வார ராசிபலன்: 11.1.2019 முதல் 17.1.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம்

வார ஆரம்பத்தில் சின்னச்சின்ன எரிச்சல்கள் இருப்பதை வைத்து ஒரு முடி வுக்கு வந்துடாதீங்க. வார இறுதி செம சந்தோஷமா இருக்கப்போகுது. திடீர் நிகழ்வுகளை நம்மால்  மாற்ற முடியாது. எனினும் ஏற்கத் தயாராகுங்கள். அரசாங்கத்தின் நன்மைக்காகக் காத்திருக்கீங்களா? குட். நிறைவேறியாச் சுன்னு தைரியமா,நிம்மதியா இருக்கலாம். அதற்காக சிறு செலவுகள் அல்லது தியாகங்கள் செய்ய வேண்டி வரலாம், அல்லது நீங்கள் நினைத்த நன்மையாக இல்லாமல் வேறு வகை நன்மையாக இருக்கலாம். எதற்கும் தயார் நிலையில் இருந்தால் இதுவும்  சூப்பர் நன்மைதான். போகப்போக உணர்ந்து சந்தோஷப் படுவீங்க. குட்லக்.

ரிஷபம்

கண்டுக்காம போங்க. தன்னால சரியாகும். அலுவலகத்திலும் வீட்டிலும் எந்த விஷயத்திலும் தலையிடாம போயிக்கிட்டே இருங்க. கோயில் குளம்னு ஜாலி யாய் சூட்கேஸைத் தூக்கிக்கிட்டு கிளம்பிட்டீங்க. பாப்பாவைக் கொஞ்சப் போறீங்க. கங்கிராட்ஸ். திருமணம் பற்றி எதுக்காக இத்தனை கவலைப்பட றீங்க. எல்லாம் தன்னிச்சையாய் நல்லபடியாய் இதோ முடிஞ்சாச்சு. பள்ளி அல்லது கல்லூரி அல்லது அலுவலகத்தில் நல்லந நற்பெயர் எடுப்பதற்கு  நீங்கள் மதிக்கும் பெரியவர்களும் நல்லவர்களும் நீங்கள் ஆசானாக மதிப்பவர்களும் உதவுவார்கள். நண்பனும் பகை போல் தெரியும்.  அவர்கநள் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

மிதுனம்

உங்களுக்கு மதிப்பு உயரும். உங்களை குருவாக.. ஆசானாக மதிக்கப் பலர் காத்திருப்பாங்க. குடும்பத்தில் லேடீஸால் சின்ன பிரச்சினைகள் வரும். அதனால் என்ன? கடன் வாங்கி எதுவும் செய்யாதீர்கள்.  ஒரு வேளை பல நாட்கள் திட்டமிட்ட நியாயமான கடன் வாங்க வேண்டியிருந்தால் விஷயம் தெரிந்த பெரியவர்களையும் உங்கள் ஜாதகத்தை நன்கறிந்த ஜோதிடரையும் கேட்டு முடிவெடுங்கள். அதாவது உங்களின் ஜாதகப்படி இப்போது சாதகமான தசைபுக்தி நடந்து கொண்டிருந்தால் வெற்றிகரமாகவே எல்லாம் இருக்கும். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். பேச்சிலும் செயலிலும் நடை உடை பாவனை யிலும் கவர்ச்சி அம்சம் கூடுதலாகும்.

கடகம்

செய்யும் தொழிலில் எஸ்கலேட்டர் மாதிரி உயர்ந்து உயர் பதவியை எட்டிப் பிடிப்பீங்க. எதிர்பார்ககலைதானே? மம்மிக்கு உடல் நலம் குறைஞ்சாலும் சிங்கக்குட்டி மாதிரி நீங்க இருக்கும்போது அவங்களுக்கு என்ன குறை? வர வேண்டிய லாபங்கள் சற்றுத் தடை தாமதங்ளுடன்தான் வரும். எனினும் உங்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் சரியாகிவிடும். மேடை ஏறிப் பேசிக் கைத்தட்டல் வாங்குவீங்க. கல்யாணம் காட்சின்னு சென்ட் போட்டுக் கிட்டுக் கிளம்புவீங்க.. நன்மைகளும் லாபங்களும் அதிகரிக்கும். குழப்பமான மன நிலையிலிருந்து மீளுவீர்கள். குறிப்பாக வார ஆரம்பத்தில் இருந்த குழப்பங்கள் வார மத்தியில் குறைந்துகொண்டே வந்து .. வார இறுதியில் காணாமல் போய் நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கும்.

