வார ராசிபலன்: 5.3.2021 முதல் 11.3.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம்

பெரிய பயணங்கள் உண்டு. பணி இடம் மாற்ற வேண்டி வரலாம். எந்தப் பெரிய முடிவையும் யோசித்து எடுங்க. நல்லவங்க ஆலோசனை கேளுங்க. டாடிக்கு நன்மைகள் நடக்கும். அதிருஷ்டம் அடிக்கும். உங்களுக்கும் லக் உண்டு. குடும்பத்தில் புதிதாய் ஒரு நபர் கூடுதலாவாங்க. அது திருமணத்தினாலும் இருக்கலாம். பிரசவத்தினாலும் இருக்கலாம். வங்கியில் வைத்த தொகை குட்டி போட்டுப் பெருகும். உங்கள் வாக்கினால் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அலுவலகத்துக்கும் நன்மைகள் உண்டாகும். பாராட்டுக் கிடைக்குமே. ஜாலிதான். பெரிய திட்டங்கள் பல காலம் நிறைவேறாமல் நின்னுக்கிட்டிருந்தது அல்லவா.. அவை அநாயாசமாய் நிறைவேறும். வேலையில் நல்ல புகழும் பாராட்டும் மகிழ்ச்சியும் அவார்டும் ரிவார்டும் கிடைக்கும். மற்ற வேலையில் இருந்தால் உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவர்களுக்குக் கற்பிக்க வேண்டி வரும், அதிலும் ஜமாய்ப்பீங்க.

சந்திராஷ்டமம் : மார்ச் 4 முதல் மார்ச் 6 வரை

ரிஷபம்

லவ்‘ வில் விழப்போறீங்க. என்ஜாய். சின்னச்சின்ன எதிரிங்க. முதற்கொண்டு மெகா  எனிமீஸ்  வரை காலில் வந்து விழுவாங்க. அலுவலகத்தில் எதிர்பாலினத்தினரின் உதவி கிடைப்பதால் ஜெயித்து நிமிர்ந்து பாராட்டுப் பெறுவீங்க. கணவருக்கு ஏகப்பட்ட முன்னேற்றம்ஸ், எனவே குடும்பத்தில் உத்தரவாதமாகக் குதூகலம் நுழையும். பேச்சில் நிறைய புத்திசாலித்தனம் இருந்தாலும் பேச வேண்டிய இடத்தில் பேசாமலும் பேச வேண்டாத நேரத்தில் பேசியும் தவறு செய்ய வாய்ப்பிருக்கு. ஜாக்கிரதைங்க. ப்ளீஸ். எடுத்த காரியம் யாவினும் வெற்றி. ஆனால் அது நல்ல உழைப்பின் பலன்தான். கூடவே பிரமாதமான அதிருஷ்ட காலம் நடக்குது. தன்னிச்சையா நன்மைகளும் அதிருஷ்டமும் உங்களைத் தேடி வந்து உங்க முன்னால் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துக்கும். மிக திடீர்னு அதிருஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்டும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ரொம்பவும் உதவிகரமா இருப்பாங்க.

சந்திராஷ்டமம் : மார்ச் 6 முதல் மார்ச் 9 வரை

மிதுனம்

பேச்சினால் நன்மை உண்டாகும், குடும்பத்தில் புது வரவு சந்தோஷத்தை வாரி வழங்கும். குணங்களின் கூட்டுக்கலவையாய் இருப்பீங்க. ஒரு நேரம் இருந்த மாத்தி ஒரு நேரம்  இருக்க மாட்டீங்க. இதனால் நிலையற்ற நபர்னு பெயர் வர வேண்டாமே, யோசிங்க.  செலவுகள் ஏகப்பட்டது வந்தாலும் வருமானம் அதற்கு மேல் வரும் என்பதால் பொருட்படுத்தும்படி இருக்காது. உங்க மேல பழி ஏதும் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உங்க பொறுப்பு. சொல்லிட்டேன். கெட்ட பழக்கத்துக்கு அடிமையாக வேண்டாம். கலந்து கொண்டு மகிழும் வாரம். வரவு திருப்தியளிக்கும் என்றாலும் விரயங்களும் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி முயற்சி எடுப்பீங்க. விரோதங்கள் விலகும். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வருமானம் போதுமானதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பாலினத்தினராலும் உங்கள் சின்சியர் உழைப்பாலும் முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் : மார்ச் 9 முதல் மார்ச் 11 வரை

கடகம்

புது பிசினஸ் லாபம் தரும், அலுவலகத்தில் அழைத்துப் பாராட்டி சம்பளத்தை உயர்த்துவாங்க.  மம்மி பல காலமாய்க் காத்திருந்த நன்மைகள் அரியர் சந்தோஷங்கள் வந்து சேரும். பணம் நகை என்று வாங்குவாங்க. உங்களுக்கும்தான். மாணவிகளுக்கு நல்லாப் படிப்பு வரும். உங்க குழந்தைங்களுக்கு நல்லாப் படிப்பு வரும். அவங்க உங்களைப் பெருமிதப்படுத்துவாங்க. கணவன் மனைவி நல்லகாரியத்துக்காகப் பிரய நேரும், உதாரணம் ஆன்சைட். ஏராளமான செலவுகள் சந்தோஷமான மனநிலையைத் தரும். நீங்க மாணவராய் இருந்தால் ஆசிரியர் பாராட்டுப் பூரணமாய்க் கிடைக்கும். அம்மாக்கும் உங்களுக்கும் நல்லுறவு இருக்கும்படி பார்த்துக்குங்க. குடும்பம் ஹாப்பியா இருக்கும். கடன் பிரச்னைகள் குறையத் தொடங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல திருப்பம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உங்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வாங்க. தொழில் செய்பவர்கள், தங்களது துறையில் ஓரளவு வளர்ச்சியைக் காண்பாங்க. பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 11 முதல் மார்ச் 13 வரை

சிம்மம்

பேச்சைக் குறையுங்க. ப்ளீஸ்.  வம்பு பேச்சு வேணாம். குறிப்பாய் அலுவலகத்தில் யாரைப் பற்றியும் யாரிடமும் எதுவும் பேசவே பேசாதீங்க. மேலதிகாரி களைத் தூக்கி எறியும் விதமாகவோ அலட்சியமாகவோ பேச வேண்டாங்க. கணவன் மனைவிக்குள் இப்போது ஏற்படும் சின்னப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் கவனமாக இருங்க. ஏனெனில் அது கிளறாமல் இருந்தால் சிம்ப்பிளாய் முடிஞ்சுடப்போகுது. விரைவில் நல்ல விஷயம் ஒன்றில் பெரும் பொறுப்பு சுமக்கப்போறீங்க. நாலு விஷயங்களையும் கவனிக்க வேண்டி வரும். குடும்பத்தில் கோப தாபங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை நீங்க ஜெயிச்சு நிமிர்ந்துடுவீங்க. உங்க பெருந்தன்மை அதைச் செய்துடுமே. கல்யாணத்துக்காகக் காத்திருக்கறவங்களுக்கு இனி சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும். உடைகளும் நகைகளும் வாங்குவீங்க. டாடியால் உங்களுக்கும் உங்களால் அவருக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.        

