பட்டாஸ் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு….!

--

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் , துரை செந்தில் குமார் இயக்கத்தில் , தனுஷ் நடிக்கும் திரைப்படம் பட்டாஸ். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்றார் .

இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்.

கடந்த ஜூலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்த படக்குழு சமீபத்தில் படத்தின் இரண்டு பாடல்களை வெளியிட்டது .

ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவர்களுக்கு படக்குழுவினர் நல்ல செய்தி சொல்லியுள்ளனர். அதில் பட்டாஸ் படத்தின் ட்ரெய்லர் நாளை காலை 10.31 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed