வார ராசிபலன்: 30.08.2019 முதல் to 05.09.2019  வரை! வேதா கோபாலன்

மேஷம்  

 கவலைப்படாதீங்க. எல்லாப் பிரச்சினையும் ஓய்ஞ்சு அப்பாடான்னு நீங்க ரிலாக்ஸ் ஆகப் போறீங்க. உறுதி. நண்பர்களின் ஆலோசனையும், வழி காட்டுதலும் உதவியும் உங்களை மிகவும் உயரத்தில் கொண்டு உட்கார வைக்கப்போகுதுங்க. பழைய கடன்களை வேகமா அடைப்பீங்க. நியாயமான காரணம் இருந்தாலன்றி புதுசா லோன் எதுவும் போடாதீங்க. மனசில் கனிவும் கருணையும் அதிகமாகும். கடவுள் சன்னிதிகளுக்கும் குரு சன்னிதிகளுக் கும் அடிக்கடி போவீங்க. இதனால் நிம்மதி மட்டுமில்லாமல் நன்மைகளும் அதிகரிக்கும். பிரிஞ்சிருந்த நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் ஒண்ணாச் சேர உதவி செய்வீங்க. குடும்பத் தில் பேரன்… பேத்தி… மருமகள்… மருமகன்.. என்று ஏதாவது ஒரு ரூபத்தில் புது வரவு இருக்கும்.       

ரிஷபம்

குடும்பம் விரிவடைந்து மனசில் மகிழ்ச்சி ஏற்படும். நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.அதற்கேற்ற ஊதியம் சரிவர வரலைன்னு உங்களுக்கு எரிச்சல் இருக்கலாம். இருங்க.. பொறுங்க.. எல்லாம் சேர்த்து வெச்சுக்கிடைக்கும்.  முன்பிருந்ததைக்காட்டிலும் இப்போ நிலைமை மிகவும் உயர்ந்திருக்கும் அல்லவா? அதை நினைச்சு சந்தோஷப்படுவீங்க தானே? அப்பாவுக்கு எதிர்பாராமல் பதவியோ சம்பளமோ புகழோ உயரும். நிறையப் பணம் வந்த பிறகே குடும்பத்தில் நிறையச் செலவு வரும். உங்கள் குழந்தைகளால் உங்களுக்கு இத்தனை காலம் இருந்து வந்த சுமைகளும் டென்ஷன்களும் படிப்படியாகக் குறையும். மறந்தும் ஆரோக்யத்துக்குத் தீங்கு விளைவிக்கிற எதையும் செய்து வைக்காதீங்க.

மிதுனம்

அலுவலகம் .. கல்லூரி.. பள்ளி… சங்கங்கள் என்று எங்கிருந்தாலும் அங்கு உங்களின் புத்தி சாலித்தனமான பேச்சினாலும் செயலாலும் முடிவெடுப்பதாலும் புகழும் பெருமையும் கிடைக்கும். அதற்கான நல்ல ரிசல்ட்டும் கிடைக்கும். எதிர்பார்த்த வரும்படியும் .. லாபமும் நன்மைகளும் சற்று நிதானமாய் வந்தாலும் கவலை வேண்டாம். எதுவும் உங்க கையை விட்டும் போகாது. ஏமாறவும் மாட்டீங்க.  நிறையப் புண்ணிய செயல்கள் இப்போ செய்வீங்க. புண்ணிய ஸ்தலங்களுக்குப் போவீங்க. நன்மைகள் அதிகரிக்கும். மகான்களை தரிசனம் செய்வீங்க. சின்னச் சின்ன ஆரோக்யக் குறைபாடுகளை விட்டுத் தள்ளுங்க. ஆனால் அவை வராதிருக்க என்ன செய்யணும்னு பார்த்து கவனமா இருங்க.

கடகம்

விதம் விதமாய்ச் செலவு செய்யும்படி சந்தர்ப்பம் நேர்ந்தாலும் கொஞ்சம் கையைக் கடிக்காம பார்த்துக்குங்க. ஆடை அணி மணின்னு ஒரு பக்கம். அவசியத் தேவையும் படிப்புக்கு சம்பளம்.. பரீட்சைக்குக் கட்டும் பணி என்று மறுபக்கம் போகும். கையை அடக்கிக்குங்க. கணவருக்கு/ மனைவிக்கு இத்தனை காலம் இருந்து வந்த சிரமமான/ டென்ஷனான நிலைமை மாறி திடீர் முன்னேற்றங்கள் கண்ணுக்குத் தென்படுவதால் ஒட்டு மொத்தமாகவே குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் வெளியூர் வெளிநாடு என்று சுற்றோ சுற்றென்று சுற்றிக்கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களுக்கும் நன்மை. அவர்களின் பயணத்தால் உங்களுக்கும் நன்மை.