கன்னி

சகோதர சகோதரிகளுடன் ஃபைட் சீன் வேணாமே? வெகு சீக்கிரத்தில் ஒருவருக்கொருவர் பழம் விட்டுவிட்டு  வெள்ளைக்கொடி காண்பிச்சு ஜாலியாக் கைகோத்துக்கிட்டு சுற்றுலாவெல்லாம் போகப் போறீங்களே. நோய்கள் குணமாகி நிம்மதி வரும்.சோகமும் சோர்வும் நீங்கி, ஹாப்பியா காணப்படுவீங்க. புது வாகனம் வாங்குவீங்க. எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். குழந்தைங்களால் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருமிதமும் உண்டு. உச்சி முகர்ந்து பாராட்டுவீங்க. திருமணம் நிச்சயமாகும். உயரிய சிந்தனைகள் மனசில் வந்து உட்காரும், தெய்வக் காரியங்களுக்காகப் பயணங்கள்  போவீங்க. பல நாட்கள் போக நினைச்ச பிரார்த்தனைகள்.. கோயில் விசிட்கள் இனிதே நிறைவேறும். திடீர் லக்  உங்களை சந்தோஷக்குளத்தில் தள்ளித் திக்குமுக்காடச் செய்யும். நீங்க குழந்தைங்களை சந்தோஷப்படுத்தறது பெரிய விஷயமில்லைங்க.. அவங்க உங்களைப் பெருமிதப்படுத்துவாங்க பார்த்துக்கிட்டே இருங்களேன்.

துலாம்

கலைத் துறையினர் சிறிய வாய்ப்புகளாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துங்கள். புதிய நிறுவனங்களை நம்பி ஏமாந்துட வேணாங்க.   உற்சாகமடைவீங்க. புதிய திட்டங்கள் நிறைவேறும். மனைவிவழியில் ஆதாயமடைவீங்க. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கப் போறீங்க.  செலவுகள் நிறைய ஏற்படும். எல்லாமே செலவுகள் இல்லைங்க. முதலீடுகள் என்பதை நினைவில் வெச்சுக்குங்க. உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீங்க. உறவினர்/ நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவாங்க. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வாங்க. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீங்க. உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறுவீங்க. நீங்கள் சாமர்த்திய சாலிகள், மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி வரும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் இந்த வாரம் அற்புதமாக இருக்கிறது. குடும்பத்தில் மூத்த சகோதரியின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார ரீதியாக வரவு செலவு சரியாக இருக்கும். புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்க.

விருச்சிகம்

 கோபத்தால் உடல் நிலை பாதிக்கப்படலாம். எனவே கோபம் வேண்டாம். பயணங்கள் நிறைய இருக்கும். இன்-லாஸ் குடும்பத்துடன் நல்லுறவு ஏற்படும். எதிர்பாலினத்தினரால் நன்மைகள் ஏற்படும். லோன் விஷயத்தைப்பொருத்தவரை கவலை வேண்டாம்.  இதமாகப் பேசி வட்டியையாவது தருவீங்க/ பெறுவீங்க.. ஆஃபீசில் ஏற்கெனவே உற்ற பிரச்னைகளுக்கு வெவ்வேறு கோணங்களில் யோசித்துத் தீர்வு காண்பீங்க. எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராதஒரு வேலை முடியும். சகோதரர் உதவுவார். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீங்க. புது வேலை அமையும். வியாபாரத் தில்பங்குதாரர்கள் ஒத்துழைப்பாங்க. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு.நன்மை கிட்டும். சிக்கலான சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் சின்ன சின்னஇடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும்.

தனுசு

சின்னச் சின்னதாய் அலுவலகத்தில் வரும் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு தலையைப் பிச்சுக்காதீங்க. நாளைக்கே சரியாகும்.  உங்க குடும்பத்தில் ஏற்படும் ஒற்றுமையால் வெளி நபர்களுக்கு ஏமாற்றமும் பயமும் வரும். வெளிநாட்டிலிருந்து டாலர்களும் .. பவுண்ட்டுகளும்.. திர்ஹாம்களும் வரும். புகழும் பெருமையும் எதிர்பாராமல் உங்களை வந்தடைஞ்சு திக்குமுக்காடச்செய்யும். உங்கள் அடக்கமான குணத்தால்  மற்றவர்களைக் கவரவும்  செய்வீங்க. விருந்து .. உறவினர் … நண்பர்கள் .. கெட் டு கெதர் என்று இனிதே பொழுது ஓடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீங்க. உத்தியோகத்தில் பாராட்டப்படுவீங்க. மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீங்க.

