வன்முறையாளர்கள் ‘அமெரிக்காவின் தேசபக்தர்கள்’ என இவாங்கா டிரம்ப் டிவிட்… சர்ச்சை

வாஷிங்டன்: வன்முறையாளர்களை தேசபக்தர்கள் என அதிபர் டிரம்பும், அவரது மகள் இவாங்கா  டிரம்ப்பும் பதிவிட்டுள்ளது சர்ச்சையானது. இதையடுத்து, அந்த டிவிட் நீக்கப்பட்டு நிலையில், தேசபக்தர்கள், வன்முறையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து உள்ளார்.

அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். இந்த நிலையில்,அமெரிக்க நாடாளுமன்றத்தில் 4 பைடன் வெற்றியை உறுதி செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது திடீரென டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதுடன், நாடாளு மன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதை தடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 4 பேர் பலியானார்கள்.  இந்த சம்பவம் தொடர்பாக 53 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த வன்முறை கட்டுக்குள் வந்தது.

அதையடுத்து, ஜோ பைடன் அடுத்த அதிபராக பதவி ஏற்பதற்கான அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது. அதையடுத்து, டிரம்பும் வரும் 20ந்தேதி பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில்,  வாஷிங்டனில் வன்முறையில் ஈடுபட்டவர் டிரம்ப் ஆதரவாளர்களை, அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா டுவிட்டரில், அவர்கள் அமெரிக்காவின் தேச பக்தர்கள் புகழ்ந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நெட்டிசன்கள் அவரது பதிவை எடுத்து வைரலாக்கினர்.

இதையடுத்து, தனது தந்தை  டிரம்ப்பின்  டுவிட்டரில் பதிவை இணைத்து வேறு ஒரு பதிவை போட்டார். டிரம்பின் டிவிட்டில்,  போலீசாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர்கள் நமது நாட்டின் பக்கம் உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்திருந்தார்.

அத்துடன் இவாங்கா பதிவிட்டுள்ள டிவிட்டில்,  அமெரிக்க தேசபக்தர்கள்,   பாதுகாப்பு விதிகளை மீறுவதும், பாதுகாப்பு அமைப்புகளை அவமரியாதை செய்வதையும் ஏற்று கொள்ள முடியாது. வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அமைதியாக இருங்கள் என தெரிவித்திருந்தார்.

வன்முறையாளர்களை தேசபக்தர்கள் என இவாங்கா புகழாரம் சூட்டி டிவிட் போட்டிருந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இவாங்கா டிவிட்டுக்கு பதில்டி கொடுத்த நெட்டிசன் ஒருவர் “வன்முறை தொடர்பான  புகைப்படத்தை மேற்கோள்காட்டி, வன்முறையில் ஈடுபட்டவர்களை தேசபக்தர்கள் என சொல்கின்றீர்களா?” என இவாங்காவிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்F  பதிலளித்த இவாங்கா, ”இல்லை. அமைதியான போராட்டம் நடத்துபவர்களே தேசபக்தர்கள். வன்முறையை ஏற்று கொள்ள முடியாதது. அவை கடும் கண்டனத்திற்குரியவை. ” என தெரிவித்துள்ளார். இதையடுத்து,  அந்த பதிவை இவாங்கா உடனடியாக நீக்கி உள்ளார்.

அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு….