வார ராசிபலன் 13-4-18 முதல் 19-4-18 வரை – வேதா கோபாலன்

மேஷம்

கவர்ச்சி அம்சம் அதிகமாகும். செல்வாக்கு கூடும். கணவன் மனைவிக்குள்ளும், காதலர்களுக்கிடையே யும் அன்பும், நெருக்கமும் அன்னியோன்னியமும் அதிகரிக்கும். அலுவலகத்திலோ நட்பு வட்டத்திலோ, அக்கம்பக்கத்திலோ எதிர்பாலினத்தின் உதவி அதிகரிக்கும். லோன் போட்டால் விரைவில் கிடைக்க வாய்ப்பு அதிகம். இத்தனை காலம் முறைத்துக் கொண்டிருந்த நண்பர்கள் வெள்ளைக்கொடி எடுத்துக் கொண்டு நெருங்கி வருவார்கள். திடீரென்று நிலைமை உயர்ந்து ராஜ மரியாதைக் கிடைக்கும்.

ரிஷபம்

ஏகப்பட்ட செலவுகள் காத்துக்கிட்டிருக்கு. ஆணாயிருந்தால் மனைவிக்காகவும், பெண்ணாயிருந்தால் ஆடை, ஆபரணத்துக்காகவும் கார்ட் தேய்ப்பீங்க. இத்தனை காலம் டென்ஷன் கொடுத்துக்கொண்டிருந்த குழந்தைகள் திடீரென்று பொறுப்புணர்வுடன் செயல்பட்டு உங்கள் வயிற்றில் ரோஸ் மில்க் வார்ப்பார்கள். சமீப காலமாக உஙளை வாட்டிக்கொண்டிருந்த ஆரோக்கியப் பிரச்சினைகள் உங்களுக்கு டாட்டா சொல்லிவிட்டுக் கிளம்பும். திட்டமிட்டிருந்த கோவில் விஸிட்கள் ஒருவழியாக நிறைவேறி மனச் சாந்தி அளிக்கும்.

மிதுனம்

திடீர் லாபங்கள் வாசல் கதவைத் தட்டி உள்ளே வரும். அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட லாபங்கள் அல்லது வருமானங்கள் உங்களை வந்தடையும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் நிச்சயம் வரும். நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று கலைநிகழ்ச்சிகள் அளித்து லாபம் அடைவீர்கள். அதோடு தொழில் ரீதியாக மேலும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கணவன் மனைவிக்குள் நிலவி வந்த எலி – பூனை விவகாரங்கள் ஒருவழியாக முற்றும் போட்டுக் கொள்ளும்.  தயவுசெய்து ஆரோக்கியத்தில் மட்டும் முழு கவனம் செலுத்துங்கள்.

கடகம்

அரசாங்கத்தில் அல்லது வங்கியில் வேலை கிடைக்கக் காத்திருந்தவர்கள் எண்ணம் நிறைவேறி மகிழ்ச்சியும் நிறைவும் பெறுவீர்கள். பல காலம் சண்டித்தனம் செய்துகொண்டிருந்த கடன் பாக்கிகள் இதோ வசூல் ஆகிவிட்டன. வேலை பார்க்கும் இடத்தில் நீங்களாக பிரச்சினைகள் ஏதும் ஏற்படுத்தி அதில் மாட்டிக்கொள்ளாதவரை பாதுகாப்பாகத்தான் இருக்கிறீர்கள் என்று மகிழ்ச்சியடையலாம். சகோதர சகோதரிகளின் வாழ்வில் விளக்கேற்றி நெகிழச்செய்வீர்கள். அம்மாவிடமிருந்து நன்மைகளையும், நகைகளையும் எதிர்பார்க்கலாம்.

சிம்மம்

தந்தைக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்கள் நடக்கும். அதற்குச் சில சமயங்களில் நீங்களும் காரணமாக இருப்பீர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. எதிர்பாராத தன லாபங்களை எதிர்பாருங்கள். அதேசமயம் வழக்கமாக வரவேண்டிய வருமானங்கள் சற்றுத் தாமதமாக வரும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட்ட வாய்ப்புகள் முன்பைவிட அதிகரித்தாலும் தயவுசெய்து உழைப்பை மட்டுமே நம்புங்களேன் ப்ளீஸ். குடும்பத்தில் குழந்தைகளின் படிப்பு விஷயமாக ஏற்பட்டிருந்த கவலைகளும் டென்ஷனும் தீரும்.

சந்திராஷ்டமம் : 13.04.2018 முதல் 16.4.2018 வரை

கன்னி

தர்ம சிந்தனைகளும் பக்தி சிந்தனைகளும் அதிகரிக்கும். விட்டுப்போயிருந்த குலதெய்வ வழிபாடு தொடரும். குடும்பத்தில் திருமண ஏற்பாடுகள் மற்றும் குழந்தைப் பேறு சி|றிய தாமதத்துக்குப்பின் இனிதே நிறைவேறுவதால் குடும்பமே குதூகலிக்கும். தாயாருடன் ஏற்பட்டிருந்த சண்டை சச்சரவுகள் தீரும். தடைப்பட்டிருந்த கல்வி தொடரும். உங்களின் புத்திசாலித்தனமான தீர்மானத்தினால் நன்மைகளை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில் எத்தனைக்கெத்தனை பொறுப்புகள் அதிகரிக்கின்றனவோ அந்த அளவு சம்பள உயர்வை இப்போதைக்கு எதிர்பார்க்க வேண்டாம். சீக்கிரம் வரும்.

