வார ராசிபலன்: 13.09.2019 முதல் 19.09.2019  வரை! வேதா கோபாலன்

மேஷம்  

எதை எடுத்தாலும் பிரச்சனையை கொடுத்த விஷயங்கள் இனி மாறும்.  இந்த வாரம் சோதனைகளை தாண்டி சாதிக்க வைக்கும். புதுமண தம்பதியருக்கும் நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி சாதுர்யத்துடன் கூடிய குழந்தை பாக்யம் உண்டாகும். குடும்பமே மகிழ்ச்சியடையப் போகுது பாருங்களேன். வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பேச்சினால் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியங்க. செலவுகள் அதிகரித்தாலும்கூட அதற்கேற்ப பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். என்ஜாய்.

ரிஷபம்

ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால் அதைப் பற்றிக் கொஞ்சம் கவனமாக இருங்க.  உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால் பயணம் சற்றே தள்ளிப்போக வாய்ப்பிருக்குங்க. திருமண வாழ்வை இனிமையாக்க நீங்கள் இது வரை எடுத்த முயற்சிகள் யாவும் இனிமேல்தான் உங்களுக்கு பலன் தரும். உங்களுக்கு வேண்டிய வங்க உங்களை நல்ல வகையில் உணரச் செய்யக் கூடிய விஷயங்களைச் செய்வீங்க.  அற்புதமான வாரம். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யா தீங்கப்பா. இந்த வாரம்  மற்றவர்களின் தேவையில் நீங்கள் கவனம் செலுத்வீங்க. பட்… குழந்தைகளிடம் அதிக தாராளமாக இருக்காதீங்க. அப்படி இருந்தால் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. லேசான கண்டிப்பு எப்பவும் நன்மை தரும்.  

மிதுனம்

வழக்கத்தைவிட சக்தி குறைவாக இருப்பதுபோல்  உணர்வீர்கள். எல்லாம் சும்மா பிரமை தாங்க.  கூடுதல் வேலையை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீங்க. அதனால்தான் அப்படி ஒரு பிரமை வருது.  சிறிது ஓய்வெடுத்துக்குங்க.  அப்பாயின்மெண்ட்களை வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுங்க. மற்றபடி சந்தோஷ பலன்கள்தான். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். வீட்டில் திருவிழாவைப் போன்ற சூழ்நிலை உங்கள் டென்சனைப் போக்கிடும். அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக மட்டும் இல்லாமல் இதில் பங்கேற்கவும் செய்வீங்க. எனவே ஜாலியும் சந்தோஷமும் உண்டு. வார இறுதியில்  எதிர்பாராத ரொமாண்டிக் எண்ணங்கள் மனதில் குடிகொள்ளும். நீங்க தகுதி உள்ள அலுவலர் என்கிற பட்சத்தில் பதவி உயர்வு அல்லது பணப் பயன் கிடைக்கும்.

கடகம்

நீங்கள் பொறுமையாக உழைப்பதால் தேவைக்கேற்ப பணவரவு இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஒருவரை யொருவர் அனுசரித்தும் விட்டுக்கொடுத்தும் செல்வது நல்லதுங்க. வெளியூர்ப் பயணங் களால் உடலைப்பொருத்த வரையில் அசதி ஏற்பட்டாலும், ஆதாயம் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் இணக்கமாக நடந்துகொள்வீங்க. எனவே நன்மை உண்டாகும். தந்தை வழி தாத்தாவின் சொத்துக் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் கொள்ளாமல் பொறுமையுடன் பேச வேண்டியது முக்கியங்க. சக ஊழியர்களுடன் அளவோடு பழகுங்க. பர்சனல் விஷயங்களை அதிகம் பகிர வேண்டாங்க.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 14 வரை 

சிம்மம்

நீங்கள் சளைக்காமல் உழைப்பதாலும் விடாமுயற்சியுடன் செயல்படுவதாலும் மனதில் உள்ள ஆசைகள் அடுத்தடுத்து நிறைவேறும். தொழில்ரீதியாகவும் உத்யோகரீதியாகவும் நன்மைகள் நடக்கும். நீங்கள் சலிப்புடன் செய்து கொண்டிருந்த வேலையில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. சந்தோஷம் தரும் மாற்றங்கள்தான் அவை. எனவே ஜாலிதான். பிள்ளை கள் வழியில் நன்மைகள் அதிகம் நடக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றிகள் கிடைக்கும்.. கணவன் மனைவியிடையே வாக்குவாதங்களை தவிர்க்கணுங்க.. தேவையில்லாம ஏன் அதிகம் பேசறீங்க?  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். அதற்காக எப்போதும் எல்லோரிட மும் கேட்கணும்னு நினைக்காதீங்க. பழைய கடன்களை அடைக்கப்பாருங்க. கோயில்களுக்குப் போவீங்க.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 17 வரை 

