Random image

வார ராசிபலன்: 4-1-2019 முதல் 10-1-2019 வரை! கணித்தவர்: வேதா கோபாலன்

மேஷம்

திடீர்னு இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு பலப்படும். குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் கோயில்களுக்குப்போங்க. கைவராதுதான். எனினும் போங்க. சாப்பாட்டு விஷயத்தில் நீங்க செய்யும் அலட்சியத்தால ஆரோக்யம் கெடக்கூடாது. நேரம் கெடாமல் சுத்தமும் சுகாதாரமும் உள்ள இடங்களில் சாப்பிடுங்க. கட்லெட் சமூசாவுக்கெல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து மம்மி அல்லது மனைவி கையால் சாப்பிடுங்க. சாத்தியமே இல்லையா? அப்ப நீங்கள சமையல் செய்து சாப்பிடுங்க. அதுவும் சான்ஸ் இல்லையா? பச்சைக் காய்களையும் பழங்களையும் தின்னுங்க. ஆரோக்யம் பிழைக்கும். வங்கிக் கணக்கில் இலக்கங்கள் சேரும்.

ரிஷபம்

திருமண வேளை வந்தாச்சுங்க. இனி வரும் நாட்கள் முழுக்க கல்யாண பர்ச்சேஸ்தான். எதிர்பார்க்காத திடீர் அதிருஷ்டம் உங்களை உரசிக்கொண்டு வந்து முன்னால் நிக்கும், ஜாலிதான். கொஞ்சம் சோம்பலும் விஷயங்களைத் தள்ளிப்போடும் பழக்கமும்  இருக்கு. அதை மட்டும் மாத்திக்குங்களேன்… ப்ளீஸ். திருமணத்துக்குக் காத்திருந்தீங்களே ஹப்பாடா.. மாலையும் மேளமும் வந்துவிட்டன. வேலைக்குக் காத்திருந்தீங்க. அதுவும் நடந்தாச்சு.  உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் ஒரேயடியாயப் பாச மலர் மாதிரி நடிக்க.. நடக்க.. முடியாதுதான். புரிகிறது உறவைக் கோடாலி எடுத்து வெட்டாதீங்க. பிற்காலத்தில் அவங்க உதவியும் உங்களுக்குத் தேவை உங்க உதவியும் அவங்களுக்குத் தேவை. செய்ங்க. செய்ய விடுங்க. இருவருக்கும் நன்மைதான்.

சந்திராஷ்டமம் – ஜனவரி 4 முதல் ஜனவரி 6 வரை

மிதுனம்

விமர்சனங்களையும் திட்டல்களையும் எடுத்து பின் சீட்ல போட்டுவிட்டு அலட்சியமா முன் நோக்கி ஓடறீங்க பாருங்க… இதுதான் உங்க சிறப்பம்வம்.  அதே நேரத்தில் விருது பரி செல்லாம் வரிசையாய் கிடைச்சாலும் உங்களைப்பொருத்த வரையில் அதெல்லாம் உங்களுக்கு ஜுஜூபி. ரைட்டா? உங்க வாழ்க்கையில் நல்ல நிகழ்ச்சிங்க நண்பர்களால தான் நடக்கப்போகுது. இந்தக் கோவம் கோவம்னு ஒண்ணு இருக்கே.. அதை டெலீட்  பண்ணிடுங்க. குறிப்பா வார்த்தைகளில் வன்மம் வேண்டாம் வேண்டாம்  வேண்டவே வேண்டாம். அதெப்பிடிங்க கடன்களை இத்தனை சீக்கிரம் முடிச்சீங்க! கங்கிராஜு லேஷன்ஸ். நல்ல காரணங்களுக்காகப் புது லோன் போடுவீங்க. உடனே கிடைக்கும், நல்ல முறையில் அடைப்பீங்க.

சந்திராஷ்டமம் – ஜனவரி 6 முதல் ஜனவரி 9 வரை

கடகம்

மாணவியா? மாணவரா? பள்ளியா? கல்லூரியா? மம்மியை டீ போட்டுக் கொடுக்கச் சொல்லி கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவாகப் படியுங்க. பலன் மிக அதிகம் கிடைக்கும். (அம்மா பிசியா? ஏன் நீங்க போட்டுக்க மாட்டீங்களா?)  பொறுப்பான பிள்ளையா/ மகளா இருக் கீங்க. எனவே பெரியவங்க கிட்டயும் பேரன்ட்ஸ் கிட்டயும் எப்பவும் நல்ல பெயர்தான். நீங்க பாட்டி தாத்தாவா ஆகியிருந்தால் பேரன்ஸ் கிட்டயும்தான். கோயில் குளம் போகத் தீர்மானிச்சு ரொம்ப காலமா தள்ளிப் போயிக்கிட்டே இருந்ததே அதெல்லாம் இதோ நிறைவேறியாச்சு. பெரிய பொறுப்புகளை அலுவலகத்தில் சந்தித்துத் தீர்வு காண வேண்டியிருக்கும். டோன்ட் ஒர்ரி. ஜமாய்ப்பீங்க.

சந்திராஷ்டமம் – ஜனவரி 9 முதல் ஜனவரி 11 வரை

சிம்மம்

படிப்பில் நல்ல மதிப்பபெண் வாங்கி முன்னேறுவீர்கள். திடீரென்று பணவரவு அதிகரிக் கும். வீட்டு குரு பகவான் காரணமாகப் பேச்சில் இனிமையும் பணிவும் அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நடைபெறும் அல்லது குழந்தைப் பேறு கிட்டும். பல காலம் காத்திருந்தீங்களோ அதெல்லாம் வெற்றிகரமாகத்தான் முடியும்.    சுலபமாகவும்கூட. !வாகனங்கள் சற்று அதிகச் செலவு வைக்கும். அதெல்லாம் சமாளிக்கும்படியாகத்தான் இருக்கும். தாயாருடன் பிரச்சினை வராதபடி அனுசரித்துச் சென்றால் நன்மை வரும். மம்மி கூட சண்டை. டாடி கூட சண்டை. நண்பர்கள் கூட சண்டை. கத்திச் சண்டை. கத்தாமல் சண்டை. எதுக்கு இதெல்லாம். கின்னஸ்லயா போடப்போறாங்க?

கன்னி

பயணம்னா பயணம் அவ்ளோ பயணம்ஸ் போக வேண்டியிருக்கும். பொருட்களை கவனமா வெச்சுக்குங்க. அலைச்சல் சோர்வு அனைத்தையும் மீறி பயணத்தின் வெற்றி உங்களைக் குதித்துக்கூத்தாட வைக்கும். குறிப்பாய் அலுவலக சம்பந்தமா டூர்  அல்லது ஆன்சைட்டில் போயிருந்தால் ஒளிமயமான எதிர்காலம் இப்போதே தீர்மானிக்கப்பட்டு விட்டது இந்தப் பயணத்தின் மூலம் என்பதை தைரியமா கன்ஃபர்ம் செய்துக்குங்க. சொத்து விற்பது வாங்குவது சம்பந்தமான அவசர முடிவுகளை டக் டக் னு எடுக்காதீங்க. வெயிட் பண்ணி வெல் விஷர்களிடம் கேட்டு அதன் பிறகு உறுதியா ஒரு முடிவுக்கு வருவீங்களாம். ஓகே? கோபதாபங்கள் மறந்து குடும்பத்தினர் கிட்ட கடுமை காட்டாமல் இருந்தால் மேலும் நிம்மதியா இருக்கலாம்.  

துலாம்

முன்பிருந்த அளவு வேலை பளு தோளை அழுத்தாதுங்க. அதற்காக ஒரேயடியாய்ப் பின்னால் சாய்ஞ்சுக்க வேண்டாம். பொறுப்பும் அக்கறையும் கவனமும் தேவை. கிரவுண்ட் / ஃப்ளாட்டுக்குப் பத்திரம் பதியப் போறீங்கம்மா.  கனவுகளெல்லாம் பலிக்கும். அலுவலகத் தில் பாராட்டும் விருதும் கிடைக்கும், நிலம் வீடுன்னு வாங்குவீங்க. எதையும் பல முறை யோசிச்சு செய்யுங்க. சின்னச்சின்ன தாமதங்கள் வந்தே தீரும். அதெல்லாம் தீயினில் தூசாகும்.. டோன்ட் ஒர்ரி. உழைப்பு லேசாய் அதிகரிக்கும். (முன்பிருந்த அளவுக்கெல்லாம் பெண்டு நிமிராது) எனினும் ஊதியம் உயரும். டிரஸ்.. நகைங்க… அழகு சாதனங்கள் வாங்குவீங்க அல்லது வாங்கிக் கொடுப்பீங்க.

விருச்சிகம்

அலுவலகத்தில் உங்களையும் மீறித் துள்ளி வந்து விழும் வார்த்தைகளுக்கும் நீங்கதான் பொறுப்பேற்கணும் என்பதை நினைவில் கொள்ளுங்க. அங்கே மட்டுமில்லீங்க. எங்கயும் எப்பவும் ஜாக்கிரதையாகத்தான் பேசணும். நிலம் வீடு வாங்கத் திட்டமிடுங்க. நல்லபடியா முடியும். நண்பர்களும் வங்கி லோனும் மனசுக்கு மகிழ்ச்சி தரும்.. பேச்சைக் குறையுங்க. அல்லது பேசாதீங்க! குறிப்பாய் மட்டம் தட்டுதல், கமென்ட் அடித்தல், தூக்கி எறிந்து பேசுதல், சாமம் விடுதல் போன்ற நெகடிவ் ரகப் பேச்சாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவீங்க. ஆமாங்க.. திரியைப் பற்ற வைச்சுட்டு அப்புறம் அது வெடிக்குதேன்னா எப்படி?

தனுசு

செலவு ஆரம்பிக்கும். ஆனால் எல்லாமே ஹாப்பி செலவுகள்தான். ஒவ்வொரு செலவும் சந்தோஷம்தான் கொடுக்கும். இயந்திரங்களை இயக்கும் போது மனசை உலாப்போக விடாதீங்க. மம்மிக்கு எல்லா நன்மையுமே சற்று தாமதமா நடக்கலாம். லேட்டா வந்தாலும்…. (வாக்கியத்தை நீங்களே முடிச்சுக்குவீங்களே!) திடீர்னு முகவரி மாறலாம். வீடாகவும் இருக்கலாம், ஆபீசாகவும் இருக்கலாம். கல்யாண முயற்சிகள் டாப் கியரில் போகலைன்னு டென்ஷனாகாதீங்க. எந்த கியரில் போனாலும், நடக்க வேண்டிய சமயத்தில் நடக்கும். டோண்ட் வொர்ரி. அரிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு மற்றவர்களை வியப்புக்கு உள்ளாக்குவீர்கள்.

மகரம்

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க யார் ஐடியா கொடுத்தாலும் தூக்கி சிக்ஸர் அடிச்சு டுங்க. புது வேலை தேடணுமா! கம் ஆன்! ஸ்டார்ட். உடனே முயற்சி துவங்குங்க. இப்ப உள்ள குடும்பத்தில் ஹாப்பீ செய்திகள்ளாம் உண்டு… அலுவலகத்திலேயே திடீர்னு உங்களைக் கூப்பிட்டு உயரத்தில் உட்கார வைப்பாங்க. வெளிநாட்டுப் பயணம் கொஞ்சம் தட்டிப் போயிக்கிட்டிருந்தது. இனி நிச்சயமாயிடும். வீட்டில் யாருக்கோ திருமணம் நடக்கலைன்னு கவலைப் பட்டுக்கிட்டிருந்தீங்களே. கவலை தீர்ந்ததா? கணவர்/ மனைவி வீட்டாரிடம் நல்ல பெயர் எடுப்பீங்க.எதற்கும் அவசரம் வேண்டாம். பதறாதீங்க.போனவை எல்லாம் வரும். திருமணத் தடை சீக்கிரம் நீங்கும்.

கும்பம்

சின்னச்சின்னத்  தடை தாமதங்களை ஒரு பெரிய பிரச்சினை மாதிரி நினைச்சுக்கிட்டு டென்ஷன் ஆகறீங்க. கொஞ்சகாலம் கழிச்சு நீங்களே சிரிச்சுப்பீங்க.. அய்ய இதுக்கா இவ்ளோ கலங்கினோம்னு நினைச்சு…! குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். செலவுதான் அதிகம். உபயோகமான செலவுகள் சாப்பாட்டு விஷயத்தில் கவனமோ கவனம் தேவை. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை என்பது உங்களைப் பொருத்தவரை பொய். புத்தியை வெச்சு அதனாலேயே பெருமையும் பணமும் சம்பாதிப்பீங்க. மூன்று வித வருமானங்களும் லாபங்களும் வரும். லபக்குன்னு பிடிச்சுக்குங்க. அப்பா வழியில் நன்மைகளும் சொத்துக்களும் கிடைக்கும்.

மீனம்

புது வேலை கிடைக்கும். அது உங்களுக்குப் பொருந்துமா என்று இந்தத் துறையில் விஷயம் தெரிஞ்சவங்களைக் கலந்தாலோசிச்சு அப்புறம் வேலையில் சேருங்க. டாடி வெளிநாடு போவாரு. உங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கப் போகுது. உத்யோகம் பற்றித் தெளிவாக  முடிவெடுப்பீங்க!மனதிலே குழப்பமில்லை! அலுவலத்தில் உங்கள் நற்பெயரை அதிகரித்துக் கொடுக்கவும் அதன் காரணமாக மேலும் மேலும் வாய்ப்பு அதிகரிக்கவும் இந்த வாய்ப்பு உதவும். அதை இதை சாப்பிட்டு ஆரோக்யத்துக்கு எதிரியாயிடாதீங்க. மற்றபடி ஹப்பாடான்னு ரிலாக்ஸ் பண்ணுவீங்க, மனசில் நிம்மதியும சந்தோஷமும் உற்சாகமும் பொங்கும்.