பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், ஜோதிடருமான  வேதாகோபாலன் கணித்துள்ள சனிப்பெயர்ச்சி பலன்கள் நாளை (டிசம்பர் 22-ந்தேதி செவ்வாய்க்கிழமை)  முதல் நட்சத்திரம் வாரியாக வெளியாகிறது.

சனிபகவான் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 2020 டிசம்பர் 27ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து தனது சொந்த வீடான 10ஆம் வீட்டிற்கு அதாவது மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகி பலம் பெறுகிறார். இவர் இரண்டரை ஆண்டுகள் இந்த ராசியில் இருப்பார்.

இதன் பலனாக என்னவெல்லாம் நிகழப்போகின்றன? எந்தெந்த ராசியினர் நன்மைபெறப்போகிறார்கள்? யாருக்கெல்லாம் தீமை விளையும் என்ற ஒரு பெருங்கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும்.

சனி  ஆட்சி பலம் பெறுவதால் (தன் வீட்டிலேயே அமரவிருப்பதால்) அனேகமாக யாருக்குமே அதிகக் கெடுபலன்கள் ஏற்படாது.

இப்பெயர்ச்சியால மிக அதிக நன்மையடையப்போகிறவர்கள், ரிஷபம் (ஏனெனில் பாக்கியாதிபதி பலம் பெறுகிறார் மற்றும் அஷ்டம சனி விலகுகிறார்), விருச்சிகம் (ஏனெனில் ஏழரைச் சனியிலிருந்து விடுபடுகிறார்கள்), கன்னி (ஏனெனில் அர்த்தாஷ்டம சனியிலிருந்து விடுபடுகிறார்கள்), சிம்மம் (ஏனெனில் சனி மறைவிடத்தில் அமரகிறார்), மீனம் (ஏனெனில் லாபஸ்தானத்துக்கு வருகிறார்).

சற்று ஜாக்கிரதையாய் இருந்து பரிகாரங்களை கவனத்துடன் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மிதுனம் (ஏனெனில் அஷ்டம சனி), துலாம் (ஏனெனில் அர்தாஷ்டம சனி), மகரம் (ஏனெனில் ஜென்மசனி), கும்பம் (புதிதாக ஏழரைச்சனி துவங்கவிருக்கிறது).

சனிபகவான் நீதிமான் என்பதை நீங்க அறிவீங்க. சனியினால் சங்கடம் ஏற்படுமோ என்று  யாரும் பயப்பட வேண்டாம். அவர் எல்லோருக்குமே தண்டனை தர மாட்டார்.  தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிப்பார். சிலருக்கு அனுபவப் படிப்பினைகளை கொடுத்து செம்மைப்படுத்தி வாழ்வில் உயர்த்துவார் சனிபகவான்.

மேலும் தற்சமயம் நடக்கக் கூடிய தசாபுக்தி மற்றும் அந்தரம் அனைத்து கிரகங்களின் கோட்சார நிலை ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் பயப்பட தேவையில்லை.

சனி ஆட்சி பலம் பெறுவதால், உழைப்போருக்கு உயர்வு ஏற்படும்.  அந்நிய மொழி பேசும் நாடுகளில் உள்ளோர் அதிக நற்பலன் பெறுவர். இரும்பு, எண்ணை, வாகனங்கள் போன்ற துறைகள் வளம் பெறும். ஊழியம் செய்வோரும் உழைப்போரும் உயர்வு  பெறுவர்.

ஒவ்வொரு ராசிக்கும் சனி பகவான் தன் பெயர்ச்சியின்முலம் என்னென்ன பலன்களை அளிப்பார் வாசகர்கள் நட்சத்திரம் வாரியாக நாளைமுதல் தெரிந்துகொள்ளுங்கள்.

சனி பகவானுக்கான பரிகாரங்கள்(பிரீதிகள்) : எள் தீபம் ஏற்றுதல், காகத்துக்கு தினமும் சாதம் வைத்தல். இரும்பு விளக்கில் நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றுதல், கருப்பு நாய்க்கு உணவு படைத்தல், ஏழை எளியோருக்கு உணவு அளித்தல், நீல நிறப் பொருட்கள் மற்றும் உடைகளை தானம் செய்தல், எள்ளால் செய்த இனிப்பு விநியோகம் செய்தல், திருநள்ளாறு, குச்சனூர் சென்று வழிபடுதல், சனிக்கிழமைதோரும் அனுமனுக்கு விளக்கேற்றி, அர்ச்சனை செய்து மாலை சாற்றி வெள்ளை சாற்றி வழிபடுதல் அனுமான் சாலீசா சொல்லுதல் ஆகியவை சிறந்த சனிப்ரீதிகள் ஆகும்.

நட்சத்திரம் வாரியாக கணிக்கப்பட்டுள்ள சனிப்பெயர்ச்சி பலன்கள் நாளை முதல் (22-ந்தேதி) முதல் தினசரி 3 ராசிகளுக்கு உரிய நட்சத்திரப் பலன்களுடன் உங்கள் பத்திரிகை.காம்-ல் வெளியாகிறது. வாசகர்கள் சனிப்பெயர்ச்சி பலன்களை  உங்கள் பலன்களை தெரிந்துகொண்டு, உங்களது மேலான கருத்துக்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்….

contact@patrikai.com,