வார ராசிபலன்: 31.05.2019 முதல் 06.06.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்  

கவர்ச்சி அம்சம் அதிகமாகும். இது வரை இருந்த போட்டி பொறாமைகளை எல்லாம் காற் றோடு ஓடியே போகும்.  புதிய வேலை வாய்ப்பு, வெளிநாட்டு பயணம் அமையும். அலைச்ச லும் பொறுப்பும் அதிகமாகும்தான். எனினும திருப்தியும் வருமானமும் கூடுமேங்க. குடும்பத்தில் வீண் வாக்கு வாதத்தை குறைத்து கொள்ளுங்கள். பிள்ளைகள் படிப்பு செலவு அதிகக்கும். அதனால் என்னங்க. அதற்கேற்ற பொருளாதார வசதிகளும் கிடைக்கும். குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். அதாவது பலகாலமாகத் திட்டமிட்டிருந்தபடி இப்போதுதான் குலதெய்வக்கோயிலுக்குப் போவீங்க. பொறுமையை கடைபிடித்து வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு வறீங்க.

ரிஷபம்

உங்களை வாட்டி வதைத்த கிரக நிலைகள் மெல்ல மெல்ல மாறி, படிப்படியாகச் சாதகமான திருப்பத்தை தர ஆரம்பிக்கும்.  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக வாய்ப்புகள் வந்தாலும் கடைசி நேரத்தில் கை நழுவி போய்கொண்டிருந்ததல்லவா?  இனிமேல் கவலை இல்லைங்க.  எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். காரியசித்தி உண்டாகும். புகழ் கூடும்.  அந்தஸ்து உயரும். வருமானம் அதிகரிக்குங்க. பிள்ளைகள் முன்னேற்றம் வயிற்றில் ஐஸ்கிரீம் வார்த்த மாதிரிக் குளிர்விக்கும்.  சுபகாரியம் நடக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முடியவில்லை / கொடுக்க முடியவில்லை, என்ற நிலைமாறி எல்லா செயலும் திருப்தி தரும். பணத்தேவைகளில் திருப்தி உண்டாகும்.

மிதுனம்

இது வரை எந்த காரியத்தை தொட்டாலும் ஏமாற்றம் சஞ்சலம் என்ற நிலைமாறி வெளி நாட்டு முயற்சிகள் தொழில் முயற்சிகள் வெற்றியை கொடுத்து முன்னேற்றத்தை தரும் வாகன மாற்றம் உங்கள் மனசுப்படி அமையுங்க. புது வாகனம் வாங்கும் யோகம் வந்தாச்சு. அது அதிருஷ்டமாகவும் இருக்குமே. புதுமனை குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உற்றார் உறவினரிடம் இத்தனை காலம் இருந்து வந்த பகையெல்லாம் புகைபோல் மறையும். இது வரை எத்தனையோ கோயிலுக்கு போனாலும்,பரிகாரம் செய்தாலும் நடக்காத காரியங் கள் இப்பொழுது நடக்கும். சூப்பர். ஆரோக்யப் பிரச்சினைகள் பற்றி அதிக டென்ஷன் வேண்டாம். தானாய்ப் படிப்படியாக குணமாகும்.

கடகம்

தெய்வ அனுகூலத்தால் எடுத்த காரியங்கள் யாவும் வெற்றிகரமாக அமையும். குறிப்பாகக் குலதெய்வ அருளால் சம்பாத்தியம் சம்பந்தமான எல்லா முயற்ச்சிகளும் வெற்றியடையும். உயர் பதவியில் இருப்பவர்களும், அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர்களும்  இத்தனைகாலம் பயந்து சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் இனி அப்படி நேராதுங்க.  குறிப்பாக இப்போதுள்ள தசா புக்தி அமைப்பன்படி உங் ஜாதகம் சாதகமாக இருந்தால் கவலைப்படவே வேண்டாம். சில கால சூழ்நிலைகள் நம்மை இத்தனை காலம் முடக்கி தான் பார்த்திருக்கும். இட்ஸ் ஓகே. வருவது வரட்டும் பார்த்துகொள்ளலாம் என்ற திடமான நம்பிக்கையோடு முன்னேறிக்கிட்டே போங்க. வெற்றி நிச்சயம். சின்னச்சின்னத் தடைங்களைப் பொருட் படுத்தாதீங்க.

