வார ராசிபலன்: 21-09-18 முதல் 27-09-18 வரை – வேதா கோபாலன்

மேஷம்

உங்களின் கவரும் தன்மை அதிகரிச்சுக்கிட்டே போகுமுங்க. எனவே உங்களின் ரசிகர்களும் அதிக எண்ணிக்கையில் உங்களைப் பார்த்து பிரமிச்சுப் பாராட்டுவாங்க. கணவன்  மனைவிக்கிடையே நல்லுறவு இருக்கும். திருமணமாகாதவர்களுக்குக் காதல் திருமணம் கைகூடும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. பேச்சில் கவனம் தேவை. அந்த வீட்டுக்குச் செவ்வாயும் வருவதால் கோபமான பேச்சைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக அலுவலகத்தில் அது அறவே கூடாது. குடும்பத்தில் நிச்சயதார்த்தம்.. திருமணம்.. வளைகாப்பு.. குட்டி பாப்பாவுக்குப் பெயர் சூட்டுவிழா என்று ஏதாவது ஒரு சுப காரணத்திற்காக சந்தனம் வீடியோ பூமாலை அமர்க்களப்படும். சுருக்கமாய்ச் சொன்னால் குடும்பமே குதூகலமா இருக்குமுங்க.

ரிஷபம்

திடீரென்று உத்யோக மாற்றங்கள் ஏற்படும். காதலில் இது வரை இருந்து வந்த தடைகள் நீங்கும். கணவன் மனைவி பிரச்சினைகள் சரியாகும். சம்பளம் கூடுதலாகும். பெருமையான பொறுப்பு தருவாங்க ..ஆம். உன்னைப் போல உண்டான்னு அலுவலகத்தில் ஆரத்தி எடுப்பாங்க… முன்னோர் வழியில் ஏதாவது சொத்து வரும். உங்களை எந்தத் திறமை இல்லாதவர்னு எல்லாலும் கிண்டல் செய்துக்கிட்டிருந்தாங்களோ அதே திறமையில் வைராக்யமாய் ஜெயித்துக் காட்டுவீங்க. மம்மிக்கும் உங்களுக்கும் இடையில் சந்தோஷம் தரும் நல்லுறவு இருக்குங்க. உங்களை அவங்க ரொம்பவும் சப்போர்ட் செய்வாங்க.

மிதுனம்

உழைப்பதற்கு ஒரு அளவில்லை? கொஞ்சம் உங்கள் ஆரோக்யத்தையும் பார்த்துக்குங்கங்க. சரியா? வெற்றிப்படியில் சில தடைகள் நேரிடலாம். பொருட்படுத்த வேண்டாம். தாமதம் இருக்குமே தவிர வெற்றி மறுக்கப்படாது. இன்றைக்கு நீங்கள் உழைக்கும் உழைப்புக்கெல்லாம் எதிர்காலத்தில் நல்ல பலன் இருக்கும். இந்தத் தன்னம்பிக்கை…. தன்னம்பிக்கைன்னு ஒண்ணு இருக்கே.. அது முதல்ல பிடிபடும்.அது போய் மற்ற எல்லா நன்மைகளையும் அழைச்சுக்கிட்டு வரும். இருப்பதால் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதுபோல் இருந்தாலும் வாரக்கடைசியிலேயே பிரச்சினை தீரும். ஆபரணங்கள் அணிமணிகள் வாங்க சற்று அதிகம் செலவு செய்வீர்கள். அரசாங்கத்தின் மூலம் ஏதோ ஒரு நன்மை எதிர்பார்த்துக்கிட்டிருந்தீங்களாங்க? அது நல்ல முறையில் நிறைவேறுமே.

சந்திராஷ்டமம் : 19.09.2018 முதல் 22.09.2018 வரை

கடகம்

தலைகால் தெரியாமல் குதிக்க வேண்டிய நேரத்தில் ஒரு அடக்கம் காண்பிச்சு பாதிப்பில்லாமல் காட்டிக்கறீங்கறே! அது பாராட்டப்பட வேண்டிய முன்னேற்றமுங்க. அட! பொறுப்பை உணர்ந்து செயல்படறீங்கங்க. கங்கிராட்ஸ். அவசியமற்ற செலவுகள் செய்ய வேண்டியிருக்கலாம். பரவாயில்லைங்க. மனசுக்கு சந்தோஷமும் மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும். அதுவும் மனசுக்கு வேண்டியவங்க… குடும்பத்தினர், மகன் , மகள்.. என்று பாராட்டும்போது பெருமிதம் ஏற்படுவது இயற்கையே. என்ஜாய். மாணவர்களுக்கும் நல்ல டைம்தான். கல்வியிலும் கலைகளிலும் சிறப்புப் பெற்று வெற்றியடைவீர்கள். இருப்பதால் சகோதரர்களுக்கு ஏதோ ஜாக்பாட் அடிக்கப்போகுது. அவங்க கூட நல்லுறவு இருக்கும். அனுசரணை இருக்குங்க.