சந்திராஷ்டமம் : 16.04.2018 முதல் 18.4.2018 வரை

துலாம்

அப்பாடா! நடுவில் காணாமல் போயிருந்த நிம்மதியும் சந்தோஷமும் மீண்டிருக்குமே. குழந்தைகளுக்கு எந்த வகையிலாவது சுப நிகழ்சிகள் நடக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் செலவுகள் செய்வீர்கள். சகோதர சகோதரிகளுடன் இருந்துவந்த ஊடல் தீரும். தாயாருக்கு மிக சீக்கிரத்தில் நன்மை ஒன்று காத்திருக்கிறது. நீங்கள் வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் அது இப்போது அனாயாசமாக நிறைவேறும். அல்லது உங்கள் பெற்றோரிடமிருந்து உங்களுக்குப்  பரிசாகவும் கிடைக்கலாம்.

சந்திராஷ்டமம் : 18.04.2018 முதல் 20.4.2018 வரை

விருச்சிகம்

குடும்பத்தில் திருமணத்திற்காகவோ, நிலம் வாங்கவோ செலவுகள் செய்து அதைப் பற்றியே டைனிங் டேபிளில் பேசி மகிழ்வீர்கள். எந்தப் பெரிய முயற்ச்சிகள் எடுப்பதானாலும் ஒருமுறைக்குப் பதினைந்து முறை யோசித்துவிட்டு அதன்பிறகே செயலில் இறங்குங்கள். குழந்தைகள் கல்வி விஷயத்தில் சற்று முன்பின்னாக இருந்தாலும் பொறுமையுடன் அவர்களைக்கையாளுங்கள். ஏனெனில் மற்ற விஷங்களில் அவர்கள் நல்லபடியாகவே நடந்துகொண்டு உங்கள் மானத்தைக் காப்பாற்றுவார்கள்.

தனுசு

இத்தனை காலம் காணாமல் போயிருந்த தன்னம்பிகையும் உற்சாகமும் மீண்டும் உங்கள் மனசில் வந்து உட்கார்ந்து கொள்ளும். குழந்தைகள் நல்லபடியாக நடந்துகொள்வதால் அவர்களைப்பற்றிய கவலைகள் தீர்ந்து நிம்மதியடைவீர்கள். வருமானத்தைப் பொறுத்தவரை நல்ல காலம்தான் நடந்துகொண்டிருக்கிறது. இடையில் வந்த வீண் பழிகள் கணாமல் போகும். பெண் குழந்தைகள் மேடையேறிக் கலை நிகழ்ச்சிகள் செய்வதுடன் கை தட்டலும், பாராட்டும், பரிசுகளும் பெற்று உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

மகரம்

தாயாருக்கு அரசாங்கத்திடமிருந்து நன்மைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். சமீப காலத்தில் வேண்டாத விவகாரங்களில் மாட்டிக் கொண்டு சிரமப்பட்டதெல்லாம் ஒருவழியாகப் பழங்கதையாகும். செலவுகள் கட்டுப்படும். அல்லது நியாயமான நல்ல செலவுகள் செய்வீர்கள். வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்கள் தாய்நாட்டுக்கு சிறிய விசிட் அடிப்பீர்கள். சகோதர் சகோதரிகளின் ஈகோ காரணமாக ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீர்வதற்கு இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். எல்லா விஷயத்திலுமே பொறுமை காக்க வேண்டி வரும்.

கும்பம்

சகோதர சகோதரிகள் மிகவும் நல்ல விதமாக நடந்து கொள்வார்கள். தந்தை வழி உறவினர்கள் உங்களுடன் சுமுகமான உறவு பாராட்டுவார்கள். காதல் வெற்றி பெறும். கல்வியில் சிறந்து விளங்கிப் பாராட்டுகளும், பரிசுகளும் ஆசிரியர்களின் அன்பையும் பெறுவீர்கள். திடேர் செலவுகளைத் தவிர்க்க முடியாது. தயார் நிலையில் இருப்பது நல்லது. அதே போல் வருமானமும் எதிர்பாராத வழியிலேயே வரும். முயற்சிக்கேற்ற பலன்கள் மட்டுமே இருக்கும். எனவே யாருடைய பேச்சையும் நம்பிக் குருட்டு அதிர்ஷ்ட்டத்தை எதிர்பார்க்க வேண்டாம்.

மீனம்

இப்போதைக்கு வேலை மாறுகிற முயற்சி எதுவும் செய்ய வேண்டாம். இருக்கும் இடத்தில் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்கிற வழியைப் பாருங்கள். குடும்பத்தில் யாருக்கேனும் திருமணத்துக்குத் தேதி குறிப்பீர்கள். அது ஒருவேளை காதல் திருமணமாக இருந்தாலும் இருக்கலாம். தந்தைக்கு நல்ல வகையான முன்னேற்றம் இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளால் ஏற்பட்ட கவலைகள் அவர்களாலேயே தீரும். ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் லாபம் அடைவீர்கள்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Patrikai weekly_ Rasi palan   13.04.2018 to 19.04.2018, வார ராசிபலன் 13-4-18 முதல் 19-4-18 வரை - வேதா கோபாலன்
-=-