கன்னி

நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். குறிப்பாக வெகு காலம் கழித்துப் பழைய நண்பர்களைச் சந்திப்பீங்க. உங்களில் சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். பிள்ளையே இல்லாதவங்களுக்குப்பிள்ளை பிறக்கும். கோயில்களுக்குப் போவது பற்றித் தடை தாமங்கள் ஏற்பட்டால் டென்ஷன் வேண்டாம்.  விரைவில் அதற்கான காலம் வந்துவிடும். மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. மகன் அல்லது மகளின் திருமணத்துக்கான முயற்சிகள் சாதகமாக முடியும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 19 வரை 

துலாம்

பணியின் காரணமாகச் சிலர் தற்காலிகமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும். அதனால் பரவாயில்லைங்க. பணி நல்ல முறையில் நிறைவேறி நல்ல பெயர் வாங்கித் தரும்.  குடும்பத்தினருக்கும் உங்க மேல பாசம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய தொழில் தொடங்குபவர்கள் பார்ட்னர்களை நம்ப வேண்டாம். புதிய சொத்துக்களும் பொருட் களும் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைத்துவரும். விவசாய நிலங்கள் வைத்திருப்போருக்கு நல்ல காலம் ஆரம்பிச்சுடுத்துங்க. கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். வியாபாரம் வளர்ச்சி பெறும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும்.

விருச்சிகம்

உங்கள் கண்ணீரை விசேஷமான நண்பர் துடைப்பார். அவர்/ அவங்க எதிர்பாலினத்தவரா  பாசிடிவ் சிந்தனையுடன் கூடிய நன்னெறிகளால் வேலையிடத்தில் வெற்றி கிடைக்கும். உங்கள் நல்ல செய்திகளால் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும். ஏன் வெற்றியும் கிடைக்கும்.  பாசிடிவ் சிந்தனைகளுடன் நீங்கள் திகழ்வதால் நீங்கள் விரும்பிய வெற்றியை அவை கொடுக்கும். அலுவலகரீதியாக நீங்கள் மேற்கொண்ட பயணம் நல்ல பலனைத் தரும். இந்த வாரம்  செலவு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உங்களுக்கு “காதல் பித்து” பிடிக்க வைக்கும் வாரம் இதுவாக இருக்க வாய்ப்புள்ளது! எதிலும் நிதானப்போக்குதான் இருக்கும். அது பற்றிப் புலம்பாதீங்க.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சி வருவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

தனுசு

 பண வரவு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் வளர்ச்சி காணலாம். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் நன்மைகள் உண்டாகும். சொத்துக்களால் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். என்றாலும் புதிய சொத்துக்களை/ வீடு/ நிலபுலன்களை வாங்கும்போது விழிப்புடன் இருப்பது நல்லது. சட்ட சிக்கல் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளவும். பெண்களைப் பொருத்த வரையில் மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். இந்த வாரம் துவங்கிக் குழந்தைகள் வாழ்வில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புகள் கூடிவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும். வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள்.

மகரம்

அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். பெண்களுக்குப் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். உடல்நிலையில் மிகச் சிறந்த அனுகூலங்களைப் பெறுவீர்கள்.  பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்

கும்பம்

கலைத்துறையினருக்கு கடும் முயற்சி மற்றும் உழைப்புக் காரணமாக நல்ல திருப்பம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். ஆனாலும் சுபமாக எதுவும் நடந்து முடியும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்துச்  செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் கள் உயர் அதிகாரிகளை அனுசரித்துப் போவதால் நன்மைகளை அடைவீர்கள். கலைத்துறை யினருக்கு: அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். திடீர் வேகம் பெற்று மனதிற்கு உற்சாகம் அளிக்கும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

மீனம்

இத்தனை நாள் ஆரோக்யம் சம்பந்தமான பிரச்சினையில் இருந்தவங்களுக்கு உடல்நிலை யில் முன்னேற்றம் காணப்படும். இருப்பினும் உணவுக் கட்டுப்பாடு அவசியம். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும்.  குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார் கள்.  வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும்.  நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பீர்கள் என்பதால் நல்ல ரிசல்ட்டை தைரியமாக எதிர்பார்க்கலாம் தம்பி/ தங்கச்சி. குட் லக்.

Leave a Reply

Your email address will not be published.