சிம்மம்

குடும்பத்தில் ஒரு சின்ன சைஸ் மேளமாவது கொட்டும். நண்பர்கள் உண்மை யான நண்பர்கள் என்று நினைக்கவும் வேண்டாம் பகைவர்களைப் பார்த்து பயப்படவும் வேண்டாம். இரண்டும் தலைகீழாகப் போகுது.  எந்த நிலையிலும் முடிவு வெற்றிகரமாகவே இருக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத திடீர் மாற்றம் அல்லது முன்னேற்றம் இருக்கும். வேலைக்குத் தகுந்த மரியாதையும் காசோலையும் இல்லையோ என்ற பதற்றத்தைத் தூக்கி உடைப்பில் போடுங் கள். எப்போதோ லோன் போட்டிருந்தீங்க.. அது  வராதுன்னு நினைச்சு ‘சீச்சீ இந்தப் பழம் கசக்கும்‘ னு வெறுத்திருந்த இந்நேரத்தில் டக்கென்று நீங்களே எதிர்பாராத நேரத்தில் அவர்களாகக்கூப்பிட்டு “இந்தாங்க லோன்“ என்று (தங்கத்தட்டு இல்லாட்டியும்) எவர்சில்வர் தட்டிலாவது வெச்சுக்குடுப்பாங்க. டோன்ட் ஒர்ரி.  ஏற்கனவே எப்படித்தான் கடன்களை அடைக்கப்போகிறோமோ என்ற பயத்தில் இருப்பவர் நீங்கள் என்றால் இதோ.. குட் நியூஸ்,  கடன் அடையும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 11 முதல் ஜனவரி 14 வரை

கன்னி

எல்லாம் வரும்போது வரும். நமக்குத்தான்மா அவசரம்.  அரசமரத்தைச் சுற்றி  விட்டு உடனே குழந்தை உண்டாயிருக்கா என்று டெஸ்ட் செய்யலாமா? பத்து மாசம் கழித்துத்தானே பிறக்கும்?  நீங்க பெற்ற குழந்தைங்க உங்க மேல கோபப்படலாம். டூ விடலாம். நீங்க அவங்களோட காய் விடலாமா? தாங்கு வாங்களா. மேலுக்கு சிரிச்சுக்கிட்டிருந்தாலும் ரொம்பவும் நொந்து போயிட் டாங்க. மன்னிச்சுடுங்க. கோழி மிதித்து பேபி சாகுமா என்ன? அது அவங்களுக்குத் தெரியாது. பயப்படுவாங்க. பயம் வேண்டாம் என்பதைப் புரிய வைங்க. உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். ஆடை ஆபரணங் களுக்கான செலவுகள் ஏற்படும். ஹாப்பி ஹாப்பி.. செல்வாக்கு அதிகரிக்கும். மதிப்புக்கூடும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 14 முதல் ஜனவரி 16 வரை

துலாம்

நம் விருப்பத்திற்கேற்ப உலகமே சுழல வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.  அதை மாற்ற முயற்சி செய்கிறேன் பேர்வழி என்று மூக்குடைந்து மொக்கை வாங்காதீங்க. அது தன் பாட்டுக்கு சுழலட்டும். நாம் அட்ஜஸ்ட் செய்து கொள் வோமே! நீங்கள் கல்யாணத்துக்குக் காத்திருந்தால் அது சற்றுத் தாமத மாகலாம். நீங்க கல்யாணமாகி அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாரா இருந்தால் உங்களுக்கு நிச்சயமாய்ப் பாப்பா பிறக்கப் போகிறது. அலுவலக சூழல் சற்று அவசர கதியில்தான் இருக்கும். உடம்பைக் கெடுத்துக்கொள்ளும் பழக்க வழக்கங்கள் வேண்ளடாம். குறிப்பாய்  நல்லா சாப்பிடுங்க! நல்லாத் தூங்குங்க.  இதாவது பரவாயில்லைங்க. ஏதாவது கெட்ட பழக்கங்கள் இருந்தால் மூன்று முறை தலையைச்சுற்றி வங்காளவிரிகுடாவில் தூக்கிப் போடுங்க.

சந்திராஷ்டமம் : ஜனவரி 16 முதல் ஜனவரி 18 வரை

விருச்சிகம்

அது காராகட்டும்.. பைக்காகட்டும்.. ஸ்கூட்டராகட்டும்… வண்டி ஓட்டும்போது வண்டியின் வேகத்தில்தான ஓட்டணும். விமான வேகத்தில் ஓட்டக்கூடாது. சரியா? காலில் பாட்டக்கேட்டுக்கொண்டும்.. போன் பேசிக்கொண்டும் ஓட்டவே ஓட்டாதீங்க (உக்கும் இதைச் சொல்ல ஜோசியர் வேணுமாக்கும் என்று கேட்கிறீர்களா? அத்தனை ராசிகளுக்கும் பொதுவாய் இதைச் சொன்னால்  அட்வைஸர். உங்க ராசிக்கு மட்டும் தனியாய்ச் சொன்னால் ஜோசியர்..  புரிந்ததா?) கன்னா பின்னா என்று குரல் உயர்த்திக் கத்தத் தோன்றும். பின் விளைவுகளை யோசித்துப் பேசுங்க! (குறிப்பாய் அலுவலகம் பள்ளி கல்லூரியில்…).  இதை அவாயிட் செய்யப் பேசாமல் தியானப் பயிற்சி எடுங்களேன்.

