வார ராசிபலன்: 9.10.2020 முதல் 15.10.2020 வரை! வேதா கோபாலன்

--

மேஷம்

அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீங்க. எதையாவது நினைத்து குழப்பம் அடைவீங்க. பெண்களுக்கு உறவுப்பெண்கள் மூலம் சில பிரச்னைகள் வரலாம். உத்யோக வகையில் சீரான நிலை இருக்கும். குழந்தை பாக்கியம் எதிர் பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. தாயிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். காலியாக இருக்கும் உங்களோட பிளாட்டிற்கு புதிய டெனன்ட் வருவாங்க. அதனால் கையில் பணம் புரளும். கல்வி வகையில் செலவுகள் உண்டாகும். புதிய எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீங்க. மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். திடீர்ப் பயணங்கள் ஏற்படலாம். அனைத்துத் தடைகளும் அகலும். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம்.  டஸ் நாட் மேட்டர். புரோஸீட். 

ரிஷபம்

சகோதரரிடமிருந்து ஹெல்ப் கிடைக்கும். வீடு மாற இடம் பார்த்தவர்களுக்கு நல்ல வசதியான பிளாட் அமையும். பணவரவு இருப்பதால், அடமானத்தில் இருக்கும் வீட்டுப் பத்திரத்தை மீட்பீங்க. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை தேவை.மனதுக்குள் போடும் திட்டங்களை நிறைவேற்றுவீங்க.பெண்களுக்கு பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். . பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். ஹாப்பியா?

மிதுனம்

உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காக பாடுபடுவீங்க. விருந்தினர் வருகை இருக்கும். பெண்கள் உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியை காண்பர். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிப்பது நல்லது. அடிக்கடி சோர்வு, விரக்தி அடைவீங்க. கணவன், மனைவி இடையே சில மன வருத்தங்கள் வந்து போகும். சாதகமான திருப்பம் வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். இழுபறியாக இருக்கும் வழக்கில் சமாதான தீர்வுக்கு வாய்ப்புள்ளது. வரவேண்டிய பெரிய தொகை கைக்கு வரும். பிக் ரிலீஃப் தானே?

கடகம்

வாகனங்கள் மூலமாகச் செலவுகள் வரும். கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தவர்கள் குடும்ப விசேஷத்தில் ஒன்று கூடி மகிழ்வீங்க. அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி கிடைக்கும். திறமையால் காரியம் வெற்றி பெறும். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வியாபாரத்தில் நீங்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்கும். பணவரவு தாமதப்படலாம். சிந்தனைகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் காரணமாக வருத்தங்கள் வந்து நீங்கும். மாமன் வகை உறவுகளால் ஆதாயம் வரும்.  வீட்டில் பராமரிப்புச் செலவுகள் உண்டாகும். பழைய வாகனத்தை மாற்றி புது வண்டி வாங்குவீங்க. கிரேட்.

சிம்மம்

குடும்ப விஷயத்தில் உங்களின் கடுமையான முயற்சி வெற்றி தரும். வியாபாரிகளுக்கு பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் அகலும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். ஆஃபீசில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. பெண்கள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு, தேவையான உதவிகள் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ் கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது. வருமானம் அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. மன திருப்தி உண்டாகும். தாய் வழி உறவுகளால் நன்மையும் மகிழ்ச்சியும் உண்டாகும். ரியலி குட் நியூஸ்தான்.

கன்னி

சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். சொத்து, பணம் சம்பந்தமான விஷயங்களில் உங்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். புதிய வேலையில் சேர முயற்சித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் சலுகைகளுடன் வேலை கிடைக்கும். மன நிறைவு இருக்கும். ஸ்பெக்ஸ் மாற்ற வேண்டியது இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு கூடும். கட்சியில் பதவி, பொறுப்புக்கள் கிடைக்கும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். கர்ப்பமாக இருப்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம். திடீர் வெளியூர் பயணங்கள் இருக்கும்.  பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு யோகம் உள்ளது. தந்தையிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். லட்சியங்களை அடையும் வாரம். பணவரவு எதிர்பார்த்ததை போல் இருக்கும். ரியலி குட் இன்கம்.

துலாம்

உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலனில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு, தேவையற்ற செலவு ஏற்படலாம். கலைத்துறையினர் முயற்சிகள் சாதகமான பலன் தரும். ஸ்டூடன்ட்ஸ் ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் அட்ஜஸ்ட் செய்து நடப்பது பெட்டர்.

விருச்சிகம்

சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். கணவன், மனைவியிடையே மனஸ்தாபங்கள் அகலும். பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்கள் விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். கலைத்துறையினருக்கு அலைச்சல் குறையும். ஸ்டூடன்ட்ஸ் ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம், கவனம் தேவை. பெண்களுக்கு சொந்த பந்தங்கள் மூலம் சில சங்கடங்கள், வருத்தங்கள் வந்து போகும். புதிய ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளை சரியாக கவனமாக செய்யவும், இடமாற்றங்கள் இருக்கும். வியாபாரம் சீராக இருக்கும். எதிர் பார்த்த ஆர்டர் கைக்கு வரும். புதிய முதலீடுகளில் அதிககவனம் தேவை. பி வெரி கேர்ஃபுல்.

சந்திராஷ்டமம் :அக்டோபர் 8 முதல் அக்டோபர் 10 வரை

தனுசு

சாதிக்கும் திறமை அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறு வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பார்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவாங்க. பணவரத்து கூடும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீங்க. குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பெண்கள் நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பார்கள். தட்ஸ் லேடீஸ்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 10 முதல் அக்டோபர் 12 வரை

மகரம்

இல்லறம் இனிக்கும். மனைவியின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீங்க. குருவின் பார்வை காரணமாக மகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி வரும். சூரியன் 12ல் இருப்பதால் நேரத்திற்கு சாப்பிட முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். அலுவலகத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் எளிதாக சமாளித்து விடுவீங்க. காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணதேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீங்க. எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.. மன உளைச்சல் இருக்கும். நிதானமாக போவது உத்தமம். சகோதர உறவுகளால் அலைச்சல் செலவுகள் உண்டாகும்.  எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பதவி யோகம் உண்டு. யெஸ். ப்ரமோஷன்.

சந்திராஷ்டமம் :அக்டோபர் 12 முதல் அக்டோபர் 14 வரை

கும்பம்

வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். கலைத்துறையினருக்கு சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பர். அரசியல், இயக்கம், பொது அமைப்பு, தொழிற்சங்கம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பதவி தேடி வரும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரவு எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை. எதை பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கலைத்துறையினருக்கு தடைகள் நீங்கும். ஸ்டூடன்ட்ஸ் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பி வெரி கேர்ஃபுல்.

சந்திராஷ்டமம் :அக்டோபர் 14 முதல் அக்டோபர் 17 வரை

மீனம்

எதிலும் நிதானம், கவனம் தேவை. உத்யோக வகையில் இடமாற்றம் வரவாய்ப்புள்ளது. அரசியலில் இருப்பவர்கள் கவனமாக பேசுவது நலம் தரும். கண்ணியக் குறைவான பேச்சுக்களால் சங்கடங்களையும், வழக்குகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது பெட்டர். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். பாஸ் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிப்பார். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீங்க. உறவினர்கள் வீடு தேடி வருவாங்க. அரசால் ஆதாயம் உண்டு. புதுவாகனம் வாங்குவீங்க. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீங்க. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீங்க.. ரியலி க்ளோஸர்.