சந்திராஷ்டமம் : 22.09.2018 முதல் 24.09.2018 வரை

சிம்மம்

மைக்கில் மட்டுமல்லாமல் எங்கேயும் எப்போதும் யாரிடமும் எந்த சூழலிலும் பேச்சினால் வெற்றியும் செல்வாக்கும் கியூவில் நிக்கும். தீய வழியில் சம்பாதிக்கவோ, சந்தோஷம் அனுபவிக்கவோ யாராவது உங்களை டெம்ப்ட் செய்தால் நோ என்பதை அழுத்தமாக ஆனால் அடக்கமாக சொல்லிடுங்க. உங்களால் தவிர்க்க முடியக்கூடிய பயணத்திற்கெல்லாம் ‘நோ’ தான். சற்று இறைவழிபாட்டில் கவனம் செலுத்தினால் நன்மையும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கவலை வேண்டாம். பயம் வேண்டாம். குடும்ப வாணிபத்தில் ஈடுபட்டவர் நீங்க என்றால் நல்ல லாபம் வரும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெற்று குடும்பத்துக்கே சந்தோஷம் தருவீங்க.

சந்திராஷ்டமம் : 24.09.2018 முதல் 27.09.2018 வரை

கன்னி

பொதுவிழா அல்லது அலுவலக விசேஷத்தில மைக் பிடிச்சு சூப்பராப் பேசிப் பாராட்டு வாங்கப் போறீங்க. இத்தனை காலம் மனதை சங்கடப்படுத்திக்கொண்டிருந்த வருத்தங்கள் மறையும். கொஞ்சம் கொஞ்சமாய் நிலைமை சரியாகிக் கொண்டே வரும். அலுவலகப் பயணத்தை மட்டும் மறுக்காம ஒப்புக்குங்க. செலவு பத்தி பயப்பபடாதீங்கங்க. அது நன்மையும் மகிழ்ச்சியும்தான் தரும். பேச்சில் மிகுந்த புத்திசாலித்தனமும் கவர்ச்சி அம்சமும் கூடும். ஒன்றிற்க மேற்பட்ட வருமானங்கள் வரும்.  திருமணம் சம்பந்தமான விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் வெயிட் செய்தால் சிறப்பான காலம் உண்டு.

துலாம்

உங்க வீட்டில் யாருக்கோ திருமணமோ, சீமந்தமோ வேறு ஏதேனும்  விசேஷமோ வருதுங்க. சேலை களுக்கெல்லாம் அழகா பிளவுஸ் ரெடி  பண்ணுங்க… குழந்தைகளை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாளுங்கள். எடுத்த காரியம் யாவினும் வெற்றி. லாபங்கள் அதிகரிக்கும்.நல்லது நடக்கும். நல்லதே நடக்கும். புதிய வேலை தேடும் பணி இப்போதைக்கு வேண்டாமே. அதைச் சற்றே ஒத்திப்போட சாத்தியம் உண்டா பாருங்க. அப்படியும் அவசியம் மாறித்தான் ஆகவேண்டும் என்றால் தற்போத ஜாதகப்படி சிறந்த தசா புக்தி நடக்கிறதா என்று பார்த்துக்குங்க. பிறகென்ன? மாறலாம். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உங்க மம்மியின் ஆதரவால் உங்களுக்கு ஒரு நன்மை ஏற்படுங்க. புது வண்டி வாங்கப் போறீங்களே. பார்த்து ஓட்டுங்க.

விருச்சிகம்

சிறிது காலமாகவே உங்களுக்குப் பொறுமை என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கே தெரியாம ஆகிவிட்டது. ஜாக்கிரதை. அந்தப் பொல்லாத கோபத்தை அடுப்பில் போடுங்க. ஆமாம்.  சொல்லிட்டேன். மூட்டை மூட்டையாய்ப் பணத்தைக் கொண்டு போய் எதிலும் இன்வெஸ்ட் செய்ய வேண்டாம். எனினும் சின்ன அளவில் ரிஸ்க் எடுப்பதில் லாபம் உண்டு. ஆனால் ஒண்ணுங்க. அதுக்கா நிறைய உழைக்கணும். அலுவலகத்தில் புதிய பொறுப்பு. அதாவது பதவி உயர்வு கிடைக்கக்கூடும். அதிக சம்பளம் வாங்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களும், நண்பர்களும் உங்களுக்கு அபரிமிதமான மரியாதை தந்து உங்களை உயரத்தில் தூக்கி வைப்பாங்க. அலுவலகத்தில் வேலைதான் கொஞ்சம் அதிகமா இருக்கும். அதை ஊதித்தள்ளுங்க.