தனுசு

உங்க மம்மிக்கு அரசாங்க சம்பந்தப்பட்ட ஏதாவது உதவிக்கோ நன்மைக்கோ வெயிட் பண்ணிக்கிட்ருக்கீங்களா, இதோ வந்தாச்சே! நீங்க ரொம்ப நாளாய் ஆவலுடன் காத்திருந்த வெளிநாட்டு உத்யோகம்  கிடைக்கும். அதாவது  உங்களுக்கு நிச்சயமாய் வேலை உண்டு என்ற  நல்ல தகவல் மெயிலில் வந்தே விடும், போய் ஜாயின் செய்யக் கொஞ்ச காலம் ஆகலாம். எனினும் மனசில் ஜாலி நிலவுமுங்க. ஏற்கனவே உள்ள பணி பற்றிய கவலைகள் தீரும். டென் ஷன்ஸ் அகலும். ஒரு வேளை நீங்கள் விரும்பியிருந்தால் அந்தப் புது வேலை உள்ளுரில்  கிடைக்கவும் சான்ஸ் இருக்கு. எதிர்பார்த்ததைவிட அதிகப் பணம் வரும். கவனமாய் முதலீடு செய்யுங்க. திருமணக் கனவுகள் பலிக்கும்.

மகரம்

கொஞ்ச நாளைக்கு வாயை மூடிக்கொண்டிருந்தால் உங்களுக்கு நல்லதோ இல்லையோ சுற்றி இருப்பவர்கள் தப்பிப்பார்கள்.   அவர்களுக்குப் பிரச்சினை வந்தால் உங்களைத்தான் சாடுவார்கள். ரிமம்பர், அது போகட்டும் விடுங்க.  ஃப்ளைட் பயணம் அதிகம் இருக்கும், அவார்ட் ரிவார்ட் உண்டு. வேலைன்னு வந்துட்டா உங்களை மாதிரி சின்சியரானவங்க யாருமில்லைங்க. ஆனால் மனசு வெச்சால்தான் உழைப்பீங்க. என்ன வேகம் இருந்தாலும் முயல் மாதிரி தூங்கிக்கிட்டே ரேஸ் ஓடக்கூடாதில்லையா? திருமண விஷயங்களை ஒத்திப்போடும்படி யாராவது அறிவுறுத்தினால் பயம் வேண்டாம். இப்போ நிச்சயம் செய்துட்டு சில மாசங்கள் கழிச்சுதானே திருமணம் செய்துப்பீங்க. எனில் பர்ஃபெக்டா இருக்கும், ஜமாயுங்க. குட் லக்.

கும்பம்

வீடு என்றிருந்தால் யாராவது குரல் உயர்த்தத்தான் செய்வாங்க.  அது தப்பு இது தவறுன்னு நீங்க பதில்  சொல்லாமல் விட்ருங்கப்பா. அமைதியாவது பிழைக்கும். அலுவலகத்தில் பொறுப்புக்கு மேல் பொறுப்பு சுமத்தினாலும் புன்னகையுடன் சமாளிக்கும் குணம் உள்ளவர் நீங்க. குழந்தைங்க வாழ்க் கையைப் பார்த்தெல்லாம் டென்ஷன் ஆக வேண்டாம். எல்லாம் சிம்ப்பிளான விஷயம். இன்னிக்கு ஒரு மாதிரி இருக்கும் நாளைக்கு சந்தோஷமா மாறும். இந்த வாரத்திலேயே இரண்டு வகையையும் பார்க்கப்போறீங்க.  நீங்க எதிர்பார்த்துக் காத்திருந்த  லோன் உடனே கிடைக்கும்,  ஆரோக்யம் பற்றிக் கொஞ்சம் கவலைப்படுங்க. சும்மா அலட்சியமா விடாதீங்க. சரியான நேரத்துக்குத் தூங்கிக் கரெக்டா எழுந்திருக்கப்பாருங்க. பொதுவாவே இயக்றைக்கு விரோதமாக எந்த ரிஸ்க்கும் எடுக்காதீங்க. ஆரோக்யம் நல்லாவே இருக்கும். அதற்காகப் பெரிய பிரச்சினை வரும் என்றெல்லாம் பயம் வேண்டாம்.

மீனம்

கணவர்/ மனைவி முன்பைவிட அதிகமாக அட்ஜஸ்ட் செய்து கொள்வார். அதிருஷ்டம்தான் போங்க. குழந்தைங்க பாஸ்போர்ட், விஸா எடுப்பாங்க. நீங்க சர்வதேச விமான நிலையத்தில் டாட்டா காண்பிங்க ரெடியா? வேலை யும் சரி வேலை சம்பந்தமான முயற்சிகளும் சரி கொஞ்சம் ஆமை ஸ்பீடில்தான் இருக்கும். அதற்கெல்லாம் டென்ஷன் ஆவாதீங்க.  கூட்டிக் கழிச்சுப் பார்த்தால்  வரவேண்டிய நேரத்தில் லாபம் வரும். சிரமம் வருவது போல் தோன்றி எல்லாம் தலைப்பாகையோடு போகும்போது அப்பாடான்னு ஆகும்.  அது மட்டுமா.. எல்லா விஷயங்களையும் அணுகும் முறையில் சிறந்த பக்குவம் உள்ள உங்களுக்கு அலுவலகத்தில் மேலும் சிறந்த நற்பெயர்கள் கிடைக்கும்.