மகரம்

ஆஹா.. ஏற்கனவே கோபக்காரர். இப்ப நியாயமான  காரணங்கள் வேற கிடைச்சாச்சு. இப்பதான் நீங்க பொறுமையா இருந்து உங்களை நிரூபிக்க வேண்டிய சமயம். எனவே நூல்மேல் நடப்பது போல் கவனமாய்க் காலை எடுத்துவைக்கணும். பேசவே பேச வேண்டாம்.  எல்லா நன்மைகளும் மின்னல் ஸ்பீடில் உங்களை வந்தடையும்.  என்றைக்கோ போட்ட விதைகள் இன்றைக்கு மரமாகிக் கனி தரும். அலுவலகத்தில் கொஞ்சமும் எதிர்பார்க்காத நன்மை ஒன்று  வாரக் கடைசியில் கிடைக்குங்க.  புகழும் பெருமையும் தன்னிச்சையா வரும். கடமையைச் செய்துக்கிட்டே போங்க. குடும்பத்தினரும் உங்களை  விரைவில் புரிஞ்சுப்பாங்க. வண்டி ஓட்டும்போது கையில் காலில் அடிபட்டாலும் லைட்டாதான் படும். சீக்கிரம் சரியாகும். டோன்ட் ஒர்ரி. கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்தமனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள்பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீங்க. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

கும்பம்

அலுவலகத்தில் மிகவும் நிறைய வேலை இருக்கும். சரியா முடியுங்க. பராக்குப் பார்க்க வேண்டாம். மற்றவங்க திட்டமிட்டு உங்க வேகத்தைக் குறைக்கப் பார்ப்பாங்க. விடாதீங்க. ரிமெம்பர். நல்லா முடிச்சா அதிகாரிங்களின் பாராட்டும் உண்டு. சிஸ்டர்ஸ் பிரதர்ஸ்கெல்லாம் நல்லது ஏற்படும். அதுக்கு நீங்கதான் காரணமா இருப்பீங்க. பாராட்டுகள். இத்தனை காலம் தாலாட்டுப் பாட வாய்ப்பில்லாமல் ஏங்கிக்கிட்டிருந்தவங்க மருத்துவ உதவியாலோ இயற்கையின் உதவியாலோ அம்மாவாகப்போறீங்க. செலவுகள் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். கொஞ்சம் இழுத்துப்பிடிக்க முயன்றாலும் சகாத்தியமில்லாமல்தான் இருக்கும். எனினும் உங்களாலா முடியாது? சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளானாலும் அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். அவர்கள் பொறாமை காரணமாக உங்களை எரிசசலூட்டுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு ஒதுங்குங்கள்.  யாரை நம்புவது என்கிற கோபத்திற்கு ஆளாவீங்க. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும்

மீனம்

குழந்தைகள் வாழ்க்கை செட்டில் ஆகும், அவங்களைப் பற்றி நீங்க கொண்டிருந்த கவலைகள் தீரும்.  ஹாப்பி ஃபேமிலின்னு அக்கம் பக்கம் மெச்சவோ பொறாமைப்படவோ செய்யுமளவு சந்தோஷம் நிரம்பி வழியும். அம்மா வழியில் வர வேண்டிய நன்மைகளும் லாபங்களும் உங்களைத் தேடிக்கிட்டு வந்து சேரும். குழந்தைங்க மேடையேறிப் பாராட்டும் புகழும் பெறுவாங்க. உங்களுக்கு அதனால் பெருமிதமும் கர்வமும் வரும். வேலை மாற அவசரம் வேண்டாம். பொறுமையா இருங்க, நல்ல சான்ஸ் வரும். உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்களில் அரவணைப்பு அதிகரிக்கும். விலைஉயர்ந்த ஆபரணம் வாங்குவீங்க. தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். திறமைகள் வெளிப்படும். உடல் நிலை பாதிப்புகள் வராமல் இருக்க மருந்து மாத்திரைகளை கவனமாக சாப்பிடுங்கள். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் ஆதரவும் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். திடீர் கௌரவ பதவிகள் தேடி வரும். அதிகம் கோபப்பட வேண்டாம். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை.