

சந்திராஷ்டமம்: ஃபிப்ரவரி 5 முதல் ஃபிப்ரவரி 7 வரை

தனுசு

ஒன்றுக்கும் மேற்பட்ட வருமானங்களும், லாபங்களும் வரும். அலைச்சல் அதிகமாக இருந்தாலும் அதன் பலன்களும் சூப்பரா இருக்குமுங்க. தந்தைக்கும் தந்தைக்கு நிகரானவங்களும் வரும் பிரச்சினையைப் பொருட்படுத்தவே வேண்டாம். எல்லாம் தற்காலிகம்தான். அரசியல்துறையினருக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கொஞ்சம் கேர்ஃபுல்லாப் போங்க. மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண்  பெற அதிக நேரம் படிக்க வேண்டியிருக்குங்க. ப்ளீஸ். படிச்சுடுங்க. சாதுர்யமாக பேசி சகல காரியங்களையும் சாதிக்கும் திறமை கிடைக்கும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பணம் வருவது அதிகரிக்கும்.  

மகரம்

பிரச்சினை வரும் வேகத்தைப் பார்த்து சற்று மிரளும்படியாத்தான் இருக்கும் என்பதை மட்டும் நல்லா நினைவில் வெச்சுக்குங்க. உங்களுக்கு வேண்டியவங்க உங்களைத் தெய்வம்போலப் பார்க்கவும் செய்வாங்க. முன்பைவிட இப்போது உங்களுக்கும் அதிக தெய்வ நம்பிக்கை உண்டாகும். வழிபாட்டுத் தலங்களுக்கு அடிக்கடி செல்வீங்க. அரசியல்துறையினருக்கு பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும்.  மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

கும்பம்

கணவருக்கு மனைவியால் / மனைவிக்குக் கணவரால் மனக் கஷ்டம் வரக்கூடும். பார்த்துக்குங்க. எனி வே.. அது ஒண்ணும் அதிக நாட்களுக்க நீடிக்காது. எனவே நோ டென்ஷன்.  பிரிந்த நண்பர்களையும் பிரிந்த குடும்பங்களையும் ஒன்று சேர்ப்பீங்க. எல்லோருக்குமே நல்ல செயல்களைச் செய்து கொண்டே போவ தால் உங்களை எல்லோரும் பாராட்டவும் செய்வாங்க.. வாழ்த்தவும் செய்வார். திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீங்க. பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. புதுப்புது வழிகளில் வருமானம் வரும். எல்லாமே நேர்வழிகள் என்பது சந்தோஷமான விஷயம்.

மீனம்

குடும்பத்தில் இருப்பவர்களால் சந்தோஷமான  மனநிலை உருவாகுமுங்க. பண  நெருக்கடி ஏற்படும் நேரத்தில்  உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி நிச்சயமாய்த் தோன்றிய வேகத்தில் குறைய ஆரம்பிக்கும். தொழில்/ வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலைச் சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். அதனால் பரவாயில்லைங்க.  புதிய பொறுப்பு உங்களுக்கு அதிக வருமானத்தையும் கொடுக்குங்க. பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும்.

கார்ட்டூன் கேலரி