சிம்மம்

முன்பிருந்ததைக் காட்டிலும் உங்க வருமானம் அதிகரிக்கும். இது நாள் வரை வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை என்ற நிலை இருந்தவர்களுக்கும்… கடனுக்கு வட்டி கட்டுவதும் ஒரு கடனை வாங்கி இன்னொரு கடனை அடைத்துத் தூக்கமற்ற இரவுகளுடன் வாழ்க்கை ஓடியது. அப்டித்தானே? சிலர் தொழிலை நடத்தக் கடனை வாங்கியிருப்பீர்கள். தொழில் .ஒரளவு நடந்திருக்கும். கடனும் ஓரளவு அடைந்திருக்கும். சிலர் வீடு கட்டும் ஆசையில் வீடு கட்டத் தொடங்கி அதுவும் நல்லபடி முடியவேண்டுமே என்ற டென்ஷனில் இருந்திருப்பீங்க.   சிலர் வேலைக்கு முயற்சி செய்தும்  கிடைக்க வேண்டுமே என்ற கவலையில் இருந்திருப்பீங்க. இனி டோன்ட் ஒர்ரி. கடன்கள் அடையும்.  காரிய வெற்றி கட்டாயமா உண்டுங்க  

கன்னி

முயற்சி செய்யும் காரியங்கள் கை கூடும்.புது முயற்சிகள் அனுகூலம்,ஆதாயத்தை தரும். ஆனாலும் அதற்காக நீங்க கொஞ்சநஞ்சமாவா பாடுபடறீங்க? பாவம்.  வரவைக் காட்டிலும் செலவு அதிகமானலும் கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். அதை விரைவாக அடைக்கவும் செய்வீங்க. உங்ககிட்ட கடன் வாங்கியவங்களும், கைமாத்து பெற்றவங்களும் இவ்ளோ காலம் குடுக்காமல் டென்ஷன் தந்துக்கிட்டிருந்தாங்கதானே? இனி அவங்க மெல்ல மெல்ல அடைக்க ஆரம்பிப்பாங்க.  குழந்தைகளின் உயர் படிப்புக்கும் வெளி நாட்டுக்கல்விக் கும் வங்கி உதவி கிடைக்கும்.  அம்மாவிடம் சற்று மன வேற்றுமை இருக்கும். அனுமதிக்க லாமா? நீங்களே யோசிங்க. தயுவு செய்து காலில் விழுந்து ஸாரி சொல்லி மறுபடியும் சேருங்க.

சந்திராஷ்டமம் : மே மாதம் 30 முதல் ஜூன் 2 வரை

துலாம்

கருத்து வேற்றுமையால் பிரிந்த குடும்பங்கள் சேரும். கல்யாணம் அல்லது குடும்பத்தில் நிகழும் நிகழ்ச்சி அதற்குக் காரணமாய் இருக்கும்.  சண்டை சச்சரவு காரணமாகவோ.. உத்யோகம் அல்லது மேல்படிப்பு காரணமாகவோ பிரிந்திருந்த தம்பதியினர் ஓன்று சேருவீங்க . திருமணம் ஆகியும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நற்செய்தியை டாக்டர் உறுதி செய்வார். தொழில் அபிவிருத்தி ஆகும். சற்ற அதிகமாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். பரவாயில்லைங்க. பலன் நல்லா இருக்கும். அது போதுமே. புதிய வேலைக்கு முயற்சி செய்துக்கிட்டிருந்தவங்க முயற்சியை துரிதப்படுத்துங்க. நினைத்த பலன் இருக்கும். வேலை பளு அதிகமாக இருந்தாலும் மேலிடத்தில் கட்டாயம் நல்லபெயர் உண்டுங்க.

சந்திராஷ்டமம் : 30 ஜூன் 2 முதல் ஜூன் 4 வரை

விருச்சிகம்

இத்தனைகாலம் தடைப்பட்டுக்கொண்டே வந்த உத்தியோக விசயங்கள் நல்லபடியாக முடியும். அதாவது வேறு வேலை மாற நினைச்சவங்களும் இருக்கும் வேலையில் பதவி உயர்வு எதிர்பார்த்தவங்களும் நன்மை அடைவீங்க. ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தமான தொழில் முயற்சிகள்,வெளி நாட்டு பயணங்கள் போன்ற வாய்ப்புகள் நீங்கள் விரும்பிபடி.. எதிர்பார்த்தபடி.. ஆசைப்பட்டபடி வரும். ஏழரை சனியால் வீண் விரயம் இருக்கும். அதைத்தடுக்க முடியாது. ஆனால் வழிபாடு காரணமாகக் குறைக்க முடியும். ஏமாற்றம்,சஞ்சலம் மருத்துவ செலவுகள் படிபடியாக குறையும். கடன் சுமைகள் குறைய ஆரம்பிக்கும்.  மெல்ல மெல்லக் கடனை அடைத்து விடலாம். பயம் வேண்டாம்.