தனுசு

நீங்க எதைச் செய்ய ஆரம்பிச்சாலும்.. எந்த முயற்சி எடுத்தாலும் எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலைப்படாதீங்க. தடையும் தாமதமும்தானே ஆகுது? அதனால் என்னங்க? அதற்காக முயற்சியைக் கைவிடணுமா என்ன? பொறுமையும் விடாமுயற்சியும் எப்பவும் உள்ளவர் நீங்க. ஆகவே நீங்கதான் ஜெயிக்கப் போறீங்க. மனசை லைட்டாக்கிக்குங்க.  நேர விரய விஷயங்களையெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டுங்கங்க. ப்ளீஸ். பொழுது போக்கு விவகாரங்களில் அளவுக்கு அதிகமா ஈடுபடறீங்க. அது உங்களுக்கும் தெரியாதா என்ன? கவனமா இருங்க. சட்டென்று தூக்கி எறிந்து பேசும் குணம் இப்போ சமீபத்தில் உங்களுக்கு அதிகமாகியிருக்குமுங்க. அதை கவனிச்சு சரி செய்துக்குங்க.

மகரம்

எதையாவது ஏடாகூடமாய்ச் செய்து வைக்கவும் வேண்டாங்க.. நல்லவங்களா இருங்க. ஜாலியா என்ஜாய் செய்வது எந்த அளவு முடியுமோ அந்த அளவு படிப்பில் கவனத்தைக் கொண்டு போய்க் கொட்டுங்க. கடமை, நேர்மை எல்லாம் சும்மா சினிமாவிலும் நாவலிலும் வர்ற வார்த்தைங்கதான்னு நினைக்க வேண்டாம். நாமும் கடைப்பிடிக்கணும்ங்க. இத்தனை காலம் போக்குக் காட்டிக்கிட்டிருந்த வருமானமும் லாபமும் இப்போ உங்களைத் தேடி வந்து சந்தோஷப்படுத்தும். உணர்ச்சி வசப்பட்டு சில செயல்கள் செய்ய வாய்ப்பிருப்பதால் நிதானமாக யோசித்து .. எந்தத் தீர்மானத்தையும் சற்று ஒத்திப்போட்டு பிறகு மறுபரிசீலனை செய்து ..அதன்பிறகே செயல்படுத்துங்க.

கும்பம்

புண்ணியங்கள் செய்வீர்கள்.எதுக்குங்க வேண்டாத விஷயங்களுக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு பயந்து நடுங்கறீங்க? பாதிக்குப் பாதி கற்பனை பயங்கள்தான் போங்க. சில சமயங்களில் குடும்பத்தின ருடன் வாக்குவாதம் ஏற்படலாம். குடும்ப ஒற்றுமை கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களி டையே சண்டை சச்சரவுகளைப் பஞ்சாயத்து செய்வீங்க. நல்ல பெயர் எடுப்பீங்க. தந்தைக்குப் புகழும், பெருமையும், செல்வாக்கும், கை தட்டலும் அதிகரிக்கும். அவர் மகன் / மகள் என்பதால் உங்களுக்கும் பாராட்டுக்கிடைக்கும். இத்தனை காலம் அப்பா பற்றிப் பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் இருந்த நீங்க இப்போ ஒரு மரியாதையுடன்  அவரைப் பார்ப்பீங்க.

மீனம்

திடீர்  லாபங்கள் உண்டாகும். மருத்துவர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சம்பந்தமுள்ள துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டு. இருப்பதால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்படாதபடி அனுசரித்துப் போக வேண்டும். இந்த விஷயத்தில் நீங்க முழுக்கவனம் செலுத்தியே ஆகணுங்க. நல்ல காலம் தான் நடக்குது. எங்கும் எதிலும் காத்துக்கிட்டிருந்த நன்மையெல்லாம் கனியப்போகுது. சாப்பிடும் விஷயத்தில் கவனமா இருங்க. நேரத்துக்கு சாப்பிடுங்க. அளவா சாப்பிடுங்க. எதிர்பாராத வகைகளில் பணவரவு வருமுங்க. சந்தோஷப் பயணத்துக்குத் தயார்ப்படுத்திக்குங்க. திட்டங்கள் தடையின்றி நிறைவேறும்.