வார ராசிபலன் 27-07-18 முதல் 02-08-18 வரை – வேதா கோபாலன்

மேஷம்

உங்களால் உங்க நண்பர்கள் வீட்டிலும் உறவினர்கள் வீட்டிலும் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உங்கள் வீட்டிலும் ஏன் உங்களுக்கேகூட சுப நிகழ்ச்சிகள் உண்டு. மனைவிக்கு/ கணவருக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். நிதி வசதி கூடும். மாணவர்கள் சற்று அதிக கவனத்துடன் இருப்பது நல்லதுங்க. அம்மாவுக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் சிம்ப்பிளா சரியாகிவிடும். அதுக்காக டென்ஷனெல்லாம் ஆக வேண்டாமே. குழந்தைகள் புகழ், பெருமை, பாராட்டு, கைதட்டல் பெறுவார்கள். உங்களுக்கு சம்பளம் உயருமுங்க. சகோதர சகோதரிங்களுக்கு உங்களால நன்மை கூடுதலாகும்.

ரிஷபம்

உங்களுக்குப் புது வேலைகிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு அப்படி ஓர் எண்ணம் இருந்தால் முயற்சி செய்ய இது உகந்த நேரம். மம்மிக்குப் பாராட்டும் புகழும் கூடும். நீங்கள் மாணவரா? வாவ். உங்களுக்குக் கைதட்டல் கிடைக்கும். அந்தக் கைதட்டலும்… மேடையில் வெளிச்சத்தில் கிடைக்கும். சகோதர சகோதரிகளுக்குள் யுத்தமெல்லாம் இருந்தால் கண்டுக்காமல் மேலே மேலே போங்கப்பா. நாலே நாளில் வெள்ளைக்கொடி பறக்க விட்டு சிரிச்சுக்கிட்டே நெருங்கிடுவீங்க. அப்பாவுக்கு ஏகப்பட்ட நன்மைகள் இருக்கும். ரெடியா இருக்கட்டும்.

மிதுனம்

அம்மா வழி, அப்பா வழி என்று நெருங்கிய உறவினர்களைச் சந்திக்கவும், உட்கார்ந்து பழங்கதைகளெல்லாம் பேசவும் ஒரு சூப்பர் வாய்ப்பு வரும். அலுவலகத்திலோ… வில்லங்கமான சூழலிலோ பேசும்போது வாயில் பத்து ஃபில்டர் போட்டுக்குங்க. யோசிச்சு யோசிச்சு ஒவ்வொரு வார்த்தையையும் பேசுங்க. சரியா? சகோதர சகோதரிகளின் புகழ் அதிகரிக்கும். உங்களுக்கு ஏங்க பொறாமை? நீங்க மட்டும் என்ன குறைச்சலா? அப்பாவுக்கு அலுவலகத்தில் அவார்ட் அல்லது ரிவார்ட் கிடைக்குமுங்க. குழந்தைகளுக்கு நன்மை உண்டு.

சந்திராஷ்டமம்: 27.07.2018 முதல் 29.07.2018 வரை

கடகம்

திருமணத்துக்கு அவசரம் ஏன்? கொஞ்சம் பொறுங்க. ஏற்கனவே ஏகப்பட்ட தாமதமாயிருந்தாலும்கூட இப்போது உகந்த நேரம் அல்ல. எனவே சரியான ஜோடி கிடைக்கவில்லை என்று டென்ஷன் வேண்டாம். இப்போது கிடைச்சால்தான் டென்ஷனில் முடியும். உங்கள் பேச்சில் பொலிவும் கவரும் தன்மையும் அதிகரிப்பதால் பலரையும் உங்க பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பீங்க. நீங்க மேடைப்பேச்சாளர்னா கேட்கவே வேண்டாம். கொடிகட்டிப் பறப்பீங்க. மாணவர்கள்னா நினைத்தபடி எல்லாமே அமையும். கேட்ட வகுப்பில் சீட் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 29.07.2018 முதல் 01.08.2018 வரை 

சிம்மம்

உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரித்து மேலிடத்தில் பாராட்டுப் பெறுவீங்க. கணவன் மனைவிக்குள் சந்தோஷமும் நிம்மதியும் நிலவும். காதலர்களுக்கு வெற்றி உண்டாகும். அலுவலகத்திலோ, கல்லூரியிலோ எதிர்பாலினத்தினரால் லாபமும் நன்மையும் உண்டாகும். விதவிதமான செலவுகளும் விரயங்களும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால் மனசில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இ,ருப்பதால் உங்களை எந்தச் சக்தியாலும் டென்ஷன் செய்ய முடியாதே. திருமணம் போன்ற சுபகாரியங்கள் வீட்டில் நடைபெற இருப்பதால் ஒரு ஜாலியான சூழல் நிலவும்.

சந்திராஷ்டமம்: 01.08.2018 முதல் 03.08.2018 வரை

கன்னி

நகைகள், ஆபரணங்கள் என்று ஏராளமான சந்தோஷ செலவுகள் உண்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களில் வருமானம் அள்ளுவீங்க. எனவே செலவுகள் உங்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால் குடும்பத்தில் குதூகலமும், சுறுசுறுப்பும் இருக்கும். குழந்தைகள் பற்றி சிறு டென்ஷன்கள் இருக்கும்தான். பொருட்படுத்தவே செய்யாதீங்க.  சீக்கிரத்தில் சரியாகும். அவங்களைக் கண்டிக்கிறேன் பேர்வழி என்று நிலைமையை மோசமாக்கிடாதீங்க. ப்ளீஸ்.