சந்திராஷ்டமம் : 30 ஜூன் 4 முதல் ஜூன் 6 வரை

தனுசு

சொத்து தகராறு அல்லது வழக்கு காரணமாக  இழந்த செல்வத்தை மீட்டு விடலாம். பயப்படாதீங்க. குழந்தைங்களுக்கு சுபகாரியம் தாமதப்படலாம் என்றாலும் சில மாதங்களில் எல்லாம் சரியாகும ,வீடு வாசல் வாங்குவீங்க.  வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். அடிப்படை தேவைகள் பற்றிய கவலை வேண்டாங்க. சுகமான வாழ்க்கைக்கு ஏங்கிய உங்களுக்கு அப்படி ஒரு  வாழ்க்கை வாழ சாத்தியக்கூறுகள் தலைகாட்ட ஆரம்பிக்கும். ஹாப்பிதானே? இத்தனைகாலம்  தடைப்பட்டு வந்த  காரியங்க ளெல்லாம் குறைந்த முயற்சியிலேயே கை கூட ஆரம்பிக்கும். சந்தோஷம்தானே?  

மகரம்

இத்தனை காலம் காணாமல் போயிருந்த நிம்மதியானபோக்கு தொழில் மற்றும் குடும்பத்தில் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் எல்லாமே வெற்றி பெறும் என்று உறுதிகூற முடியாவிட்டா லும் பொரும்பான்மையானவை நிறைவேறும். தொழில் லாபம் பெருகும் உற்றார் உறவினர் ஆனுகூலம் ஆதாயம் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் திருமணம் நடக்கும். மகன் அல்லது மகளின் வாழ்வில் இருந்த வந்த தடைகள் நீங்கி சந்தோஷ வாழ்க்கையில் அடி எடுத்து வைப்பீங்க. கணவன் மனைவிக்குள் வரும் சின்ன சண்டைகளைப் பெரியதாக்கி வார்த்தை களை ஷவர் மாதிரித் தூவாதீங்க. அப்புறமாய் ஹி ஹி ன்னு வழிய வேண்டி வரும்.

கும்பம்

திடீர்னு வெளியூர் வெளிநாடு என்று கிளம்ப வேண்டியிருக்கும். ரெடியா இருங்க. பல நன்மைகள் எல்லாம் இந்த வாரம் திடீர்தான். நீங்கள் தயங்கித் தயங்கிக் கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும்.திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.  அலுவலகத்திலும் சரி.. குடும்பத்திலும் சரி நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த விஷயங்கள் நடக்கும். ஆண் வாரிசு இல்லை என்று ஏங்கியவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். வீடு மனை வாகனம் வாங்க கூடிய யோகமான வாரம்.  பல காலம் தள்ளித்  தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக முடியும். குறிப்பாகக் கோயில்கள்.. மற்ற பயணங்கள் போன்றவை மனதுக்குப் பிரியமான முறையில் நடக்கும்

மீனம்

பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்கள் ஆட்டம் காட்டி டென்ஷன் கொடுத்திருந்தால் இனி ஒரு பிரச்சினையும் இருக்காது என்று நீங்க ஷ்யூரா நம்பலாம். அரசாங்கம் சம்பந்தமான பல நன்மைகள் நிறைவேறும். வீண் வாக்குவாதம் உண்டாகுமளவுக்குப் பேச்சை வளர்த்த வேண்டாங்க. ப்ளீஸ்.  வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண் டும். சினிமாக்கதாநாயகன் கிளைமாக்ஸில் துரத்துவது போல் வேகமாக ஓட்ட வேண்டாங்க. ஆமாம். சொல்லிட்டேன். வீண் விரயங்களை தவிர்த்து சுப விரயமாக மாற்ற மனை,வீடு வாசல் வாங்கலாம். அதாவது இன்வெஸ்ட் (முதலீடு) செய்துடுங்க. அது பிற்காலத்தில் அருமையான லாபத்தை அளிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும்.வெற்றியை கொடுக்கும்

 

கார்ட்டூன் கேலரி