வார ராசிபலன்: 24.08.2018  முதல்  30.08.2018  வரை – வேதா கோபாலன்

மேஷம்

மேலதிகாரிகள் ஒரு பக்கம் பாராட்ட.. கீழே வேலை பார்ப்பவர்கள் மறு பக்கம் உங்களைப் பார்த்து “தெய்வமே” என்று புகழ் சூட்ட.. கெத்துதான் போங்க. ஓய்வு ஒழிச்சலின்றி  அலைந்து திரிய நேரிட்டாலும் முகம் முழுக்க சிரிப்பும், மனசு முழுக்க சந்தோஷமும் அலைபாயும். காரணம் என்ன தெரியுமா? உங்கள் அலைச்சலெல்லாம் சுபமான காரணங்களுக்காகவும்  நெருங்கிய சொந்தங்களைக் காணும் பயணங்களுக்காகவுமே இருக்கும்ல. அதான். நல்ல தெய்வீக விஷயங்களில் கவனமும் செயல்பாடும் திரும்பும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்

அலுவலகத்தில் நீங்க எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கலைன்னாலும் உங்களுக்கு இனி வரும் காலங்களில் நடக்கும் எல்லாமே நல்ல விஷயங்கள்தான் என்பதை உறுதியா நம்புங்கப்பா. நெருங்கிய உறவினர்களைப் பலகாலம் கழிச்சு சந்திக்கப்போறீங்க. அது பற்றிய உற்சாகம் இப்பவே மனசை ஆக்கிரமிச்சுடும். புது வேலை மாறணுமா? மாறியே ஆகணுமா? யோசிங்கப்பா. கொஞ்ச காலத்துக்கு அதை போஸ்ட்போன் செய்ய முடியும்னா நல்லது. ஜஸ்ட் ஓரிரண்டு மாசங்கள் பொறுத்துக்குங்க. போதும். உறவினர்களோடும் நண்பர்களோடும் ஜாலியாப் பயணம் போவீங்க. என்ஜாய்.

மிதுனம்

நிதானப்போக்கு இருக்க வாய்ப்பிருக்கு. ஆனால் சோம்பலுக்கு மட்டும்  ‘நோ என்ட்ரி’ போர்டு போட்டுடுங்க. அனுமதிக்கவே செய்யாதீங்க. எப்பவும் எதையும் தள்ளிப்போடத் தோன்றும். வேண்டாம். அப்போதைக்கப்போதே முடியுங்க. அலுவலகத்தில் முக்கியமான வாடிக்கையாளர்களுடன், முக்கியமான  பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டி வரும். அதை நீங்கதான் பொறுப்பா செய்து முடிப்பீங்க. கலைத்துறை அல்லது கற்பனை சார்ந்த துறை சம்பந்தமான படிப்புப் படிக்கறவங்களுக்கு பிரமாதமான முன்னேற்றமும் பாராட்ஸ் மற்றும் கைதட்டல்ஸ்  இருக்குங்க.

சந்திராஷ்டமம் : 23.08.2018 முதல் 25.08.2018 வரை

கடகம்

குழந்தைகளுடனான உறவு பலப்படும். சில காலம் அவங்களை நல்ல காரணங்களுக்காகப் பிரிஞ்சிருக்க வேண்டியிருக்கும். கவலையே படாதீங்க. உங்களுக்கு அவங்களால சந்தோஷமும், மகிழ்ச்சியும், பெருமிதமும் கிடைச்சே தீரும். வேலை பார்க்கும் இடத்தில் ஏகப்பட்ட பொறுப்புச் சுமை உங்க தலைமேல உட்கார்ந்துக்குங்க. அதனால் என்ன? அத்தனையையும் சும்மா அநாயாசமா முடிச்சு நிமிர்ந்து பெருமிதமடைவீங்க.  கணவருக்கு/ மனைவிக்கு சின்னதா ஆரோக்யப் பிரச்சினை ஏற்படக்கூடும்.  டென்ஷனாகாதீங்க. சரியாயிடும்.

சந்திராஷ்டமம் : 25.08.2018 முதல் 28.08.2018 வரை

சிம்மம்

அரசாங்கத்தினால் நன்மைகள் கிடைக்குங்க. சகோதர சகோதரிகளைச் சந்திச்சு ஜாலியாப் பேசவும், அவங்களோட ஹாப்பியா பிரயாணம் செய்யவும் சந்தர்ப்பம் கிடைக்கும். சிக்கன நடவடிக்கையால் நிறைய சேமிப்பு செய்து மகிழ்ச்சியடைவீங்க. பேச்சில் கவர்ச்சி அம்சம் அதிகரிச்சு, உங்களைப் பிரபலமாக்கும். மேடைகளில் கைதட்டல்ஸ் கிடைக்குங்க. திடீர் அதிருஷ்டம் கிடைக்கும். குறிப்பாய்ப் பண விஷயங்களில் அதிருஷ்டம் அடிக்கும். தயவு செய்து நண்பர்கள்னு நினைச்சுப் புதியவர்கள் யாரையும் ஏற்கவே வேண்டாம். அப்படியே ஏற்றாலும் அவங்ககிட்ட மனசு விட்டுப்பேசவும் வேண்டாம்.

சந்திராஷ்டமம் : 28.08.2018 முதல் 30.08.2018 வரை

கன்னி

பர்சனலா உங்க மனசு நிறைஞ்சு கவர்ச்ச அம்சம் மட்டுமில்லாமல் செல்வாக்கும் பல மடங்கு அதிகமாகுங்க. உங்க பேச்சுக்கு வீட்டில் இத்தனை நாளும் அவ்வளவாக மதிப்பு இல்லாமல் இருந்தது. இப்போது உங்கள் பேச்சினால் விளையும் நன்மைகளைப் பார்த்துவிட்டு எல்லோரும் உங்களை மதிப்பார்கள். அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகவும், அப்பாவுக்கும், அப்பா வழி சொந்தங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டியிருக்கும். புதிய வரும்படிகள் – ஒன்றல்ல – பல வரும். ஓடி ஓடி உழைக்கும் உங்களுக்கு ஏராளமான நல்ல செய்திகள் உண்டு. குழந்தைகளால் நன்மை உண்டுங்க.

துலாம்

மனசுக்குப் பிடிச்ச விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். அலுவலகத்தில் வேலை பளு குறையுமுங்க. எதில்பாலின நண்பர்கள் உதவுவாங்க. நண்பர்களால்தான் வாழ்க்கையிலேயே யூ டர்ன் அடிப்பது போன்ற திருப்பங்கள் நிகழும். செலவுகள் அதிகமாகாம பார்த்துக்குங்க. அதிலும் வரவர வீண் செலவுகள் அதிகம் செய்யறீங்க. கவனமா இருங்க. உடைகள், நகைகள் என்று வேட்டுவிட வாய்ப்பு உள்ளன. தங்கம் வெள்ளி போன்றவை நிறைய வாங்குவது பற்றி சந்தோஷம்தான். அம்மாவின் கோபத்தை ஏங்க கிளறி வேடிக்கை பார்க்கறீங்க?

விருச்சிகம்

நண்பர்களால் நன்மை ஏற்படுவது மட்டுமில்லீங்க..சுப நிகழ்ச்சிகளும் ஏற்பாடாகும். அந்த நிகழ்ச்சிகளுக்கு அவங்க கிட்டேயிருந்தே பண உதவி கெடைக்கும். சகோதர சகோதரிகள் வாழ்க்கையில் நல்ல விஷயம் நடக்கும். ஒரு வேளை அதுக்கு நீங்களே காரணமா இருந்தாலும் இருக்க வாய்ப்பிருக்கு. இத்தனை காலம் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்த ஆரோக்யம் என்னும் சமாசாரம் இப்போது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளிக்கும். அப்பாவுக்கு திடீர் நல்ல நியூஸ் உண்டுங்க. குறிப்பா வெளிநாட்டிலிருந்து குட் நியூஸ் வரும்.