சிம்மம்

மம்மிக்கு ஏதோ நன்மை ஏற்படும். நீங்க அலுவலகத்தில் சாதனை செய்து பாராட்டுப் பெறுவீங்க. பல காலமாகச் சந்திக்காத உறவினர்களை இப்போது சந்திக்க வாய்ப்பு வரும். சகோதர சகோதரிகள் ஒன்று சேர்வீங்க. குறிப்பாகத் தந்தை வழி உறவினர்கள் .. மற்றும் பங்காளிள் ஒன்றாகச் சேர்வீங்க. வீட்டில் உள்ள மாணவர்களுக்கு நன்மைகளும் பாராட்டும் கிடைக்கும்.  டாடிக்கு பிரமோஷன் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். திடீர் அதிருஷ்டம் காரணமாக நன்மைகள் உண்டாகும். பலதரப்பட்ட புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நடக்குமா என்று காத்திருந்த விஷயம் ஒன்று நிறைவேறும்.  அவசரம், பதற்றம், கவலை யால் ஏற்பட்ட டென்ஷன் ஆகியவை உங்களைத் தடுமாற வைக்காமல் பார்த்துக்குங்க. எல்லாம் நல்லபடியாத்தான் நடந்துக்கிட்டிருக்கு.

கன்னி

ஆரோக்யத்தை அதி ஜாக்கிரதையாப் பார்த்துக்குங்க. பிரிந்து போன பழைய நண்பர்கள் வந்து ஒட்டுவார்கள். போனால் போகுதுன்னு மன்னிச்சு ஏத்துக்குங்கப்பா.. பாவம். அவங்களால உங்களுக்கு இத்தனை காலம் ஏற்பட்ட தொல்லைகள் இனி இல்லை. நிறையக் கோயில்க ளுக்குப் போக வாய்ப்பு வரும். கலைத்தொழிலில் உள்ளவர்களுக்குச் சற்று சோர்ந்த நிலை மாறி புது ஒப்பந்தங்கள் வந்து சந்தோஷப்படுத்தும். மகன் அல்லது மகள் வழியில் பேரன் / பேத்தி பிறப்பதற்கான சாத்தியமும் உள்ளது. மகன் வெளிநாட்டுப்படிப்புக்காகச் செல்ல வாய்ப்புளளது. புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கும் புது வேலையில் ஜாயின் செய்தவர்களுக்கும் உற்சாகம் அளிக்கும் வகையில் நிகழ்வுகள் இருக்கும்.

துலாம்

ஏகப்பட்ட செலவுகள் இருக்கும். அனேகமாய் எல்லாம் சுபமான செலவுகளாய்த்தான் இருக்கும். மத்தவங்களுக்காக நிறைய செலவு செய்வீங்க. அதனால உங்களுக்குப் பாராட்டும் பெருமிதமும் மட்டுமின்றி மரியாதையும் வெளியில் அதிகரிக்கும். மகன் அல்லது மகள் படிப்போ.. திருமணமோ நீங்கள் எதிர்பார்த்ததையும்விட மிக நன்றாய் அமையும். சகோதர சகோதரிகளிடம் எப்போதும் உள்ளதைவிடப் பல மடங்கு ஜாக்கிரதையாய் இருந்துவிட்டால் உங்களுக்கு மிகவும் பாதுகாப்பு. ஆமாம். உத்யோகம் மாறணுமா? இன்னும் கொஞ்ச நாள் பொறுக்க முடியுமா பாருங்களேன்? தவிர்க்கவே முடியாதுன்னா ஜாதகத்தை  உங்கள் குடும்ப ஜோதிடர் கிட்ட காண்பிச்சு முடிவு  செய்ங்க.

விருச்சிகம்

வரவுக்கு மிஞ்சி செலவு என்றுதான் பொதுவாய் எல்லாரும் சொல்லிக் கேள்விப்பட்டிருக் கோம். உங்களுக்கு விநோதமான அனுபவம் ஏற்பட்டிருக்குமே? ஏகப்பட்ட செலவு வந்துக்கிட்டே இருக்கும்.  செலவு வரவர அதை மிஞ்சும் வரும்படி வந்துகொண்டே இருக்கும். அதாவது செலவுக்கு மிஞ்சிய வரவு!! அடிடா சக்கை. எவ்ளோ வருமானம்ஸ்,  முன்பு ஏமாந்த தொகைகள்… விட்டுப்போன  லாபங்கள்.. வருமானங்கள்… வரவே வராதுன்னு நீங்க கை விட்ட தொகைகள்.. எல்லாமே வரும். கணவருக்கு/ மனைவிக்கு எதிர்பார்த்திருந்த நன்மைகள் கையில் வந்து லட்டு மாதிரி விழும். உங்க செல்வாக்கு.. புகழ் எல்லாம் உயரும். மனசில் நினைச்சது வெற்றியாகும். அதுவும் எப்பிடி? ஒரு நெடியில் சட்டென்று காரியம் கைகூடும்.

