சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான படம் ‘பட்டாஸ்’.இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றிருப்பதால் கடந்த மே 1-ம் தேதி ஒளிபரப்பியது. இதில் 1,31,49,000 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. இதனை BARC நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், தனுஷ் நடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்களில் அதிக எண்ணிக்கையைத் தொட்ட படம் இது தான் என்ற மாபெரும் சாதனையை ‘பட்டாஸ்’ நிகழ்த்தியுள்ளது.