தனுசு

வரவர வெற்றிகளை அதிகமாகக் குவிக்க ஆரம்பிச்சுட்டீங்க. வாழ்த்துகள். பழுத்த மரம்தான் கவண் கல்லால் அடிபடும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? சும்மா கண்டுக்காம விடுங்கப்பா. புத்தனையும் ஏசுவையும் காந்தியையும்கூடக் குற்றம் சொல்வாங்க என்று சினிமாக்கவிஞர் சொன்னதை மறந்துடாதீங்க. பெற்றவர்களுக்கு உங்களால பெருமை. திருமணமானவரா நீங்க? எனில் கணவருடன்/ மனைவியுடன் அனுசரிச்சுத்தாங்க போகணும். தப்பை உங்க பேர்ல வெச்சுக்கிட்டு வீணா வாக்குவாதம் செய்ய வேண்டாம். 

மகரம்

குழந்தைகளால் நன்மையும் சந்தோஷமும் வரும். அலைச்சல் பிழைப்பு உங்க பிழைப்பு. என்ன செய்ய? அந்த அலைச்சல் நன்மையைத் தருதே. வீட்டில் கல்யாணம் வரணும்னு ரொம்பக் காலமா ஆசைப்பட்டீங்க. இதோ வந்தாச்சுங்க. கோவம் உச்சந்தலைவரை உயராமல் பார்த்துக்குங்க. எடுத்ததுக்கெல்லாம் கோபப்பட்டால் வேலைக்கு ஆவாது. கணவரின்/மனைவியின் புத்திசாலித்தனமான அணுகுமுறையால் உடைந்த உறவுகளும் நட்புகளும் மீண்டும் ஒட்டும். உடல் நிலையில் சில சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சிம்ப்பிளான மருத்துவத்திலேயே சரியாகிவிடும்.

கும்பம்

எதிர்பாராத சமயத்தில் ஒரு நல்ல நண்பரோ உறவினரோ தங்கள் காரில் உங்களை ஏற்றிக்கொண்டு கோயில் கோயிலாகப் போவாங்க. குலதெய்வத்தை வெகுநாள் கழிச்சு சந்திப்பீங்க. குழந்தைங்க வாழ்வில் சந்தோஷத் திருப்பங்களும், சுப நன்மைகளும் உண்டுங்க. படிக்கற குழந்தைங்கன்னா மெடல், கேடயம்னு அசத்துவாங்க. மெது மெதுவா வந்தாலும், குறித்த நேரத்தில் வராமல் போனாலும் லாபமும் வருமானமும் கட்டாயம் உங்களை வந்தடையும். திடீர் செலவுகள் வரும்னாலும் எல்லாம் சமாளிக்கும்படியா இருக்கும்.

மீனம்

நிறைய அலைச்சல் இருக்கும். ஆரோக்யத்தில் இத்தனை காலம் இருந்து வந்த பின்னடைவெல்லாம் சரியாகும்.  கடன்களை மடமடவென்று அடைப்பீங்க. வெளியூர், வெளிநாடு போவதற்கான பயணம் உறுதியாகி அது சம்பந்தமான ஏற்பாடுகள் துரிதமடையும். குழந்தைங்க நெகிழச்செய்வாங்க; மகிழ வைப்பாங்க. காதல் ஈடுபாடு அதிகமாகும். கணவருக்கும் / மனைவிக்கும் உங்களுக்கும் உள்ள பிணக்குகள் எல்லாம் சரியாகி சந்தோஷமும் அன்யோன்னியமும் நிலவும். எதிர்பாராத வகையில் கோயில் குளமெல்லாம் போக ஆரம்பிப்பீங்க. பாவச் செயல்கள் செய்வது பற்றிய குற்ற உணர்வு ஏற்பட்டு மனதை சுத்தமாக வெச்சிருப்பீங்க.