தனுசு

ஆரோக்யம் கொஞ்சம் டென்ஷன் குடுக்கும்தான். எனினும் சமாளிச்சு நிமிர்ந்துடுவீங்க. எடுத்த முயற்சிகளில் சரிவர வெற்றிகள் கிடைக்கலைன்னு கொஞ்சம் டென்ஷன் ஆயிருந் தீங்கதானே? கவலையை விடுங்க… டிரைவிங் டெஸ்ட்.. கல்லூரி பள்ளி பரீட்சைகள்.. டிபார்ட்டென்ட் தேர்வுகள் என்று எதிலாவது தடுக்கியிருக்கலாம். அது உங்களை டென்ஷ னாக்க விடாதீங்க. அது உங்க தலையில் ஏறி உட்கார்ந்துக்கிட்டு மற்ற வேலைகள் செய்ய முடியாமல் கடிவாளம் போட அனுமதிக்காதீங்க.  கடந்து போனதை நினைச்சு வருத்தப்பட்டு எந்த விளைவையும் மாற்ற முடியாதுன்னு நினைவில் வெச்சுக்குங்க. அது உங்க ஆரோக்யத் தைத்தான் பதம் பார்க்கும். அடுத்த முயற்சியில் வெற்றி உறுதி என்பதை நினைவில் கொண்டால் போதுங்க.

மகரம்

ஒரு பிரச்சினை முடிஞ்சு மறுபிரச்சினை ஆரம்பிச்சு இப்படியே கண்ணாமூச்சி ஆடிக்கிட்டே இருந்ததா? இனி அதெல்லாம் கிடையாது. கடன் கொடுக்கவும் வேண்டாம். வாங்கவும் வேண்டாம். மற்றவர்கள் வாழ்க்கைல தலையிட்டு ஆலோசனையெல்லாம் சொல்லாதீங்க. இதைச் செய்வதா அதைச் செய்வதா ..இங்கு கவனிப்பதா அங்கு கவனம் செலுத்துவதா என்று பரபரப்புடன் குழம்பும் அளவுக்கு நிறைய பிஸியாயிடுவீங்க. பலவிதமான டைவர்ஷன்களும் ஏற்படும். மாணவர்களுக்கு அநாயாசமான வெற்றிகள் கிடைக்கும். அரசாங்கம் மூலம் லாபமும் நன்மையும் எதிர்பார்த்தவங்களுக்கு எதிர்பார்த்ததற்கு மேலேயே நன்மை கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : ஆக 29 முதல் ஆக 31 வரை

கும்பம்

கோர்ட்டில் போய் நின்றவர்களுக்கும் கேஸ் ஜெயிக்கும். வெளிநாட்டு வருமானமும் எதிர்பார்த்ததைவிட அதிகமா வரும். கணவன் மனைவிக்கிடையே எந்தச் சிறிய பிரச்சினை வந்தாலும் அது சிறிய பிரச்சினை என்ற அளவிலேயே இருக்க விடுங்க. வாயை  மூடிக்கிட்டு வாக்குவாதத்தைத் தவிர்த்துடுங்க. அதேபோலவே பிசினஸ் பார்ட்னருடன் ஏற்படும் சாதாரண வாக்குவாதத்தை நீங்களாகவே கற்பனையில் பெரிய பிரச்சினை போலும் என்று நினைத்துவிட வேண்டாம். அரசாங்க நன்மைங்களுக்கு வெயிட் பண்ணிக்கிட்டிருந்தீங்களே.. அது உங்களை வந்தடையும். அதை ஒரு பெரிய டென்ஷனாய் நினைக்க வேண்டாம். கணவருக்கு/ மனைவிக்கு அரசாங்க உத்யோகம் கிடைக்க வாய்ப்புள்ளது.

சந்திராஷ்டமம் : ஆக 31 முதல் செப் 2 வரை

மீனம்

ஏகப்பட்ட நண்பர்களையும், ஏராளமான உறவினர்களையும் சந்திப்பீங்க. அப்பாவுக்கு நன்மை ஏற்படும். திருமணம், குழந்தைப்பேறு என்ற எதற்காச்சும் நீங்க காத்துக்கிட்டிருந்தால் அது நல்ல முறையில் இனிதே நிறைவேறி மனசில் மகிழ்ச்சியை விதைக்கும். உத்யோகத்தில்  நீங்க எதிர்பார்த்த அளவுக்கு நன்மை இல்லை என்று டென்ஷனாகாதீங்க. ஓரளவுக்கு நன்மை உண்டுதான். வருமானம் நன்றாகவே இருக்கும். கோயில்களுக்குப் போவீங்க. குல தெய்வத்தை வழிபடுவீங்க.  உறவினர்விட்டுக் கல்யாணங்களில் பங்கேற்று அரட்டை அடிச்சு சந்தோஷப்படுவீங்க. உங்க கணவரின்/ மனைவியின் புத்திசாலித்தனத்தால் அலுவலகத்தில் நன்மைகள் ஏற்பட்டுப் பாராட்டுக்கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : செப் 2 முதல் செப் 5 வரை