துலாம்

இத்தனை காலம் குழந்தை பாக்கியம் இல்லாதவங்களுக்கு அது கிடைக்கும். குழந்தை உள்ளவங்களுக்கு அந்தக் குழந்தைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருமையும் கிடைக்கும். சந்தோஷம்தானே? கோயில் குளம்னு போவீங்க. அதற்கான சந்தோஷ பலன்களை அனுபவிப்பீங்க. அம்மாவுடன் சண்டை சச்சரவுகள் வேண்டாம். அதேபோல் அப்பாவைப் பற்றிய கவலைகள் வேண்டாம். அரசாங்க உத்யோகத்துக்காக ஏங்கிக் காத்திருந்தவங்களுக்கும், அதற்கான தீவிர முயற்சி செய்தும் பலனின்றி சோர்ந்த போயிருந்தவங்களுக்கும் இதோ குட் நியூஸ். அரசு வேலை கிடைக்கும்.

விருச்சிகம்

கொஞ்சம் பல்லைக் கடிச்சுக்குங்க. பொறுமையா இருங்க. இதோ வந்துவிட்டது விடிவு காலம். செலவுகள் கட்டுப்பட மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றனவா. டென்ஷன் ஆவாதீங்க. அந்தச் செலவுகள் நன்மைக்கு வித்திடும். இன்னும் கேட்டால் அதெல்லாம் முதலீடுங்கன்னு நினைச்சுக்குங்க. கலைத்துறையில் உள்ளவங்களுக்கு சுபிட்சம் வந்தாச்சுங்க. அப்பாவுக்கு அரசு வழியில் நன்மை வரும். வெளிநாட்டிலிருந்து நன்மை வரவும் லாபம் வரவும் வாய்ப்பு உள்ளது. கலைத்துறை சார்ந்த கல்வி கற்பவர்களுக்கு அருமையான காலம்.

தனுசு

மனசில் தேவை இல்லாத பயங்கள் இருந்தால் அதைத் தூக்கி ஒரு ஓரமாய்ப்போடுங்க. பாதி கற்பனை பயங்கள்தான். வார்த்தைகளை வெளிப்படுத்துவதில் கடிவாளம் போட்டுக் கிட்டால் நல்லதுங்க. சீக்கிரத்தில் புது வீட்டுக்குக் குடி போவீங்க. நெருங்கிய உறவினர்களு டன் அனுசரிச்சுப்போவது நல்லது. அவங்களால சீக்கிரத்தில் உங்களுக்கு நன்மை ஏற்படும். குழந்தை பாக்கியத்துக்காக ஏங்கிக்கிட்டிருக்கறவங்களுக்கு இதோ அது கிடைச்சுடும். தலைவலி பற்றிப் பெரிய பயமெல்லாம் வேணாம். கண் டெஸ்ட் செய்துக்குங்க.

மகரம்

சின்னச் சின்ன ஏமாற்றங்களைத் தவிர்க்க இயலாதுதான். ஆனால் யோசித்துப் பார்த்தால் பெரிய இழப்புகளிலிருந்து தப்பிச்சிருக்கீங்க பாருங்க. தயவு செய்து உத்யோகம் மாறுவது பற்றி இப்போதைக்கு யோசிக்காதீங்க. ஒருவேளை மாறியே ஆக வேண்டிய சூழல் என்றால் ஜாதகத்தை எடுத்துப்போய் உங்களின் குடும்ப ஜோதிடரிடம் காண்பித்து, அதற்குச் சாதக மான தசா புக்தி நடக்கிறதா என்று அறிந்தபிறகு செய்யுங்கள். மிகுந்த புத்திசாலித் தனமான காரியங்கள் செய்து மேலிடத்தில் பாராட்டை வாங்கியிருப்பதால் இப்போது உள்ள அலுவலகத்திலேயே உங்களுக்கு நன்மையும், முன்னேற்றமும் பாராட்டும், உயர்வுகளும் உண்டு.

கும்பம்

செலவுக்கு மேல் செலவு வருகிறது என்று மட்டும் புலம்பறீங்களே? வரும்படிக்கு மேல் வரும்படி வருதே. அதை நினைச்சுக் கொஞ்சம் சந்தோஷமும் படுங்களேன். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான இணக்க சூழல் இருப்பதால் வாழ்க்கையே வசந்தமாகத் தெரியும். நண்பர்களால் நன்மையும் உண்டு. நண்பர் போல் நடிப்பவரால் சின்னச்சின்ன சிரமங்களும் உண்டு. எனவே நண்பர்கள் யார் தீயவர்கள் யார் என்று சரியாகத் தெரியாதவரையில் யாரிடமும் அதிகம் நெருங்க வேண்டாம். உங்க ரகசியங்களை மனம் திறக்கிறேன் பேர்வழி என்று கொட்டவும் வேண்டாம்.

மீனம்

திடீர் லாபங்களும் நன்மைகளும் உண்டு. அரசாங்கத்திடமிருந்து நன்மை கிடைக்கும். இது வரை வரவே வராது என்று நீங்க கைவிட்டிருந்த விஷயங்கள் தன்னிச்சையாய் வந்துவிடும். குழந்தைங்களுக்கு நல்லதெல்லாம் நடக்கும்.  அவங்களுக்கு வங்கி உத்யோகம் கிடைக்கலாம். நண்பர்கள் புகழடைவாங்க. அதுக்கு நீங்க காரணமா இருப்பீங்க என்பதால் உங்களை அவங்க நன்றியுடன் பார்ப்பாங்க. உத்யோக சூழல் பற்றியோ, வேலை மாறுவது பற்றியோ டென்ஷன் வேண்டாம். சரியான நேரத்தில் விரும்பியபடி நடக்கும். சுக வாழ்வுக்காக அதிக செலவு செய்வீங்க. கட்டுப்படுத்துங்கப்பா.